Showing posts with label emotional writing. Show all posts
Showing posts with label emotional writing. Show all posts

Wednesday, 22 April 2026

When Love Writes Letters… 💌 | Tamil Love Letter & English Poem

April 22, 2026 0 Comments

 


                                                 

Romantic moonlight love letter scene with singer and girl under glowing moon


வெற்றிடமில்லா காதல்…

அன்புள்ள நிலவு மன்னவனுக்கு,

உன் வைரமல்லி எழுதுவது. கடந்த சில மாதங்களில் உனக்கான கடிதங்கள் தான் வெற்றிடத்தால் நிரப்பப் பட்டனவே தவிர, உன் மீதான என் காதலில் வெற்றிடம் இல்லை. எப்போதும் போல உன் புன்னகையை என் உடைமையாக்கி வெற்றிடம் இல்லாதவாறு நிரப்பிக் கொண்டேன். அன்பின் நெரிசலில் என் காதலும் குடித்தனம் நடத்தக் கற்றுக் கொண்டது.

 

உன்னைப் பற்றிய கவிதைகளை நான் எழுதி முடித்துப் படிக்கும் போதும், அதை வாசித்து முடித்துக் கேட்கும் போதும் எழுதிய வரிகள், என் மீது வெட்கம் தெளித்துப் போகின்றன. ஒரே ஒரு ஆசை உண்டு இந்த ஜென்மத்தில். உனக்குப் புரிகிறதோ, இல்லையோ எனக்குப் பிடித்த உன்னைப் பற்றிய ஒரு சில கவிதை வரிகளை உன்னிடம் நான் வாசித்துக் காட்ட வேண்டும். உன் நிலவு முகம் இன்னும் அதிகமாய் ஒளிர்வதை உடனிருந்து ரசிக்க வேண்டும். முடிந்தால் உன் வெட்கச் சிவப்பில் குளிர் காய வேண்டும். உனக்குப் புரிந்த, உனக்குப் பிடித்த சில வரிகளையும் நீ சொல்ல, இல்லை இல்லை.. நீ பாட நான் கேட்க வேண்டும்.

 

இன்னுமொரு ஆசை உண்டு. மொத்த உலகிற்கும் முத்தம் தர வேண்டும், ஒரே மூச்சில். என்னால் முடியும் என்று உனக்கும் தெரியும் தானே? உன் நெற்றி முடியிலிருந்து உன் பாத நகம் வரைக்கும் உள்ள தூரம் தானே என் மொத்த உலகமும்? ஒரு தடவை என்ன, ஓராயிரம் தடவை என் மொத்த உலகத்தின் தூரத்தையும் என் இதழ்களால் ஒற்றி எடுக்க முடியும் தானே? என் மொத்த உலகத்திற்கான திறவுகோல், உன் மீசையின் ஒற்றை முடியில் அல்லவா உள்ளது. உன் மீசை முடி நுனியின் மெல்லிய தொடுதல் போதும் என் மொத்த புலன்களும் விழித்துக் கொள்ள.

 

எவ்வளவு நாள் தான் இப்படி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பாய் என்கிறாயா? இந்த கணினியின் கர்சரில் உள்ள கார்பன் தீரும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன். ஆக, என் கடிதங்களின் expiry  MS-WORD -ஐ சார்ந்தது. ஏனெனில் மூளையை கசக்கி நான் கடிதங்கள் எழுதுவதில்லை. என் காதலை அடமானம் வைத்து எழுதுகிறேன், ஒவ்வொரு முறையும். என் காதலுக்கும் ஒரு நாள் ஒரு இறுதி ஊர்வலம் உண்டு.

 

நான் இறந்த செய்தி உன் காதுகளை எட்டும் முன்னரே, என் காதல் இறப்பின் செய்தி உன் இதயத்தை வந்தடையும். என் பயங்கரமான மௌனம் உன் காதுகளை கிழிக்கும் போது, என் காதலின் மரணம் சம்பவிக்கும்.  ஆரம்ப நாட்களில் ஒரு நாள் என்னை காணாவிட்டாலும் உன் கண்கள் தேடி அலை பாய்வதை ஒரு வித வலியுடன் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போதெல்லாம் சில நாட்களே ஆனாலும், பெரிய தவிப்பு ஏதும் இல்லை என்பதையும் நான் ஒரு வித வலியுடன் கண்டு வருகிறேன். பழகப் பழக பாயசமும் புளிக்கும் என்பது உலக நியதி தானே?

