Showing posts with label Loneliness. Show all posts
Showing posts with label Loneliness. Show all posts

Saturday, 28 December 2024

Hey My Moon..You are the single torchlight in the dark sky. I am an average grain of sand. Let just search me a little, before I die crushed under someone's foot.

 

அன்புள்ள நிலவுப் ப்ரியனுக்கு,

     உன் நிலவுப் ப்ரியை எழுதுவது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை உன் மீதான என் பிரியத்தில். அதற்காக என் மீது உனக்கு ப்ரியம் உண்டா, இல்லையா என்ற சந்தேகமும் இல்லை. ஏனெனில் உன்னிடம் நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. எனக்கு ஒரே ஒரு நிலா நீ மட்டும் தான். எனக்கு மட்டும் அல்ல, இந்த பூமிக்கே ஒற்றை நிலவு நீ ஒருவன் தான். ஆனால் உனக்கு அப்படியா?

கடற்கரை மணல் அளவில் ரசிகப் பெருமக்கள். அதில் ஒரு சிறு துகள்  நான். அதனால் உன் பார்வை வட்டத்தில் நான் இருப்பதே சந்தேகமாய் இருக்கையில் பாசத்தைப் பற்றி எவ்வாறு சந்தேகப்படுவேன்? காதல் விஷயத்தில் இவ்வளவு காலம் பட்டினியாய் இருந்து விட்டேன். இனி அதை விரதம் என்று வேறு பெயர் சூட்டி விட வேண்டியது தான்.

உன்னோடான அறிமுகத்திற்கு பிறகு தான் நான் பசியில் இருந்திருக்கிறேன் என்பதை உணர வைத்தாய். அதற்காக உன்னையே சுவைக்க கேட்டால் எப்படி தருவாய்? ஆனால் உன்னைத் தவிர வேறு யாரை நான் சுவைப்பது? அதனால் தான் கைக்கெட்டா, வாய்க்கெட்டா தூரத்தில் பத்திரமாய் இருக்கிறாயோ?

வருடக் கணக்கில் பட்டினியாய் கூட சுலபமாய் இருந்து விடலாம். ஆனால் பசியைத் தூண்டிக் கொண்டே இருக்கும் உன்னைப் பார்த்துக் கொண்டே எப்படி பட்டினியாய் இருப்பேன்? நல்ல வேளை. கண், காது போல இதயம் வெளியில் யாருக்கும் தெரியும்படி இல்லை. அதனால்தான் எல்லா ஏக்கங்களையும் அடித்துக் கொன்று அடி மனதின் அடுக்குகளில் ஆழமாய் புதைத்து வைக்க முடிகிறது. மொத்தத்தில் என் இதயம் இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் ஒரு சவப்பெட்டி தான்.

அதற்காக ஏக்கங்கள் எல்லாம் எலும்புக் கூடாகி காற்றில் கரைந்து கரியாகி விடும் என்று எண்ணி விடாதே. ஏசு பிரானே உயிர்த்தெழுந்த பூமி இது. உயிர் கொண்டு எழும் என் ஏக்கத்தின் நாக்குகளுக்கு உன் தோலின் சுவை உப்பா, இனிப்பா என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வை. உன் முடிக்காடுகளில் என் கைக்கிளைகளை சாரைப் பாம்பாய் சீற விடு.

உன் மூச்சுக் காற்று கடல் அலைகளின் பெருமூச்சை ஒத்தது என்று புரிய வை. உன் கழுத்து வளைவின் வெல்வெட் உருளையில் உரசி உரசி ஓய்ந்து போக விடு... உன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்கும் உச்சி வான் வரை மேலெழும்பி வீழ்ந்து தொலைய வை.. உன் முதுகெலும்பின் வளைவுப் பாலங்களில் ஏறி ஏறி மூச்சு வாங்க செய்.. உன் விரல் நுனியின் நரம்புகளை மீட்டி ஒட்டு மொத்தமாய் அதிர்ந்து போக விடு..

