I’m the Hand That Never Ticks on Your Clock of Life ...
உன்
வாழ்நாள் கடிகாரத்தில் ஓடாத முள் நான்!
அன்புள்ள
என் நிலவு மன்னவனுக்கு…
உன் வைரமல்லி
இங்கு.
இன்று,
ஏதோ ஒரு இனம் புரியாத வெறுமை என் மனதில். நொடிகளை கூட எண்ணி, எண்ணி நேரத்தைக்
கடத்துகிறேன். வழக்கமாக உன்னைத் தேடி வரும் என் பார்வை கூட இன்று பின்னோக்கி எங்கோ தூரத்தில் தங்கிவிட்டது. உன்
நிழலிடம் பேசிக்கொண்டிருந்த என் வார்த்தைகள்கூட, பாதியிலேயே சோர்ந்து போனதுபோல் தோன்றுகிறது. நீ
எதுவும் சொல்லவில்லை. ஆனால், என் மௌனம் மட்டும் என்னிடம் ஏதோ சொல்லிக் கொண்டே
இருக்கிறது..
பதினான்கு
நாட்களுக்கு ஒரு மொழி உலகில் எங்கேயோ இறந்து கொண்டு இருக்கிறதாம். ஒரு இனக் குழுவால்
பேசப்பட்டுக் கொண்டிருந்த மொழிகளுக்கே இந்த நிலைமை எனில், நம் இருவருக்குமிடையே பேசப்படாமல்
கிடத்தப்பட்டிருக்கும் நம் காதல் மொழியின் கதி என்ன? இதை நினைத்து, நினைத்து
என் நாளின் நிறங்கள் ஒவ்வொன்றாக மங்கத் தொடங்குகின்றன. இருட்டிலும் கூட அழகாகத் தெரிந்து
கொண்டிருந்த வானம், இப்போதெல்லாம் காலை வேளையில் கூட, ஏதோ
ஒன்றை இழந்ததுபோல் இருக்கிறது.
உலகிற்கே
வெளிச்சம் தரும் சூரியன் கூட, என் இருண்ட மனதின் மூலைகளில் ஒரு சிறு வெளிச்சம் கூட
ஏற்றி வைக்க முடியவில்லை. என் ஒவ்வொரு கண்ணீரும் முத்தாய் மாறுகின்ற சக்தி பெறும் எனில்,
தூத்துக்குடிக்கு அடுத்த முத்து நகரம் நான் வாழும் ஊராகத்தான் இருக்கும். பூக்கள் இல்லாத
பூந்தோட்டமாய் இருக்கிறது என் நிலை இப்போது. பொருள் வசதியற்ற பல கோவில்கள் புதர் மண்டிக்
கிடப்பது போல், என் மனது தேவையற்ற கவலைகளால் கனம் கூடிக் கிடக்கிறது.
என் கவலையும், அழுகையும் இடம் மாறும் வரம் வேண்டி உன்னைத் தான் யாசிக்கிறேன்,
எப்போதும் போல. என்
சிந்தனைகள் சிறகடிக்க, நான் மறந்துபோன மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடிக்க,
உன்னிடம் பேசும் ஒரு புதிய மொழி வேண்டும். உன்னைப் பார்க்கும் சில நிமிடங்களிலேயே என் மனதுக்குள் இத்தனை புதிய உயிர்களைப் பிறக்கச்
செய்யும் எனில், உன்னோடு மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருந்தால் நான் புதுப் பிறவியே
எடுத்து விடுவேன், போல.
ஆனால்,
உனக்கு நான், அவசரத்தில் எழுதாத ஒரு பேனா போன்றவள்.
பேரன்பின் மாளிகையில் ஒட்டடை பிடித்த ஒரு ஓடாத கடிகாரம் நான். தேவையில்லாத நேர விரயம்
என்று எண்ணிக் கொண்டு முடிந்த அளவு நட்பு வட்டத்தை சுருக்க முயற்சித்துக் கொண்டிருப்பவள்.
என்னை பாசத்தோடு நெருங்கி நெருங்கி வருபவர்களையெல்லாம் எல்லைக் கோடு வகுத்து அதன் எல்லையிலேயே நிறுத்தி வைத்திருப்பவள்.