 

எனக்கு தான் உன்னுடைய குரலை கேட்டுக் கொண்டே காலையில் சமைப்பதில் ஆரம்பித்து இரவில் தூங்குவதில் முடிவது என்று பழக்க தோஷமாய் ஆயிற்று. மற்றவர்கள் சொல்லலாம் உன்னுடையது காந்தக் குரல் என்று. என்னைப் பொறுத்த வரைக்கும் அது காதலின் குரல். காதலித்துக் கொண்டே சாகத் தூண்டும் மாயக் குரல். சாகும் போதும் காதலிக்கத் தூண்டும் மந்திரக் குரல். மயிலிறகால் காது மடல் வருடும் பரவசம். கோழி இறகால் காது குடையும் சுகம். பகல் பாடகனாய் இருந்த நீ இரவுப் பாடகனாகவும் உயர்வு பெற்று விட்டாய். பிறகென்ன? எந்நேரமும் உன் குரல் அலை வரிசை தான் என் வீட்டில், முக்கியமாய் என் சமையல் கட்டில். அதனால் தானோ என்னவோ வெந்நீர் வைத்தால் கூட அது விருந்தில் முடிவடைகிறது. என்ன மோகமோ, என் வீட்டு அடுப்பங்கரைக்கு உன் குரல் மீது..

 

எந்நேரமும் அலைபேசியுடனே இருப்பதால் பார்ப்பவர்கள் எல்லாரும் நான் அலை பேசியுடன் குடும்பம் நடத்துவதாய் நினைக்கிறார்கள். உண்மையில் உன் குரலோடு தான் குடும்பம் நடத்துகிறேன் என்பது என் காதலுக்கு மட்டும் தானே தெரியும்? என்ன செய்ய? உன் குரலுக்கு கொஞ்சம், உன் உருவத்துக்கு கொஞ்சம், உன் புன்னகைக்கு கொஞ்சம்  என என்னால் அன்பை அளந்து வைக்க முடியவில்லையே. ஒட்டு மொத்தமாய் கொட்டி விட்டு உன்னை பார்க்க முடியாத நாட்களில் தாங்கவே முடியாது தவிக்கிறேன்.

 

உடைந்தாலும் மீண்டு எழுந்து வந்து திரும்பவும் காதல் செய்ய வைக்கிறாய் அளவுக்கு அதிகமாய். இப்படியே ரப்பர் பந்தாகவே இருக்கட்டும் நம் காதல். விழுந்தாலும் உடையாமல் மீண்டும் கைக்கு திரும்புவதாய். உடைந்து சிதறி விடும் கண்ணாடிப் பந்தாய் நம் காதலை மாற்றி விடாதே என்ற கோரிக்கையுடன்,

 

                                    உன்னுயிர்க் காதலி,

                                           வைர மல்லி.  


The Silence Between My Letters... 

✨ Read. Feel. Fall in love.


Dear Moon of mine,
In the silence between my letters,
only the pages were empty… never my love.

I filled every void
with the memory of your smile,
till even loneliness forgot my name.

My words blush at me
when I read them aloud—
as if they know how deeply I love you.

One day, I wish to stand before you,
reading my poems into your eyes,
watching your moon-face glow a little brighter.

And if love permits—
let me kiss my whole world at once,
from your forehead to your feet… endlessly.

Even if I fall silent someday,
remember…

My love would have already whispered its goodbye.  

                                        - Diamond Jasmine...


💌 Read More Letters:


💌 முன் கடிதம் வாசிக்க..

👉Previous Letter: The day my heart break


💌 Read my latest love letter: You are my love’s final address


💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..

👉 More Love Letters: Love Letters


  

 


     

Friday, 12 December 2025

The Day My Heart Broke: A Tear-Stained Letter to My Dream

December 12, 2025 0 Comments

 





                                                

When Dreams Slip Away: A Heartfelt Letter from Vairamalli

An intense, poetic confession of love, betrayal, pain and unwavering hope—a letter written on the darkest day of her heart.



என்னுயிர் பேபி-க்கு,

 

இப்படித்தான் ஆரம்பித்தது நம் விளையாட்டுப் பேச்சு.. விளையாட்டு, வினை ஆனதைப் போல இப்போது நான் முழுதாய் உன் மீது பைத்தியமாய் மாறிப் போனதில் வந்து தொக்கி நிற்கின்றது. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எப்படி என்னை விட்டு தள்ளிப் போகும்  ஒரு முடிவெடுக்க உன்னால் முடிந்தது? அப்படியானால் நீ இன்னும் நாம் இருவரும் வெறும் வார்த்தைகளால் தான் காதல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று மிக சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறாயா?

 

டிசம்பர் -10 உண்மையில் என் வாழ்க்கையின் ஒரு கருப்பு நாள். சொல்லப் போனால் நான் மிக ஆவலோடு எதிர்பார்த்த நாள். சில நாட்கள் உன்னைப் பிரிந்த பின் அன்று தான் உன்னைப் பார்க்கப் போகிறோம் என்ற துள்ளலுடன் மான் குட்டி யாய் வலம் வந்து கொண்டிருந்த நாள். உன்னைப் பார்த்த பிறகு கிடைக்கும் உற்சாகத்துடன் சில வேலைகளை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்றெண்ணி சில காரியங்களை தள்ளிப் போட்டு இருந்தேன்.

