Showing posts with label cry. Show all posts
Showing posts with label cry. Show all posts

Saturday, 18 January 2025

Your devoted lover who is reachable to hand, but out of reach to your lips writes here...

 

என்னுயிர் நிலவுக் காதலனுக்கு,

 

கைக்கெட்டிய, வாய்க்கெட்டா உன்னுயிர்க் காதலி எழுதுவது. எல்லாமே சர்வ சாதாரணமாகத் தான் கடந்து செல்லப்படுகிறது இந்தக் காலத்தில். ஆனால் என் இதயம் தான், உன் விரல் தீண்டிய வெப்பத்தைக் கூட அணைக்கத் தெரியாமல் இன்று வரை தடுமாறிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் உன் ஆடையையாவது உரசிக் கொண்டே ஒட்டி நின்று கொண்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது, Dulquer Salmaan – ன் "Heeriye" பாடலில் வருவது போல.


காதலின் ஏக்கத்தை, பிரிவை, ஆழமான உணர்ச்சியை, ஒன்றாக இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை அப்பாடல் கொடுத்தது. அதையும் நீதான் அறிமுகம் செய்தாய்.. அதுவும் நான் இல்லாத அந்த ஒரு தினத்தில். என்னையே நினைத்து உன் அன்பையும், பிரிவுன் வலியையும் நீ வெளிப்படுத்தியதாய் நான் கற்பனை செய்து அழுது மகிழ்ந்தேன்.. இல்லை இல்லை மகிழ்ந்து அழுதேன்.


மொத்தத்தில் இதயம் விம்மி அழுவதற்கு மகிழ்ச்சியும் ஒரு காரணமாய் இருக்க முடியும் என்று உணர்ந்த தருணங்கள் அவை. எனக்கு என் வாழ்நாளில் கிடைத்த ஆகச் சிறந்த பரிசு அது. இன்று வரை என் மீதான உன் அன்பின் சாரத்திற்கு ஒரு துளி மாதிரி அப்பாடலின் வரிகள். உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் நான் எழுந்ததும் கேட்கும் காதல் சுப்ர பாதம் அப்பாடல். உன் பார்வை எப்படி அலுக்காதோ, அதே போல வருடங்கள் பல தாண்டினாலும் என் இதயத்தை அரவணைத்து உன்னிடம் என்னை கூட்டி செல்லும் அந்தப் பாடல்.


நீ தொட்டுத் தந்த புத்தகத்தில் உன் கை ரேகைகளை தேடி தேடி என்னை நானே தொலைத்து விட்டுக் கொண்டிருக்கிறேன். நம் முதல் சந்திப்பே கடைசி சந்திப்பாய் அமைந்து விடுமோ என்ற பயமும் அடிக்கடி இப்போதெல்லாம் வருகிறது. எல்லாம் கனவாய் மாறி மறுபடியும் நான் தனித்து இந்த உலகத்தில் கை விடப்பட்டு விடுவேனோ என்ற எண்ணமும் என்னை உடல் நடுங்க செய்கிறது.


எனது சிறு வயதில் இருந்து என்னை விடாமல் துரத்திய ஒரு கனவு உண்டு. இரவு முழுவதும் பரீட்சைக்கு தயாராவது போல் விழுந்து விழுந்து படிப்பது போன்ற ஒரு ஒரு கனவு. ஒவ்வொரு வரியும் என் கண்களுக்கு நன்றாய் தெரியும். மூச்சு விடாமல் படித்துக் கொண்டே இருப்பேன், கனவுகளில். இதற்கும் படிப்பை முடித்து பல வருடங்கள் ஆகியும் அந்த கனவு என்னை விடாமல் துரத்தியது. பெரும்பாலும் என்னை களைப்படைய செய்யும் அந்த கனவு, நிறைய நாட்களில் என்னை பயமுறுத்தி இருக்கிறது.


என் மன நிலையில் ஏதோ ஒரு பாதிப்பு இருக்குமோ என்று என்னும் அளவிற்கு என்னை பயம் கொள்ள செய்த அந்த கனவு, நீ என் கனவுகளில் வர ஆரம்பித்த பிறகுதான் என்னை விட்டு அது நீங்கியது என்பதை நீ அறிவாயா? உன்னிடம் நான் சொல்ல நினைத்த, ஆனால் சொல்ல மறைத்த விஷயங்கள் நிறைய உண்டு. எல்லாவற்றையும் உன்னிடத்தில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஆசை உண்டு தான். ஆனால் அது உன்னை, உன் நேரத்தை, உன் சுற்றத்தை பாதிக்கக் கூடாது என்ற தவிப்பில் இருக்கிறேன்.


