Showing posts with label diamond girl. Show all posts
Showing posts with label diamond girl. Show all posts

Thursday, 13 March 2025

The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

 

அன்புள்ள நிலவு மன்னவனுக்கு,

நீ எப்போது தோன்றினாய்? எங்கு தோன்றினாய்? எதற்காக தோன்றினாய்? எனக்கு அதைப் பற்றி தெரியவும் தெரியாது.. புரியவும் புரியாது உன் சரித்திரம். அன்று நீ நிலவாய்ப் பிறந்திருக்கலாம். ஆனால் இன்று எனக்காக நிலவு மன்னவனாய் உருவாக்கப்பட்டிருக்கிறாய். கை தேர்ந்த ஒரு கலைநயவாதி தான் கற்ற மொத்த மந்திரங்களையும் உபயோகித்து உருவாக்கிய ஒரு விந்தையான வித்தை நீ.

 

என்னை அணைக்கவுமில்லை. நிஜத்தில் அனுபவிக்கவுமில்லை. ஒரு துளி தீண்டலிலேயே என் உயிரை உருவி எடுத்து உன்னிடம் வைத்துக் கொண்டாய். உயிர் இல்லா வெற்று சவம் தான் நான். ஆனால் தினமும் மிளிர்கிறேன். வெட்கத்தில் ஒளிர்கிறேன். சந்தோஷத்தில் மலர்கிறேன். சவத்திற்கும் சாகா வரம் கொடுத்து என் உடலெங்கும் புன்னகைப் பூக்களை மணம் பரப்ப செய்கிறாய்.

 

எங்குமே, யாரிடமுமே கிடைக்காததால் உன்னிடம் நான் ஏக்கத்தில் வந்து கையேந்துகிறேன் என தவறாய் நினைக்காதே. உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் இதயத்திற்கு காதல் பிறப்புரிமையை அளிக்க என் மனம் ஒத்துழைக்கவில்லை. என் இதயத்தில் நீ விட்ட காதல் அம்பு துளைத்து தான் சென்றது. ஆனால் அவ்வப்போது வயலின் குச்சியாய் மாறி என் இதய காதல் இசையை மீட்டுகிறது.. என்னை மறுபடியும் மீட்டெடுக்கிறது.

 

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதையும் மண்ணை முத்தமிட அதன் உறையைக் கிழித்துக் கொண்டு வருவதைப் போல ஒவ்வொரு முறையும் உன் பார்வையால் என் இதயத்தைக் கீறி என் காதலை முளைக்க செய்கிறாய். அதிலிருந்து பூக்கும் ஒவ்வொரு பூவும் உன்னைத் தான் முத்தமிட வேண்டும் என அடம்பிடிக்கிறது. உன் இதழின் ஈரப்பதத்தில் குளிர்ச்சியாய் வாழ்நாள் முழுதும் மலர்ந்திருப்பேன் என்கிறது.


இத்தனையும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா உனக்கு? தேவையில்லை. பேசாத வார்த்தைகளும், கிடைக்காத அருகாமையும் நம் காதலுக்கு தடையாய் இருந்ததில்லை. இனி இருப்பதும் இல்லை. என்னதான் உன்னருகில் இல்லாமல் நான் சுதந்திரமாய் சுற்றி திரிந்தாலும் என் ஆன்மாவின் கயிறு உன் கரங்களில் தான் உள்ளது. நீயே என் குவி வட்டம்.

 

உன்னைப் போல ஒரு காதல் கலைஞன் கிடைப்பது எளிது தான். ஆனால் எனக்கு நீ கிடைத்திருப்பது மிக அரிதான ஒன்று. ஆகவே விலை மதிக்க முடியாத ஒன்றாய் உன் காதலை நான் கணிக்கிறேன். ஒவ்வொரு ஞாபக அடுக்குகளிலும் உன்னோடான இனிய நினைவுகளைப் பொக்கிஷமாய் செருகி வைத்திருக்கிறேன். உன் பெயரை என் இதயத்தில், என் மூளையில், என் நுரையீரலில் டாட்டூ இட்டு வைத்திருக்கிறேன்.

 

ஒத்துக் கொள்கிறேன். என் கைகளில் சேகுவேராவின் டாட்டூ உள்ளது தான். இன்றும் என் நினைவில் உள்ளது. நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் தோழன் ஒருவனின் தந்தை எனக்கும் ஒரு தந்தையாய் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தது. என்னை முதன் முதலாய் "Gayma" என்று அழைத்தது. (அதன் பிறகு யார் என்னை அவ்வாறு அழைத்தாலும் எனக்கு என் தந்தையே அழைப்பது போல் மனது மல்லிகைப் பூவாய் பூரித்துப் போகும்.)