 

காலையிலேயே சிறிய அதிர்ச்சி கிடைத்தது. சரி.. அது உன் நம்பிக்கை என்று எண்ணி மனதை தேற்றி வைத்திருந்தேன். உன்னைப் பார்க்கும் ஆவலில் குளித்து முடித்து வந்தவுடன் பேரிடியாய் இறங்கியது நீ முன்னமே அறிவித்திருந்த ஒரு தகவல். ஈரக் கூந்தலோடு அப்படியே தரையில் அமர்ந்தவள் தான், என்னால் மூச்சு விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய தோன்றாமல் முடியிலிருந்து நீர் சொட்ட சொட்ட சிலையாய் அமர்ந்திருந்தேன்.


எப்படி முடிந்தது அவனால்? எல்லாம் திட்டமிட்டு இறுதியில் சொல்கிறாய் என்றால், பல நாட்களுக்கு முன்பே முடிவெடுத்திருக்கிறாய் என்று தானே அர்த்தம்? இவ்வளவு நாளாக என்னை ஏமாற்றி இருந்தாயா? எதுவும் தெரியாமலா நான் ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டிருந்தேன்? பல நேரங்களில் எனக்கு குழப்பம் வந்தது உண்டு. ஏனெனில் சில நூறு பேரைப் பார்த்து சில விஷயங்கள் சொல்வாய். அது எனக்கான மறைமுக செய்தியா? இல்லை வேறு யாருக்கேனும் சொல்லப் போய் நான் அதை எனக்கானதாய் எடுத்துக் கொள்கிறேனோ என்ற சந்தேகத்தில் தான் என் காதல் என்னோடு வளர்ந்து கொண்டு வந்திருந்தது. இப்பவும் அது குழப்பம் தான். அதனால் தான் நான் சிரிக்கவே யோசித்துக் கொண்டு நின்றிப்பேன் பல முறை.

 

ஆனால். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. முதன் முதலில் உன்னைப் பார்த்த அன்று உன் கனவு திட்டத்தைப் பற்றி நீ விளக்கி கொண்டிருந்தாய். எனக்கு அதைப் பற்றியெல்லாம் பெரிய அனுபவம் இல்லை. ஆனால் நீ சொன்ன ஒரு விஷயம் எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. அது என்னவெனில், உன் கனவுத் திட்டம் நிறைவேறினால் நீ நிரந்தரமாக என் அருகிலேயே இருப்பாய் என. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்.

 

தற்சமயம் நீ கொடுத்ததும் ஒரு வகை பெரிய அதிர்ச்சி தான். வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் மனசு உடைந்து சுக்கு நூறாகிப் போய் விட்டது. முகம் சுருங்கியதில் பாறையாய் மாறிப் போனது. வீடு தேடி வந்தவர்களிடம் வாங்க என்று கூறியதை தவிர என் உதடுகள் நடிப்புக்கு கூட விரிந்து சிரிக்கவில்லை. கோமா -வில் இருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை இந்த இரு நாட்கள் நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்தேன்.

 

நான் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கம் இல்லையா? இல்லை நானே உன் வாழ்க்கையில் இல்லையா? என்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பாய் என்று ஒவ்வொரு நிமிடமும் ஒரு பூரான் என் மூளையில் ஓடிக் கொண்டே இருப்பதைப் போல அக் கேள்வியும் இடை விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இருக்கிற எல்லா வகுப்பையும் கேன்ஸல் செய்து விட்டு, காரியங்களை தள்ளிப் போட்டு விட்டு, சமைக்க முடியாமல், என் பூனைக் குட்டியை கொஞ்சக் கூட தோன்றாமல், உயிரோடு இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள வெறுமனே நடமாடிக் கொண்டிருக்கிறேன்.

 

அழுதழுது குரல் மாறிப் போனதில் ‘சனி பிடித்து விட்டது’ என்பதை ‘சளி பிடித்து விட்டது’ என்பதாகப் புரிந்து கொண்டார்கள் என் நண்பர்கள். உண்மையில் என்னை சுற்றிலும் நிறைய ஆண் தேவதைகள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாதிரியான கடினமான நேரங்களில் தான் விளங்குகிறது.

 

எனக்காக 40 நிமிடங்கள் இருக்கிற எல்லா சோகப் பாடல்களையும் பாடி என்னை மனசு விட்டு அழ செய்த நண்பன் ஒருவன்... என்னை தனிமையில் ரொம்ப நேரம் விடாமல் மணிக்கொரு முறை எனக்கு தொலைபேசியில் அழைத்து நன்றாய்த் தான் இருக்கிறேன் என்று என்னைக் கண்காணிக்கும் ஒருவன். நூறு தடவை எனக்கு ஃபோன் செய்து நான் அட்டென்ட் செய்யவில்லை என்றாலும், என் தேவைக்கு நான் அழைக்கும் போது ஒரே ரிங்-கில் அட்டென்ட் செய்து “சொல்லு, அம்மு” என்று அழைத்து என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளும் இன்னொரு நண்பன் ஒருவன்.