அதற்காக என் இதயம் கடினமாகி விட்டது என்று எண்ணி விடாதே. நீ இருக்கும் இடம் என் இதயம். பூ எப்படி பாறையாய் உருமாறும்? முடியாது, இல்லையா? சிறு வயதில் இருந்தே எனக்கு விடுதி வாழ்க்கை தான். விடுதியில் உள்ள அனைவர்க்கும் சேர்ந்து இரண்டே இரண்டு குளியல் அறைதான் இருக்கும். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒன்று 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் குளித்து விட வேண்டும். இல்லையெனில் எனது முறை வருவதற்கு 8.30 மணி மேல் ஆகிவிடும்.


அதற்குப் பயந்து கொண்டு நான் அதிகாலையிலேயே குளித்து விடுவேன். விடுதி என்பதால் வெந்நீர்க்கு வாய்ப்பில்லை. மார்கழி மாதக் குளிர், அதிகாலை இருட்டு, குளியலறையில் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு பெரிய மரப்பல்லி, என்றோ பார்த்த ஒரு பேய்ப் படத்தின் குளோஸ் அப் ஷாட் என என்னை பயமுறுத்த பல விஷயங்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கும்.


அப்போதும் கூட எனக்கு கடவுளின் பெயரை முணுமுணுக்க தன்மானம் இடம் கொடுக்காது. உனக்கு ஓநாயைப் பற்றி ஒரு விஷயம் தெரியுமா? யானை, சிங்கத்தைப் போல அவ்வளவு எளிதாய் ஓநாயை மனிதனால் பழக்க முடியாது. அதற்காக ஓநாய்க்கு அறிவில்லை என்று நினைத்து விட வேண்டாம். காற்றை முகர்ந்தே சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மனிதர்கள் வைக்கும் பொறியை இனம் கண்டு பிடித்து அதன் கூட்டத்தையே காப்பாற்றி விடும் வல்லமை அதற்கு உண்டு. மனிதர்கள் உருவாக்கும் வேட்டை போர் வியூகத்தை ஒரு நொடியில் புரிந்து கொண்டு லாவகமாக வியூகத்தை உடைத்து வெளியேறித் தப்பித்து விடும்.


நாயை கட்டிக் கூட்டி கொண்டு போவது போல அவ்வளவு சுலபமாய்  எல்லாம் ஓநாயைக் கட்டிக் கூட்டிக் கொண்டு போக முடியாது. சாகும் தருவாயிலும் அதன் தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஒரு உயிரினம். கால் நரம்பு அறுபட்டு இரத்தம் பீறிட்டாலும் இருக்கும் இடத்தை விட்டு ஒரு குண்டுமணி அளவுக்கு கூட அதை நாம் இழுத்து செல்ல முடியாது. ஆனால் நான் மனுஷி அல்லவா? அதிலும் சிறிய வயது மனுஷி.. மனதில் பெரிய தைரியம் எல்லாம் கிடையாது. நிறைய பயம் உண்டு.. பயத்தை மறைக்க ஒரு வைராக்கியம் தேவை அல்லவா, ஓநாயைப் போல?


அந்த வயதில் எனது முழு முனைப்பு எல்லாம் படிப்பு மட்டும் தான். ஆகவே ஒவ்வொரு முறை குளிக்கத் தண்ணீர் எடுக்கும் ஒவ்வொரு குவளைக்கும் “நான் இனி வரும் பரீட்சையில் முதல் ரேங்க் வாங்க வேண்டும்” என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டு ஏதோ அதற்காகவே தீக்குளிப்பதைப் போல தண்ணீர்க் குவளையை என் தலையில் ஊற்றிக் கொள்வேன். அப்படித்தான்  என்னால் குளிரை, பயத்தை வெல்ல முடிந்தது.


இருந்தாலும் எனது பள்ளிப் படிப்பு முடிக்கும் வரையிலும் என்னால் முதல் ரேங்க் வாங்கவே முடியவில்லை என்பது வேறு விஷயம். ஏதோ குளிரிலிருந்து என்னைக் காப்பாற்றியதே என்று ஆறுதல் கொள்ள வேண்டியது தான். உன் நினைவுகளும் எத்தனையோ விஷயங்களில் இருந்து என்னைக் காப்பாற்றி உள்ளது. அனைத்தையும் சொல்லி உன்னை அலுப்பாக்க விரும்பவில்லை. நிறைய விஷயங்களுக்கு உன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நினைத்தது உண்டு. அதற்கான உரிமை எனக்கு நீ தந்ததும் இல்லை, நான் கேட்டதும் இல்லை. பின் எதற்காகத்தான் இப்படி உயிரைக் கொடுத்து காதலிக்கிறோம் எனத் தெரியாமல் உனக்காய் வாடிக் கொண்டிருக்கும்,

                     உனது உயிர்க் காதலி     

                        வாடாமல்லி. 

