என் கண்களுக்குள் சிக்கிக் கொள்ளும் நீ, ஏன் என் கைகளுக்குள் சிக்க முடியவில்லை?
என் நிலவு மனிதனுக்கு,
நீ எங்கே இருப்பாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால்
எப்படி இருக்கிறாய் என்று தான் தெரியவில்லை. மொத்தத்தில் நான் நன்றாக
இல்லை. எவ்வளவு அழுதாலும் ஏன் என் கண்ணீர் வற்றவே மாட்டேன் என்பது தான் எனக்குப்
புரியவில்லை. ஏன் உன்னை இவ்வளவு நேசிக்கிறேன், அதுவும் எப்போதிருந்து உன் மேல்
உயிரையே வைக்கும் அளவுக்கு என் காதல் இவ்வளவு விஸ்வரூபம் எடுத்தது என்பதும்
எனக்குப் புரியவில்லை.
நீதான் முதலில் பார்த்தாய். அதுவும்
எப்போதிருந்து என்னைப் பார்க்க ஆரம்பித்தாய் என்றும் இன்று வரை புரியவில்லை.
உண்மையிலேயே என்னைத்தான் பார்க்கிறாயா என்பதை தெரிந்து கொள்ளவே எனக்கு
மாதக்கணக்கில் ஆயிற்று. ஏதோ ஒன்று பிடித்துப் போய் நான் விளையாட்டாக உன்னை சீண்ட
ஆரம்பித்தேன். ஆனால் அது இவ்வளவு முக்கியமானதாய், என் உலகத்தையே ஒரு புரட்டு
புரட்டிப் போடுவதாய் மாறும் என சத்தியமாய் நினைக்கவில்லை.
நிமிடத்திற்கு ஒரு தடவையாவது உன் நினைவு
வந்துவிடுகிறது. உன்னைப் பற்றி வேண்டும் என்றே தப்பு தப்பாய் யோசித்தாலாவது உன்னை
வெறுத்து மறக்க ஆரம்பித்து விடுவேன் என தப்புக் கணக்கு போட்ட என் அறிவை என் இதயம்
ஒரே அடியில் சுருண்டு விழச் செய்து விட்டது. நீ தப்பே செய்திருந்தாலும், செய்து
கொண்டிருந்தாலும் உன்னை எப்படியடா என்னால் வெறுக்க முடியும்?
உன்னை வெறுத்தால் இந்த உலகத்தையே அல்லவா வெறுக்க
வேண்டி வரும்? இப்போதைக்கு என் சிறிய உலகத்தில் நீ மட்டும் நிரம்பி வழிகிறாய்.
அதுவே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. நிறைய வேளைகளில் உன் நினைவே வராதது போல
நடிக்க முயற்சி செய்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா, என்னைப் பொறுத்தவரை உயிர்
போகும் அளவிற்கு வலி என்பது எது தெரியுமா? இரத்தப் பரிசோதனைக்காக என் கை
நரம்புகளில் ஊசியை ஏற்றும் போது இந்த உலகத்தையே மறந்து, ஏன் வெறுத்து ஓடி விடத்
தோன்றும்.
ஆனால் இந்த முறை வலிக்கு பயந்து கண்ணை இறுக
மூடும் போது எனக்கு உன் முகம் மட்டும் தான் எதிரே தோன்றியது. உன் பெயரை
குறைந்தது 20 தடவையாவது
முணுமுணுத்திருப்பேன். பரிசோதனை முடிந்து வெளியே வரும் போதுதான் யோசித்தேன்.
உண்மையில் எனக்கு அதிர்ச்சியாய் கூட இருந்தது. வருடக் கணக்கில் கூடவே இருந்தவர்களை
எல்லாம் விட்டு விட்டு இதுவரை நேரில் பார்த்தேயிராத உன்னை எப்படி என் மனம்
நினைத்தது? இந்த லட்சணத்தில் உன்னை மறக்க முயன்றதைப் போல் நடிப்பு வேறு..
உன்னை காதலிக்கவே இல்லை என சொல்லி இனி என்னை
ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகி விட்டது. அதற்காக என் காதலை உன்னிடம் சொல்லி உன்
நிம்மதியை கெடுக்கவும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்த கடிதம் உன்னை சேராதது போலவே
என் காதலையும் உன்னை வந்தடையாமல் பார்த்துக் கொள்கிறேன். அது ஒன்று மட்டும் தான்
நீ சந்தோஷமாய் இருப்பதற்கு என்னால் செய்ய முடிந்த ஒன்று.
உன்னிடம் என் காதலை மூடி மறைப்பது கஷ்டமான
விஷயம் தான். ஆனால் சொல்லி, உன்னை என்னால் பார்க்க முடியாமல் போனால் அது எனக்கு
உயிர் போகும் வலி தரும். சில நாட்கள் இடைவெளியையே என்னால் தாங்க முடியவில்லை.
எல்லாமே ஒரு நொடியில் வெறுத்துப் போயிற்று. தனியே தூங்கி, தனியே சாப்பிட்டு, தனியே
சிரித்து இன்னும் நிறைய.. தனிமையிலேயே ஒரு நாள் நான் உயிரையும் விடப் போகிறேன்.
