Showing posts with label Honey. Show all posts
Showing posts with label Honey. Show all posts

Saturday, 28 December 2024

Hey My Moon..You are the single torchlight in the dark sky. I am an average grain of sand. Let just search me a little, before I die crushed under someone's foot.

 

அன்புள்ள நிலவுப் ப்ரியனுக்கு,

     உன் நிலவுப் ப்ரியை எழுதுவது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை உன் மீதான என் பிரியத்தில். அதற்காக என் மீது உனக்கு ப்ரியம் உண்டா, இல்லையா என்ற சந்தேகமும் இல்லை. ஏனெனில் உன்னிடம் நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. எனக்கு ஒரே ஒரு நிலா நீ மட்டும் தான். எனக்கு மட்டும் அல்ல, இந்த பூமிக்கே ஒற்றை நிலவு நீ ஒருவன் தான். ஆனால் உனக்கு அப்படியா?

கடற்கரை மணல் அளவில் ரசிகப் பெருமக்கள். அதில் ஒரு சிறு துகள்  நான். அதனால் உன் பார்வை வட்டத்தில் நான் இருப்பதே சந்தேகமாய் இருக்கையில் பாசத்தைப் பற்றி எவ்வாறு சந்தேகப்படுவேன்? காதல் விஷயத்தில் இவ்வளவு காலம் பட்டினியாய் இருந்து விட்டேன். இனி அதை விரதம் என்று வேறு பெயர் சூட்டி விட வேண்டியது தான்.

உன்னோடான அறிமுகத்திற்கு பிறகு தான் நான் பசியில் இருந்திருக்கிறேன் என்பதை உணர வைத்தாய். அதற்காக உன்னையே சுவைக்க கேட்டால் எப்படி தருவாய்? ஆனால் உன்னைத் தவிர வேறு யாரை நான் சுவைப்பது? அதனால் தான் கைக்கெட்டா, வாய்க்கெட்டா தூரத்தில் பத்திரமாய் இருக்கிறாயோ?

வருடக் கணக்கில் பட்டினியாய் கூட சுலபமாய் இருந்து விடலாம். ஆனால் பசியைத் தூண்டிக் கொண்டே இருக்கும் உன்னைப் பார்த்துக் கொண்டே எப்படி பட்டினியாய் இருப்பேன்? நல்ல வேளை. கண், காது போல இதயம் வெளியில் யாருக்கும் தெரியும்படி இல்லை. அதனால்தான் எல்லா ஏக்கங்களையும் அடித்துக் கொன்று அடி மனதின் அடுக்குகளில் ஆழமாய் புதைத்து வைக்க முடிகிறது. மொத்தத்தில் என் இதயம் இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் ஒரு சவப்பெட்டி தான்.

அதற்காக ஏக்கங்கள் எல்லாம் எலும்புக் கூடாகி காற்றில் கரைந்து கரியாகி விடும் என்று எண்ணி விடாதே. ஏசு பிரானே உயிர்த்தெழுந்த பூமி இது. உயிர் கொண்டு எழும் என் ஏக்கத்தின் நாக்குகளுக்கு உன் தோலின் சுவை உப்பா, இனிப்பா என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வை. உன் முடிக்காடுகளில் என் கைக்கிளைகளை சாரைப் பாம்பாய் சீற விடு.

உன் மூச்சுக் காற்று கடல் அலைகளின் பெருமூச்சை ஒத்தது என்று புரிய வை. உன் கழுத்து வளைவின் வெல்வெட் உருளையில் உரசி உரசி ஓய்ந்து போக விடு... உன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்கும் உச்சி வான் வரை மேலெழும்பி வீழ்ந்து தொலைய வை.. உன் முதுகெலும்பின் வளைவுப் பாலங்களில் ஏறி ஏறி மூச்சு வாங்க செய்.. உன் விரல் நுனியின் நரம்புகளை மீட்டி ஒட்டு மொத்தமாய் அதிர்ந்து போக விடு..