தடை செய்யப்பட்ட புத்தகத்தை சுமந்து பயணிக்கும் யாத்ரீகனாகிய எனக்கு விடுதலை கொடு, ஒரு நாள் உன்னை விடுவிக்க. என் பெரு மூச்சால் இந்த ஒட்டு மொத்த விண்வெளியை உயிர்க்காற்றால் நிரப்புகிறேன். நீர் நிலைகளை எல்லாம் நெருப்பாற்றாய் ஓடச் செய்கிறேன்.   பாலைவனங்களை பஞ்சு மெத்தையாக்குகிறேன். என் உடல் வெப்பத்தால் இந்த உலகத்தையே ஒளிரச் செய்கிறேன். உலகின் அத்தனைப் புல்லாங்குழல்களையும் உன் பெயரை மட்டும் எதிரொலிக்க வைக்கிறேன்.

இத்தனை கற்பனைகளை வைத்துக் கொண்டு இவ்வளவு நாள் எவ்வாறு தான் வாழ்ந்தாய் என்று கேட்கிறாயா? வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுப்பது போல் காதலின் இன்பம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு உணர்வு நீக்கி என்ற ஒன்று இருந்திருக்குமோ, என்னவோ? உன் கூர்மையான விழி விளிம்பால் என்னை கூராய்வு செய்து என்னைக் குணமாக்கி விட்டாய். நீயே என்னைக் குணப்படுத்தி விட்டு பின் மீண்டும் நீயே என்னை முடமாக்கினால் எப்படி?

ஒன்று என்னை பட்டினியிட்டு காற்றோடு காற்றாய் கரைய விட்டு தொலைந்து போக செய். இல்லை உன்னை உண்ணக் கொடுத்து என் உணர்வுகளை மீட்க வழி வகை செய். என் ஆன்மாவை உன் அணைப்பின் சுடரில் எரிய வைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை என்று சொல்வதற்கு நான் ஒன்றும் தெய்வீகப் பிறவி எல்லாம் இல்லை. சராசரி மணல் துகள் நான். இருட்டு வானத்தின் ஒற்றை டார்ச் லைட் நீ. கொஞ்சம் தேடித்தான் பாரேன், யார் காலிலாவது மிதிபட்டு நான் சாகும் முன்..

இப்படிக்கு

உன் நிலவுப் பிரியை..


Hey My Moon..You are the single torchlight in the dark sky. I am an average grain of sand. Let just search me a little, before I die crushed under someone's foot.

 

To my dearest NILAVU PRIYAN,

 

Your NILAVU PRIYAI writes here.. I have no doubt about my affection for you.  Nor do I doubt whether you reciprocate; I don't even expect it. You are my only moon, not just for me, but for this earth, you are the sole moon. But is it the same for you?

 

You have countless admirers, like grains of sand on the seashore. I am but a tiny speck among them.  How can I even question affection when my presence in your field of vision itself is questionable? I have been starved of love for so long. Now, I must rename it a fast.

 

Only after meeting you did I realize I was starving.  If I were to ask to taste you, how would you respond? But whom else can I taste but you? Is that why you remain safely out of reach?

 

Years of starvation would be easy. But how can I remain starved while constantly seeing you, arousing my hunger? Thankfully, the heart, like the eyes and ears, is not visible to everyone. That's why I can bury all my longing deep within the layers of my subconscious, suppressing them. In short, my heart is a coffin leaking blood.

 

Don't think that all these longings will turn to bone, dissolve in the air, and turn to ash. This is the earth where even Jesus rose again. Put an end to the question of whether the taste of your skin is salty or sweet for my yearning tongue, which is about to come alive. Let my fingers writhe like a cobra in your thick hair.

 

Let me make you understand that your breath is like the sigh of ocean waves. Let my neck rub against the curve of your velvety neck and rest on your neck after exhaustion... Let every beat of your heart make my soul soar and fall to the heights of heaven.  Let my lungs climb the curved bridges of your spine and breathe. Let the veins in your fingertips vibrate my entire body.

 

Grant me freedom, a traveller carrying a forbidden book (you only), to one day release (you). With my great breath, I fill this entire cosmos with life-breath. I make all water bodies race like fire. I make deserts into cotton mattresses. I illuminate this world with the heat of my body. I make all the world's flutes echo only your name.