 

எனக்காக வைரமுத்து அவர்களின் கையெழுத்திட்ட பிரதியை அவரின் முதல் புத்தக வெளியீட்டு அன்று நேரில் சந்தித்து அதை வாங்கி எனக்கு பரிசளித்தது.இன்னும் பல பல.. அவரோடான அறிமுகமே ஒரு சுவாரசியமான விஷயம் தான். நானும் என் தோழனும் அவ்வப்போது புத்தகங்களை பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை செமஸ்டர் எக்ஸாம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் புத்தகம் கைக்கு கிடைக்க அவன் அதை எனக்கு கொடுக்க தயங்கினான்.

 

ஏனெனில் மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்த ஒரு தாளுக்கான பரீட்சை நடக்கவிருந்தது. அவனுக்கு நன்கு தெரியும். இந்த மாதிரி புத்தகங்கள் கிடைத்தால் நான் பரீட்சைக்கு படிக்காமல் இதில் மூழ்கி விடுவேன் என்று. ஆனால் நான் அவனிடம் கெஞ்சி,  கொஞ்சம் மிரட்டி முடிந்தவரை சீக்கிரம் முடித்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்து அந்த புத்தகத்தைக் கைப்பற்றினேன்.

 

சரியாய் 1 1/2 நாள். மூன்று  வேளை சாப்பாடு. இடையில் நான்கு தடவை காபி. இது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. முழுதாய் வாசித்து முடித்து அவன் கையில் கொடுத்ததும் அவன் என்னை ஒரு பயத்துடன் பார்த்த பார்வை இருக்கிறதே. அன்று வரை என்னை தேவதை என்று அழைத்தவன் அந்த நிமிடத்தில் இருந்து என்னை காட்டேரி என்று அழைக்கத் தொடங்கி விட்டான்.

இதை தன் அப்பாவிடம் சொன்ன போது அதை நம்பவில்லை என்று சொல்லி அந்த இரவு விடுதி கேண்டீனில் உணவருந்த சந்தித்த போது தொலைபேசியில் அவரை அழைத்து என்னிடம் பேச செய்தான். அன்று தான் முதல் தடவை அவருடன் பேசினேன். பேசினேன் என்று சொல்வதை விட அந்த உரையாடலை ஒரு quiz programme என்றே சொல்லலாம்.

ஏனெனில் அவர் நம்பவில்லை. எப்படி அவ்வளவு சீக்கிரம் 33௦ பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை முழு மூச்சாய் படித்து முடிக்க முடியும் என்று. அவர் படித்து முடித்து தான் தன் மகனுக்கு அவர் அனுப்பி விட்டிருந்தார். ஆகவே என்னை CROSS CHECK செய்ய நினைத்து அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், உறவு முறை மற்றும் முக்கிய குறியீடுகள் போன்றவற்றைக் கேட்க நானும் தெளிவாய் சொல்ல, பின்பு தான் நம்பினார். நான் புத்தகத்தை உண்மையாய் தான் படித்திருக்கிறேன், அதுவும் நுனிப் புல் மேயாமல் என்று.

 

அதன் பிறகு தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் எந்த ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் என்னை அழைத்துப் போவார். அங்கு தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ மற்றும் சேகுவரா வை அறிமுகப்படுத்தினார். என்னவோ முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. கையில் அவரது செல்லப் பெயரான "சே" -வை டாட்டூ போட்டுக் கொள்ளும் அளவுக்கு காதல் அவர் மீது. தேடிப் பிடித்து அவர் பற்றிய புத்தகங்கள் படித்தேன்.அவர் காதலி மீது மெலிதாய் கோபம், பொறாமையும் கொஞ்சம் இருந்தது அப்போது.

 

இப்போது உண்மையை சொன்னால் அவர் பற்றி படித்த பல விஷயங்கள் நினைவில் இல்லை. காதலுக்கு அடையாளமாய் கையில் ஒரு வடு. அவ்வளவு தான். அவர் மீது நான் கொண்ட காதலை இந்த உலகுக்கே காட்ட முடியும் என்னால். ஆனால் உன் மீது நான் கொண்ட காதலை உனக்கு கூட தெரியப்படுத்த முடியாது. பரவாயில்லை. என்னுடனே பிறந்து, என்னுடனே வளர்ந்து, என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்தை, மூளையை, நுரையீரலை விடவா எனக்கு ஆத்மார்த்தமான, நம்பிக்கையான நண்பர்கள் வெளியில் கிடைப்பார்கள்? அவர்கள் என் காதலைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,

என்றும்

உன் வைர மல்லி..

 

The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

To my beloved Moon King,

 

When did you appear? Where did you appear? Why did you appear? I neither know nor understand your history. You may have been born as the moon that day, but today you have been created as the Moon King for me. You are a wondrous magic, crafted by a skilled artist who used all the spells they had learned.