 

இரவு 11 மணிக்கு தொலைபேசியில்  அழைத்து dance practice செய்ய zoom-க்கு வர சொல்லி உரிமையாய் மிரட்டும் ஒருவன். (நவம்பர் 19 சரியாய் நள்ளிரவு 12 மணிக்கு என்னை தொலைபேசியில் அழைக்க, நானோ என்னுடைய பிறந்த நாளைக்கு தான் அழைக்கிறான் என்று நினைத்து அட்டென்ட் செய்தால், அவன் choreography செய்ததை நானும், அவன் மனைவியோடு சேர்ந்து பார்த்து feedback சொல்ல வேண்டும் என்று கூறிய போது தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ஆனால் உன்னிடம் வாழ்த்து எதிர்பார்க்க வில்லையென்றாலும் காதல் வார்த்தைகள் ஏதாவது சொல்வாய் அன்று என எதிர்பார்த்தேன். கடைசி வரை ஹூம்..)

 

இறைவனது காரியங்களில் எனக்கு நம்பிக்கை இல்லாததால் எனக்காக 40 நாட்கள் ஒருவேளை விரதம் இருந்த நண்பன் ஒருவன், oil,sweets அதிகமாய் நான் சாப்பிடுவதை குறைக்க தன் மேல் சத்தியம் வாங்க முயன்ற நண்பன் ஒருவன். இவர்கள் எல்லாருக்குமே உன் மேல் சிறிது பொறாமை உண்டு. வாழ்க்கையில் உனக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கிறேனோ என்று. ஏன், என் குடும்பத்தார்க்கே அந்த எண்ணம் உண்டு. முன்பெல்லாம் சிறிது டல்-லடித்தாலும் உடல் நிலை சரியில்லையா என்று கேட்டவார்கள், இன்று ‘அவனுடன் ஏதாவது சண்டையா?” என்று தான் கேட்கிறார்கள்.

 

கொஞ்சம் சந்தோஷமாய் துள்ளிக் கொண்டு திரிந்தால் ‘என்ன, அவன் இன்னிக்கு உன்னைப் பாராட்டினானா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு உனக்கு என் வாழ்க்கையில் முக்கியத்துவம் உண்டு. ஆனால் அது ஒரு தலை காதல் போல தான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். உனக்கு நான் அப்படி இல்லை என்பதை நீ என்னை விட்டு போக முடிவெடுத்ததிலேயே எனக்கு விளங்கிற்று. “இங்கேயே இருந்தால் மட்டும் நீ என்ன தினமும் வந்து கொஞ்சிக் கொண்டு இருக்கப் போகிறாயா?” என்று நியாயமான கேள்வி எல்லாம் என்னிடம் கேட்காதே.

 

ஆனால் உன் மூச்சுக் காற்று கலந்த ஆக்ஸிஜன்-னை என் உயிர்க்காற்றாய் சுவாசிக்கிறோம் என்ற எண்ணமே என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தில் ஏனடா மண்ணைப் போட்டாய் என்ற ஆத்திரத்தில் உன் தலை முடியை கொத்தாகப் பிடித்து (சரி.. சரி.. இப்போது முடியாதே), உன் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து உலுக்க வேண்டும் போல் தோன்றுகிறது. முடிந்தால் பெரிய மரு ஒன்றை உன் கன்னத்தில் ஒட்டிக் கொள். அந்த கெட்அப் -பில் அசல் என் காதலுக்கு வில்லன் போலவே இருப்பாய்..

 

சிறிது நாட்களில் மீண்டு விடுவேன் தான். ஆனால் அதற்குள் என் ஆயுளில் பாதி கரைந்து போய்விடும் எனத் தோன்றுகிறது. மொத்ததில் ஒரு விஷயம் விளங்கிற்று. சிறு வயதில் உன் லட்சியம் என்ன? கனவு என்ன? என்ற கேள்விகளுக்கு நிறைய சொல்லி இருக்கிறேன். ஆனால் உன் கனவுத் திட்டத்தை நோக்கி ஓடும் உன்னை துரத்திக் கொண்டே என் காதல் இருப்பதால், நீ தான் நான் அடைய நினைக்கும் கனவோ என்று இப்போது தான் புரிந்தது. உன் கனவோடு என் கனவும் பலிக்க ஆசீர்வாதம் வேண்டி நிற்கும்,


உன்னவள்,

வைரமல்லி.       