 

You ask how I lived all these days with so many fantasies? Was there an anesthetic, something that numbed me to the point I didn't know what the pleasure of love was, so that I felt no pain? Your sharp gaze examined me and healed me. But how can you cripple me again after you have healed me?

 

Either let me starve and fade away into the air, lost. Or feed me to you, and make a way to reclaim my senses. I don't claim me to be divine birth, I too have the boundless desire to keep my soul burning in the flame of your embrace. Because I am an average grain of sand. You are the single torchlight in the dark sky. Let just search me a little, before I die crushed under someone's foot.


                        


 

Yours,

moon-lover.


Saturday, 18 May 2024

You who get caught in my eyes, why can't you get caught in my hands, baby?

 

என் கண்களுக்குள் சிக்கிக் கொள்ளும் நீ, ஏன் என் கைகளுக்குள் சிக்க முடியவில்லை?


என் நிலவு மனிதனுக்கு,

நீ எங்கே இருப்பாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எப்படி இருக்கிறாய் என்று தான் தெரியவில்லை. மொத்தத்தில் நான் நன்றாக இல்லை. எவ்வளவு அழுதாலும் ஏன் என் கண்ணீர் வற்றவே மாட்டேன் என்பது தான் எனக்குப் புரியவில்லை. ஏன் உன்னை இவ்வளவு நேசிக்கிறேன், அதுவும் எப்போதிருந்து உன் மேல் உயிரையே வைக்கும் அளவுக்கு என் காதல் இவ்வளவு விஸ்வரூபம் எடுத்தது என்பதும் எனக்குப் புரியவில்லை.

 

நீதான் முதலில் பார்த்தாய். அதுவும் எப்போதிருந்து என்னைப் பார்க்க ஆரம்பித்தாய் என்றும் இன்று வரை புரியவில்லை. உண்மையிலேயே என்னைத்தான் பார்க்கிறாயா என்பதை தெரிந்து கொள்ளவே எனக்கு மாதக்கணக்கில் ஆயிற்று. ஏதோ ஒன்று பிடித்துப் போய் நான் விளையாட்டாக உன்னை சீண்ட ஆரம்பித்தேன். ஆனால் அது இவ்வளவு முக்கியமானதாய், என் உலகத்தையே ஒரு புரட்டு புரட்டிப் போடுவதாய் மாறும் என சத்தியமாய் நினைக்கவில்லை.

 

நிமிடத்திற்கு ஒரு தடவையாவது உன் நினைவு வந்துவிடுகிறது. உன்னைப் பற்றி வேண்டும் என்றே தப்பு தப்பாய் யோசித்தாலாவது உன்னை வெறுத்து மறக்க ஆரம்பித்து விடுவேன் என தப்புக் கணக்கு போட்ட என் அறிவை என் இதயம் ஒரே அடியில் சுருண்டு விழச் செய்து விட்டது. நீ தப்பே செய்திருந்தாலும், செய்து கொண்டிருந்தாலும் உன்னை எப்படியடா என்னால் வெறுக்க முடியும்?

 

உன்னை வெறுத்தால் இந்த உலகத்தையே அல்லவா வெறுக்க வேண்டி வரும்? இப்போதைக்கு என் சிறிய உலகத்தில் நீ மட்டும் நிரம்பி வழிகிறாய். அதுவே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. நிறைய வேளைகளில் உன் நினைவே வராதது போல நடிக்க முயற்சி செய்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா, என்னைப் பொறுத்தவரை உயிர் போகும் அளவிற்கு வலி என்பது எது தெரியுமா? இரத்தப் பரிசோதனைக்காக என் கை நரம்புகளில் ஊசியை ஏற்றும் போது இந்த உலகத்தையே மறந்து, ஏன் வெறுத்து ஓடி விடத் தோன்றும்.

