You are my love’s final address… the very place where my soul found its long-awaited peace.
என்
காதலின் இறுதி முகவரி.. என் ஆன்மா கண்டடைந்த அமைதியின் முகவரியும் அதுவே..
அன்புள்ள
என் நிலவு மன்னவனுக்கு…
சில
காதல்கள் இந்த ஜென்மத்தில் தொடங்குவதில்லை.
அவை நம்முடைய ஆன்மா முதல் முறையாக சுவாசித்த,
ஒளியைத் தொட்ட அந்த நொடியிலிருந்தே விதைக்கப்பட்டிருக்கின்றன போல. உன்னை நான்
நேசிக்கத் தொடங்கியது எப்போது என்று கேட்டால்,
இந்த வாழ்க்கையில் உன்னை பார்த்த
நாளைச் சொல்ல முடியாது.
ஏனெனில், அதற்கு முன்பே என் இதயம் உன் வருகைக்காக ஆயிரம்
ஆண்டுகள் காத்திருந்ததுபோல் தோன்றுகிறது.
நான்
உன்னை சந்திப்பதற்கு முன்னரே, என்
தனிமையின் ஒவ்வொரு இரவிலும், என் உள்ளம் உன் உருவத்தைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது..
என் விரல்கள் உன் கைகளைத் தொடுவதற்கு முன்னரே,
என் ஆன்மா உன் இருப்பின் வடிவத்தை
அறிந்திருந்தது.
அதனால்
தான், நீ என்
வாழ்க்கையில் வந்த நாளில் புதிதாக யாரோ ஒருவர் வந்ததாக இல்லை… தொலைந்து போன என்
ஒரு பகுதி என்னை மீண்டும் வந்து சேர்ந்தது போல இருந்தது. உன்னை கனவில் நேசிப்பது
எளிதாக இருக்கிறது, என் நிலவு மன்னா. அங்கே பயம் இல்லை. பிரிவின் நிழல் இல்லை. இதயம் உடைந்து
விடுமோ என்ற நடுக்கமும் இல்லை.
ஆனால்
நிஜத்தில் உன்னை நேசிப்பது.. அது அளவிட முடியாத மென்மையையும், விளக்க முடியாத அச்சத்தையும் கொண்டு
வருகிறது. ஏனெனில், நான்
மிகவும் நேசிக்கும் ஒன்று என் கைகளில் இருக்கும்போது, அதை தவறுதலாக காயப்படுத்திவிடுவேனோ என்ற பயம் என்
விரல்களையே நடுங்கச் செய்கிறது.
சில
நேரங்களில்
உன்னிடம்,
எப்படி பேச வேண்டும்,
எப்படி என் அன்பை வெளிப்படுத்த
வேண்டும்,
எப்படி
மென்மையாய் அணைக்க வேண்டும்,
எப்படி உன் இதயத்தை பாதுகாக்க
வேண்டும் என்று தெரியாமல் தவிக்கிறேன்.
அது
அன்பு குறைவதால் அல்ல. மாறாக, உன்னிடம்
நான் வைத்திருக்கும் அன்பு என் சொற்களையும், என் தைரியத்தையும் விட பெரியதாக இருப்பதால்.
ஆனால்
நான் முயற்சி செய்கிறேன்.
பயத்தால்
அல்ல, மென்மையால்
உன்னை நேசிக்க.
மறைவுகளின்றி என் உண்மையான இதயத்தோடு
உன்னிடம் வர.
உன் இதயத்தை முழுமையாக அல்ல
என்றாலும்,
முழு நேர்மையோடு கவனமாகத்
தாங்கக்கூடியவளாக மாற.
ஏனெனில், இத்தனை கால காத்திருப்பிற்குப்
பிறகு நம் காதலை சாதாரணமாக நடத்த என் மனம் சம்மதிக்கவில்லை. நீ என் வாழ்க்கையில்
வந்தது ஒரு சந்திப்பு மட்டுமல்ல. என் ஆன்மா ஆயிரம் ஆண்டுகளாகத் தேடிய வீட்டை இறுதியாக
கண்டடைந்த தருணம்.
இப்போது
எனக்குத் தெரிகிறது… எவ்வளவு பிறவிகள் கடந்தாலும்,
எத்தனை இரவுகள் தனிமையாய்
உருகினாலும், என்
இதயம் வந்து சேரும் இறுதி இடம் உன் மார்பின் அருகேதான்.
ஏனெனில், என் நிலவு மன்னா...
உன்னை நேசிப்பது
ஒரு உணர்வு அல்ல.
அது
என் ஆன்மா
நீண்ட காலமாகத் தேடிய
அமைதியின் முகவரி.
உன்னில்
வந்து சேரும் அந்த நொடி தான்,
நான் முழுமையானவளாக உணர்வேன்.
அந்த நொடி
முள்ளுக்காய் தவிப்புடன் காத்திருக்கும்,
உன் வைரமல்லி ✍️🌙💙
When My Soul Finally Found You
✨ Read. Feel. Fall in love.
I think a part of me began waiting for you long before this
lifetime had a name.
Before my eyes ever knew your face,
my heart had already memorized the quiet comfort of your presence.
You did not enter my life like a stranger.
You arrived like something precious I had lost and somehow found again.
For years, I loved the thought of you in my dreams,
never knowing how tender reality would feel.
Now that you are here,
my love trembles softly in my hands.
Not because it is uncertain,
but because you matter more than words can hold.
So I am learning to love you with a gentler heart,
to set aside fear and choose honesty.
I may not love you flawlessly,
but I will love you with all the sincerity my soul carries.
Because being with you feels like coming home
to the place my heart has been searching for all along.
💌 Read More Letters:
💌 முன் கடிதம் வாசிக்க..
👉Previous Letter: The Silence Between My Letters...
💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..
👉 More Love Letters: Love Letters