 

Your devoted lover who is reachable to hand, but out of reach to your lips writes here..

 

To my darling moon,

 

Your lover who is reachable to hand but out of reach to your lips writes here.  Everything seems to pass normally these days. But my heart, even now, stumbles, unable to extinguish the fire of your touch.  My fingers want to touch and rub your clothes all times and my arms wants to cling to you, like in Dulquer Salmaan's "Heeriye” song.

 

That song conveyed the longing of love, the pain of separation, the depth of emotion, and the joy of togetherness. You only introduced it to me… on that one day I wasn't appearing infront of you. you were expressing your love and the pain of separation. I imagined you are thinking of me. May be even it's a false statement. But I didn't mind. That day I cried with happy… no, no, I enjoyed with crying.

 

In short, those were moments when I realized that overwhelming joy can also be a reason for tears. That song was the best gift of my life given by you.  Even today, the lyrics of that song reminds the drop of essence from your love for me. You probably don't know. It's the love song I listen to every morning when I wake up. Just as your gaze never tires me, so too will this song, across many years, embrace my heart and draw me to you.

 

I keep searching for your fingerprints, In the book you touched and gave me, slowly I am losing myself in the process. In recent days, I often fear that our first meeting will also be our last. The thought that your love and care will all turn into a dream, leaving me abandoned and alone in this world again, makes me tremble. OMG.. Terrible thought..


From my childhood, I've been haunted by a recurring dream. It's a dream where I'm frantically studying for an exam all night, poring over books. Every line is crystal clear to my eyes. I read incessantly, breathlessly, within the dream. Even years after finishing my studies, this dream continued to pursue me. Mostly exhausting, this dream has terrified me on many occasions. It frightened me to the point where I wondered if I had some kind of mental disorder.


Do you know that this dream only left me after you began appearing in my dreams? Maybe it happened because of happy hormones, I guess. There are many things I wanted to tell you, but things I kept hidden. I yearn to share everything with you. But I hesitate, fearing it might affect your mind, your time, your life. Don't think my heart has hardened because of this. You are residing in my heart. How can a flower transform into a rock? Impossible, isn't it?

 

But in the past, I had to harden my heart. Since childhood, I had lived in a hostel. We only had two bathrooms for everyone. When I was in sixth grade, I had to bathe between 4:30 and 5:00 AM. Otherwise, my turn wouldn't come until after 8:30 AM. Fearing this, I would bathe very early in the morning. Because it was a hostel, there was no hot water.

 

The chill of early morning, the pre-dawn darkness, a large gecko staring at me in the bathroom, and the close-up shot of a ghost from a horror movie I once saw – all these things lined up to terrify me. Even then, I was adamant to refrain from muttering God's name. Do you know something about wolves? Unlike elephants or lions, wolves are not easily tamed by humans.


Don't think that wolves lack intelligence.  They can smell the air and identify traps set by humans kilometers away. They instantly understand human hunting strategies, cleverly breaking through them and escaping.

 

You can't easily leash a wolf like you would a dog. It's a creature that doesn't surrender its dignity even in the face of death. Even if its leg is severed and blood spurts out, we can't drag it even an inch from where it lies. But I am a human, a young girl at that time. I don't have immense courage; I have a lot of fear.  To hide that fear, I needed determination, like a wolf's.

 

At that age, my entire focus was only on my studies. So, every time I fetched water for a bath, with each mugful, I would vow, "I must get first rank in the upcoming exam," and pour the water over my head as if performing a ritualistic self-immolation for that purpose. That's how I managed to overcome the cold and fear.

 

However, I couldn't achieve first rank until I finished school. (Always second place..Now only I understood not only in studies, in life also).I could only find solace in the fact that it had at least saved me from the cold. Your memories have also saved me from countless issues. I don't want to bore you by recounting them all. I often felt the need to seek your permission for many things. But you neither gave me that right nor did I ask for it. Then why do we love these much dearly?  without knowing the answer withers away for you..





                        your devoted lover, 

                        Diamond Jasmine.

 

Saturday, 18 May 2024

You who get caught in my eyes, why can't you get caught in my hands, baby?

 

என் கண்களுக்குள் சிக்கிக் கொள்ளும் நீ, ஏன் என் கைகளுக்குள் சிக்க முடியவில்லை?