தடை செய்யப்பட்ட புத்தகத்தை சுமந்து பயணிக்கும் யாத்ரீகனாகிய எனக்கு விடுதலை கொடு, ஒரு நாள் உன்னை விடுவிக்க. என் பெரு மூச்சால் இந்த ஒட்டு மொத்த விண்வெளியை உயிர்க்காற்றால் நிரப்புகிறேன். நீர் நிலைகளை எல்லாம் நெருப்பாற்றாய் ஓடச் செய்கிறேன்.   பாலைவனங்களை பஞ்சு மெத்தையாக்குகிறேன். என் உடல் வெப்பத்தால் இந்த உலகத்தையே ஒளிரச் செய்கிறேன். உலகின் அத்தனைப் புல்லாங்குழல்களையும் உன் பெயரை மட்டும் எதிரொலிக்க வைக்கிறேன்.

இத்தனை கற்பனைகளை வைத்துக் கொண்டு இவ்வளவு நாள் எவ்வாறு தான் வாழ்ந்தாய் என்று கேட்கிறாயா? வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுப்பது போல் காதலின் இன்பம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு உணர்வு நீக்கி என்ற ஒன்று இருந்திருக்குமோ, என்னவோ? உன் கூர்மையான விழி விளிம்பால் என்னை கூராய்வு செய்து என்னைக் குணமாக்கி விட்டாய். நீயே என்னைக் குணப்படுத்தி விட்டு பின் மீண்டும் நீயே என்னை முடமாக்கினால் எப்படி?

ஒன்று என்னை பட்டினியிட்டு காற்றோடு காற்றாய் கரைய விட்டு தொலைந்து போக செய். இல்லை உன்னை உண்ணக் கொடுத்து என் உணர்வுகளை மீட்க வழி வகை செய். என் ஆன்மாவை உன் அணைப்பின் சுடரில் எரிய வைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை என்று சொல்வதற்கு நான் ஒன்றும் தெய்வீகப் பிறவி எல்லாம் இல்லை. சராசரி மணல் துகள் நான். இருட்டு வானத்தின் ஒற்றை டார்ச் லைட் நீ. கொஞ்சம் தேடித்தான் பாரேன், யார் காலிலாவது மிதிபட்டு நான் சாகும் முன்..

இப்படிக்கு

உன் நிலவுப் பிரியை..


Hey My Moon..You are the single torchlight in the dark sky. I am an average grain of sand. Let just search me a little, before I die crushed under someone's foot.

 

To my dearest NILAVU PRIYAN,

 

Your NILAVU PRIYAI writes here.. I have no doubt about my affection for you.  Nor do I doubt whether you reciprocate; I don't even expect it. You are my only moon, not just for me, but for this earth, you are the sole moon. But is it the same for you?

 

You have countless admirers, like grains of sand on the seashore. I am but a tiny speck among them.  How can I even question affection when my presence in your field of vision itself is questionable? I have been starved of love for so long. Now, I must rename it a fast.

 

Only after meeting you did I realize I was starving.  If I were to ask to taste you, how would you respond? But whom else can I taste but you? Is that why you remain safely out of reach?

 

Years of starvation would be easy. But how can I remain starved while constantly seeing you, arousing my hunger? Thankfully, the heart, like the eyes and ears, is not visible to everyone. That's why I can bury all my longing deep within the layers of my subconscious, suppressing them. In short, my heart is a coffin leaking blood.

 

Don't think that all these longings will turn to bone, dissolve in the air, and turn to ash. This is the earth where even Jesus rose again. Put an end to the question of whether the taste of your skin is salty or sweet for my yearning tongue, which is about to come alive. Let my fingers writhe like a cobra in your thick hair.

 

Let me make you understand that your breath is like the sigh of ocean waves. Let my neck rub against the curve of your velvety neck and rest on your neck after exhaustion... Let every beat of your heart make my soul soar and fall to the heights of heaven.  Let my lungs climb the curved bridges of your spine and breathe. Let the veins in your fingertips vibrate my entire body.