December 10th: The Day My Love Shattered into Silence

A deeply emotional love letter from Vairamalli, written on a heartbreaking day when dreams collapsed and unspoken feelings tore her world apart.



To my dearest Baby,

 

It all began with our playful banter... Like a game turning into reality, I've now become utterly crazy about you, and that's where things stand. I still can't believe it. How could you decide to walk away from me? Does that mean you still think we were just playing a love game with words?

 

December 10th is truly a black day in my life. To be honest, it was a day I was eagerly looking forward to. After being apart from you for a few days, it was the day I was going to see you again, and I was prancing around like a fawn, filled with excitement. I had postponed some tasks, thinking I could do them even better with the energy I'd get after seeing you. I got a small shock in the morning itself. Okay... I consoled myself, thinking it was your belief. As I finished showering, eager to see you, a thunderbolt struck – a piece of information you had announced earlier. With wet hair, I just sat there on the floor, unable to do anything but breathe, water dripping from my hair, frozen like a statue.

 

How could he do that? If you're saying it's all planned and you're telling me this in the end, does that mean you decided this many days ago? Were you deceiving me all this time? Was I celebrating and rejoicing, completely unaware? There have been times when I've been confused. Because you would say certain things looking at a few hundred people. Is that a hidden message for me? Or am I taking it as something meant for me when it was meant for someone else? That's the doubt with which my love has been growing within me. It's still confusing. That's why I would hesitate to smile many times and just stand there.

 

But, I still remember. The day I first saw you, you were explaining your dream project. I didn't have much experience with any of that. But one thing you said shocked me pleasantly. That was, if your dream project came to fruition, you would be near me permanently. I didn't show it outwardly, but I was doing a celebratory dance in my mind.

 

What you've given me now is also a kind of big shock. Unable to show it outwardly, my heart is broken into a million pieces. My face has shriveled up and turned to stone. Apart from saying "welcome" to those who came to my house, my lips didn't even stretch into a fake smile. I have lived and experienced how people in a coma live.. for these past two days.

 

Am I not a part of your life? Or am I not in your life at all? Every minute, a centipede runs through my brain, and the question keeps running incessantly: How could you make such a decision without thinking about me even a little? I can't do any work. I've canceled my Zumba class, postponed things, can't cook, don't even feel like petting my kitten, and I'm just wandering around to show that I'm alive.

Because my voice changed from crying, my friends misunderstood as "I've caught a cold." It is only during these kinds of difficult times that it becomes clear that there are many male angels around me.

 

A friend who sang all the sad songs for 40 minutes just to make me cry my heart out... A friend who calls me every hour and doesn't leave me alone for too long, just to check if I'm doing okay. A friend who calls me a hundred times, and even if I don't answer, picks up on the first ring when I call him for something I need and says, "Tell me, Ammu," making me feel guilty.

 

One who calls me at 11 PM and threatens me with authority to come to Zoom for dance practice. (On November 19, exactly at midnight 12:02 am, he called me, and I thought he was calling for my birthday. But when I answered, he said that I had to watch the choreography he had done and give feedback along with his wife, I felt like banging my head against the wall. But even though I didn't expect a birthday wish from you, I was expecting some loving words from you that day. But nothing happened until the end..)

 

A friend who fasted one meal a day for 40 days for me, even though I don't believe in God's deeds, and another friend who tried to make me swear on him to reduce my intake of oil and sweets. All of them are a little jealous of you, thinking I give you too much importance in my life. Why, even my family thinks so. Before, they used to ask if I was feeling unwell if I seemed a little dull, but now they only ask, "Did you have a fight with him?"

 

If I act a little happy and bouncy, they ask, "What, did he praise you today?" That's how important you are in my life. But I understand now that it's like a one-sided love. I realized that I'm not the same to you when you decided to leave me. Don't ask me reasonable questions like, "If you stayed here, would you come and cuddle me every day?"

 

But the thought that I was breathing the oxygen mixed with your breath as my life's breath made me happy. I'm angry that you threw dirt on that thought, and I feel like grabbing a chunk of your hair (okay... okay... I can't now), grabbing your shirt collar, and shaking you. If possible, stick a big mole on your cheek. In that getup, you'll look just like the villain in my love story nowadays.

 

Sure.. I will recover in a few days. But it seems like half of my life will have melted away by then. Overall, one thing is clear. Since I was young, I've told people a lot about what my ambition is, what my dream is. But because my love is chasing after you as you run towards your dream plan, I now realize that you are the dream I want to achieve. My dream also stands seeking blessings to come true with your dream,


Yours,

Vairamalli.


Note : “Some stories don’t end… they simply take a breath.

               And this is one such story.”