என் நிலவு மனிதனுக்கு,

நீ எங்கே இருப்பாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எப்படி இருக்கிறாய் என்று தான் தெரியவில்லை. மொத்தத்தில் நான் நன்றாக இல்லை. எவ்வளவு அழுதாலும் ஏன் என் கண்ணீர் வற்றவே மாட்டேன் என்பது தான் எனக்குப் புரியவில்லை. ஏன் உன்னை இவ்வளவு நேசிக்கிறேன், அதுவும் எப்போதிருந்து உன் மேல் உயிரையே வைக்கும் அளவுக்கு என் காதல் இவ்வளவு விஸ்வரூபம் எடுத்தது என்பதும் எனக்குப் புரியவில்லை.

 

நீதான் முதலில் பார்த்தாய். அதுவும் எப்போதிருந்து என்னைப் பார்க்க ஆரம்பித்தாய் என்றும் இன்று வரை புரியவில்லை. உண்மையிலேயே என்னைத்தான் பார்க்கிறாயா என்பதை தெரிந்து கொள்ளவே எனக்கு மாதக்கணக்கில் ஆயிற்று. ஏதோ ஒன்று பிடித்துப் போய் நான் விளையாட்டாக உன்னை சீண்ட ஆரம்பித்தேன். ஆனால் அது இவ்வளவு முக்கியமானதாய், என் உலகத்தையே ஒரு புரட்டு புரட்டிப் போடுவதாய் மாறும் என சத்தியமாய் நினைக்கவில்லை.

 

நிமிடத்திற்கு ஒரு தடவையாவது உன் நினைவு வந்துவிடுகிறது. உன்னைப் பற்றி வேண்டும் என்றே தப்பு தப்பாய் யோசித்தாலாவது உன்னை வெறுத்து மறக்க ஆரம்பித்து விடுவேன் என தப்புக் கணக்கு போட்ட என் அறிவை என் இதயம் ஒரே அடியில் சுருண்டு விழச் செய்து விட்டது. நீ தப்பே செய்திருந்தாலும், செய்து கொண்டிருந்தாலும் உன்னை எப்படியடா என்னால் வெறுக்க முடியும்?

 

உன்னை வெறுத்தால் இந்த உலகத்தையே அல்லவா வெறுக்க வேண்டி வரும்? இப்போதைக்கு என் சிறிய உலகத்தில் நீ மட்டும் நிரம்பி வழிகிறாய். அதுவே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. நிறைய வேளைகளில் உன் நினைவே வராதது போல நடிக்க முயற்சி செய்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா, என்னைப் பொறுத்தவரை உயிர் போகும் அளவிற்கு வலி என்பது எது தெரியுமா? இரத்தப் பரிசோதனைக்காக என் கை நரம்புகளில் ஊசியை ஏற்றும் போது இந்த உலகத்தையே மறந்து, ஏன் வெறுத்து ஓடி விடத் தோன்றும்.

 

ஆனால் இந்த முறை வலிக்கு பயந்து கண்ணை இறுக மூடும் போது எனக்கு உன் முகம் மட்டும் தான் எதிரே தோன்றியது. உன் பெயரை குறைந்தது  20 தடவையாவது முணுமுணுத்திருப்பேன். பரிசோதனை முடிந்து வெளியே வரும் போதுதான் யோசித்தேன். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாய் கூட இருந்தது. வருடக் கணக்கில் கூடவே இருந்தவர்களை எல்லாம் விட்டு விட்டு இதுவரை நேரில் பார்த்தேயிராத உன்னை எப்படி என் மனம் நினைத்தது? இந்த லட்சணத்தில் உன்னை மறக்க முயன்றதைப் போல் நடிப்பு வேறு..

 

உன்னை காதலிக்கவே இல்லை என சொல்லி இனி என்னை ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகி விட்டது. அதற்காக என் காதலை உன்னிடம் சொல்லி உன் நிம்மதியை கெடுக்கவும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இந்த கடிதம் உன்னை சேராதது போலவே என் காதலையும் உன்னை வந்தடையாமல் பார்த்துக் கொள்கிறேன். அது ஒன்று மட்டும் தான் நீ சந்தோஷமாய் இருப்பதற்கு என்னால் செய்ய முடிந்த ஒன்று.

 

உன்னிடம் என் காதலை மூடி மறைப்பது கஷ்டமான விஷயம் தான். ஆனால் சொல்லி, உன்னை என்னால் பார்க்க முடியாமல் போனால் அது எனக்கு உயிர் போகும் வலி தரும். சில நாட்கள் இடைவெளியையே என்னால் தாங்க முடியவில்லை. எல்லாமே ஒரு நொடியில் வெறுத்துப் போயிற்று. தனியே தூங்கி, தனியே சாப்பிட்டு, தனியே சிரித்து இன்னும் நிறைய.. தனிமையிலேயே ஒரு நாள் நான் உயிரையும் விடப் போகிறேன்.