யார் யாரோ எதற்கோ அழுதார்கள் எனில் எனக்கும் கூட
சேர்ந்து அழ வேண்டும் போல் உள்ளது, உன்னை நினைத்து. உன்னை மறக்க நினைத்து CJ-7 series பார்த்தால் கிளைமாக்ஸ் -சில் அந்த பொம்மை Alien
நாய்க்குட்டி செத்ததற்கு நான் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து
விட்டேன். அந்த குட்டிப் பையன் கூட அவ்வளவு ஏங்கி அழுதிருக்க மாட்டான்.
இவ்வளவு ஏங்கியதாய், அழுவதாய் சொல்கிறாளே ஆனால்
ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பவில்லையே என்று நினைத்து விடாதே.. நிறைய எழுதி எழுதி
எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். உனக்கு அனுப்ப பயம், தயக்கம், என்னால் ஏதும் நீ
பிரச்சனையில் சிக்கி உன் நிம்மதி போய் விடுமோ என்கிற சந்தேகம். நீயாவது சந்தோஷமாய்
இருக்கட்டுமே என்கிற நப்பாசை.
எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் தெரியுமா? உனக்கு
அனுப்ப எனக்கு நிறைய செய்திகள் உண்டு. உன்னிடம் பேச எனக்கு நிறைய நிறைய விஷயங்கள்
உண்டு. ஆனால் அத்தனையையும் அடி மனதில் போட்டு புதைத்து விட்டு உனக்கு ஏதும்
அனுப்பி விடக் கூடாது என எத்தனையோ சமயங்களில் உறுதியாய் இருந்திருக்கிறேன்.
அதையும் மீறிதான் சில சமயங்களில் நான் அனுப்பி விடுவதுண்டு.
நானும் மனுஷிதானேடா. உன்னைக் கொஞ்சிக் கொண்டே
இருக்க சொல்லும் என் மனதை எவ்வளவு காலம் தான் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க
முடியும் எனத் தெரியவில்லை. முடிந்த அளவு போராடுகிறேன். ஆனால் அந்தப்
போராட்டத்தில் வெற்றி அடையக் கூடாது எனவும் இன்னொரு சமயத்தில் நினைக்கிறது என்
ஷைத்தான் மனம். நான் நல்லவளா, கெட்டவளா உன் காதலுக்கு?
விடை தேடப் பிடிக்காமல் முடிக்கிறேன் இத்துடன்..
இப்படிக்கு
உன் வைர மல்லி..
You who get caught in my eyes, why can't you get caught in my hands, baby?
To my moon man,
I know exactly
where you will be. But I don't know how you are. So overall I'm not okay. I just don't understand why my tears never dry up
no matter how much I cry. I don't understand why I love you so much and since when my love took such a Vishvarupa that I
would put my life on you.
You only saw me
first. And till today I don't understand since when you started seeing me. It
took me months to figure out if it was really me. In the beginning, I just
started teasing you playfully. But I really didn't think it would be so
important and turn my world upside down.
I remember you at least once a
minute. I miscalculated that if I felt bad about you, I would start hating you
and forget you. But my heart broke my mind in one fell swoop. How can I hate
you even if you do wrong?
If I hate you,
won't I hate this world? For now, my little world is filled with only you.
That's enough for me. Many times, I tried to pretend I didn't remember you. Do
you know what my life-threatening pain is? Whenever the nurse put the syringe
into my vein for the blood test, I would want to run away from this world.
But this time
when I closed my eyes tightly because of the pain, I only saw your face in
front of my closed eyes. I would have mumbled your name at least 20 times. I
was really shocked when I came out of that lab. How did my mind think of you
after leaving all those who were together for years and not seeing you in
person? In this I am trying to pretend to forget you. OMG...
It's clear that I can no longer deceive me by
saying that I never loved you. For that, I don't want to spoil your peace by
telling you about my love. I will make sure that my love does not reach you
just as this letter does not reach you. That's the only thing I can do to make
you happy.
Yes..it's
hard to hide my love from you. But if I can't see you because I told you of my
love, it will pain me to death. I couldn't bear even this gap of few days.
Everything disgusted me in an instant. Sleeping alone, eating alone, laughing
alone and so on.. I think one day I'm going to die alone, without anyone
knowing.
Nowadays, if someone cries for anything, I feel like I too want to cry, but
for you. When I watched the CJ-7 series, I have started crying at the death of
that toy alien puppy in the climax. But the truth is I missed you so much on
that time. Even that little boy would not have cried so longingly. I cried so much because you weren't
there.
Don't think
I didn't send a single message.. I wrote a lot and sent it myself. I am afraid,
reluctant to send you, I doubt you will get into trouble and lose your peace. I
want you to be happy forever.
Do you know how
hard that would be? I have a lot of messages to send you. I have many things to
talk to you. But, buried in my heart, I have resolved many times not to send
you anything. Sometimes I send you beyond that.
I'm a human
too, right? I don't know how long I can control my mind. I am struggling as
much as possible. But other times my satanic mind thinks that I should not win
that fight. Am I good or bad for your love?
I don't want to
look for an answer and end with this..
Your Diamond Jasmine..
1 comments:
“I love your blog..Love everything you write..You really light up my heart.Thank you so much for sharing..Keep writing.
Post a Comment