 

ஆனால் இந்த முறை வலிக்கு பயந்து கண்ணை இறுக மூடும் போது எனக்கு உன் முகம் மட்டும் தான் எதிரே தோன்றியது. உன் பெயரை குறைந்தது  20 தடவையாவது முணுமுணுத்திருப்பேன். பரிசோதனை முடிந்து வெளியே வரும் போதுதான் யோசித்தேன். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாய் கூட இருந்தது. வருடக் கணக்கில் கூடவே இருந்தவர்களை எல்லாம் விட்டு விட்டு இதுவரை நேரில் பார்த்தேயிராத உன்னை எப்படி என் மனம் நினைத்தது? இந்த லட்சணத்தில் உன்னை மறக்க முயன்றதைப் போல் நடிப்பு வேறு..

 

உன்னை காதலிக்கவே இல்லை என சொல்லி இனி என்னை ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகி விட்டது. அதற்காக என் காதலை உன்னிடம் சொல்லி உன் நிம்மதியை கெடுக்கவும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்த கடிதம் உன்னை சேராதது போலவே என் காதலையும் உன்னை வந்தடையாமல் பார்த்துக் கொள்கிறேன். அது ஒன்று மட்டும் தான் நீ சந்தோஷமாய் இருப்பதற்கு என்னால் செய்ய முடிந்த ஒன்று.

 

உன்னிடம் என் காதலை மூடி மறைப்பது கஷ்டமான விஷயம் தான். ஆனால் சொல்லி, உன்னை என்னால் பார்க்க முடியாமல் போனால் அது எனக்கு உயிர் போகும் வலி தரும். சில நாட்கள் இடைவெளியையே என்னால் தாங்க முடியவில்லை. எல்லாமே ஒரு நொடியில் வெறுத்துப் போயிற்று. தனியே தூங்கி, தனியே சாப்பிட்டு, தனியே சிரித்து இன்னும் நிறைய.. தனிமையிலேயே ஒரு நாள் நான் உயிரையும் விடப் போகிறேன்.

 

யார் யாரோ எதற்கோ அழுதார்கள் எனில் எனக்கும் கூட சேர்ந்து அழ வேண்டும் போல் உள்ளது, உன்னை நினைத்து. உன்னை மறக்க நினைத்து CJ-7 series பார்த்தால் கிளைமாக்ஸ் -சில் அந்த பொம்மை Alien நாய்க்குட்டி செத்ததற்கு நான் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டேன். அந்த குட்டிப் பையன் கூட அவ்வளவு ஏங்கி அழுதிருக்க மாட்டான்.

 

இவ்வளவு ஏங்கியதாய், அழுவதாய் சொல்கிறாளே ஆனால் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பவில்லையே என்று நினைத்து விடாதே.. நிறைய எழுதி எழுதி எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். உனக்கு அனுப்ப பயம், தயக்கம், என்னால் ஏதும் நீ பிரச்சனையில் சிக்கி உன் நிம்மதி போய் விடுமோ என்கிற சந்தேகம். நீயாவது சந்தோஷமாய் இருக்கட்டுமே என்கிற நப்பாசை.

 

எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் தெரியுமா? உனக்கு அனுப்ப எனக்கு நிறைய செய்திகள் உண்டு. உன்னிடம் பேச எனக்கு நிறைய நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் அத்தனையையும் அடி மனதில் போட்டு புதைத்து விட்டு உனக்கு ஏதும் அனுப்பி விடக் கூடாது என எத்தனையோ சமயங்களில் உறுதியாய் இருந்திருக்கிறேன். அதையும் மீறிதான் சில சமயங்களில் நான் அனுப்பி விடுவதுண்டு.

 

நானும் மனுஷிதானேடா. உன்னைக் கொஞ்சிக் கொண்டே இருக்க சொல்லும் என் மனதை எவ்வளவு காலம் தான் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனத் தெரியவில்லை. முடிந்த அளவு போராடுகிறேன். ஆனால் அந்தப் போராட்டத்தில் வெற்றி அடையக் கூடாது எனவும் இன்னொரு சமயத்தில் நினைக்கிறது என் ஷைத்தான் மனம். நான் நல்லவளா, கெட்டவளா உன் காதலுக்கு?