 

யார் யாரோ எதற்கோ அழுதார்கள் எனில் எனக்கும் கூட சேர்ந்து அழ வேண்டும் போல் உள்ளது, உன்னை நினைத்து. உன்னை மறக்க நினைத்து CJ-7 series பார்த்தால் கிளைமாக்ஸ் -சில் அந்த பொம்மை Alien நாய்க்குட்டி செத்ததற்கு நான் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டேன். அந்த குட்டிப் பையன் கூட அவ்வளவு ஏங்கி அழுதிருக்க மாட்டான்.

 

இவ்வளவு ஏங்கியதாய், அழுவதாய் சொல்கிறாளே ஆனால் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பவில்லையே என்று நினைத்து விடாதே.. நிறைய எழுதி எழுதி எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். உனக்கு அனுப்ப பயம், தயக்கம், என்னால் ஏதும் நீ பிரச்சனையில் சிக்கி உன் நிம்மதி போய் விடுமோ என்கிற சந்தேகம். நீயாவது சந்தோஷமாய் இருக்கட்டுமே என்கிற நப்பாசை.

 

எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் தெரியுமா? உனக்கு அனுப்ப எனக்கு நிறைய செய்திகள் உண்டு. உன்னிடம் பேச எனக்கு நிறைய நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் அத்தனையையும் அடி மனதில் போட்டு புதைத்து விட்டு உனக்கு ஏதும் அனுப்பி விடக் கூடாது என எத்தனையோ சமயங்களில் உறுதியாய் இருந்திருக்கிறேன். அதையும் மீறிதான் சில சமயங்களில் நான் அனுப்பி விடுவதுண்டு.

 

நானும் மனுஷிதானேடா. உன்னைக் கொஞ்சிக் கொண்டே இருக்க சொல்லும் என் மனதை எவ்வளவு காலம் தான் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனத் தெரியவில்லை. முடிந்த அளவு போராடுகிறேன். ஆனால் அந்தப் போராட்டத்தில் வெற்றி அடையக் கூடாது எனவும் இன்னொரு சமயத்தில் நினைக்கிறது என் ஷைத்தான் மனம். நான் நல்லவளா, கெட்டவளா உன் காதலுக்கு?

 

விடை தேடப் பிடிக்காமல் முடிக்கிறேன் இத்துடன்..

                              இப்படிக்கு

                              உன் வைர மல்லி..

 

 


You who get caught in my eyes, why can't you get caught in my hands, baby?

 

To my moon man,

I know exactly where you will be. But I don't know how you are. So overall I'm not okay. I just don't understand why my tears never dry up no matter how much I cry. I don't understand why I love you so much and since when my love took such a Vishvarupa that I would put my life on you.

 

You only saw me first. And till today I don't understand since when you started seeing me. It took me months to figure out if it was really me. In the beginning, I just started teasing you playfully. But I really didn't think it would be so important and turn my world upside down.

 

I remember you at least once a minute. I miscalculated that if I felt bad about you, I would start hating you and forget you. But my heart broke my mind in one fell swoop. How can I hate you even if you do wrong?

 

If I hate you, won't I hate this world? For now, my little world is filled with only you. That's enough for me. Many times, I tried to pretend I didn't remember you. Do you know what my life-threatening pain is? Whenever the nurse put the syringe into my vein for the blood test, I would want to run away from this world.

 

But this time when I closed my eyes tightly because of the pain, I only saw your face in front of my closed eyes. I would have mumbled your name at least 20 times. I was really shocked when I came out of that lab. How did my mind think of you after leaving all those who were together for years and not seeing you in person? In this I am trying to pretend to forget you. OMG...

 

  It's clear that I can no longer deceive me by saying that I never loved you. For that, I don't want to spoil your peace by telling you about my love. I will make sure that my love does not reach you just as this letter does not reach you. That's the only thing I can do to make you happy.

 

Yes..it's hard to hide my love from you. But if I can't see you because I told you of my love, it will pain me to death. I couldn't bear even this gap of few days. Everything disgusted me in an instant. Sleeping alone, eating alone, laughing alone and so on.. I think one day I'm going to die alone, without anyone knowing.

 

Nowadays, if someone cries for anything, I feel like I too want to cry, but for you. When I watched the CJ-7 series, I have started crying at the death of that toy alien puppy in the climax. But the truth is I missed you so much on that time. Even that little boy would not have cried so longingly. I cried so much because you weren't there.

