Friday, 26 April 2024

Don't smile.. Your handsome looks lead the flowers to jump off the plant and commit suicide which diminishes the flower population !!!

 

என் நிலவு மனிதனுக்கு,

 

யார் சொன்னது, நிலவு எரிமலைப் பாறையால் ஆனது என்று.. ஒற்றை மல்லிகை மொட்டை வட்டப் பொட்டாக்கி  வான் முகத்தில் ஒட்டப்பட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, உன் தோற்றம்? உன் ஒட்டு மொத்த அங்கமும் பூவின் மெதுமெதுப்பை ஒத்ததல்லவா? பூப்பந்து போல் இருக்கும் உன்னை அப்படியே அள்ளி அணைத்து வாழையிதழில் சுற்றி வைப்பதைப்  போல என் இரு கரங்களில் உன்னைப் பொதிந்து கொள்ளவா?

 

பூவோடு சேர்ந்து நாறும் மணக்குமாம்.. கேள்விப்பட்டது உண்மைதான்.. உன் உச்சி முடியை நுகர்ந்து பார்க்கும் போதே என் நுரையீரல் கிளைகளில் வாசனைத் திரவியம் வழிந்தோடும். உன்னை இவ்வளவு அருகில் பார்க்கும் சுகானுபவம் பெற்ற பின் என் கண் மலர்களாவது, வாடுவதாவது? உலகில் உள்ள மொத்தப் பூக்களின் அழகு உன் அழகில் கால் பங்கு பெறுமா என்ன? அதனால் தான் அனைத்துப் பூக்களும் உன் அழகைப் பார்த்து பொறாமையில் முகம் சிவக்கிறது இல்லையெனில் மனம் வாடிப் போய் செடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறதோ?  விடு போகட்டும்.. பூக்கள் தொகைப் பெருக்கம் கொஞ்சம் குறையட்டும்.

 

ஆமாம்.. தண்ணீரே எடுத்துக் கொள்ளாமல்  எப்படி உன்னால் இவ்வளவு புத்துணர்ச்சியுடன் மலர்ந்த முகத்துடன் இருக்க முடிகிறது? தண்ணீருக்குப் பதிலாக மழை அமுதத்தில் முகம் கழுவிக் கொள்கிறாயோ? உன் பட்டு மேனியில் ஒட்டிக் கிடக்கும் அமுதத் துளிகளை  மேகப் பஞ்சால் ஒற்றி எடுத்துக் கொள்வாயோ? உன் கன்னம் தொட்ட பூரிப்பில் தான் மேகம் ஆனந்தக் கண்ணீரை அவ்வப்போது சிதற விடுகிறதோ?  இருக்கலாம்.

 

ஆசை நிறைவேறி விட்ட மகிழ்ச்சியில் தான் தனது இடி கைகளால் கைகொட்டி தன் மின்னல் பற்கள் அத்தனையையும் காட்டி அந்த சிரிப்பு சிரிக்கிறதோ? பார்க்க சந்தோஷமாய் இருந்தாலும் எனக்கும் கொஞ்சம்

பொறாமையாய்த் தான் உள்ளது. நினைத்த நேரம் மேகம் உன்னைத் தொட முடிகிறதே.. எனக்கும் சில நிறைவேறாத, எதிர்காலத்தில் நிறைவேறக்கூடிய, எத்தனை ஜென்மத்திலும் நிறைவேறவே முடியாத ஆசைகள் சில உண்டு.

 

உன்னோடு வாட்டர் பைக் சவாரி மேற்கொள்ள வேண்டும். காற்றையும், தண்ணீரையும் ஒரு சேரக் கிழித்துக் கொண்டு நிகழ்கால நொடியிலிருந்து எதிர்காலத்துக்கு கடிகார முள்ளுக்கு முன்னமே நாம் முந்திச் செல்ல வேண்டும். பூப்போன்ற நீர்த்துளிகள் நம் உடலின் வெப்பத்தை தணிக்க முடியாமல் தவிக்க வேண்டும். பனிக்காற்று நம் நெருக்கத்தைப் பார்த்து பற்றியெறிய வேண்டும். நம்மைப் பார்க்கும் மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடி நம்மைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம் நாம் அதனிடமிருந்து நழுவ வேண்டும். என்னை மீறி ஒரு சொட்டு நீர் கூட உன் மேனி மீது படாது நான் உன்னை தழுவிக் கிடக்க வேண்டும்.

