அன்புள்ள என்
நிலவு மனிதனுக்கு,
உன்னைப்
பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஆர்ப்பரித்து, ஆரவாரம் செய்கின்ற என் மனது, உன்னைக்
காணாத நாட்களில் அலைகள் இல்லாத கடலாய் மூச்சு விடவும் மறந்து நிர்ச்சலனமாய்
உறைந்து விடுகிறது. என் இதய வானில் வலம் வந்த என் நிலவு மன்னவன் நீயில்லாமல்,
இருண்டு போய் கிடக்கிறது என் இதயம். என் வாழ்நாளின் நிறைய நிமிடங்களைக் களவாடிக்
கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்.. அந்த ஒவ்வொரு நிமிடமும் காலத்தால் பதிவு
செய்யப்பட்டு வருகிறது, என் நிகழ்காலத்தின் நிழல்களாய்.
உயிர் உடலை
விட்டு நீங்கும் வேளையில் நாம் எதன் மீது எண்ணங்களைக் கொண்டுள்ளோமோ அதுவாகவே நாம்
மாறி விடுவோமாம். அப்படியெனில் எந்த ஒரு நொடியும் உன்னை மட்டுமே தான் நினைத்துக்
கொண்டிருக்கிறது என் மனது. ஆக எனது அடுத்த பிறவி உன் ஏழு பிறவியில் ஒன்றா? நானே
நீயாகி போன அதிசயம் இது. இந்த ஜென்மத்திலும், இனி வரும் எந்த ஜென்மத்திலும் என்
மனது மட்டுமல்ல.. என் உடலும் உனக்கே சொந்தம் என்பதை நினைக்கவே என் உள்ளம் பூரிப்படைகிறது.
என் மனதை திருடிய
ஒவ்வொரு நொடிப் பொழுதுகளின் பதிவுகளையும், என் கருவிழிகளின் கருமை கரைந்து
போகுமளவிற்கு பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன். நமக்கு மட்டும் புரிந்த
வார்த்தைகள், என் வாழ்க்கைக்கு சுவாரசியம் கூட்டும் உன் குறும்பு பேச்சுகள், என்னை
வெட்கப்பட வைக்கும் உன் அதட்டல்கள்.. காலம் அப்படியே உறைந்து விடாதா என ஏங்க
வைக்கும் உன் காதல் பார்வைகள்..
என்னை உன் அழகால்
கொன்று, என் உணர்வுகளை உயிர்ப்பிக்கிறாய்.. இமைகளின் முடிச்சுருள்களும் தீய்ந்து போய்
சுருண்டு விடுகிறது, உணர்ச்சிகளின் வெப்பத்தில்.. ஒவ்வோர் சமயம் உன் பால்
சிரிப்பால் என் இதயத்தை ஈரமாக்குகிறாய்.. குளுமையும், வெம்மையும் ஓரிடத்தில்..
அதுவும் உன்னிடத்தில்.. அவ்வாறெனில் நீ சூரியனா? இல்லை சந்திரனா?
நீ சூரியன் எனில்
உலக மக்கள் அனைவர்க்கும் தந்தையா? உனக்கு என் பெயரின் அர்த்தம் தெரியுமா, என்ன?
உலகில் உள்ள ஒவ்வோர் உயிர்க்கும் அன்னை என்பது தான் என் பெயரின் அர்த்தம். சரி
தானே.. நீ தந்தையெனில்.. பின் தாய் நான்தானே.. எவ்வளவு அழகான பெயர் பொருத்தம்
நமக்கு.. ராசியும் கூட.. என் ராசி கொண்ட ஓர் ஆண் மகனை இப்போது தான் நான்
சந்திக்கிறேன்.
கம்பளிப்
பூச்சியாய் என் வாழ்க்கை முடிந்ததென நினைக்கையில் அழகான வண்ணத்துப் பூச்சியாய்
என்னையும், என் வாழ்க்கையையும் உருமாற்றி விட்டாய்.. அதுவும் உன்னை மட்டுமே
வட்டமிட்டு சுற்றி வரும் வண்ணத்துப் பூச்சி. என் கனவுகள் கூட இப்போதெல்லாம்
வண்ணமயமாய் வருகிறது. இனி அடுத்து என்னை என்னடா செய்யப் போகிறாய்? உன்னோடு
சேர்ந்து என்னை ரசிக்க இப்போதே தயாராகி விட்டேன்.
இப்போதெல்லாம்
என் கணினியும், கால்குலேட்டரும் நான்கும், மூன்றும் மட்டுமே காட்டி என்னை
வெட்கப்பட வைக்கிறது. எவ்வளவு அழகாய் யோசித்திருக்கிறாய். என் விருப்ப எண்களான
ஒன்றும், ஒன்பதும் கொண்டு ஒரு நாள் கணக்கு முடித்தாய்.. நான் அதை எதேச்சையாக
இருந்திருக்கும் என்று தான் முதலில் நினைத்தேன். பின்பு என்னை வைத்தே நான்கையும்,
மூன்றையும் கணக்கில் வர செய்தாய். உன் குறும்புத்தனமும் புரிகிறது. உன்
மெனக்கெடலும் அறிய முடிகிறது.