 

விடை தேடப் பிடிக்காமல் முடிக்கிறேன் இத்துடன்..

                              இப்படிக்கு

                              உன் வைர மல்லி..

 

 


You who get caught in my eyes, why can't you get caught in my hands, baby?

 

To my moon man,

I know exactly where you will be. But I don't know how you are. So overall I'm not okay. I just don't understand why my tears never dry up no matter how much I cry. I don't understand why I love you so much and since when my love took such a Vishvarupa that I would put my life on you.

 

You only saw me first. And till today I don't understand since when you started seeing me. It took me months to figure out if it was really me. In the beginning, I just started teasing you playfully. But I really didn't think it would be so important and turn my world upside down.

 

I remember you at least once a minute. I miscalculated that if I felt bad about you, I would start hating you and forget you. But my heart broke my mind in one fell swoop. How can I hate you even if you do wrong?

 

If I hate you, won't I hate this world? For now, my little world is filled with only you. That's enough for me. Many times, I tried to pretend I didn't remember you. Do you know what my life-threatening pain is? Whenever the nurse put the syringe into my vein for the blood test, I would want to run away from this world.

 

But this time when I closed my eyes tightly because of the pain, I only saw your face in front of my closed eyes. I would have mumbled your name at least 20 times. I was really shocked when I came out of that lab. How did my mind think of you after leaving all those who were together for years and not seeing you in person? In this I am trying to pretend to forget you. OMG...

 

  It's clear that I can no longer deceive me by saying that I never loved you. For that, I don't want to spoil your peace by telling you about my love. I will make sure that my love does not reach you just as this letter does not reach you. That's the only thing I can do to make you happy.

 

Yes..it's hard to hide my love from you. But if I can't see you because I told you of my love, it will pain me to death. I couldn't bear even this gap of few days. Everything disgusted me in an instant. Sleeping alone, eating alone, laughing alone and so on.. I think one day I'm going to die alone, without anyone knowing.

 

Nowadays, if someone cries for anything, I feel like I too want to cry, but for you. When I watched the CJ-7 series, I have started crying at the death of that toy alien puppy in the climax. But the truth is I missed you so much on that time. Even that little boy would not have cried so longingly. I cried so much because you weren't there.

 

Don't think I didn't send a single message.. I wrote a lot and sent it myself. I am afraid, reluctant to send you, I doubt you will get into trouble and lose your peace. I want you to be happy forever.

 

Do you know how hard that would be? I have a lot of messages to send you. I have many things to talk to you. But, buried in my heart, I have resolved many times not to send you anything. Sometimes I send you beyond that.


I'm a human too, right? I don't know how long I can control my mind. I am struggling as much as possible. But other times my satanic mind thinks that I should not win that fight. Am I good or bad for your love?


                          


 

    I don't want to look for an answer and end with this..

                                    Your Diamond Jasmine..


Saturday, 27 January 2024

The Pancha Pandava Lovers of this Digital Age Panjali !!!

 

என் நிலவு மனிதனுக்கு,

புரிகிற வயது தான் எனக்கு.. இருந்தாலும் நம் மூதாதையரின் குணம் அவ்வப்போது வெளிப்படும் அல்லவா? நீ எங்கேயோ சந்தோஷமாய் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உன்னைச் சுற்றி ஆடி வர, அக்கூட்டத்தின் நடுவில் கண்கள் பளபளக்க நீ நின்றிருக்க, நான் இங்கே கண்களின் ஈரப் பசை உலர்ந்து போனது கூட அறியாமல் உன்னைப் பற்றியே யோசித்து விழி விரித்து சிலையென அமர்ந்திருக்கிறேன்.

ஒரு விஷயம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். உன்னால் என் வாழ்க்கை மிக எளிமையாய் மாறி விட்டது. கையில் கை பேசி தேவையில்லை. காதுகளில் ஹெட் ஃபோன் தேவையில்லை. தொண தொணத்துக் கொண்டே  இருக்கும் தொல்லைக் காட்சி பெட்டி தேவையில்லை. உன் நினைவுகள் மட்டும் உடனிருந்தால் போதும். நினைத்து நினைத்து சிரிக்க ஓரிரு விஷயங்களா உள்ளது, நம்மிடையே? 24 மணி நேரமும் 2 சொடுக்கு போடுவதற்குள் மாயமாய் மறைந்து விடும். செலவு செய்யத் தேவையில்லாத பொழுது போக்கு அம்சம் நீ..