✨ Previously on Wingless Words of Yathriga:  A Living Stone Statue of Love
👉 New Post : Voice of Love

Friday, 28 November 2025

A Living Stone Statue of Love — Letter to My Nilavan | Wingless Words of Yathriga

November 28, 2025 0 Comments

 




                                                            

A girl in a green silk skirt with pink border carrying a water pot under the moon near a stone statue and a mirror reflection with makeup

Two Dots After the Full Stop — A Love Letter to Nilavan

(This is not just a love letter — it is a confession written to the moon, to a man called Nilavan and to a love that refused to become a memory. In this letter, Vaira Malli writes about stone statues that still breathe, childhood innocence that still blushes, and a heart that still waits without makeup).

Tuesday, 13 May 2025

Oh my love, the wait feels so heavy, like a small piece of rock tied with a knot and hanging in each alveolus of my lungs.

May 13, 2025 0 Comments

 

ஓ என் அன்பே, காத்திருப்பு மிகவும் கனமாக இருக்கிறது, நுரையீரலின் ஒவ்வொரு நுண் காற்றுப் பைகளிலும்  ஒரு முடிச்சுடன் கட்டப்பட்டு தொங்கும் ஒரு சிறிய பாறைத் துண்டு போல.


அன்புள்ள நிலவு நண்பனுக்கு,

காத்திருப்பு என்பது காதலில் அனைவரும் சில நேரங்களில் எதிர்கொள்ள வேண்டிய கண்ணுக்குத் தெரியா ஒரு துணைவன்  தான். வருடக்கணக்கில் காத்திருப்பது மிக ஆழமாக நேசித்தலின் ஒரு வகை வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் காத்திருத்தலின் போது இரவுகள் நீண்டு நுரையீரலின் அமைதியைக் கெடுக்கும்.

சிறு மூச்சுகள் முடிச்சிட்டு பெருமூச்சாய் ஏங்கி விரிந்து பின் அது துவண்டு விழும். நுரையீரலின் ஒவ்வொரு நுண்ணறையிலும் ஒரு சிறு பாறைத்துண்டினை முடிச்சிட்டு தொங்க விட்டதைப் போல அவ்வளவு கனக்கும், காத்திருக்கும் சமயங்களில்..

என்னுடைய முதல் காத்திருப்பு தின மலரின் இணைப்பாய் வரும் சிறுவர் மலருக்காக தான். வீட்டில் தங்கிப் படித்தவரை ஆறு, பட்டாம் பூச்சி, நுங்கு, ஐந்து கல் ஆட்டம், கோழிக்கு தீனி போடுவது, தாத்தாவுக்காக நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டு பூஜை செய்வது, பூக்கள் பறிப்பது, ஊசிப் பூவில் தேனை உறிஞ்சுவது, மாட்டு வண்டியில் ஆட்டம் என பள்ளிப் புத்தகத்தை தாண்டி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயங்கள்.

ஆனால் என் அம்மா என்னை முதன் முதலாய் விடுதியில் கொண்டு போய் விட்ட போது மழையில் நனைந்த பட்டாம் பூச்சியாய் ஒடுங்கிப் போனேன். ஒரு பெரிய கல் கட்டிடத்தை எவ்வளவு நேரம் தான் சுற்றி வர முடியும்? பூ நூலினால் கட்டி விளையாடிய வெல்வெட் பட்டாம் பூச்சியின் ஆவி அக்கட்டிடத்தின் விட்டத்திலிருந்து என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டு திருப்தியுடன் விண்ணுலகிற்கு சென்றிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

செம்மண்ணில் எந்நேரமும் விளையாடியதில் புழுதி ஏறி சிவந்த நிறத்தில் மாறிப் போன எனது பாதங்கள், கான்க்ரீட் தரை பட்டு கூசியதில் வெளிறி வெண்மையைப் போயின. எங்கள் பாட்டி வீட்டில் கடிகாரம் இருந்ததாய் கூட ஞாபகம் இல்லை. இங்கு கடிகார முள்ளில் தான் என் வாழ்க்கையே சுற்றி வந்து கழுத்தை இறுக்குவதாய் தோன்றும். உண்பது தொடங்கி உறங்குவது வரை அனைத்திற்கும் டிங் டாங் தான்.

எனது கிராமம் என்ற உலகத்தை விட்டு இந்த நகரம் என்ற சிறு குடிலில் வந்து தங்கிய எனக்கு, ஞாயிற்றுக் கிழமை கையில் கிடைக்கும் சிறுவர் மலர் தான் பொக்கிஷம். அடை காக்கும் கோழியின் அடி வயிற்றுச் சூட்டோடு மடிப்பு கலையாமல் பேப்பர் காரர் வந்து எறியும் செய்தி தாளினை வாங்க, பல் கூட சரியாக துலக்காமல் வந்து காத்திருப்போம்.