 

Grant me freedom, a traveller carrying a forbidden book (you only), to one day release (you). With my great breath, I fill this entire cosmos with life-breath. I make all water bodies race like fire. I make deserts into cotton mattresses. I illuminate this world with the heat of my body. I make all the world's flutes echo only your name.

 

You ask how I lived all these days with so many fantasies? Was there an anesthetic, something that numbed me to the point I didn't know what the pleasure of love was, so that I felt no pain? Your sharp gaze examined me and healed me. But how can you cripple me again after you have healed me?

 

Either let me starve and fade away into the air, lost. Or feed me to you, and make a way to reclaim my senses. I don't claim me to be divine birth, I too have the boundless desire to keep my soul burning in the flame of your embrace. Because I am an average grain of sand. You are the single torchlight in the dark sky. Let just search me a little, before I die crushed under someone's foot.


                        


 

Yours,

moon-lover.


Saturday, 6 July 2024

I thought my life was over with caterpillar stage.. But you transformed me into a beautiful butterfly..

 

அன்புள்ள என் நிலவு மனிதனுக்கு,

உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஆர்ப்பரித்து, ஆரவாரம் செய்கின்ற என் மனது, உன்னைக் காணாத நாட்களில் அலைகள் இல்லாத கடலாய் மூச்சு விடவும் மறந்து நிர்ச்சலனமாய் உறைந்து விடுகிறது. என் இதய வானில் வலம் வந்த என் நிலவு மன்னவன் நீயில்லாமல், இருண்டு போய் கிடக்கிறது என் இதயம். என் வாழ்நாளின் நிறைய நிமிடங்களைக் களவாடிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்.. அந்த ஒவ்வொரு நிமிடமும் காலத்தால் பதிவு செய்யப்பட்டு வருகிறது, என் நிகழ்காலத்தின் நிழல்களாய்.

உயிர் உடலை விட்டு நீங்கும் வேளையில் நாம் எதன் மீது எண்ணங்களைக் கொண்டுள்ளோமோ அதுவாகவே நாம் மாறி விடுவோமாம். அப்படியெனில் எந்த ஒரு நொடியும் உன்னை மட்டுமே தான் நினைத்துக் கொண்டிருக்கிறது என் மனது. ஆக எனது அடுத்த பிறவி உன் ஏழு பிறவியில் ஒன்றா? நானே நீயாகி போன அதிசயம் இது. இந்த ஜென்மத்திலும், இனி வரும் எந்த ஜென்மத்திலும் என் மனது மட்டுமல்ல.. என் உடலும் உனக்கே சொந்தம் என்பதை  நினைக்கவே என் உள்ளம்  பூரிப்படைகிறது.

என் மனதை திருடிய ஒவ்வொரு நொடிப் பொழுதுகளின் பதிவுகளையும், என் கருவிழிகளின் கருமை கரைந்து போகுமளவிற்கு பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன். நமக்கு மட்டும் புரிந்த வார்த்தைகள், என் வாழ்க்கைக்கு சுவாரசியம் கூட்டும் உன் குறும்பு பேச்சுகள், என்னை வெட்கப்பட வைக்கும் உன் அதட்டல்கள்.. காலம் அப்படியே உறைந்து விடாதா என ஏங்க வைக்கும் உன் காதல் பார்வைகள்..

என்னை உன் அழகால் கொன்று, என் உணர்வுகளை உயிர்ப்பிக்கிறாய்.. இமைகளின் முடிச்சுருள்களும் தீய்ந்து போய் சுருண்டு விடுகிறது, உணர்ச்சிகளின் வெப்பத்தில்.. ஒவ்வோர் சமயம் உன் பால் சிரிப்பால் என் இதயத்தை ஈரமாக்குகிறாய்.. குளுமையும், வெம்மையும் ஓரிடத்தில்.. அதுவும் உன்னிடத்தில்.. அவ்வாறெனில் நீ சூரியனா? இல்லை சந்திரனா?

