தங்க
முலாம் பூசப்பட்ட என் வெள்ளி நிலவனுக்கு,
மல்லிகை
வாசம் நிரம்பிய உன் வைரம் எழுதுவது. இப்போதெல்லாம் என் இதயம் புதிதாய்,
வித்தியாசமாய் ஒரு ராகத்தைக் கற்றுக் கொண்டு அந்த தாள லயத்தில் தான் துடிப்பேன்
என்று அடம்பிடிக்கிறது. எனக்குத் தெரியாது, என் இதயத்திற்கு ராகம், தாளம் தெரியும்
என்று. நான் என் இதயத்தின் காதுகளில் ஒரு தரம் தான் உன் பெயரை கிசுகிசுத்தேன்.
இப்போது ஒவ்வொரு முறை துடிக்கும் போதும், அது உன் பெயரையே பாடுகிறது.
நீ என்
முன்னே நிற்கும் போது, என் இதயத்தின் இசை உச்ச லயத்திற்கு சென்று என்னை உன்னிடம்
சரணாகதி அடையச் செய்வதை எவ்வாறு விளக்குவேன்? கடிகாரத்தில் எப்போதும் உள்ளது 12 கோடுகள் தான். ஏனோ தானோவென்று சுற்றி
சுழன்றியடித்துக் கொண்டிருக்கும் முட்கள்தான், உன் கண்களைப் பார்த்ததும் ரோஜாப்
பூவாய் மலர்ந்து உன் அழகின் அச்சிலேயே சுற்றி சுற்றி வருகின்றன. சாதாரண நேரங்களை
முகூர்த்த நேரங்களாய் மாற்றும் மாயாஜாலத்தை எப்போது உன் கண்கள் கற்றுக் கொண்டது?
என்னுடைய இரவுகளில் உன்னைத் தேடுகின்றேன். கனவுகளில் உன்னோடு கை
கோர்க்கின்றேன். பார்க்கப்படாத உன் ஆன்மா ஒன்றுதான் என் ஆன்மாவுக்கு தெரிந்த
ஒன்று. நிறைய வார்த்தைகள் எழுதப்படாமல் என்னிடம் தேங்கி நிற்கின்றன. என் கவிதையின்
கதாநாயகன் நீ. என்றும் இளமையாய், வீர தீர சாகசனாய், முத்துப்பல் சிரிக்க கட்டழகு
உருவச் சிலையாய், பத்தொன்பது வயதிலிருந்து ஒரு நாளும் கூடாதவனாய், என்னவனாய்
இருப்பாய்.
என்
பாதங்கள் கூட இப்போது உன் திசையை நோக்கித்தான் நடக்க கற்கிறது. நான் தனியாக
நடக்கும்போதும், என்
இதயம் உன் குரலோசையின் வழிகாட்டுதல்படியே வளைந்து செல்கிறது. உன் வார்த்தைகள் —
அவை மல்லிகையின் வாசனை போல என் மனசுக்குள் தங்கிவிட்டன. மென்மையாய், காண முடியாதபடியாய், ஆனால், ஒருபோதும் மறக்க
முடியாதபடியாய்.
என்
சுற்று உலகமே மாறிப்போனது போல உணர்கிறேன். வானம் கைக்குள் வருவதுபோல் தோன்றுகிறது;
பூமி எனக்காய் பாடத் தொடங்கியிருக்கிறது
போல. எவ்வளவு கூர்ந்து நோக்கினாலும், உன் பார்வையின் ஆழம் எனக்கு பிடிபடவில்லை எனத் தோன்றுகிறது. அதை அளக்க இந்த பிறவியில் என்னால் முடியாது. நீ
என் கண்களில் நிறைந்து விட்டாய், என்
எண்ணங்களிலும், என்
மூச்சிலும் கூட.
நாம் இருவரும்
சேர்ந்து நடக்கக்கூடிய பாதையில் நட்சத்திரங்கள் நிறைந்த வானம், பூக்கள் நிறைந்த
கூடையைப் போல காட்சியளிக்கிறது. ஒவ்வொரு வால் நட்சத்திரமும் என் விரல்களைக் கொண்டு
உன் கையைத் தேடுகிறது போல. நான் பயந்திருந்த எதிர்காலம் கூட இப்போது மென்மையான அதிகாலையாய் விடிய
தொடங்கியிருக்கிறது, உன் வாசனையோடு. இது தான் விதி என்றால், இது ஒரு இனிய ராகம் தான் — ஒரே தாளத்தில்
மூச்சுவிடும் இரு ஆன்மாக்களின் தெய்வீக ராகம்.
அந்த ஒரு
மந்திர நொடியை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். —
மங்கள நூலை கட்டும் அந்த தருணம். ஆம். இதுவொரு
இதயங்களின் முடிச்சு. ஒலி இல்லாமல் உச்சரிக்கப்படும் வாக்குறுதி. ஏழு அடிகள்
தொடங்கும் அந்த ஒரு பார்வையில், என்
இதயம் இதைதான் காத்திருந்தது போல. அக்கணம் தான் வெறும் வார்த்தைகளில் வாழ்ந்து வந்த நம் காதல் முடிவு
பெற்று ஒருமித்த உணர்ச்சியாய் நம்முள் ஒளிரத் தொடங்கும் பொன்னான தருணம்.