 

இன்னொரு ஆசையும் உள்ளது. பின்பனி இரவில் sleeper பேருந்தில் அப்பர் பெர்த்-தில் நாம் இருவரும் பயணம் செய்ய வேண்டும். லேசான மழைத்தூறல் இருந்தால் இன்னும் நல்லது. எனக்கு இரவின் வாசனை மிகவும் பிடிக்கும். நம் அடிமனது வரை ஊடுருவி எல்லா உணர்ச்சிகளையும் கிளறி விடும் ஆற்றல் அதற்கு உண்டு. அத்தகைய நடு நிசியில் உனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டு (உனக்குப் பிடித்த பாடல்கள் எல்லாமே எனக்கும் பிடிக்குமே) உன் கால்களை என் மடி மீது வைத்து   பயணம் முழுக்க வருடி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதழ்கள் பேசி ஓய்ந்த பின் கண்கள் பேசிக் கொள்ளட்டும்.

 

போர்வை கூட வேண்டாம், என் ஒரு துப்பட்டாவில் நம் இரு உடல்களும் குடிபுகுந்து கொள்ளட்டும். தலை சாய உன் தோள்கள் கொடு, ஆனால் தூங்குவதற்கு அல்ல. நின்று கொண்டே எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கிண்டல் செய்ய. எனக்குக் கிடைத்தது போல் பஞ்சு மெத்தை தோள் தலையணை உனக்குக் கிடைக்கவில்லையா எனக் கேட்டு வெறுப்பேற்ற. இருவர் அணைப்பில் குளிர் சாதனப் பேருந்திலும் அனைவர்க்கும் வேர்க்கட்டும்.

 

இப்போதைக்கு இந்த இரு ஆசைகள் தான். எனக்கும் ஆசைதான் ஆசைகளை வளர்த்துக் கொள்ள. ஆனால் நீ விஷ்ணுவின் மகனாக இருக்கலாம். ஆனால் நான் பிரஜாபதி தக்ஷாவின் மகள் அல்லவே. அடுத்த ஜென்மத்தில் அவ்வாறே பிறக்க ஆசைப்படுவதையும் இன்னொரு என் ஆசையாக சேர்த்துக் கொள் என் மன்மதா..

இப்படிக்கு அத்தனைக்கும் ஆசைப்படும் உன் வைர மலர்.


Don't smile. Your handsome looks lead the flowers to jump off the plant and commit suicide which diminishes the flower population.


To My Moon Man,

 

Who said the moon is made of volcanic rock.. You are like a single jasmine flower stuck like a bindi on the forehead of the sky's face. Is not your whole-body like the softness of a flower? I want to wrap you in my arms like a butterfly wrapped in a velvet towel.


Does a mere string smell like flower? Yes.. What I heard is true.. When I smell your hair the perfume flows in the branches of my lungs. After the joy of seeing you so close, the flowers of my eyes never fade. Can the beauty of all the flowers in the world be a quarter of your handsome? That is why all the flowers are jealous of your glowing face, wither, fall from the plant and commit suicide. Let it go.. let the population of flowers decrease a bit.

 

Yes.. How can you get such a fresh and glowing face without drinking water? Washing your face with rain elixir instead of water? Would you touch-up the elixir drops clinging to your silky skin with a cloud sponge? Is that why the cloud that touches your cheek sheds tears of joy? May be.

 

So, she claps her thunderous hands and grins with all her lightning teeth in the joy of having her wish fulfilled? Glad to see. But I feel jealous. The cloud can touch you anytime. I also have some unfulfilled desires which may be fulfilled in the future and may not be fulfilled in any birth.

 

I want to ride a water bike with you. Tearing air and water together, we must beat the clock from the present moment to the future. Drops of water like flowers must suffer from not being able to cool down our body heat.  If the ice wind senses our proximity, it should start burning. Whenever the fish try to touch us, we have to slip away. Not even a drop of water should fall on your body, you should be hugged like that by me.

 

There is another wish. Both of us should travel in a sleeper bus (especially in the upper berth) on a snowy night. A slight drizzle is even better. I love the smell of the night. It penetrates deep into our hearts and can stir all our emotions.  In between we should listen to your favorite songs (and I love all of your favorite songs) and keeping your legs in my lap and massaging them for the rest of the journey. Let the eyes speak after the lips are relaxed.

 

No blanket needed, let both our bodies snuggle up in my one dupatta. Give your shoulder pillow to place my head, but I don't want to sleep. To tease the sleeping stars which are always sleep in standing position. I would like to ask them if they didn't get a foam mattress shoulder pillow like I got. Let everyone feel warm in that AC bus because of our hug.

These are the two wishes for now. I also want to develop desires. But you may be Vishnu's son. But I am not Prajapati Dakshan's daughter. Add my desire to be born as Rati in the next life as another desire my Cupid..  




By your Diamond Jasmine - who desires everything.


0 comments:

Post a Comment

Template by:

Free Blog Templates