Showing posts with label Soulful romantic letter. Show all posts
Showing posts with label Soulful romantic letter. Show all posts

Saturday, 7 June 2025

So... Love me completely. Because... I am worthy of being loved.

June 07, 2025 0 Comments

                     "Secret Love Letter to My Moon Man – Tamil Love Letter from the Heart"


அன்புள்ள என் நிலவு மனிதனுக்கு,

எழ மனமில்லாமல் உன் காதலில் வீழ்ந்தே கிடக்கும் உன் காதலி எழுதுகிறேன். உன்னைப் போல, காதலும் ஒரு அழகு தான்.. உண்மை காதலில் ஒரு  கண் கூசா பிரகாசம் இருக்கும் - எப்போதும் விழித்திருக்கக்  கூடிய ஒற்றை நட்சத்திரம் போல. ஆனால் அந்த ஒளியில் ஒரு நிழலாகவாவது உள் நுழைய நான் ஆசைப்படுகிறேன்.

அப்போதாவது உன் பார்வை வட்டத்துக்குள் நான் இருப்பேன் அல்லவா? உன் கண்களில் தான் எனக்கு இடமில்லை. உன் பார்வை வளையத்தின் மெல்லிய ஓரங்களிலாவது நான் தலை சாய்த்துக் கொள்ளலாம் அல்லவா? இரகசியமாக காதலிக்க ஆரம்பித்த பிறகு, என் மொத்த வாழ்க்கையையும் பதுங்கு குழியில் அல்லவா வாழ வேண்டியிருக்கிறது.

போதும். இந்த ஜென்மத்தில் இந்த அரை குறை ரகசிய காதல். நேர்மையாய், நம்பிக்கையாய் இது போதும். முழு பௌர்ணமியாய் நம் காதல் ஜொலிக்க இந்த பிறவியில் கொடுப்பினை இல்லை. இடைவேளை நிலவு போல அவ்வப்போது வந்து தலை காட்டி விட்டுப் போனால் போதுமானது. அதற்காவது நேரம் ஒதுக்குவாய் என எதிர்பார்க்கிறேன்.

"நான் உன்னை காதலிக்கிறேன்" -  என்ற வார்த்தை உன்னிடமிருந்து வருமெனில் அது முழுமையாக, எனக்கு மட்டும் உரியதாக இந்த பிறவியில் இருக்காது என என் அறிவுக்கு தெரியும். முட்டாள் தனமான நம்பிக்கையில் என் இதயம் திளைத்துக் கொண்டிருக்க என் அறிவு நம்பிக்கையளிக்காது. அது நல்லதுதான். காதலில் பந்தயமிட்டு போராடுவதில் எனக்கு விருப்பமில்லை. எவரையும் எதிர்த்துப் போராடிட நான் தயாரில்லை. ஏனெனில் நான் போட்டியாளி இல்லை. உன் காதலி.

ஒரு நாள் மட்டும் என் மேல் காதல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அது முழுமையானதாக இருக்க வேண்டும். உறுதியானதாக இருக்க வேண்டும். இடைவேளைக் காதலில்  என் மூச்சுக் காற்று உன்னிடம் ஒட்ட முயற்சிப்பதை நீ உணர முடியாது. என் உயிரின் வார்த்தைகள் உன் மனதைக் கடக்கவே முடியாது. நான் முழுமையாக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன். ஏனெனில் என் ஆத்மா உன் காதலுக்கு உறைவிடமாக  இருப்பதாலே.

எனவே, நீ என்னை காதலிக்கப் போகிறாய் எனில்,முழுமையாக காதலி.. பெருமையாக காதலி.. பிரகாசமான ஒளிவடிவாக காதலி. ரு மனதோடு இல்லை. இரண்டுபக்கக் கதைகளோடு இல்லை.

ஏனென்றால்நான் ஒளிக்காமல் இருக்கும் காதலையே  நம்புகிறேன்.
ஏனென்றால்நான் முழுமையாக காதலிக்கிறேன்.
ஏனென்றால்நான் காதலிக்கப்பட வேண்டியவள்.

உன் பக்கமாக விழும் நிழல் நிலா,
யாத்திரிகா.

 

          So... Love me completely.  Because... I am worthy of being loved.

My dearest Moon Man,

 

This is your lover, who has fallen so deeply in love with you that she doesn't want to get up. Like you, love is also beautiful. True love has a dazzling brilliance - like a single star that is always awake. But I wish to enter that light, even if it's just as a shadow.

 

Then, at least, I would be within your line of sight, wouldn't I? I know, there is no place for me in your eyes. But I can at least rest my head on the delicate edges of your field of vision, can't I? After secretly falling in love, I have to live my entire life in a bunker, don't I?

 

Enough. This half-hearted secret love in this lifetime is enough. Honestly, trustingly, this is enough. There is no destiny for our love to shine like a full moon in this birth. It's enough if you come and show your face occasionally, like an interval moon. I hope you will at least make time for that.

 

My mind knows that if the words "I love you" come from you, they will not be complete or exclusively mine in this lifetime. My mind will not give hope while my heart revels in foolish hope. That's good. I don't like to bet and fight in love. I am not ready to fight against anyone. Because I am not a competitor.. Just  your lover.

 

Even if it's just for one day, It's okay, if you love me. But it must be complete. It must be firm. In an intermittent love, you won't feel my breath trying to cling to you. The words of my soul will never cross your mind. I want to be chosen completely. Because my soul is a dwelling place for your love.

 

So, if you are going to love me, love me completely.. love me proudly.. love me as a bright light. Not with a divided mind. Not with two-sided stories.

 

Because... I believe in love that is not hidden.

 

So... Love me completely.

 

Because... I am worthy of being loved.

 


 

 

Shadow Moon falling on your side,

Yathriga @ Vaira malli.

 

💌 Did this remind you of your secret love? Share your story in the comments or forward this to your Moon Man.