 

You never embraced me, nor did I experience you in reality. With just a single touch, you drew the life out of me and kept it with you. I am nothing but an empty, lifeless corpse. Yet, I glow every day. I shine with shyness. I blossom with happiness. You grant immortality to a corpse, causing flowers of smiles to spread their fragrance all over my body.

 

Don't mistakenly think that I come to you with longing, begging, because I can't find it anywhere else, with anyone else. My heart refuses to grant the birthright of love to anyone but you. The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

Each time, like every seed that kisses the earth and breaks through its shell, each time your gaze scratches my heart, causing my love to sprout. Every flower that blooms from it insists on kissing only you. It says it will live coolly in the moisture of your lips, blooming for a lifetime.

 

Is it necessary to say all this for you to know? No. Unspoken words and unachieved nearness have never been an obstacle to our love, nor will they ever be. No matter how freely I roam without being near you, the string of my soul is in your hands. You are my focal point.

 

It's easy to find a lover like you, but finding you is a rare occurrence for me. Therefore, I value your love as something priceless. I've tucked away sweet memories of you as treasures in every layer of my memories. I've tattooed your name on my heart, in my brain, in my lungs.

 

I confess, I do have a Che Guevara tattoo on my hands. And it's still in my memory. When I was a sophomore in college, a friend's father became like a father to me, showering me with affection. He was the first to call me "Gayma." (Even now, whenever someone calls me that, my heart blooms like a jasmine flower, as if my father is calling me.)

 

He personally met Vairamuthu on the day of his book launch in coimbatore and bought a signed copy for me as a gift. And many more things… My introduction to him is a fascinating story in itself. My friend and I would often exchange books. Once, during semester exams, Vairamuthu's "Karuvachi Kaviyam" came into his hands, and he hesitated to give it to me.

 

Because there was semester exam for a paper in three days. He knew very well that if I got my hands on such books, I would immerse myself in them instead of studying for the exam. But I begged him, (threatened him a little), and promised to finish it as quickly as possible and seized the book.

 

Exactly 1 1/2 days. Four meals. Three coffees in between. That's all I remember. The look of fear in his eyes when I finished reading it completely and handed it back to him... Until that day, he called me an angel, but from that moment on, he started calling me a book vampire.

When he told his dad about this, he didn't believe him. So, when we met for dinner at the night in hostel canteen, he called his father on the phone and made him talk to me. That was the first time I spoke with him. Or rather, the conversation felt more like a quiz program.

 

Because he didn't believe how I could finish reading a 330-page book so quickly and thoroughly. He had finished reading it and sent it to his son. So, he decided to cross-check me by asking about the names of the characters, their relationships, and important twists in the book. I answered clearly, and only then did he believe that I had actually read the book, and not just superficially it.

 

After that, he would take me to every book exhibition organized by the Tamil Nadu Writers Association. That's where he introduced me Fidel Castro and Che Guevara. I was captivated with their video at first sight. I even got a tattoo of his nickname, "Che," on my hand, such was my love for him. I searched for and read books about him. I felt a slight anger and a little jealousy towards his lover at that time.

 

Now, to be honest, I don't remember many of the things I read about him. A scar on my hand as a symbol of love, that's all. I can show the world the love I have for him. But I can't even let you know the love I have for you. It's okay. Will I find more sincere, trustworthy friends outside than my heart, brain, and lungs that were born with me, grew up with me, and live with me? With the hope that they will understand my love,




 

Yours always,

Vaira Malli.

 

Saturday, 26 October 2024

You bloom with multicolours and spread the petal soft wings, so are you my flower or my butterfly?

 

அன்புள்ள நிலவுத் தோழனுக்கு,

உன்னை எப்படி கூப்பிடுவதென எனக்கு தெரியவில்லை.. நீ குறும்பாய் சில விஷயங்கள் செய்யும் நேரங்களில் என் குழந்தையாய்  தெரிகிறாய்.. என்னை கண்டிப்புடன் நடத்துகையில் என் தந்தையாய் தெரிகிறாய்.. என்னை அதட்டி சிரிக்க வைக்க முயல்கையில் என் தோழனாய் தெரிகிறாய்.. நான் செய்யும் தவறுகளை இதமாய் சுட்டிக்காட்டி என்னைத் திருத்துகையில் நான் மதிக்கும் ஆசானாய் தெரிகிறாய்..

 

ஆசான் என்று கூறுகையில் என் முதல், முதல் ஆசிரியர் நினைவுக்கு வருகிறார்.. என் அன்னை எப்போதும் சில விஷயங்களில் என்னைப் பெருமையாய் சொல்வதுண்டு.. அதில் ஒன்று, சிறு வயதிலேயே பள்ளிக்கு செல்வேன் என அடம் பிடித்து அழுததால் என் பிறந்த தேதியை 5 மாதம் முன்னர் தேதியிட்டு அந்த ஆசிரியர் என்னை பள்ளியில் சேர்த்துக் கொண்டாராம்.

