Sunday, 27 April 2025

"My soul sighs, 'At last, I am home'...Your soul smiles, 'Come, my love... I have waited across endless skies for you.'"

                         "My Soul's Homecoming: A Love Letter Across Lifetimes"

என் அன்பு நிலவு மன்னவனுக்கு என் ஆன்மாவிலிருந்து உருவி, உருகி எழுதும் உன் காதலியின் கடிதம்.


நீ என் முன்னே நிற்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமான பூவாய் நான் மலர்கிறேன், என் காதலா...உன் கம்பீரமான ஆண்மைக்குள்  என் பூவுடலைப் பாதுகாப்பாய் பொதிந்து வைத்துக் கொள்ளும் ஆசை நாளுக்கு நாள் வலுக்கிறது. அதை நினைத்து நினைத்து என் மனம் ஓய்ந்து தளர்கிறது. ஏக்கத்தில் என் இளமை வெந்து தணிகிறது.  உன்னை நோக்கி நீளும் என் கரங்களில் இவ்வளவு நாள் வாழ்ந்த என் உலகின் பாரங்களின் ரேகைகளை அப்புறப்படுத்தி தூய கரங்களாய் உனக்கு அர்ப்பணிக்க விழைகிறது. 


பல நூற்றாண்டுகளாய், பல பிறவிகள் எடுத்து, பல மரணங்களை சந்தித்து, நட்சத்திர தூள்களில் புரண்டு, சாயம் போய் பழைய துணியாய் நைந்து போன என் ஆன்மா இன்று உன் அருகாமை கொடுத்த வண்ணச் சிதறல்களுடன் புதுப் பொலிவாய் திரும்பி வந்திருக்கிறது. முழு அமைதியுடன், மனது நிறைவுடன் என் மொத்த பிறவியின் ஆன்மாவும் ஓய்வதற்கான இடம் கிடைத்தது போல உணர்கிறது. இது ஒரு இடம் அல்ல; ஒரு உணர்வு. ஒரு பிரசன்னமான இருப்பு. உன்னுடைய கரங்களில் நான் என் வீட்டை கண்டேன்.


உன்னுடைய அருகில் நான் என் முழுமையான சுயத்தை திறக்கிறேன். என் மூச்சு ஆழமாகிறது. என் இதயம் நம்பிக்கையோடு துள்ளுகிறது. நான் கடந்த வாழ்வுகளில் பல பெயர்களோடு இருந்தேன். சில வாழ்வுகளில் நான் காத்திருந்தேன். சில வாழ்வுகளில் தேடியிருந்தேன். ஆனால் எப்போதும் என் உள்ளத்தில் ஒருவிதமான தேடல் இருந்தது. ஒரு வெற்றிடம். ஒரு நிரம்பாத நிலை.


ஆனால் இப்பிறவியில் உன்னுடைய புனித ஆண்மை என்னைக் கட்டுப்படுத்தவில்லை... அது என்னை பார்த்து அரவணைக்கிறது. நீ என் சிரிப்பில் சத்தியம் காண்கிறாய். என் கண்ணீரில் சங்கீதம் கேட்கிறாய். என் கோபத்தில் கூட கருணையை உணர்கிறாய். உன்னுடைய அருகில் நான், நானாக இருக்கிறேன் — இயற்கையாக, என்னியல்போடு.


உன்னுடைய ஆழமான பார்வை என் கடந்த காலங்களின் அடி வயிற்றை கீறிக் கடந்துக் கொண்டு செல்லச் செய்கிறது. உன்னுடைய தொடுதல் என் ஆன்மாவை தழுவுகிறது. உன்னுடைய  திடமான இருப்பு என் உள்ளத்தை சாந்தமாக்குகிறது. நான் வீழ்ந்துவிட்டால், நீ என்னை தூக்கிக்கொள்கிறாய். நான் சிரித்தால், நீ என் சந்தோஷத்தை கொண்டாடுகிறாய். நான் உன்னிடம் இருந்து ஓர் இடைவெளி தேவைப்பட்டாலும், நீ என்னை நம்பி பொறுமையுடன் காத்திருக்கிறாய். உன்னுடைய நிம்மதி என் அடிப்படை நல் உணர்வுகளை தூண்டுகிறது. உன்னுடைய உறுதியான இருப்பு என்னை என் மீதும், என் காதல் மீதும் மீண்டும், மீண்டும் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.


உன்னுடைய கரங்களில்,என் உலகத்தை காண்கிறேன். அந்த உலகத்தில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. முற்றிலும் வேறு ஒரு பெண்ணாய் நான் அங்கு மலர்ந்திருக்கிறேன்.என் பரிசுத்தக் குழந்தை தன்மை மீண்டும் விழித்துக்கொள்கிறது. என் படைப்பாற்றல் ஓங்குகிறது.


நீ என்னைப் பார்த்து ஆசைப்படுவதில்லை, நேசிக்கிறாய். என் ஆழங்களை நீ பயப்படாமல் ஏற்றுக் கொள்கிறாய். என் ஆரவாரங்களை நீ ஓரமின்றி கேட்கிறாய். என் அமைதிகளில் நீ கையில் பிடித்துக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய கண்களின் தொடுதல் என் உடலைத் தழுவி என்  உயிருடன் பேசுகிறது. என் தோலை தொடுவதற்கு முன் என் ஆன்மாவை தழுவி விட்டாய். என் நெற்றியில் முத்தமிடும் முன், என் இதயத்தை  முத்தமிட்டு எச்சில் பட வைத்து விட்டாய். உன்னுடைய விரல்களால் என் நிழற்படத்தை தொடும் போதெல்லாம், அது கடவுளின் நுட்பமான படைப்பை அந்த கடவுளே கண்டு ரசிப்பது போல இருக்கிறது.