என்ன செய்ய?
நீ, நான், நிலா, கவிதை, ஒரு கோப்பை காபி,
உப்புமா
இதை விட வேறு என்ன என் வாழ்க்கையை நிறைவாய் நிறைத்து விட முடியும் என்று தான் எனக்கு
எப்போதும் தோன்றுகிறது. சில சமயங்களில் நீயும்
கொஞ்சம் சோர்வாய் இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால், உன் வலிக்கான காரணத்தை முழுமையாய் என்னால் தெரிந்து
கொள்ள முடியாது என்பதையும் நான் அறிவேன். உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டுதான்
உன்னை நேசிக்க முடியும் என்ற அவசியம் எனக்கில்லை.
சில
நேரங்களில், நம்மால் வார்த்தைகளைக்கூட சுமக்க முடியாது.
அப்படிப்பட்ட நேரங்களில், யாராவது
நம்மை எதுவும் கேட்காமல் அருகில் அமர்ந்திருந்தால் போதும் என்று தோன்றும். அந்த
யாரோ ஒருத்தியாக நான் இருக்க விரும்புகிறேன், என் நிலவே. உன் சோர்வுக்கான எந்த விளக்கமும் வார்த்தைகளாய்
எனக்கு தேவையில்லை.
உன்னால்
சிரிக்க முடியாத நாட்களிலும், உன் அருகில் அமர்ந்திருக்கவே உன்னைத் தேடி
வருகிறேன். உன் தோள்களில் இருக்கும் பாரத்தை முழுவதுமாக என்னால் இறக்கிவிட
முடியாமல் போகலாம். ஆனால், அதைச்
சுமக்கும் உன் தோள்களுக்கு ஒரு சிறிய ஓய்வாக நான் இருக்க விரும்புகிறேன்.
உன்
புயல்கள் என்னைத் தொட்டுவிடுமோ என்று நான் பயப்படவில்லை. அவற்றைத் தாண்டி உன்னிடம்
இருக்கும் அமைதியான மனிதனைத்தான் நான் காதலிக்கிறேன்.
என்
நிலவு மன்னவனே…
இன்று
நீ என்னைத் தேடிப் பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உன் கண்கள்
ஓய்வெடுக்கட்டும். உன் மனம் கொஞ்சம் அமைதியாகட்டும். நமக்கான வெளிச்சத்தைக்
கண்டுபிடிக்கும் வரை, என்
இதயத்தின் மூலையில் ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்திருக்கிறேன்.
அதில் நம்
காதல் எப்போதும் அணையாமல் இருக்கும்.
சோர்வான
நாட்களிலும் உன்னை மட்டும் நேசிக்கும்,
உன்
வைரமல்லி.
The Language We Left Unspoken
(A poetic Tamil love letter about unspoken love, longing and being the silent hand on the clock of a beloved’s life. A heartfelt letter from Vairamalli to her Moon Man.)
Dear my Moon Man,
Today, even the seconds feel too heavy to carry.
My eyes have forgotten where to look,
and the words I once shared with your shadow
have grown tired halfway through.
They say a language dies somewhere in the world every
fourteen days,
but what happens to the language we never speak?
If every tear of mine could turn into a pearl,
my little town would become the next Pearl City,
just after our beloved Thoothukudi.
You are the only light that reaches
the corners of my heart where even the sun cannot enter.
A few minutes with you give birth to so many new lives
within me;
imagine how many times I would be reborn
if I could talk to you for hours.
Yet, in the mansion of your affection,
I am an unwritten pen,
a clock that never ticks on the timeline of your life.
Still, I do not need to know every reason behind your pain
to love you.
On the days when words become too heavy,
let me be the quiet person beside you,
the little rest your tired shoulders deserve.
I am not afraid of your storms, my Moon Man;
I love the peaceful soul waiting beyond them.
Until we find our light again,
I will keep a little lamp burning
in the corner of my heart,
where our love never learns to fade.
- Your's VAIRA MALLI...
💌 Read More Letters:
💌 முன் கடிதம் வாசிக்க..
👉Previous Letter: Let Me Love You in Reality
💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..
👉 More Love Letters: Love Letters