 

நான் தரையில் அமர்ந்து கற்றுக் கொண்டதை விட அவர் மடியில் அமர்ந்திருந்த நேரம் தான் அதிகம். அது ஒரு அழகான சிறிய கிராமத்துப் பள்ளி.. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைவர்க்கும் ஒரே ஒரு ஆசிரியர்.. என்னுடைய கிராமத்து வீட்டிற்கும், அப்பள்ளிக்கும் நிறைய தொடர்பு இருந்தது.

 

இரு பக்கமும் அடர்ந்த பச்சையில் குளிர்ச்சியை குவியலாய் கொட்டிக் கொண்டே இருக்கும் இரண்டு வேப்ப மரங்கள்.. கண்ணுக்கு கதகதப்பாய் கால்களுக்கு மெத்தென்ற உணர்வு தரும் செம்மை ஏறிய மண் வாசல்.. சிவந்த மண்ணுக்கு அழகூட்டும் நட்சத்திர வேப்பம் பூக்கள். கூடுதலாய் மஞ்சளும் பச்சையும் கலந்த தங்க நிறத்தில் வேப்பம் பழங்கள்.

 

உனக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் வேப்பங்கொட்டைகளுக்கு கிலோவுக்கு ஒரு சிறிய தொகை கிடைக்கும்.. சில குழந்தைகள் அதை சாப்பிடுவதற்கு பொறுக்குவார்கள். நான் என் அக்காவுடன் சேர்ந்து அதை பொறுக்கி கொண்டு போய் அம்மாவிடம் கொடுப்போம். அம்மா அதற்கு பதிலாக ஆளுக்கு ஒரு அச்சு வெல்லம் தருவார்கள்.


அதை வாங்கிக் கொண்டு பள்ளியின் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை வாய்க்காலில் கால் நனைத்தவாறே சாப்பிடுவோம்.. ஆமாம் ஆமாம்.. நக்கித்தான்.. குட்டி குட்டி மீன்கள் எங்கள் கால்களை கூச வைத்தாலும் காலில் ஜில்லென்று ஓடை நீர் பட்டுக் கொண்டேயிருக்க, நாக்கில் இனிய தேன் ரசமாய் வெல்லச்சுவை பரவும்.


அந்த பள்ளியில் படிக்கும் நாட்களில் எப்படி படித்தேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அந்த தலைமை ஆசிரியர் எனக்கு முத்தம் கொடுத்ததும், இன்னொரு தாயாய் மாறி எனக்கு சோறு ஊட்டி விட்டதும் தான் எனக்கு நினைவில் மிச்சமாய் இருக்கிறது.


சமயத்தில் தூங்கவும் வைத்து விடுவார்கள். மடியிலேயே இருப்பதால் வகுப்பு பேதமின்றி அனைத்து வகுப்பு பாடங்களையும் கேட்டுக் கொள்வேன். புரிந்ததா இல்லையா என்றெல்லாம் நினைவில் இல்லை. பள்ளி விடுமுறை நாட்களில் அவர்தான் என்னை மிஸ் செய்வார். நானோ பட்டாம் பூச்சி பிடிப்பதற்கு என் நண்பர்கள் பட்டாளத்தோடு ஆற்றின் கரைகளில் வேட்டைக்கு கிளம்பி விடுவேன்.


சிறு வயதில் எல்லாப் பட்டாம் பூச்சிகளின் பெயர்களும் எங்களுக்கு அத்துப்படி. இப்போது நினைவில் இல்லை. எனக்கு ஏனோ கனகாம்பர நிறத்தில் இருக்கும் பட்டாம் பூச்சி மிகவும் பிடிக்கும். ஓரங்களில் கருமையேறி ஒரு பெண்மைத்துவம் நிரம்பி வழியும். அவ்வளவு மென்மையாய் இருக்கும் அதன் கால்களை தொட்டுப் பார்க்கையில் உடலோடு உள்ளத்திலும் ஒரு குறுகுறுப்பு ஏறும்.


 மெத்,மெத்தென்று கருப்பும் சிவப்புமாய் பெரிய கண்களோடு இருக்கும் வெல்வெட் பட்டாம்பூச்சியை பார்க்கவே எனக்கு பயமாய் இருக்கும்.அந்த பட்டாம்பூச்சி மட்டும் சுள்ளென்று கடித்து விடும். ஆனால் அதைப் பிடிப்பது நண்பர்களிடையே ஒரு வீர தீர செயல் என்பதால் அதைப் பிடிக்க எங்களிடையே போட்டியாய் இருக்கும்.