என் வாழ்க்கையை எளிமையாய் மட்டும் அல்ல, பயனுள்ளதாகவும் மாற்றி விட்டாய். கரோனா வைரஸ் கோடிக்கணக்கில் அவதாரம் எடுத்த போது மாஸ்க் போட்டு வாய் மூடி அதன் முன் மண்டியிட வேண்டியதாயிற்று. அடுத்த அலைக்கு ஆயத்தமாகும் நோக்கில் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி சம்பாரித்ததை மீண்டும் வாயைக் கட்டினால்தான் உயிர் வாழ முடியும் என உணர்ந்து எக்கச்சக்கமாய்  மாஸ்க் வாங்கி வைத்தாயிற்று. ஆனால் அதன் பயன்பாடு இப்போதுதான் புரிகிறது.

 உன் நினைவுகளின் தாக்குதலில் நான் வெட்கத்தில் முகம் சிவக்கும் போதெல்லாம் மாஸ்க் தான் என்னுடைய இதழ் மூடி ஆகிறது. நான் வெட்கப்பட்டு சிரிக்கையில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் போல் என் கண்கள் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது. நீ வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், நீ ஒரு ரிஸ்க் டேக்கர் என்று. ஆனால் கண்களும் இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு என் வெட்கத்தை வெளியே காட்ட முயல்கையில் அதை மறைக்க நான் படும் பாடு இருக்கிறதே உண்மையில் நான் தான் ரிஸ்க் டேக்கர்.

வாழ்க்கையில் சிரிப்பை மட்டுமா மறைக்க வேண்டியதாய் இருக்கிறது? அழுகையையும் தான். உன்னைக் குறை சொல்ல ஏதுமில்லை. பொங்கி பொங்கி அழும் அளவிற்கு ஒன்றும் ஆகவில்லை தான். ஆனால் என் கண்களில் இருந்து ஊற்றெடுக்கிறதே, என்ன செய்ய? நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் chandraayan 3 வரை உன்னைத் தொட்டு விட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொள்கிறார்கள். உன்னைத் தீண்ட அந்த நொடி உன் உயிர் வரை வலிப்பதை எவ்வாறு நான் பகிர்வேன்? அந்த தொடுதல் உன் மேனியை தொட்டிருக்கலாம். ஆனால் அதனால் சுட்டு விட்ட காயத்தின் வடு என் மேனியில் அல்லவா உள்ளது?

அந்த நிமிடமே முடிவெடுத்து விட்டேன். உன்னைச் சுற்றி நட்சத்திரங்கள் முதல் நரகாசுர மனிதர்கள் வரை யார் இருந்தாலும் உன்னை சந்திக்கவே போவதில்லையென. எனக்கு நன்றாய் தெரிகிறது, உன்னைத் தொட்டால் எனக்கு சுடுகிறது என்று. அந்த வலியை நேரே உன்னிடம் காட்டி உன்னை நோகடிக்கப் போவதில்லை. உன்னைக் கஷ்டப்படுத்துவது என்பது என் கனவிலும் நினைத்துப் பார்த்திடாத ஒன்று. உன் ரசிகர்கள் உன்னைச் சூழ்ந்து நிற்கையில் நான் ஒதுங்கி நிற்பதுதானே முறை.

அதற்காக நான் தனியே இருப்பதாக நினைத்து வருத்தப்படாதே. உனக்கு loneliness-க்கும், solitude-க்கும் வித்தியாசம் தெரியும் அல்லவா? சிறு வயதில் இருந்தே நான் solitude-ஐ தான் தேர்ந்து எடுத்தேன். எனக்கு நட்பு உறவை பாதுகாப்பதில் நிறைய சிரமங்கள் உண்டு. என்னைத் தேடி நிறைய பேர் வர நான் தனிமையை தேடி ஓடிக் கொண்டிருப்பேன்.

