Wednesday, 4 November 2026

To the Owner of My Dreams… From a Lioness Who Knows When to Wait !

 


A lion and lioness sitting together under a glowing full moon, symbolizing a romantic love story between dreams and reality

                                 என் கனவுகளின் சொந்தக்காரன் நீ !!


அன்புள்ள என் நிலவு மன்னவனுக்கு,

 

உன் வைரமல்லி எழுதுவது. சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. நான் தூங்கும்போதுதான் கனவு காண்கிறேனா? அல்லது விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னைப் பற்றிய ஏதோ ஒரு கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா?

 

கனவுகளில் நீ என்னுடையவன். அங்கே உன்னிடம் பேசுவதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. உன் கண்களைப் பார்த்துப் பேசலாம். உன் கைகளைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். உன் அருகில் அமைதியாக அமர்ந்து இருக்கலாம். சில நேரங்களில் வார்த்தைகள் தேவையே இல்லாமல் போய்விடுகின்றன. ஏனென்றால், என் கனவுகளில் உனக்கும் எனக்கும் நடுவில் எந்தத் தடையும் இல்லை.

 

ஆனால் கண்களைத் திறந்ததும்...

 எல்லாமே மாறிவிடுகிறது.

 

நீ உன் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். நான் என் உலகத்தில் ஏதோ இருக்கிறேன். கனவில் உன்னுடன் பேசிய ஆயிரம் வார்த்தைகளில் ஒன்றைக்கூட நிஜத்தில் உன்னிடம் சொல்ல முடியாமல், என் பேனாவிடம் வந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

 

விசித்திரமாக இல்லையா?

கனவில் நீ என்னுடையவன். நிஜத்தில் நீ என் கனவு!

 

சில கனவுகள் விழித்ததும் மறந்துவிடும். சில கனவுகள் மட்டும் நம்மை விழிக்கவே விடுவதில்லை. உன்னைப் பற்றிய என் கனவுகள் என்னை உறக்கத்திற்கும், விழிப்புக்கும் இடையிலேயே என்னை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போலிருக்கிறது.

 

என் கண்கள் விழித்திருக்கும் வேளைகளில் உன் ஒரு புன்னகை போதும், என் மனதில் எழுதப்படாமல் கிடக்கும் பக்கங்கள் அனைத்தும் தானாகவே நிரம்பிவிடுகின்றன. உன் ஒரு பார்வை போதும், என் கற்பனை உலகத்தின் வானத்தில் எத்தனை நிலவுகள் வேண்டுமானாலும் உதித்துவிடுகின்றன. எனக்கு தெரிந்த வரையில் உன்னை சிரிக்க வைக்கவே முயல்கிறேன். ஆனால் தெரியாமல் நிறைய முறை உன்னைக் கஷ்டப்படுத்துகிறேன் என்பதை அறிகையில் ஒரு வேளை அதனால் தான் விதி நம்மை தள்ளி வைத்து உன்னை என்னிடமிருந்து பாதுகாக்கின்றதோ எனத் தோன்றுகிறது.

 

நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும், கவிதையிலும் உன்னைப் பற்றிய ஏதோ ஒரு ரகசியம் ஒரு சிறு குறிப்பாக ஒளிந்திருக்கிறது. சில வரிகளில் என் ஆசைகள் இருக்கின்றன. சில வரிகளில் என் குறும்புகள் இருக்கின்றன. இன்னும் சில வரிகளில், உன்னிடம் சொல்ல நினைத்தும் சொல்லாமல் விட்ட வார்த்தைகள் உன் கண்களிடமிருந்து மறைந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றன, நீயே கண்டுபிடித்து என்னிடம் சேர்த்து விடுவாய் என்ற ஏக்கத்துடன்.

 

என்னதான் எழுதினாலும், உன்னை முழுமையாக எழுதிவிட முடியவில்லை. சில மனிதர்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பார்கள். ஆனால் நான் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறேன், என் கவிதைக் குழந்தைகளின் தந்தையை இந்த உலகிற்கு என் வரிகளால் அறிமுகப்படுத்த..

 

நிஜத்திற்கும், கனவிற்கும் இடையில் இவ்வளவு அழகான ஒரு உலகம் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? அங்கேதான் நான் உன்னைச் சந்திக்கிறேன். அங்கேதான் உன்னுடன் பேசுகிறேன். அங்கேதான் நீ எனக்குச் சொந்தமாகிறாய்.

 

அந்த உலகத்திற்கு முகவரி கிடையாது. கதவுகளும் கிடையாது. அனுமதிச் சீட்டும் தேவையில்லை. என் கண்களை மூடினால் போதும். என் மனம் உன்னிடம் வந்து சேர்ந்துவிடும்.

 

ஆனால் ஒரு சின்னக் குறை இருக்கிறது.

 என் கனவுகளில் உன்னை என்னுடையவனாக வைத்திருக்க முடிகிறது. நிஜத்தில் மட்டும் உன்னை ஒரு கனவாகவே ரசிக்க வேண்டியிருக்கிறது.

 

அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால், எல்லாக் கனவுகளும் நனவாகிவிட்டால், அவற்றை நினைத்து மீண்டும் மீண்டும் புன்னகைக்க நமக்கு என்ன மிஞ்சும்? அவ்வப்போது கண்ணீரால் நம் காதலின் பாத சுவடுகளை கழுவுவது எப்படி நடக்கும்?

 

எனவே, என் நிலவு மன்னவனே... நீ என் நிஜத்தில் ஒரு கனவாகவே இரு. என் கனவுகளில் மட்டும் எனக்குச் சொந்தமானவனாக இரு. அதற்காக நிஜத்தில் அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுக் கொடுத்து விட்டதாய் எண்ணி விடாதே. நான் ஒன்றும் நரி அல்ல.. சீ, சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லி நம்பிக்கையை கை விட்டு புற முதுகு காட்டி ஓடி விட.. உனக்கான பெண் சிங்கம். என் பொறுமையைப் பலவீனமென்று மட்டும் நினைத்துவிடாதே. சரியான தருணம் வரும்வரை காத்திருப்பேன். ஆனால் என் இலக்கை மட்டும் மறந்துவிட மாட்டேன்.

 

இப்படிக்கு,

உன் நிழலில் தன்னைத் தொலைக்க காத்திருக்கும்,

வைரமல்லி. ❤️      


The Owner of My Dreams      

From Vairamalli to Moon Man — Some dreams don't disappear when we wake up. They simply learn to live inside our hearts.  

I wonder sometimes
if I dream only when I sleep,
or if I spend every waking moment
living in a dream about you.


In my dreams, I can talk to you without hesitation,
hold your hand and walk beside you,
or simply sit with you in silence.


But when I open my eyes,
you return to your world, and I return to mine.


So I pour all the words I cannot tell you
into my letters and poems.


You may be just a dream in my reality,
but don't mistake my patience for giving up.


I'm no fox who walks away when the fruit seems out of reach.
I'm a lioness who knows when to wait and when to make her move.


I may wait for the right moment,
but I never forget what my heart is waiting for.


  - By your Vairamalli… ❤️


💌 Read More Letters:


💌 முன் கடிதம் வாசிக்க..

👉Previous Letter: Even the Blue Ink Blushes Red!



💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..


👉 More Love Letters: Love Letters

No comments:

Post a Comment