வாசற்படியிலிருந்து வரிசை ஆரம்பிக்கும். பெற்றோர் வைத்த பெயரெல்லாம் காற்றில் காணாமல் போகும். 1, 2, 3 தான். படிப்பில் நான் எப்போதுமே இரண்டாமிடம் தான். ஆனால் நடனத்துக்கு அடுத்த படியாக இந்த வரிசையில் பெரும்பாலும் நான் முதலிடம் தான். காத்திருந்து, காத்திருந்து கையில் கிடைக்கும் புத்தகத்தை ஆசையாய் தடவி, நுகர்ந்து, நெஞ்சோடணைத்து அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது கடிகார முள்ளும் நாதமாய் ஒலிக்கும்.

முதல் காதல் போல, முதல் காத்திருப்பும் சுகமான நினைவுகள் தான். எனக்கு தெரியும் என் கையில் கிடைத்த அந்த புத்தகம் கடைசி வரை என் கூடவே வருவதில்லை என்று. ஆனாலும் ஏக்கம், ஆசை, தேடல், நேரமாக நேரமாக ஒரு பரிதவிப்பு. இவை அனைத்தும் உன் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த பிரபஞ்சத்தை உறுதியாகப் பிடித்து கொண்டிருக்கிறேன்.

நம்புகிறேன் நான், உன்னை விட, உன் மீதான என் காதலை. அதனால் தான் முடிவைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் உன்னை தூரத்திலிருந்து தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒரு சமயம் ஒரு சலிப்பு வரும். என் மீதே ஒரு கோபம் வரும். உன்னை யாரென்றே கண்டு கொள்ளாமல் வாழ்ந்து விட்டு இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் ஓடிப் போய் விடலாம் என்று தோன்றும்.

ஆனால் காற்று வீசும் தனிமை இரவுகளில், நமக்கான சில காதல் பாடல்களில், நம் இருவருக்கான ஒரு வார்த்தையில் (Baby), உன் கைரேகை பட்ட சில பொருள்களில், ஏன் சில சமயங்களில் நீல மற்றும் சிவப்பு வண்ணங்களில் கூட நம் காதல் பிழைத்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும்.

என் கண் முன்னே இரண்டு வெவ்வேறு பாதைகள்.. அந்த பாதை கனவுக்கும், எதார்த்தத்திற்கும் இடையில் நீண்டு நெளிந்து போகிறது.  ஒன்றில் அமைதியான ஆனால் சலிப்பான ஒரு வாழ்க்கை. மற்றொன்று அற்புதமான ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத மற்றொரு வாழ்க்கை. எதையும் கணிக்க முடியவில்லை. என் இதயம் இரு பக்க பாதைகளிலும் மாறி மாறி துடிக்கின்றது.

சாதாரண ஒரு செய்திக்கே ஒரு சிறு பதில் தராமல் நீ அமைதி காக்கும் போது எனது நம்பிக்கை விரக்தியாய் மாறுகிறது. இதில் நீ எங்கே என் கை பிடித்து ஒரு பாதையில், அதுவும் உன் பாதையில் என்னை அழைத்துப் போவாய் என எதிர்பார்ப்பது?  இரவில் விழித்திருந்து, கூரையைப் பார்த்து, இருளில் மெல்லிய கேள்விகளாய் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறேன். "நீ நலமாக இருக்கிறாயா?" , "என்னைப் பற்றி கொஞ்சமேனும் நினைக்கிறாயா?", "நிலவின் பாதை எப்போதாவது மறுசீரமைக்கப்படுமா?"

பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே அதுவரை இப்போதெல்லாம் என் மனதிற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். " உண்மையான அன்பு பொறுமையானது. அது கட்டாயப்படுத்தாது. அவசரப்படாது. அது நம்பும். அது நம்பிக்கை வைக்கும். அது காத்திருக்கும். அன்பு என்பது எப்போதும் நம்மை  சொந்தம் கொள்வது அல்ல . அது இணைவது பற்றியது. யாராவது விலகிச் சென்றால் உண்மையான அன்பு மறைந்து போகாது. சில நேரங்களில், நேரம் அறியாததை இதயம் அறியும்".

இவ்வளவு பாடங்கள் கற்ற பிறகு என் இதயங்கள் கொடுக்க மட்டுமல்ல, பெறவும் தயாராக இருக்கும் என நம்புகிறேன். எனவே, எப்போதும் போல் நான்  தொலைவில் இருந்தே  தொடர்ந்து  உன் மேல் அன்பு செலுத்த பழகிக் கொள்கிறேன,  ஒட்டிக்கொள்ளாமல்.. துரத்தாமல். ஆனால் அந்த அன்பை  எரிய வைத்துக்கொண்டே நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையோடு வாழ பழகிக் கொள்கிறேன். கடைசி வரை நான் உனக்காக காத்திருப்பேன், ஏனென்றால் வேறு யாரும் எனக்கு வேண்டாம். மேலும், நீ நேரம், தூரம் மற்றும் அமைதிக்கு தகுதியானவன் என்று என் உள்ளத்தின் ஆழத்தில் எனக்குத் தெரியும். ஆக மிகச் சிறந்த அன்பு காத்திருக்கும் சோகத்தில் அல்ல, நம்பிக்கையில்.