பள்ளிப் பருவத்தில் விவேகானந்தர் என்னுடைய முதல் தோழர். தனியே இருக்கும் நேரமெல்லாம் அவருடன் பேசிக் கொண்டிருப்பேன். குழப்பமாய் இருக்கும் சமயங்களில் எல்லாம் அவருடைய சிகாகோவிலிருந்து’ புத்தகத்திலிருந்து ரேண்டம்-ஆக ஒரு பக்கத்தை தேர்ந்தெடுத்து வாசிப்பேன். ஏதோ அவரே நேரே வந்து எனக்கு தீர்வு சொல்வது போல இருக்கும். கல்லூரி போகும் சமயங்களில் சேகுவரா என்னுடைய அடுத்த தோழர். அவரை அறிமுகம் செய்து வைத்தது என்னுடைய கல்லூரி நண்பருடைய தந்தை. நானும், அவரும் ஒரு புத்தக கண்காட்சிக்குப் போகையில் ஃபிடல் கேஸ்ட்ரோ-வினுடைய ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. வரலாற்றில் அதிக கொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர் யார் எனக் கேட்டால் பிடல் காஸ்ட்ரோஎன்று பதில் வரும். கியூபா அரசாங்கத்தின் கூற்றுப்படி, பிடல் காஸ்ட்ரோ 600 க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர். இது குறித்து ஒரு நகைச்சுவையில், உலகிலேயே அதிக நாள் உயிர் வாழும் ஒரு கடல் ஆமையை பரிசாக ஏற்க மறுக்கிறார், காஸ்ட்ரோ. ஏனெனில் அந்த ஆமையை செல்லப் பிராணியாக வளர்த்து அது தமக்கு  முன் இறந்துவிடில் தன் மனது மிகவும் வருத்தப்படும், ஆகவே தனக்கு அந்த ஆமை பரிசாக வேண்டாம் என்று அவர் கூறுவதாக ஒரு நகைச்சுவை துணுக்கு உலா வரும் அளவிற்கு அவர் அதிக முறை உயிர் தப்பித்து நீண்ட நாள் வாழ்ந்தவர்.

ஆனால் அவரை விட அவருடைய தோழரான சேகுவரா என்னை கவர்ந்தார். அவரை அடுத்து எனக்கு தோழர்கள் இல்லை. காதலர்கள் தான்.. அதுவும் வெறும் ஐந்து பேர் மட்டும் தான்...

கண்களில் குறும்பு கொப்பளிக்க கணக்கில்லாமல்  பொய்க்கதை புனையும் Mr. Manoj Bajpayee (The Family ManWeb series)…. அதிகப்படியாய் அப்பாவித்தனம் – எதையும் அவர் பாணியில் புரிந்து கொள்ளும் Mr. Bhaarath (Finally– YouTube)…. அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் - அண்டை நாட்டு மன்மதன் Mr. Will Smith (Aladdin - Film).... உச்சஸ்தாயில் கத்திப் பாடினாலும் ரசிக்க வைக்கும் திருட்டு விழிக்காரன் Mr. Alexander Babu (Alex in Wonderland – Musical Standup)…. வதனமே பார்க்கவில்லை - எனினும் நகையோடும் வார்த்தைகளிலேயே காதல் கொள்ளச் செய்யும் கனத்த குரலுக்குச் சொந்தக்காரன்  Mr. Vicky (தமிழ் Info – YouTube) என பஞ்ச பாண்டவக் காதலர்கள் இவர்கள் ஐந்து பேர் உண்டு, இந்த கணினி யுகப் பாஞ்சாலிக்கு!!!