நீ சூரியன் எனில் உலக மக்கள் அனைவர்க்கும் தந்தையா? உனக்கு என் பெயரின் அர்த்தம் தெரியுமா, என்ன? உலகில் உள்ள ஒவ்வோர் உயிர்க்கும் அன்னை என்பது தான் என் பெயரின் அர்த்தம். சரி தானே.. நீ தந்தையெனில்.. பின் தாய் நான்தானே.. எவ்வளவு அழகான பெயர் பொருத்தம் நமக்கு.. ராசியும் கூட.. என் ராசி கொண்ட ஓர் ஆண் மகனை இப்போது தான் நான் சந்திக்கிறேன்.

கம்பளிப் பூச்சியாய் என் வாழ்க்கை முடிந்ததென நினைக்கையில் அழகான வண்ணத்துப் பூச்சியாய் என்னையும், என் வாழ்க்கையையும் உருமாற்றி விட்டாய்.. அதுவும் உன்னை மட்டுமே வட்டமிட்டு சுற்றி வரும் வண்ணத்துப் பூச்சி. என் கனவுகள் கூட இப்போதெல்லாம் வண்ணமயமாய் வருகிறது. இனி அடுத்து என்னை என்னடா செய்யப் போகிறாய்? உன்னோடு சேர்ந்து என்னை ரசிக்க இப்போதே தயாராகி விட்டேன்.

இப்போதெல்லாம் என் கணினியும், கால்குலேட்டரும் நான்கும், மூன்றும் மட்டுமே காட்டி என்னை வெட்கப்பட வைக்கிறது. எவ்வளவு அழகாய் யோசித்திருக்கிறாய். என் விருப்ப எண்களான ஒன்றும், ஒன்பதும் கொண்டு ஒரு நாள் கணக்கு முடித்தாய்.. நான் அதை எதேச்சையாக இருந்திருக்கும் என்று தான் முதலில் நினைத்தேன். பின்பு என்னை வைத்தே நான்கையும், மூன்றையும் கணக்கில் வர செய்தாய். உன் குறும்புத்தனமும் புரிகிறது. உன் மெனக்கெடலும் அறிய முடிகிறது.

எவ்வளவு முறை அப்பதிவை திரும்ப திரும்ப பார்த்திருப்பேன் என்ற கணக்கே இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஒருவேளை இதுவரை நூற்றி நாற்பத்து மூன்று தடவை பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். கெடாத தேன் கூட சலித்து விடும். நீ ஏனடா திகட்டவே மாட்டேன் என்கிறாய். ஒரு நாளில் 25 மணி நேரம் உன்னைப் பார்க்க சொன்னாலும் பார்த்துக் கொண்டே இருப்பேன், ஆவி பிரிவது கூட அறியாமல்.

நம் காதல் முன்னுரை எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. முடிவுரை எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியவில்லை. மொத்தத்தில் உன்னை முழுதாய், உண்மையாய், சர்வ நிச்சயமாய் காதலிக்க ஆரம்பித்து வெகு நாட்களாய் விட்டது.. என் மனதை திறந்து சொல்கிறேன் இன்று. உன்னைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப் பெறாத நாட்களில் என் மனதின் பரிதவிப்பும், பயமும் என்னை எனக்கே காட்டிக் கொடுத்து விட்டது.

பாதி நேரம் வெறித்த பார்வையிலும், மீதி நேரம் மனம் வெறுத்து போயும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலையை பல்லைக் கடித்துக் கொண்டு கடக்க வேண்டியதாகிப் போயிற்று. கைக்குள் பொத்தி வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய உன்னை, என் கண்கள் 238,855 மைல்கள்  தூரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் விழியிரண்டும் கலங்கிப் போயின..