 

Don't think I didn't send a single message.. I wrote a lot and sent it myself. I am afraid, reluctant to send you, I doubt you will get into trouble and lose your peace. I want you to be happy forever.

 

Do you know how hard that would be? I have a lot of messages to send you. I have many things to talk to you. But, buried in my heart, I have resolved many times not to send you anything. Sometimes I send you beyond that.


I'm a human too, right? I don't know how long I can control my mind. I am struggling as much as possible. But other times my satanic mind thinks that I should not win that fight. Am I good or bad for your love?


                          


 

    I don't want to look for an answer and end with this..

                                    Your Diamond Jasmine..


Saturday, 30 March 2024

Only one photo of you.. I want a woodpecker's skull to kiss your photo endlessly..

 

உன் ஒற்றை புகைப்படம்.. மரங்கொத்தி மண்டையோடு வேண்டும் எனக்கு, ஓயாமல் முத்தம் கொடுத்துக் கொண்டேயிருக்க..

 

அன்புள்ள நிலவு மனிதனுக்கு,

இடைவேளை கொஞ்சம் அதிகம் தான் என் இந்த அடுத்த கடிதத்திற்கு.. ஏனெனில் இடைவெளியும் கொஞ்சம் அதிகம் தான் இம்முறை நம்மிடையே.. எனக்குப் புரிகிறது.. இது தவிர்க்க முடியாதது தான். ஆனால் உன்னிடம் என் வலியைக் காட்டாதிருக்க என் பத்து விரல்களையும்  குருத்தெலும்பு நொறுங்கும் அளவிற்கு கட்டுப்படுத்தி வைத்துள்ளேன், எழுத்துக்களில் என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க. நல்ல வேளை.. என் விரல்களில் நகங்கள் இல்லை.. நகங்களை வெட்டாமல் இருந்திருந்தால் உள்ளங்கையில் நுழைந்து மணிக்கட்டில் வெளியே வந்திருக்கும்.

 

என் சிறு வயதில் என் தந்தையாரும் இப்படித்தான். அடிக்கடி வெளியூர்  செல்லும் வேலையில் இருந்ததால் இடைவெளி எங்களுக்குள் அதிகம், என் தந்தையோடு அல்ல.. என் தாயோடு. கூடவே இருந்தாலும் என் மனது என் அப்பாவைத் தான் தேடும். அவர் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு, அவருடைய கிறுக்கல் கையெழுத்துக்கு (கொஞ்சம் உன்னைப் போல), அவர் வாங்கித் தரும் frooty -க்கு, அவர் கூட்டிப் போகும் சினிமாக்களுக்கு, அவருடைய தொப்பைக்கு (நான் 4-ஆம் வகுப்பு படிக்கும் வரை அவர் தான் என்னுடைய water bed) இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

 

இந்த அத்தனைக்கும் ஈடு காட்டும் வகையில் கிலோ கணக்கில் sweet வாங்கி வருவார், வெளியூரிலிருந்து திரும்பி வரும்போது.. என் அக்கா அப்பா ஜாடை.. ஆனால் அப்பாவுக்கு அம்மா ஜாடையில் இருக்கும் என்னைத் தான் பிடிக்கும். ஊரிலிருக்கும் நாட்களில் எல்லாம் என்னை அழைத்துக் கொண்டு தான் எங்கும் வெளியே செல்வார். அதனால் தான் அம்மா, அப்பாவை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்ததும் அப்பா என்னை மட்டும் விட்டுக் கொடுக்க மறுத்து அவருடன் வைத்துக் கொண்டார்.

 

எனக்கு அவர்களுடைய சண்டை, அதன் காரணம் எதுவுமே புரியாத வயது. அப்பாவுடன் இருக்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும் தான் அப்போது இருந்தது. ஏனெனில் என் அம்மா மிக கண்டிப்பானவர். படிப்பு விஷயத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் தண்டனை கடுமையாக இருக்கும். ஒரு தடவை சமூக அறிவியல் தேர்வில் 95 மதிப்பெண் பெற்றிருந்தேன். எதனால் 5 மார்க் குறைவு என்று என் அம்மா கேட்ட போது, “பஞ்ச சீலக் கொள்கைகளை வரைக – என்று தேர்வில் கேட்டு இருந்தார்கள், எனக்கு இந்தியா -வை வரையவா, நேரு -வை வரையவா என்று தெரியவில்லை. அதனால் அந்த 5 மார்க் கேள்வியை தவிர்த்து விட்டேன்,” என்று பதில் சொல்ல, என் அம்மாவுக்கு அவ்வளவு கோபம். வரைக – என்றாலும், எழுதுக - என்றாலும்  ஒரு பொருள் தான், எப்படி எழுதாமல் விட்டாய் என்று கேட்டவர்கள் எங்கள் வீட்டு வாசலில் என்னை மண்டி போடச் சொல்லி 12 ஆம் வாய்ப்பாடு வரை தலைகீழாக சொல்லிக் கொண்டே எழுதுமாறு தண்டனை கொடுத்தார்கள்.

