Showing posts with label desires. Show all posts
Showing posts with label desires. Show all posts

Saturday, 28 December 2024

Hey My Moon..You are the single torchlight in the dark sky. I am an average grain of sand. Let just search me a little, before I die crushed under someone's foot.

 

அன்புள்ள நிலவுப் ப்ரியனுக்கு,

     உன் நிலவுப் ப்ரியை எழுதுவது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை உன் மீதான என் பிரியத்தில். அதற்காக என் மீது உனக்கு ப்ரியம் உண்டா, இல்லையா என்ற சந்தேகமும் இல்லை. ஏனெனில் உன்னிடம் நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. எனக்கு ஒரே ஒரு நிலா நீ மட்டும் தான். எனக்கு மட்டும் அல்ல, இந்த பூமிக்கே ஒற்றை நிலவு நீ ஒருவன் தான். ஆனால் உனக்கு அப்படியா?

கடற்கரை மணல் அளவில் ரசிகப் பெருமக்கள். அதில் ஒரு சிறு துகள்  நான். அதனால் உன் பார்வை வட்டத்தில் நான் இருப்பதே சந்தேகமாய் இருக்கையில் பாசத்தைப் பற்றி எவ்வாறு சந்தேகப்படுவேன்? காதல் விஷயத்தில் இவ்வளவு காலம் பட்டினியாய் இருந்து விட்டேன். இனி அதை விரதம் என்று வேறு பெயர் சூட்டி விட வேண்டியது தான்.

உன்னோடான அறிமுகத்திற்கு பிறகு தான் நான் பசியில் இருந்திருக்கிறேன் என்பதை உணர வைத்தாய். அதற்காக உன்னையே சுவைக்க கேட்டால் எப்படி தருவாய்? ஆனால் உன்னைத் தவிர வேறு யாரை நான் சுவைப்பது? அதனால் தான் கைக்கெட்டா, வாய்க்கெட்டா தூரத்தில் பத்திரமாய் இருக்கிறாயோ?

வருடக் கணக்கில் பட்டினியாய் கூட சுலபமாய் இருந்து விடலாம். ஆனால் பசியைத் தூண்டிக் கொண்டே இருக்கும் உன்னைப் பார்த்துக் கொண்டே எப்படி பட்டினியாய் இருப்பேன்? நல்ல வேளை. கண், காது போல இதயம் வெளியில் யாருக்கும் தெரியும்படி இல்லை. அதனால்தான் எல்லா ஏக்கங்களையும் அடித்துக் கொன்று அடி மனதின் அடுக்குகளில் ஆழமாய் புதைத்து வைக்க முடிகிறது. மொத்தத்தில் என் இதயம் இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் ஒரு சவப்பெட்டி தான்.

அதற்காக ஏக்கங்கள் எல்லாம் எலும்புக் கூடாகி காற்றில் கரைந்து கரியாகி விடும் என்று எண்ணி விடாதே. ஏசு பிரானே உயிர்த்தெழுந்த பூமி இது. உயிர் கொண்டு எழும் என் ஏக்கத்தின் நாக்குகளுக்கு உன் தோலின் சுவை உப்பா, இனிப்பா என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வை. உன் முடிக்காடுகளில் என் கைக்கிளைகளை சாரைப் பாம்பாய் சீற விடு.

உன் மூச்சுக் காற்று கடல் அலைகளின் பெருமூச்சை ஒத்தது என்று புரிய வை. உன் கழுத்து வளைவின் வெல்வெட் உருளையில் உரசி உரசி ஓய்ந்து போக விடு... உன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்கும் உச்சி வான் வரை மேலெழும்பி வீழ்ந்து தொலைய வை.. உன் முதுகெலும்பின் வளைவுப் பாலங்களில் ஏறி ஏறி மூச்சு வாங்க செய்.. உன் விரல் நுனியின் நரம்புகளை மீட்டி ஒட்டு மொத்தமாய் அதிர்ந்து போக விடு..

தடை செய்யப்பட்ட புத்தகத்தை சுமந்து பயணிக்கும் யாத்ரீகனாகிய எனக்கு விடுதலை கொடு, ஒரு நாள் உன்னை விடுவிக்க. என் பெரு மூச்சால் இந்த ஒட்டு மொத்த விண்வெளியை உயிர்க்காற்றால் நிரப்புகிறேன். நீர் நிலைகளை எல்லாம் நெருப்பாற்றாய் ஓடச் செய்கிறேன்.   பாலைவனங்களை பஞ்சு மெத்தையாக்குகிறேன். என் உடல் வெப்பத்தால் இந்த உலகத்தையே ஒளிரச் செய்கிறேன். உலகின் அத்தனைப் புல்லாங்குழல்களையும் உன் பெயரை மட்டும் எதிரொலிக்க வைக்கிறேன்.