என்றும் நம்பிக்கையுடன்,

உனதுயிர் வைரமல்லி. 

 

"காற்று நெருப்புக்கு எப்படி இருக்கிறதோ, அதுபோலவே பிரிவு காதலுக்கு இருக்கிறது; அது சிறியதை அணைத்து, பெரியதை எரிய வைக்கிறது." — ரோஜர் டி புஸ்ஸி-ராபுடின். 


Oh my love, the wait feels so heavy, like a small piece of rock tied with a knot and hanging in each alveolus of my lungs.


To my dear friend, the Moon,

Waiting is an invisible companion that everyone in love has to face sometimes. Waiting for years can be a form of expressing very deep love. But during the wait, the nights lengthen and disturb the peace of the lungs.

Small breaths knot up, yearn into sighs, expand, and then collapse. It feels as heavy as if a small piece of rock is knotted and hung in every tiny alveolus of the lung, during those times of waiting.

My first experience of waiting was for "Siruvar malar" that came along with the Dinamalar newspaper. Staying at home, learning so many things beyond school books: River, butterflies, palm fruit, five-stone game, feeding the chickens, applying vibhuti on the forehead before the prayer because of grandfather, picking flowers, sucking honey from wild flowers, rides in bullock carts.

But when my mother first took me to the hostel, I shrank like a rain-soaked butterfly. How long can one circle a large stone building? The spirit of the velvet butterfly, with whom I played by tying it with a flower thread, would have looked at me from the roof of that building, happy and content, and gone to heaven, I think.

My feet, which had turned red from constantly playing in the red soil, became pale and white when they touched the concrete floor and felt shy. I don't even remember if there was a clock in my grandmother’s house. Here, it seems as if my life revolves around the clock's hands, tightening around my neck. From eating to sleeping, everything is dictated by "ding, dong."

Having left my world, my village, and settled in this small dwelling called the city, the Sunday children's magazine became my treasure. We would wait for the newspaper carrier to throw the paper, still warm like the brooding hen's belly and with its folds intact.

The queue would begin at the doorstep. The names given by our parents would disappear into the air. It was all about 1, 2, 3. I was always second in studies. But next to dance, I was mostly first in this queue. Waiting and waiting, I would lovingly caress the book I received, inhale its scent, embrace it, and as I began to read, the clock's ticking would sound like music.

Like first love, the first wait is filled with sweet memories. I know that the book I get my hands on never stays with me until the end. Yet, there's a longing, a desire, a search, and an increasing restlessness as time passes. All these things are happening with you too. I am holding onto this universe firmly with some hope.

I believe in my love for you, more than I believe in you. That's why I continue to love you from afar, without thinking even a little about the ending. Someday, a weariness will come. An anger at myself will arise. It will create a feel like living without acknowledging you at all and then quickly running away from this world.

But on lonely nights when the wind whispers, in some of our love songs, in a single word meant for us (Baby), in objects touched by your fingerprints, even sometimes in the colors blue and red, our love resurrects and sits up.

Infront of my eyes, two distinct paths stretch and wind between dream and reality. One, a peaceful but monotonous life. The other, a wonderful life overflowing with excitement. I couldn't predict anything. My heart beats alternately between both paths.

When you remain silent, not even offering a small reply to a simple message, my hope turns to despair. How can I expect you to take my hand and lead me down a path, specifically your path? I lie awake at night, staring at the ceiling, whispering soft questions into the darkness. "Are you well?", "Do you think of me even a little?", "Will the path of the moon ever be realigned?"

The answer is still not forthcoming. So, until then, I am lecturing my mind these days. "True love has patience. It doesn't force. It doesn't rush. It believes. It waits. Love is not always about possessing; it's about connecting. If someone walks away, true love doesn't disappear. Sometimes, the heart knows what time doesn't."

After learning so many lessons, I hope my heart is ready not only to give but also to receive. Therefore, as always, I am learning to love you from afar, without clinging, without chasing, but keeping that love burning with the hope that you will return. I will wait for you until the very end because I don't want anyone else. And deep down, I know you are worth the time, the distance, and the silence. Ultimately, the greatest love lies not in the sadness of waiting, but in the hope.

                                                        


                                    Always with hope,

                            Your soul.. Diamond Jasmine.

 

Quote :

"Absence is to love what wind is to fire; it extinguishes the small, it inflames the great." — Roger de Bussy-Rabutin

 

"A heartfelt reflection on love that waits—through silence, distance, and time. This piece is for those who still believe in slow-burning love, in divine timing, and in the magic of reunions."

💌 Read my latest love letter: Voice of Love