எவ்வளவு முறை
அப்பதிவை திரும்ப திரும்ப பார்த்திருப்பேன் என்ற கணக்கே இல்லாமல் பார்த்துக்
கொண்டு இருக்கிறேன். ஒருவேளை இதுவரை நூற்றி நாற்பத்து
மூன்று தடவை பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். கெடாத தேன் கூட சலித்து விடும். நீ
ஏனடா திகட்டவே மாட்டேன் என்கிறாய். ஒரு நாளில் 25 மணி நேரம் உன்னைப் பார்க்க
சொன்னாலும் பார்த்துக் கொண்டே இருப்பேன், ஆவி பிரிவது கூட அறியாமல்.
நம் காதல்
முன்னுரை எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. முடிவுரை எப்படி இருக்கும் என்பது
கணிக்க முடியவில்லை. மொத்தத்தில் உன்னை முழுதாய், உண்மையாய், சர்வ நிச்சயமாய்
காதலிக்க ஆரம்பித்து வெகு நாட்களாய் விட்டது.. என் மனதை திறந்து சொல்கிறேன் இன்று.
உன்னைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப் பெறாத நாட்களில் என் மனதின் பரிதவிப்பும்,
பயமும் என்னை எனக்கே காட்டிக் கொடுத்து விட்டது.
பாதி நேரம்
வெறித்த பார்வையிலும், மீதி நேரம் மனம் வெறுத்து போயும் ஏதும் செய்ய முடியாத கையறு
நிலையை பல்லைக் கடித்துக் கொண்டு கடக்க வேண்டியதாகிப் போயிற்று. கைக்குள் பொத்தி
வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய உன்னை, என் கண்கள் 238,855 மைல்கள் தூரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் விழியிரண்டும் கலங்கிப் போயின..
என்ன செய்ய
முடியும் என்னால்? ஒவ்வொரு நொடியும் என் உயிர் போகும் வலிக்கு, என் மனதைப்
பழக்கிக் கொள்வதை தவிர.. என்னை விட்டுத்
தள்ளு. உனக்கு எந்த தொந்தரவும் என்னால் ஏற்படக் கூடாது என்பதில் மிகுந்த உறுதியாய்
இருக்கிறேன். என்னவோ உன் முகம் கொஞ்சம் வாடினாலும் மனது தாங்க மாட்டேன் என்கிறது.
என்ன செய்து
உன்னை சிரிக்க வைக்கலாம் என்பதிலேயே என் மனது ஆராயத் தொடங்கிவிடுகிறது.
மொத்தத்தில் நீ தான் வாழ்கிறாய், ஆனால் என்னுள்..என் உருவில்.. உன் ஒவ்வொரு
அணுவுக்கும் ஓராயிரம் முத்தம் கொடுக்க துடித்துக் கொண்டு காத்திருக்கும்,
உன் உயிர்க் காதலி
வைர மல்லி..
I thought my life was
over with caterpillar stage.. But you transformed me into a beautiful
butterfly..
My Dear Moon Man,
Every moment I see you, my heart beats with joy. On
days when I don't see you, I forget to breathe like a waveless sea and freeze
in despair. My heart is dark without you, my moon king who creeps in the sky of
my heart. Your memory steals many moments of my life. Every minute of it is
being recorded by time as the shadows of my present.
When the soul leaves our body, we become what we think
about. Every second I think only of you. So my next birth is one of your seven
births? It's a miracle that I become you. In this life and in any life to come,
not only my mind, but also my body belongs to you. My heart is filled with the
thought that my mind and body belong to you.
I watched the recordings of every moment that stole my mind until the blackness
of my irises melted away. Words that only we understand, your naughty talk that
makes my life interesting, your scolding that makes me shy. Your romantic
glances make me long for frozen time.
You kill me and revive my feelings with your beauty. My eyelids burn and curl
in the heat of my emotion. But you make my heart wet every time with your milky
smile. Hot and cold in one place. That too in you. So are you the sun? Or are
you the moon?
If you are the sun means, you are the father of all the
people in the world, right? Do you know what my name means? My name means
mother of every living being in the world. Yes, that's right. If you're a
father then obviously I'm a mother, right? What beautiful names suit us. Zodiac
too. Now only I just met a man who has my same zodiac sign.
When I thought my life as a caterpillar was over, you turned me into a
beautiful butterfly. It always wants to surround you. You make my dreams
colorful now. Tell me baby, what are you going to do to me next? I am ready to
be enjoy the life with you.
Nowadays my computer and calculator are showing the
numbers - four and three only and made me too shy. how beautiful you are, One
day you finished counting with my favorite number one and nine. At first, I
thought it was a coincidence. Then you made me to count to four and three. I
understand your mischief. Your effort can also be understood.
I don't know how many times I watched that clip. I think I must have watched it
one hundred and forty-three times. Even unspoiled honey will become distasteful.
But you're not going to become distasteful to my eyes. Even if I ask to see you
25 hours a day, I will keep looking you without even knowing the separation of
my soul from my body.
I don't know how begun the preface of our love story. It is impossible to
predict what the conclusion will be. It's been a long time since I truly,
deeply, and sincerely loved you. Yes.. I opened up my heart today. My poor
heart dreads the days when there is no news of you.
Half the time I had to gnash my teeth and simply sitting without doing
anything. I should need you to be kept in my arms and taken care. But my eyes
wandered 238,855 miles to find you, but it filled with tears without seeing
you.
Every second of my life is pain without you. Except to
accustom my heart to the pain of my life dying every second, What can I
do? Leave me. I'm sure I won't cause you
any trouble. I can't stand your face even if it's a little sad.
I'm trying to think of what I can do to make you smile. You just live, but you live
in me, you live in my figure. Looking forward to give a thousand kisses to
every atom of yours..
The
love of your life,
Diamond
Jasmine.
0 comments:
Post a Comment