இத்தனை கற்பனைகளை வைத்துக் கொண்டு இவ்வளவு நாள் எவ்வாறு தான் வாழ்ந்தாய் என்று கேட்கிறாயா? வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுப்பது போல் காதலின் இன்பம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு உணர்வு நீக்கி என்ற ஒன்று இருந்திருக்குமோ, என்னவோ? உன் கூர்மையான விழி விளிம்பால் என்னை கூராய்வு செய்து என்னைக் குணமாக்கி விட்டாய். நீயே என்னைக் குணப்படுத்தி விட்டு பின் மீண்டும் நீயே என்னை முடமாக்கினால் எப்படி?

ஒன்று என்னை பட்டினியிட்டு காற்றோடு காற்றாய் கரைய விட்டு தொலைந்து போக செய். இல்லை உன்னை உண்ணக் கொடுத்து என் உணர்வுகளை மீட்க வழி வகை செய். என் ஆன்மாவை உன் அணைப்பின் சுடரில் எரிய வைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை என்று சொல்வதற்கு நான் ஒன்றும் தெய்வீகப் பிறவி எல்லாம் இல்லை. சராசரி மணல் துகள் நான். இருட்டு வானத்தின் ஒற்றை டார்ச் லைட் நீ. கொஞ்சம் தேடித்தான் பாரேன், யார் காலிலாவது மிதிபட்டு நான் சாகும் முன்..

இப்படிக்கு

உன் நிலவுப் பிரியை..


Hey My Moon..You are the single torchlight in the dark sky. I am an average grain of sand. Let just search me a little, before I die crushed under someone's foot.

 

To my dearest NILAVU PRIYAN,

 

Your NILAVU PRIYAI writes here.. I have no doubt about my affection for you.  Nor do I doubt whether you reciprocate; I don't even expect it. You are my only moon, not just for me, but for this earth, you are the sole moon. But is it the same for you?

 

You have countless admirers, like grains of sand on the seashore. I am but a tiny speck among them.  How can I even question affection when my presence in your field of vision itself is questionable? I have been starved of love for so long. Now, I must rename it a fast.

 

Only after meeting you did I realize I was starving.  If I were to ask to taste you, how would you respond? But whom else can I taste but you? Is that why you remain safely out of reach?

 

Years of starvation would be easy. But how can I remain starved while constantly seeing you, arousing my hunger? Thankfully, the heart, like the eyes and ears, is not visible to everyone. That's why I can bury all my longing deep within the layers of my subconscious, suppressing them. In short, my heart is a coffin leaking blood.

 

Don't think that all these longings will turn to bone, dissolve in the air, and turn to ash. This is the earth where even Jesus rose again. Put an end to the question of whether the taste of your skin is salty or sweet for my yearning tongue, which is about to come alive. Let my fingers writhe like a cobra in your thick hair.

 

Let me make you understand that your breath is like the sigh of ocean waves. Let my neck rub against the curve of your velvety neck and rest on your neck after exhaustion... Let every beat of your heart make my soul soar and fall to the heights of heaven.  Let my lungs climb the curved bridges of your spine and breathe. Let the veins in your fingertips vibrate my entire body.

 

Grant me freedom, a traveller carrying a forbidden book (you only), to one day release (you). With my great breath, I fill this entire cosmos with life-breath. I make all water bodies race like fire. I make deserts into cotton mattresses. I illuminate this world with the heat of my body. I make all the world's flutes echo only your name.

 

You ask how I lived all these days with so many fantasies? Was there an anesthetic, something that numbed me to the point I didn't know what the pleasure of love was, so that I felt no pain? Your sharp gaze examined me and healed me. But how can you cripple me again after you have healed me?

 

Either let me starve and fade away into the air, lost. Or feed me to you, and make a way to reclaim my senses. I don't claim me to be divine birth, I too have the boundless desire to keep my soul burning in the flame of your embrace. Because I am an average grain of sand. You are the single torchlight in the dark sky. Let just search me a little, before I die crushed under someone's foot.


                        


 

Yours,

moon-lover.


Friday, 26 April 2024

Don't smile.. Your handsome looks lead the flowers to jump off the plant and commit suicide which diminishes the flower population !!!