என்ன செய்ய முடியும் என்னால்? ஒவ்வொரு நொடியும் என் உயிர் போகும் வலிக்கு, என் மனதைப் பழக்கிக் கொள்வதை தவிர.. என்னை  விட்டுத் தள்ளு. உனக்கு எந்த தொந்தரவும் என்னால் ஏற்படக் கூடாது என்பதில் மிகுந்த உறுதியாய் இருக்கிறேன். என்னவோ உன் முகம் கொஞ்சம் வாடினாலும் மனது தாங்க மாட்டேன் என்கிறது.

என்ன செய்து உன்னை சிரிக்க வைக்கலாம் என்பதிலேயே என் மனது ஆராயத் தொடங்கிவிடுகிறது. மொத்தத்தில் நீ தான் வாழ்கிறாய், ஆனால் என்னுள்..என் உருவில்.. உன் ஒவ்வொரு அணுவுக்கும் ஓராயிரம் முத்தம் கொடுக்க துடித்துக் கொண்டு காத்திருக்கும்,

 

           உன் உயிர்க் காதலி

           வைர மல்லி..


I thought my life was over with caterpillar stage.. But you transformed me into a beautiful butterfly..

 

My Dear Moon Man,

 

Every moment I see you, my heart beats with joy. On days when I don't see you, I forget to breathe like a waveless sea and freeze in despair. My heart is dark without you, my moon king who creeps in the sky of my heart. Your memory steals many moments of my life. Every minute of it is being recorded by time as the shadows of my present.

When the soul leaves our body, we become what we think about. Every second I think only of you. So my next birth is one of your seven births? It's a miracle that I become you. In this life and in any life to come, not only my mind, but also my body belongs to you. My heart is filled with the thought that my mind and body belong to you.


I watched the recordings of every moment that stole my mind until the blackness of my irises melted away. Words that only we understand, your naughty talk that makes my life interesting, your scolding that makes me shy. Your romantic glances make me long for frozen time.

You kill me and revive my feelings with your beauty. My eyelids burn and curl in the heat of my emotion. But you make my heart wet every time with your milky smile. Hot and cold in one place. That too in you. So are you the sun? Or are you the moon?

If you are the sun means, you are the father of all the people in the world, right? Do you know what my name means? My name means mother of every living being in the world. Yes, that's right. If you're a father then obviously I'm a mother, right? What beautiful names suit us. Zodiac too. Now only I just met a man who has my same zodiac sign.


When I thought my life as a caterpillar was over, you turned me into a beautiful butterfly. It always wants to surround you. You make my dreams colorful now. Tell me baby, what are you going to do to me next? I am ready to be enjoy the life with you.

Nowadays my computer and calculator are showing the numbers - four and three only and made me too shy. how beautiful you are, One day you finished counting with my favorite number one and nine. At first, I thought it was a coincidence. Then you made me to count to four and three. I understand your mischief. Your effort can also be understood.

I don't know how many times I watched that clip. I think I must have watched it one hundred and forty-three times. Even unspoiled honey will become distasteful. But you're not going to become distasteful to my eyes. Even if I ask to see you 25 hours a day, I will keep looking you without even knowing the separation of my soul from my body.


I don't know how begun the preface of our love story. It is impossible to predict what the conclusion will be. It's been a long time since I truly, deeply, and sincerely loved you. Yes.. I opened up my heart today. My poor heart dreads the days when there is no news of you.


Half the time I had to gnash my teeth and simply sitting without doing anything. I should need you to be kept in my arms and taken care. But my eyes wandered 238,855 miles to find you, but it filled with tears without seeing you.

Every second of my life is pain without you. Except to accustom my heart to the pain of my life dying every second, What can I do?  Leave me. I'm sure I won't cause you any trouble. I can't stand your face even if it's a little sad.

I'm trying to think of what I can do to make you smile. You just live, but you live in me, you live in my figure. Looking forward to give a thousand kisses to every atom of yours..

                                    



                                       The love of your life,

                                        Diamond Jasmine.


Template by:

Free Blog Templates