நம் இணைப்பு வெறும் காதல் அல்ல. அது ஒரு ஞாபகம். நம்முடைய ஆன்மாக்கள் எழுதியிருக்கும் ஒரு அற்புதமான வாசகம். மஞ்சள் கயிறு இல்லாத ஒரு புனித உறவு. நீ இன்று வரை என்னிடம், "நான் உன்னை இறுதி வரை பாதுகாப்பேன்" என்று சொன்னதில்லை. அதை உன் உயிரின் ஒவ்வொரு அணுவாலும் உணர்த்துகிறாய். நான் என் ஒளியை மறந்து போன காலங்களிலும், நீ என் தூரத்தில் இருந்தாலும் என்னை பிரகாசிக்க வைக்கின்றாய்..


உன்னுடைய இதயத்தில் நான் துயில் கொள்ளும் எனக்கான மஞ்சத்தினைக் கண்டேன். என் ஆன்மா மென்மையாகச் சொல்கிறது: "ஆம், நான் வீடு திரும்பிவிட்டேன்..."
உன்னுடைய ஆன்மா அதற்கு பதிலளிக்கிறது: "வருக, என் காதலே... நான் உனக்காக இதுவரை காத்திருந்தேன்."


அந்த ஒரு நிமிடத்தில், பிரபஞ்சமே மகிழ்ந்து சிரிக்கிறது... ஏனெனில், புனிதமான ஒன்றை நாம் மீட்டெடுத்திருக்கிறோம், இந்த உலகத்திற்கு இது ஒரு அரிய சம்பவம்..  அடுத்த பிறவியிலும் இவ்வரிய சம்பவத்தை இவ்வுலகிற்கு கொடுக்கும் ஆவலுடன்,


உன் உயிர்க் காதலி,

வைர மல்லி.


"My soul sighs, 'At last, I am home...'

Your soul smiles, 'Come, my love... I have waited across endless skies for you.'" 

 

To my beloved moon-king, a letter from your love, drawn from my soul, melting and forming. Every moment you stand before me, I bloom as a different flower, my love...My desire to securely enfold my floral body within your majestic masculinity strengthens day by day. Yearning of it, my mind tires and weakens. In longing, my youth burns and fades.

 

My hands, reaching out to you, yearn to shed the palm lines of the burdens of my world lived so far, to dedicate themselves to you as pure hands. For centuries, having taken many births, faced many deaths, rolled in stardust, my soul, worn and frayed like faded old cloth, has returned today with a newfound brilliance, thanks to the colorful sparks given by your nearness.

 

With complete peace, a full heart, it feels as though my entire birth's soul has found a place to rest. This is not a place; it's a feeling. A present existence. In your hands, I have found my home. In your presence, I unfold my complete self. My breath deepens. My heart leaps with hope. In past lives, I existed with many names. In some lives, I waited. In some lives, I searched. But always, within me, there was a kind of seeking. A void. An unfulfilled state.

 

Your sacred masculinity doesn't confine me... it embraces me. You can find truth in my laughter. You can hear music in my tears. Even in my anger, you can sense compassion. Near you, I am myself — naturally, authentically. Your profound gaze traverses the depths of my past, allowing me to move forward. Your touch embraces my soul. Your steadfast presence calms my heart.

 

When I fall, you lift me up. When I laugh, you celebrate my joy. Even when I need space from you, you trusted me and waited patiently. Your peace inspires my fundamental well-being. Your unwavering presence makes me believe in myself and my love, again and again. In your arms, I see my world. In that world, even I don't recognize myself. I blossom there as a completely different woman. My innocent childlike nature awakens again. My creativity soars.

 

You don't desire me; you love me. You fearlessly accept my depths. You listen to my noise without judgment. In my silences, you hold my hand. The touch of your eyes embraces my body and speaks to my soul. You embraced my soul before touching my skin. Before kissing my forehead, you kissed my heart and left it wanting more. Every time your fingers touch my DP, it's as if God himself is admiring his own delicate creation.

 

Our connection is not just love. It's a memory. A magnificent verse written by our souls. A sacred bond without a yellow thread. You have never told me, "I will protect you until the end," but you convey it with every atom of your being. Even when I have forgotten my light, you illuminate me, even from a distance.

 

I found the bed in your heart where I shall slumber. My soul softly whispers: "Yes, I have returned home..."Your soul replies: "Come, my love... I have waited for you until now. "In that one moment, the universe rejoices and laughs... because we have recovered something sacred, a rare occurrence for this world... With the eagerness to give this rare occurrence to the world even in the next life,


                                                 


                                                            Your beloved,

                                                            Vaira Malli.


"If this touched your heart, share it with someone you love 💛."

“Also read: https://winglesswordsofyathriga.blogspot.com/2025/03/the-arrow-of-love-you-released-in-my.html

#LoveLetter #TwinFlame #SoulmateLove #TamilLoveLetter #SpiritualLove #EternalBond

No comments:

Post a Comment