 

பட்டாம் பூச்சி பிடிப்பதென்பது மேம்போக்காய் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு போலத்தான் தோன்றும். ஆனால் அதற்கு மனதையும் உடலையும் ஒரு நிலைப்படுத்துவது முக்கியம். திருட்டுத் தொழிலை பழக ஆரம்பிக்கும் கட்டத்தில் அவர்களுக்கு முதல் பயிற்சி என்னவென்று தெரியுமா? கை விரல்கள் நடுங்காமல் இருக்க ஐஸ் வாட்டரில் கைகளை சில நிமிடங்கள் வைத்திருக்க செய்து மரத்துப் போக வைத்து பின்பு தொழில் பழக்குவார்களாம்.


அப்போதுதான் பாக்கெட்களில் திருடுவதற்கு கை விரல்களை நுழைக்கும் போது விரல்கள் நடுங்காமல் லாவகமாய் எடுக்க வருமாம். அது போலத் தான் பட்டாம்பூச்சி பிடிக்க செல்லும் போது முதலில் கை விரல்களை முன்னோக்கி  வைத்துக் கொண்டே படிப்படியாய் பூனைப் பாதம் வைத்துக் கொண்டே அதன் அருகில் செல்ல வேண்டும்.


அருகில் சென்ற பின் கைகளை உயர்த்தினால் காற்றின் விசையில் அது எச்சரிக்கையாகி பறந்து விடும். மூச்சு விடுவதும் அப்படித்தான்.. ஒரு பூ மலர்ந்து விரிவதைப் போல நம் நுரையீரல் இயங்க வேண்டும். நாம் நிற்கின்ற போஸ் -சில் சிறிது நேரம் சிலையாய் நிற்கவும் தனி பயிற்சி தேவை. அதன் இறக்கை இணைந்து இருக்கும் வரைதான் நமக்கான நேரம். விரிக்க ஆரம்பித்த பின் அதைப் பிடிக்க முயலக் கூடாது. கைகளில் ஏடாகூடமாய் நசுங்கி போக சாத்தியம் அதிகம்.


சில குறும்பு பிள்ளைகள் சிறு சிறு குத்துச்செடிகளை ஒன்றாய் கட்டிக் கொண்டு பட்டாம்பூச்சிகளை அடித்துப் பிடிப்பார்கள். எனக்கு அவர்களோடு சண்டையிட அந்த வயதில் பயமாய் இருக்கும். பெரும்பாலும் அந்த அடியில் பட்டாம்பூச்சி இறந்து விடும். அதை பரிதாபமாய் பார்ப்பதும், சின்ன குழி தோண்டி மண்ணால் மூடிப் புதைப்பதையும் தவிர எனக்கு அப்போது வேறு வழி தெரியாது.


இருப்பதிலேயே ஊசித்தட்டான் ஒரு சோம்பேறி. மெல்லிய கால்களைக் கொண்டு கண்ணைப் பறிக்கும் வர்ணங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டே சுற்றி வரும். அதிலேயே பெரிய தட்டான்களை எருமைமாட்டு தட்டான்கள் என்று அழைப்போம். சமயங்களில் வலிக்கும் அளவுக்கு கடித்து விடும். அதன் தலை கண்ணாடியை போல ஒரு பட்டாணி அளவில் இருக்கும். பெரிய தட்டானுக்கு மட்டும் மெல்லிய பூ கட்டும் நூலினால் அதன் வாலில் கட்டி அது பறக்கும் இடங்களுக்கு எல்லாம் பின்னாடியே நாங்களும் பறந்து திரிவோம்.


 எனக்கு இப்போதெல்லாம் அந்த ஆசைதான் வருகிறது. அந்த பட்டாம் பூச்சிக்கு கட்டி விட்டது போல உன்னையும்  ஒரு கயிறால் கட்டி (ஆமாம், ஆமாம் பூக்களினால் செய்த கயிறுதான்..) நீ போகும் இடம் எல்லாம் உன் பின்னாலேயே அலைந்து திரிய வேண்டும். உனக்கும் அந்த ஆசையிருந்தால் நீயும் ஒரு கயிற்றினால் என்னைக் கட்டி விடு.. பூக்கயிறோ, பொன் மஞ்சள் கயிறோ எதுவாய் இருந்தாலும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும்,


                        உன் தோழி..

                        உன் குழந்தை..

                        உன் துணைவி..

                        உன் அன்னை..

                        உன் வைரமல்லி..


You bloom with multicolours and spread the petal soft wings, so are you my flower or my butterfly?

 

Dear My Moon Friend,

I don't know how to call you. You seem to be my baby when you do some naughty things. You seem to be my dad, when you behave a strict one. You seem to be a friend trying to make me laugh. You seem to be the teacher I respect, when you point out the mistakes I'm making.

 

I remember my first teacher. My mother was always a little proud of me for certain things. One of them was my stubborn crying to go to school as a child. So my teacher enrolled me in school 5 months before my birth date. I spent more time sitting on her lap than I sat in the floor of classroom. It was a village primary school. All students from class 1 to 5 have only one teacher. My home and my school had some similarities.