 

என் நிலவு மனிதனுக்கு,

 

யார் சொன்னது, நிலவு எரிமலைப் பாறையால் ஆனது என்று.. ஒற்றை மல்லிகை மொட்டை வட்டப் பொட்டாக்கி  வான் முகத்தில் ஒட்டப்பட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, உன் தோற்றம்? உன் ஒட்டு மொத்த அங்கமும் பூவின் மெதுமெதுப்பை ஒத்ததல்லவா? பூப்பந்து போல் இருக்கும் உன்னை அப்படியே அள்ளி அணைத்து வாழையிதழில் சுற்றி வைப்பதைப்  போல என் இரு கரங்களில் உன்னைப் பொதிந்து கொள்ளவா?

 

பூவோடு சேர்ந்து நாறும் மணக்குமாம்.. கேள்விப்பட்டது உண்மைதான்.. உன் உச்சி முடியை நுகர்ந்து பார்க்கும் போதே என் நுரையீரல் கிளைகளில் வாசனைத் திரவியம் வழிந்தோடும். உன்னை இவ்வளவு அருகில் பார்க்கும் சுகானுபவம் பெற்ற பின் என் கண் மலர்களாவது, வாடுவதாவது? உலகில் உள்ள மொத்தப் பூக்களின் அழகு உன் அழகில் கால் பங்கு பெறுமா என்ன? அதனால் தான் அனைத்துப் பூக்களும் உன் அழகைப் பார்த்து பொறாமையில் முகம் சிவக்கிறது இல்லையெனில் மனம் வாடிப் போய் செடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறதோ?  விடு போகட்டும்.. பூக்கள் தொகைப் பெருக்கம் கொஞ்சம் குறையட்டும்.

 

ஆமாம்.. தண்ணீரே எடுத்துக் கொள்ளாமல்  எப்படி உன்னால் இவ்வளவு புத்துணர்ச்சியுடன் மலர்ந்த முகத்துடன் இருக்க முடிகிறது? தண்ணீருக்குப் பதிலாக மழை அமுதத்தில் முகம் கழுவிக் கொள்கிறாயோ? உன் பட்டு மேனியில் ஒட்டிக் கிடக்கும் அமுதத் துளிகளை  மேகப் பஞ்சால் ஒற்றி எடுத்துக் கொள்வாயோ? உன் கன்னம் தொட்ட பூரிப்பில் தான் மேகம் ஆனந்தக் கண்ணீரை அவ்வப்போது சிதற விடுகிறதோ?  இருக்கலாம்.

 

ஆசை நிறைவேறி விட்ட மகிழ்ச்சியில் தான் தனது இடி கைகளால் கைகொட்டி தன் மின்னல் பற்கள் அத்தனையையும் காட்டி அந்த சிரிப்பு சிரிக்கிறதோ? பார்க்க சந்தோஷமாய் இருந்தாலும் எனக்கும் கொஞ்சம்

பொறாமையாய்த் தான் உள்ளது. நினைத்த நேரம் மேகம் உன்னைத் தொட முடிகிறதே.. எனக்கும் சில நிறைவேறாத, எதிர்காலத்தில் நிறைவேறக்கூடிய, எத்தனை ஜென்மத்திலும் நிறைவேறவே முடியாத ஆசைகள் சில உண்டு.

 

உன்னோடு வாட்டர் பைக் சவாரி மேற்கொள்ள வேண்டும். காற்றையும், தண்ணீரையும் ஒரு சேரக் கிழித்துக் கொண்டு நிகழ்கால நொடியிலிருந்து எதிர்காலத்துக்கு கடிகார முள்ளுக்கு முன்னமே நாம் முந்திச் செல்ல வேண்டும். பூப்போன்ற நீர்த்துளிகள் நம் உடலின் வெப்பத்தை தணிக்க முடியாமல் தவிக்க வேண்டும். பனிக்காற்று நம் நெருக்கத்தைப் பார்த்து பற்றியெறிய வேண்டும். நம்மைப் பார்க்கும் மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடி நம்மைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம் நாம் அதனிடமிருந்து நழுவ வேண்டும். என்னை மீறி ஒரு சொட்டு நீர் கூட உன் மேனி மீது படாது நான் உன்னை தழுவிக் கிடக்க வேண்டும்.