இது எல்லாம் உருவம் பார்த்து வந்த காதல். உன்னை பார்த்த பின் வந்த காதல் தான் உயிர் வரை இனிக்கிறது. அதை திகட்டிப் போகும் அளவிற்கு திருப்பிக் கொடுக்கும் வல்லமை உனக்கு இருக்கிறதா? சவாலுடன் முடிக்கிறேன்,

                                           உன் உயிர்க் காதலி

                                           வைரமல்லி  

 

 

                                         

 

 

 

Hey My Moon Man,

I am old enough to understand.. but the character of our ancestors is revealed from time to time, isn't it? You are somewhere where the stars are dancing around you happily  and you are standing in the middle of the crowd with your sparkling eyes. But I am sitting here like a statue and thinking about you without knowing the wetness of my eyes has dried.

One thing must be agreed upon. You have made my life so much easier. No need to have a mobile phone in hand. No need for  headphones. No need for annoying visual devices like T.V. Just having your memories with me is enough. Do we have one or two things  between us to remember at? There are enormous secret words, action and songs among us. 24 hours will magically disappear within 2 snaps. You are my entertainment feature that doesn't need to cost ..

You have made my life not only simple but also useful. When the coronavirus emerged in the billions, we had to wear masks and cover our mouths and kneel before it.To prepare for the next wave, I bought so much, But its usefulness is only now understood.

Whenever I blush in shy at the onslaught of your memories, the mask became my lip concealer. but sometimes I am afraid that my eyes will betray me when I smile shyly, like the Ettappan who betrayed Kattabomman. You can say that you are a risk taker. But when my eyes and my lips compete to show off my shyness, I struggle to hide it. In my life, I am a risk taker than you.

 

Is there only laughter in life, have to be hide?  Tears too. Nothing to blame you for. Nothing happened to the point of crying. But the eyes sheded tears and the heart is grieved. what to do? From Neil Amstrong to Chandraayan 3, they jumped for joy after touching you. How can I share that moment that touched you that hurt me? That touch may have touched your skin. But the scar of the gunshot wound is on my skin.

I made up my mind at that moment. No matter who surrounds you from the stars to the hellish people, I will never meet you in the crowd. I know very well that touching you makes me burn. I am not going to hurt you by showing  that pain in person. To make you suffer is something I never dreamed of. It's time for me to stand aside while your fans surround you.

Don't feel bad that I'm alone. Do you know the difference between loneliness and solitude? I have a lot of difficulty in maintaining friendships. I am running in search of solitude, though so many people to come looking for my friendship. It's my nature. I like talking to myself better than talking to people.

I chose solitude from my young age. Swami Vivekananda was my first friend in school. I used to talk to him whenever I was alone. Whenever I am confused, I read a random page from his book “Chicago Addresses”. It's almost as if he himself came and gave me a solution. Che guevara was my second best friend when I went to college. My friend's father introduced him. He and I were going to a book fair and happened to see a short film  of Fidel Castro. If you ask who has survived the most assassination attempts in history, the answer is Fidel Castro.

According to the Cuban government, Fidel Castro survived more than 600 assassination attempts. In a joke about it, Castro refused to accept the world's longest-living sea turtle as a gift. Because he would be so heartbroken if he kept the turtle as a pet and it died before him. So, he didn't want the turtle as a gift, because he survived for so long.

 

But his revolutionary friend Che guevara impressed me more than him. I have no companions after him. Just lovers.. that's just five people... A man who has  mischievous in his eyes and creating funny story -  Mr. Manoj Bajpayee (The Family Man – Web series)…. Too much naivety –he understand all thing in his style Mr. Bhaarath (Finally– YouTube)…. Alauddin's wonderful lamp-goblin - Neighbor country's cupid Mr. Will Smith(Aladdin - Film)....A man who has a stealthy sight and sings at the high pitch of his voice and is entertaining - Mr. Alexander Babu (Alex in Wonderland – Musical Standup)…. I don't know what he looks like. but he has a heavy voice that makes you fall in love with his sense of humour - Mr.Vicky (Tamil Info – YouTube).

Those are the Pancha Pandava Lovers of this Digital Age Panjali !!! This all love is short term passion. The love that comes after seeing you is the sweetest and longest in my life. Do you have the power to give it back to me abundantly than me? Let me end with a challenge,

 

                                                                                                     

                                          With Love,

                          Your Diamond Jasmine..

Template by:

Free Blog Templates