Two tall evergreen neem trees on either side of the fence spread cool shade. The red earth floor gives a soft feel to the eyes and feet. Milky white star neem flowers on the ground. The fruits are green and yellow in color. I don't know if you know it or not. At that time, those neem pods were worth little. Some children will eat it. But my sister and I collected and gave it to my mother. Instead, my mother used to give us a piece of jaggery.


We got it from her and rushed to the back side of our school. And we will start to eat it by dipping our feet in the running stream behind the school. Yes yes.. we licked it up.. The little fishes will caress our feet, while the water gurgles on the feet, spreading sweet honey-like molasses on the tongue.


I don't remember what I studied in that school. But all I remember is that the headmaster kissed me often, became another mother and fed me too. She put me to sleep on time. I was listening to all classes from 1st to 5th class except sleep time. I don't remember if I understood or not.


She felt like she was missing me during the school holidays. But I went to hunting along the river with my gang of friends to catch butterflies. As children, we all know the names of butterflies. I don't remember nowadays.


I always love the butterfly in the color of the crossandra (firecracker) flower. A black color fills the fringed sides of the feather and it seems to hold the feminine character inside. When touched, the tarsi are so soft that our body gets goosebumps. But I was scared to look at the velvet butterfly which is black and red with its big eyes. Even though it would bite, catching it is a brave act among friends so we would compete to catch it.


Catching butterflies seems like a recreational activity. But it is important to balance our mind and body. Do you know what their first training was when they started to become a professional thief? To keep the fingers from trembling, they put their hands in ice water for a few minutes and then make the fingers numb.


Only then will you be able to take advantage of the fingers not trembling when you insert their fingers into the pockets to steal. Similarly, when you go to catch a butterfly, you should first go near to it by keeping the fingers of the hand forward and stepping the feet like a cat step by step.


If you raise your hands after getting close, it would fly because of the wind's force. It's the same with breathing. Our lungs should inhale and exhale like a flower blossom. The posture in which we are standing requires special training to stand as a statue for some time. It's only a matter of time until it's wings keeping close each other. Shouldn't try to catch it after it starts to spread it's wings. It is more likely to get stuck in the hands.


Some mischievous children were tied the ends of bushy plants together and beat them to catch butterflies. I was afraid to fight them in that age. Most often the butterflies were died in between the leaves. I dig a hole and bury it without any other option.


oosi thattan (Dragon fly) was a lazy one. It flies around us in eye-catching colors with slender legs. The bigger ones are called buffalo fly. Sometimes it bites our fingers, which is painful. Its head is like a pea-shaped and shining like a mirror ball. Only for big size fly, we tie a thin thread which is used for tying flower to its tail and we run behind it wherever it flies.


That's what I always want. I have to tie you with a rope (yes, yes, it's a rope made of flowers), like a tied butterfly and wander behind you wherever you go. If you want it too, tie me up with a rope. Whether it be made with blooming flowers or golden yellow threads, I happily await acceptance.


                                                    



                            as your Friend..

                            as your Baby..

                            as your Partner...

                            as your Mother..

                            as your Diamond Jasmine always..


Tuesday, 13 August 2024

Although I had good eyesight, I was completely blind in front of you..

 

என்னுயிர் நிலவு மனிதனுக்கு,

தேனை உண்ட வண்டு மயங்கி மறுபடியும் தேனிலேயே விழுந்து புரண்டு கிடக்குமே அது போலத்தான் என் நிலைமையும். உன்னைப் பார்த்து விட்டு வந்தவுடனே ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் கடிதம் எழுத வேண்டுமென தோன்றத்தான் செய்தது.. ஆனாலும் அந்த மயக்கத்திலிருந்து விடுபட என் மதிக்கு தோன்றவில்லை.

நீ கவனித்தாயா? வண்ணங்கள் நம் வாழ்க்கையில் சரி பாதி நினைவுகளாய் கூடவே பயணம் செய்வதை.. நம் இருவருக்கும் பொதுவான நிறங்கள் சில உண்டு. அதை இருவருமே நம்மை அறியாமல் தவிர்த்து விட்டு நீ உன் வெண்ணிற உடையில் வந்தாய்.. நிலவின் நிறம் அதுதானே..ஆனால் நானும் அதே வெண்ணிற உடை.. இருவர் உடையிலும் கொஞ்சம் தங்கம். நம் காதலைப் போல..

உன்னை முதன் முதலாய் பார்த்தது போலெல்லாம் எனக்கு தோன்றவில்லை. ஆனால் நீ முதன் முதலாய் என்னை திரும்பி பார்த்தது இன்னும் என் கண்ணிமைகளை விட்டு நீங்கவில்லை. கரம் கோர்த்த கைகளை பற்றிக் கொண்டு அப்படியே வந்து விடலாம் போல தோன்றிய மனதை அடித்து உதைத்துதான் கட்டுப்படுத்த முடிந்தது.