 

நான் முழங்கால் வலிக்க,  கை வலிக்க சிலேடை வைத்துக் கொண்டு தேம்பியழுதவாறு தலை கீழாக வாய்ப்பாடு சொல்லிக் கொண்டே  எழுதியது இன்றும் என் நினைவில் இருக்கிறது. அவர் எனக்கு நல்லது தான் செய்தார் என்று அப்போது புரியவில்லை. எப்படியோ அப்பா கூட இருந்தால் இந்த மாதிரி தண்டனை ஏதும் கிடைக்காது என்ற சந்தோஷத்தில் அப்பாவிடமே இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன். அம்மாவும் அக்காவை அழைத்துக் கொண்டு சென்று விட, அப்பாவை நாம்தான் இனி பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி பூண்டேன்.

 

ஆனால் எனக்கு என்னைப் பார்த்துக் கொள்வதென்பதே அவ்வளவு சிரமமாய் இருந்தது. 9, 10 வயதில் என் துணியை நானே துவைத்துக் கொண்டு, ஒழுங்காக தலை வாரத் தெரியாமல் ஏனோ தானோவென்று பின்னல் போட்டுக் கொண்டு, அரை குறையாய் வீட்டு வேலைகள் செய்து, பசிக்கும் போது மிட்டாய் சாப்பிட்டு கால் வயிறு பசியாறி, என் வயதில் உள்ள குழந்தைகளை ஏக்கமாய் பார்த்துக் கொண்டு எப்படி ஒரு வருடம் போனது எனத் தெரியவில்லை. என் அப்பாவால் ஒரு பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று என் தாத்தா, பாட்டி என்னைக் கூட்டிப் போக பல தடவை வந்து போக என் அப்பாவுக்கும் அது புரிந்ததோ என்னவோ எனக்கு தெரியாமல் ரகசிய உடன்படிக்கை அவர்களுடன் போட்டுக் கொண்டார்.

அவர் எப்போது வந்தாலும் என்னைப் பார்க்க அவரை அனுமதிக்க வேண்டும் என்ற உறுதிமொழி வாங்கிக் கொண்டு என்னை பாட்டி வீட்டிற்கு கூட்டிப் போனார். என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் பைக் பயணம் முழுவதும் என் கையை அவ்வப்போது இறுகப் பற்றிக் கொண்ட போது ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்தது. என்னை அங்கே விட்டு விட்டு மாலையில் வந்து என்னைக் கூட்டிக் கொள்வதாய் கூறியதும் எனக்கு சந்தேகம் வலுத்து விட்டது, அப்பா திரும்ப வர மாட்டார் என்று.

 

என் கையை இறுகப் பற்றியிருந்த பாட்டியின் கையை என் வலிமை கொண்ட மட்டும் முயற்சித்து விடுவித்துக் கொண்டு அழுது கொண்டே ஓடினேன், என் அப்பாவின் புல்லட் பின்னால் அப்படி ஓடினேன். “அப்பா, அப்பா” என்று கதறி அழுதபடி ஓடியது இன்றும் நினைவிருக்கிறது. அப்பா எல்லாவற்றிக்கும் தயாராகி தான் வந்திருப்பார் போல.. திரும்பி திரும்பி என்னைப் பார்த்தாரே தவிர வண்டியை நிறுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் எனக்கும் மூச்சிரைத்து கால் வலியில் ஓட முடியாமல் போக, பின்னாலேயே வந்த ஊர்க்காரர்கள் கையில் மாட்டிக் கொண்டேன். ரொம்ப மூச்சு வாங்கியதால் அருகில் உள்ள ஊர்க்காவல் தெய்வம் குடியிருக்கும் கோயிலில் என்னை உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தார்கள். அப்போதிருந்துதான் எனக்கு கடவுள் என்ற ஒன்று இல்லையென்று புரிந்தது. இருந்திருந்தால் நான் இவ்வளவு அழுது கதறியும் என் அப்பா என்னை விட்டுச் செல்ல அனுமதித்திருப்பாரா?