 

இன்னொரு ஆசையும் உள்ளது. பின்பனி இரவில் sleeper பேருந்தில் அப்பர் பெர்த்-தில் நாம் இருவரும் பயணம் செய்ய வேண்டும். லேசான மழைத்தூறல் இருந்தால் இன்னும் நல்லது. எனக்கு இரவின் வாசனை மிகவும் பிடிக்கும். நம் அடிமனது வரை ஊடுருவி எல்லா உணர்ச்சிகளையும் கிளறி விடும் ஆற்றல் அதற்கு உண்டு. அத்தகைய நடு நிசியில் உனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டு (உனக்குப் பிடித்த பாடல்கள் எல்லாமே எனக்கும் பிடிக்குமே) உன் கால்களை என் மடி மீது வைத்து   பயணம் முழுக்க வருடி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதழ்கள் பேசி ஓய்ந்த பின் கண்கள் பேசிக் கொள்ளட்டும்.

 

போர்வை கூட வேண்டாம், என் ஒரு துப்பட்டாவில் நம் இரு உடல்களும் குடிபுகுந்து கொள்ளட்டும். தலை சாய உன் தோள்கள் கொடு, ஆனால் தூங்குவதற்கு அல்ல. நின்று கொண்டே எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கிண்டல் செய்ய. எனக்குக் கிடைத்தது போல் பஞ்சு மெத்தை தோள் தலையணை உனக்குக் கிடைக்கவில்லையா எனக் கேட்டு வெறுப்பேற்ற. இருவர் அணைப்பில் குளிர் சாதனப் பேருந்திலும் அனைவர்க்கும் வேர்க்கட்டும்.

 

இப்போதைக்கு இந்த இரு ஆசைகள் தான். எனக்கும் ஆசைதான் ஆசைகளை வளர்த்துக் கொள்ள. ஆனால் நீ விஷ்ணுவின் மகனாக இருக்கலாம். ஆனால் நான் பிரஜாபதி தக்ஷாவின் மகள் அல்லவே. அடுத்த ஜென்மத்தில் அவ்வாறே பிறக்க ஆசைப்படுவதையும் இன்னொரு என் ஆசையாக சேர்த்துக் கொள் என் மன்மதா..

இப்படிக்கு அத்தனைக்கும் ஆசைப்படும் உன் வைர மலர்.


Don't smile. Your handsome looks lead the flowers to jump off the plant and commit suicide which diminishes the flower population.


To My Moon Man,

 

Who said the moon is made of volcanic rock.. You are like a single jasmine flower stuck like a bindi on the forehead of the sky's face. Is not your whole-body like the softness of a flower? I want to wrap you in my arms like a butterfly wrapped in a velvet towel.


Does a mere string smell like flower? Yes.. What I heard is true.. When I smell your hair the perfume flows in the branches of my lungs. After the joy of seeing you so close, the flowers of my eyes never fade. Can the beauty of all the flowers in the world be a quarter of your handsome? That is why all the flowers are jealous of your glowing face, wither, fall from the plant and commit suicide. Let it go.. let the population of flowers decrease a bit.

 

Yes.. How can you get such a fresh and glowing face without drinking water? Washing your face with rain elixir instead of water? Would you touch-up the elixir drops clinging to your silky skin with a cloud sponge? Is that why the cloud that touches your cheek sheds tears of joy? May be.

 

So, she claps her thunderous hands and grins with all her lightning teeth in the joy of having her wish fulfilled? Glad to see. But I feel jealous. The cloud can touch you anytime. I also have some unfulfilled desires which may be fulfilled in the future and may not be fulfilled in any birth.

 

I want to ride a water bike with you. Tearing air and water together, we must beat the clock from the present moment to the future. Drops of water like flowers must suffer from not being able to cool down our body heat.  If the ice wind senses our proximity, it should start burning. Whenever the fish try to touch us, we have to slip away. Not even a drop of water should fall on your body, you should be hugged like that by me.

 

There is another wish. Both of us should travel in a sleeper bus (especially in the upper berth) on a snowy night. A slight drizzle is even better. I love the smell of the night. It penetrates deep into our hearts and can stir all our emotions.  In between we should listen to your favorite songs (and I love all of your favorite songs) and keeping your legs in my lap and massaging them for the rest of the journey. Let the eyes speak after the lips are relaxed.

 

No blanket needed, let both our bodies snuggle up in my one dupatta. Give your shoulder pillow to place my head, but I don't want to sleep. To tease the sleeping stars which are always sleep in standing position. I would like to ask them if they didn't get a foam mattress shoulder pillow like I got. Let everyone feel warm in that AC bus because of our hug.

These are the two wishes for now. I also want to develop desires. But you may be Vishnu's son. But I am not Prajapati Dakshan's daughter. Add my desire to be born as Rati in the next life as another desire my Cupid..  




By your Diamond Jasmine - who desires everything.


Template by:

Free Blog Templates