உன்னுடன்
வாழ ஆரம்பிக்கும் ஒவ்வொரு கணமும், அரும்பு
விட ஆரம்பிக்கும் முதன்முதல் மல்லிகைப் பூ
போல — மென்மையாய், தூய்மையாய்,
மறக்க முடியாத வாசனையாய் தாங்கி நிற்கும்
என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மெதுவாய் வந்து தொட்டு போகும் நறுமணத்
தென்றல் போன்ற உன் சுவாசத்தில் என்
நுரையீரல் பூரித்து வாழும் வாழ்க்கை வேண்டும்.
இப்போது
என் எல்லாமும் பாதி உன்னுடையது, பாதி
எனது. பிரிவு என்ற வார்த்தையையே மறந்து இரு அரைமனங்கள் ஒரு முழுமனதாய் வாழ
ஆரம்பிப்போம். அப்படி அமையப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நான் தேடிச் செல்ல
வேண்டிய ஒன்றல்ல, என்பது எனக்குத் தெரியும். அது எப்போதுமே என்னோடேயே தங்கி இருக்கும்.
ஆம்.. உன் கண்களில்.
என்
நிலவு மன்னவா, காதல்
எப்படி இருக்கும் என்று ஒருநாள் நீயே கேட்டால் — இதுதான் அதற்கு விடை: ஒரு
பைத்தியமான அமைதி, மல்லிகை
வாசனை பரவிய நொடிகள், நம்மிடையே
துளித்துக் கொண்டிருக்கும் காலமற்ற மௌனம்.
அந்த வாசனையை நேரம் கூட திருட
முடியாது.
அந்த நொடியை யாரும் முடித்து வைக்க முடியாது.
எப்போதும்
உன்னுடைய,
மல்லிகை மணம் கவழும் வைரமயில்..
"My Moon, My Melody – A Love Letter Filled with Jasmine and Dreams”
To my gold-plated silver moon,
Your diamond, filled with the fragrance of jasmine, writes
this. These days, my heart has newly, and differently, learned a raga (melody)
and stubbornly insists on throbbing only in that rhythm and beat. I didn't know
my heart knew raga and rhythm. I whispered your name only once into my heart's
ears. Now, with every beat, it sings only your name.
How do I explain that when you stand before me, my heart's
music reaches its peak and makes me surrender to you? The clock always has only
12 lines. The hands, which were circling aimlessly, bloom like rose flowers the
moment they see your eyes and revolve around the axis of your beauty. When did
your eyes learn the magic of turning ordinary moments into auspicious moments?
I search for you in my nights. In dreams, I hold hands with
you. Your unseen soul is the only thing my soul knows. Many words remain
unwritten, stagnant within me. You are the hero of my poem. Forever young, a
brave and daring adventurer, a beautiful statue with pearly white teeth and a
smile, my own, who will never be a day older than nineteen.
Even my feet are now learning to walk in your direction.
Even when I walk alone, my heart curves according to the guidance of your
voice. Your words - they have settled in my mind like the fragrance of jasmine.
Softly, invisibly, but never forgettable.
I feel like my whole world has changed. It feels like the
sky is within my grasp; it feels like the earth has begun to sing for me. No
matter how closely I look, I can't seem to grasp the depth of your gaze. I
cannot measure it in this lifetime. You have filled my eyes, my thoughts and
even my breath.
In the path where we walk together, the star-filled sky
appears like a basket full of flowers. Each shooting star feels like my fingers
searching for your hand. Even the future I feared has now begun like a gentle
dawn, with your scent. If this is destiny, then it is a sweet melody - a divine
raga of two souls breathing in the same rhythm.
I often think about that one magical moment - the moment of
tying the sacred thread. Yes, this is a knot of hearts. A promise spoken
without sound. In that first glance that initiates the seven steps, it is as if
my heart had been waiting for this. That moment is the golden time when our
love, which had been living only in words, ends and begins to shine within us
as a unified emotion.
There is no doubt that every moment I begin to live with you
will be like the very first jasmine blossoming - gentle, pure and bearing an
unforgettable fragrance. I want a life where my lungs are filled with your
breath, like a fragrant breeze that gently touches and passes by.
Now, all that is mine is half yours and half mine. Let us
forget the word "separation" and begin to live as two half-hearts
becoming one whole heart. I know that in such an arrangement, happiness is not
something I have to seek. It will always remain with me. Yes, in your eyes.
My moon-like king, if you ever ask what love is like - this
is the answer: a crazy kind of peace, moments filled with jasmine fragrance,
the timeless silence budding between us. Time cannot steal that fragrance. No
one can end that moment.
Always yours,
Vairamayil, adorned with the scent of jasmine.
💌 From the blog Wingless Words of Yathriga — where letters bloom like jasmine petals in moonlight.
🌙Read next : https://winglesswordsofyathriga.blogspot.com/2025/09/storm-love-tree-poetic-letter.html
✨ If you felt this letter, share it with someone who makes your heart sing in rhythm.
No comments:
Post a Comment