நீ என்னை விட்டு சில நாள்கள் நீங்கும் போதும் எனக்கு பயமாய் இருக்கும். இது தற்காலிகமா, நிரந்தரமா என்று. இந்த தடவை ஒரே ஒரு விஷயம் உருப்படியாக செய்தாய் உன் புகைப்படத்தை பதிவிட்டு.. அடிக்கடி பார்த்துக் கொண்டேன், என் பிரிவுப் பசியாற்ற.. சில சமயம் கண்களால் பசியாறினேன், பல சமயம் உதடுகளால்.. மரங்கொத்திப் பறவை ஒரு நொடிக்கு 20 முறை என ஒரு நாளைக்கு 8 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் முறை மரத்தைக் கொத்துமாம். எனக்கும் அதைப் போல மண்டையோடு வேண்டும்.. உன் புகைப்படத்தை என் உதடுகளால் ஒற்றியெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை tank cleaner மீனாய் மாறி கண்ணாடிப் பரப்பை 24 மணி நேரமும் அப்பிக் கொண்டே இருக்குமே அது போல ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என் உதடுகளால். மரங்கொத்தியா, அழுக்குத் தின்னி மீனா என்னவாய் மாற நான்?

 

                                கண்கள் நிறைய காதலுடன்

                                உன் வைர மல்லி..  

Dear My Moon Man,

The gap between my previous letter and today's letter is too long, and the gap between us is a little more this time. I understand. It is inevitable. But I have restrained my ten fingers to the point of crumbling cartilage, not to show you my pain or to betray myself in letters. My goodness, I don't have long nails on my fingers. If I hadn't cut the nails, they would have entered the palm and come out at the wrist. Yeah, I tried to control me that much.

 

You often leave me and keep me in agony. My father was like this when I was young. He was often away for work. The distance between us was so great—not with my father, but with my mother. Even though she was nearby, my mind was searching for my father. I can say so much about the potato masala he cooks, his handwriting (a bit like you), the Frooti drink he buys for me, the movies he took me to, and his belly (he was my water bed till I was in 4th standard).


To compensate for all this, he would buy kilos of sweets when he return back. My sister looked like my father. But my dad liked me only. During the days at home, he would take me everywhere to go out. That's why, when mom and dad decided to separate forever, dad refused to leave me with her and kept me with him.


I was not old enough to understand their fight and its cause. There was only happiness in knowing that I was going to be with my father. My mother is very strict in my studies, and she would gave punishments severely. Once, I scored 95 marks in the social science exam. When my mother asked why 5 marks were less, I said, “They asked me to draw the 5 principles of Panchsheel in the exam. I didn't know whether to draw India or Nehru. So I skipped that 5 mark question,. my mother got so angry. She explained that draw principles means write only.. not drawing. Then she asked me to kneel down at Infront of our house and punished me to write backwards up to the 12th table.


I still remember that I wrote in slate with my head down with sore knees and sore hands while crying. I didn't understand at that time that she only did good for me. I told my grandma that I would be happy if I was with my father. I will not get any punishment like this. I decided that after mom takes my sister and goes, I should take care of dad responsibly.


But I found it very difficult to take care of myself. When I was 9 or 10 years old, I washed my own clothes, combed my hair myself, did housework, ate candy when I was hungry, and looked longingly at children my age. I don't know how a year went by. My grandfather and grandmother visited many times and made it clear to my father that he cannot raise a girl child.


He took me to my grandmother's house with a promise to let him see me whenever he came. Even though he didn't say anything to me, I only knew that something bad was about to happen when he gripped my hand often throughout the bike ride. When he left me there and told me that he would come and bring me in the evening, I became suspicious that my father would not come back.


I tried to free my grandmother's hand, with all my strength to run after my father's bullet. I still remember that I was crying and shouting, "Dad, dad." As if Father had come prepared for everything. He turned back and looked at me, but he did not stop the bike.


At one point, I was suffocated and couldn't run because of the pain in my legs, so I was caught by the villagers who came behind me. As I was breathing heavily, they made me sit in the nearby temple where the tutelary deity resides and gave me water. From then on, I realized that there is no such thing as God. If there had been, would my father have allowed  to leave me even though I was crying so much?


Even if you leave me for a few days, I feel scared. Is it temporary or permanent? This time you did only one good thing by posting your photo. I looked often; my eyes were so hungry because of our separation. Sometimes I was hungry with my eyes, many times with my lips. A woodpecker can peck a tree 20 times a second and 8 thousand to 12 thousand times a day. I want a skull like that to keep giving fomentation your photo with my lips. Otherwise, do you know the tank cleaner fish that sticks to the glass surface for 24 hours? Shall I turn into that fish to stick with your lips for 24 hours? Woodpecker or tank cleaner fish, what will I become? The choice is yours.



    With lots of love in Eyes and Lips,

               Your Diamond Jasmine..    

Template by:

Free Blog Templates