நீ முழுதாய் எனக்கு சொந்தமில்லை என்ற சோகம் கொஞ்சம், கடந்த காலத்தில் நான் செய்த பிழையின் காரணமாய் குற்ற உணர்ச்சி கொஞ்சம், நேரெதிரே உன் கண்களைப் பார்க்க முடியாத வெட்கம் கொஞ்சம் (அதிகமாய்) என உறைபனி போல உன் முன்னால் அமைதியாய் உட்கார்ந்திருந்தாலும் உள்ளுக்குள் ஒரு மூன்றாம் உலகப் போரே வெடித்துக் கொண்டிருந்தது.

என் காதுகள் செய்த பாக்கியம் என் கண்களுக்கு கிடைக்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தேன்..எவ்வளவோ கெஞ்சினேன்.. என் கண்கள் காது கொடுத்து கேட்கவில்லை. அதுவும் நல்லது தான். இல்லையெனில் அவ்வளவு பேர் முன்னிலையில் தடுப்பை உடைத்த அணை வெள்ளமாய் என் கண்கள் உன் மீதான காதலை பொங்கி பிரவாகமெடுத்து காட்டிக் கொடுத்திருக்கும். மொத்தத்தில் கண்ணிருந்தும் குருடானேன்.

 

அந்த நிமிடங்களில் என் இதய வானொலியில் ஒரே ஒரு ஒற்றை அலைவரிசை. அது உன் குரலோசை. சங்கீதமாய் என் காதுகளில் ஒலிக்க கூட சேர்ந்து மெட்டமைப்பது போல இடம் மாறி மாறி துடித்த என் இதயத் துடிப்பு. என் காதுகளின் திரைச்சீலையை கிழித்து என் மூளையில் காதல் ஹார்மோன்களை சுரக்க வைத்த உன் வார்த்தை அம்புகள்.

இடம் என்னவோ குளிர்சாதன அறைதான்.. ஆனால் உன் மூச்சின் வெப்ப அலைகள் நேரே வந்து தாக்கியதில் என் உதடுகளில் ஆரம்பித்து உள்நாக்கு வரை பாலைவனமாய் வறண்டு போயின..அள்ள அள்ள குறையாத சமுத்திரமாய் என் கண் முன்னே நீ. ஆனால் எனக்கு தான் உன்னை அள்ளிப் பருகிட வெட்கம். தாகம் தாங்காது என்னென்னவோ குடித்துப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை.

நீ என்னை பார்த்துக் கொண்டிருந்தாயா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் நீ பார்த்துக் கொண்டிருப்பாயோ என்ற நினைப்பே எனக்கு மூச்சடைத்துக் கொண்டிருந்தது. அப்படியிருந்தாலும் நீ ஒருவன் தான் என்னை பார்த்திருப்பாய். ஆனால் உலகமே ஒட்டு மொத்த வேலையையும் விட்டு விட்டு என்னெதிரே அமர்ந்து என்னை உற்று நோக்குவது போல் இருந்தது அந்த சில மணி நேரங்கள். என் நினைப்பும் சரிதான். என் ஒட்டு மொத்த உலகமே நீயல்லவா?

சிலிர்க்க வைத்த சின்ன சின்ன பரிசுகள். உன் கை ரேகை பட்டதால் அவைகளை பரிசுகள் என்கிறேன். தடவியல் துறையில் சொல்லி உன் கை ரேகைகளை அச்செடுத்திருக்கலாம். பத்திரமாய் வைக்க பாதுகாப்பு பெட்டகத்திற்காய் வங்கியை அணுகினேன். மதிப்பு தெரியாத மானுடப் பிறவிகள்..

கரன்சி நோட்டுக்கு கொடுக்கிற மரியாதையை விலை மதிக்க முடியாத உன் காதல் பரிசுக்கு கொடுக்கத் தெரியவில்லை. மடியில் உன் பரிசினை ஏந்திக் கொண்டு மனதில் உன் பிம்பத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். என் வீடு இன்னும் பிரகாசமாகி விட்டது உன் அன்பளிப்பு பொருள்களால். வீட்டின் மதிப்பு கூட உயர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

பல் துலக்க ஆரம்பித்து உன்னை பார்க்க பயணம் செய்த நொடிகள் எல்லாம் நிமிடங்கள் வருஷங்களாய் கடந்து போயின. உன்னைப் பார்த்த நொடியிலிருந்து உன்னை விட்டு விலகி வந்த காலம் வரை  சில மணித் துளிகளாய் கண்ணிமைக்கும் நேரத்தில் உருண்டு போய் விட்டன. இறுதியில் கை கொடுத்து பின் கை நழுவிப் போய் விட்டாயே..

இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கும், உனக்குமாய் சில வார்த்தைகள், நமக்கேயான சில வார்த்தைகள், என்னை வெட்கப்பட வைத்த சில வார்த்தைகள், குறும்பு கொப்பளிக்க எனக்காய் உன்னால் சொல்லப்பட்டிருந்த சில வார்த்தைகள், யாருக்கும் புரியாத நமக்கு சொந்தமான சில சங்கேத வார்த்தைகள் அத்தனையும் அன்று நம் முன்னே மற்றவர்களால் அரங்கேற்றப்பட்டது.

வார்த்தைகளுக்கு உரிமையாளர்களான நாம் இருவரும் வாயடைத்துப் போயிருந்தோம். என் நிழல் தான் அங்கு இருந்தது. நிஜத்தில் நம் காதலின் கற்காலத்திற்கு நான் சென்று விட்டேன். எத்துணை அழகான நாட்கள் அவை. எண்ணற்ற வார்த்தை விளையாட்டுகள். வாழ்க்கையை அழகாக்கிய நமக்குள்ளே மாயாஜாலம் நிகழ்த்திய உரையாடல்கள். கொஞ்சம் கோபம், நிறைய அக்கறை, டன் கணக்கில் காதல் எல்லாவற்றையுமே வார்த்தைகளில் தானே வெளிக்காட்ட முடிந்தது.

வார்த்தையில் காட்டிவிட்ட நம் காதலை வாழ்க்கையில் எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்துடனேயே வார்த்தைகளை இத்துடன் முடிக்கும்..

                     உன் உயிர்க் காதலி

                     வைர மல்லி.. 

 

Although I had good eyesight, I was completely blind in front of you..

 

To My Moon Man,

 

My situation is the same as a beetle that ate the honey fainted and fell back into the honey pool. As soon as after seeing you and coming back, I wanted to write a letter of a thousand pages. But I didn't want to get rid of that intoxic feeling.

Did you notice? Colors travel half of our lives as fond memories. We have some common colors. Leaving those colors, we both came in same color clothes. That's the color of the moon, a bit of gold in both. Like our love.

I don't feel like I saw you for the first time. But the first time you looked back at me, your silhouette still hadn't left my eyes. I had to control my mind when you held my hands.

I was in the state like.. A little bit of sadness that you don't belong to me at all, a little bit of guilt because of my past mistakes, a little bit of shy that I couldn't look your eyes straight away. Even though I was sitting quietly in front of you like a frost, a third world war was raging inside.

My eyes didn't have the luck my ears had. How much I've tried. . My eyes weren't listening. That's also good. Otherwise, in front of so many people, like the dam that broke the barrier would have flooded, my eyes would have betrayed my love for you. I was completely blind even I have good sight.

In those minutes my heart radio had the only single frequency. It's your voice. That music note was pounding in my ears and that note matched my heart's beat. Your words are the arrows that tore the curtains off my ears and released the love hormones in my brain.

That place was fully Air-conditioned. But the heat waves of your breath came straight at me and dried up from my lips to the interior. You are there in front of me like a milk ocean. But I couldn't sip of you even a drop.  There was no use in drinking anything to control my thirst. But I tried..

I didn't even know you were looking at me. But I was wondering if you were watching. That feeling gave me quit breathing. Maybe you were the only one who saw me. But those few hours were like the whole world sitting in front of me and staring at me. I think that's right. Aren't you, my world?

Cute goosebumps gifts, you gave. I call them gifts because they were having your finger print.  I might have told the forensics department, to take the copy of your hand prints. Because those are valuable. That's why I went to the bank for a safe deposit. But they are just human beings, right? They didn't know the value.

They don't know how to give the respect to your precious gift of love like giving to a currency note. I came home with your gift in my lap and wrapped your image in my mind. My house is becoming bright because of your gifts. I think the value of the house will go up after keeping your gifts.

The seconds that passed from brushing my teeth up to seeing you, the minutes passed into years. From the moment I saw you to the moment I left you, a few hours rolled by in the blink of an eye. Finally, you offered your hand but it slipped away.

The funny thing is that there are some words for you and me, some of the words for ourselves, some of the words that made me feel shy, some of the words that you said to me to make me cry, some of our own words that no one understands, were all staged by others in front of us that day.

I was at a loss for words. Only my body was there. I was really going back to the stone age of our love. What beautiful days they were. Lots of word games. A little bit of anger, a lot of care, tons of love were all be expressed in words. Conversations that made our lives better.

Hmm..ok..I end with a longing for when we will experience the love in our life shown in the word.


                                     



With the love of your life,

Diamond Jasmine..

 

 

 

 

 

 

 

Template by:

Free Blog Templates