Showing posts with label Tamil Love Letters. Show all posts
Showing posts with label Tamil Love Letters. Show all posts

Wednesday, 28 October 2026

I'm Writing About You… and Even the Blue Ink Blushes Red! 💙❤️

October 28, 2026 0 Comments
When Blue Ink Blushes Red

           உன்னைப் பற்றி எழுதத் தொடங்கினாலே, பக்கங்களுக்கும் வெட்கம் வந்துவிடுகிறது!


அன்புள்ள என் நிலவு மன்னவனுக்கு… ❤️🌙

— வைரமல்லியின் காதல் கடிதம்.


உன்னைப் பற்றி எழுத வேண்டும் என்று இன்று பேனாவை எடுத்தேன். எப்போதும்போலவே, எழுதுவதற்கென்று ஆயிரம் எண்ணங்களோடு அமர்ந்தவள், உன்னை நினைக்கத் தொடங்கியதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்.

 

என்ன எழுதுவது உன்னைப் பற்றி?


உன் கண்களைப் பற்றியா? அவற்றுக்குள் என்னைத் தொலைத்துவிட்ட கதையைப் பற்றியா? உன் சிரிப்பைப் பற்றியா? அது என் மனதிற்குள் ஏற்படுத்திவிட்ட மாயத்தைப் பற்றியா? இல்லை, எதுவுமே பேசாமல் நீ அருகில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, தனியாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தப் பைத்தியக்காரப் பெண்ணைப் பற்றியா?

 

சொல்லப்போனால், உன்னைப் பற்றி எழுதத் தொடங்கினால் இந்தப் பக்கங்களுக்குக்கூட வெட்கம் வந்துவிடும் போலிருக்கிறது, மன்னவா!

 

ஏனென்றால், நான் எழுதப்போகும் வார்த்தைகளுக்கெல்லாம் நீதான் காரண கர்த்தா. உன் பெயரை எழுதும்போதே என் விரல்கள் மயிலிறகாகி அவ்வளவு மென்மையாகிவிடுகின்றன. உன்னை நினைத்துக்கொண்டே எழுதும்போது, என் உதடுகள் எனக்கே தெரியாமல் புன்னகைக்கின்றன. சில நேரங்களில், நான் எழுதுவது காதல் கடிதமா, இல்லை உன்னை நினைத்துச் சிரிக்கும் என் மனதின் ரகசிய நாட்குறிப்பா என்றே எனக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.

 

ஒருவேளை, இந்தக் கடிதத்தை நீ வாசித்துக்கொண்டிருந்தால், தயவுசெய்து சிரிக்காதே. ஏற்கெனவே உன்னால் என் நிலைமை கொஞ்சம் மோசம். இதில் நீ வேறு சிரித்தால், உன் சிரிப்பையே நினைத்துக்கொண்டு அடுத்த கடிதத்தை எழுத வேண்டியதாகிவிடும்.. இல்லை இல்லை.. வெட்கப்பட வேண்டியதாகிவிடும்.

 

ஆனால், ஒரு விஷயம் தெரியுமா மன்னவா?


உன்னைப் பற்றி எழுதுவதற்குத்தான் நான் இத்தனை வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், உன்னை நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் வார்த்தைகளைக் கடந்து ஏதோ ஒன்று என்னுள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை விளக்குவதற்குப் பொருத்தமான மொழியை இந்த உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

 

உன்னைப் பிடித்திருக்கிறது என்று எழுதிவிடலாம். உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்றும் எழுதிவிடலாம். உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்றும் ஒப்புக்கொண்டுவிடலாம்.

 

ஆனால், இவையெல்லாம் என் மனதிற்குள் நீ ஏற்படுத்தியிருக்கும் உணர்வுகளுக்கு முன்னால் எத்தனை சிறிய வார்த்தைகள் தெரியுமா?

 

சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் வந்து நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்வார்கள். ஆனால், நீயோ என் எண்ணங்களுக்குள் வந்து, நான் பார்க்கும் உலகத்தையே கொஞ்சம் மாற்றிவிட்டாய். முன்பெல்லாம் நிலவைப் பார்த்தால் இரவு அழகாக இருக்கிறது என்று நினைப்பேன். இப்போதோ, நிலவைப் பார்க்கும்போதெல்லாம் உன்னை நினைக்காமல் இருக்க முடியுமா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்.

 

நிலவுக்கே தெரியாது, பூமியில் ஓர் இடத்தில் யாரோ ஒரு பெண் அதனுடன் பேசிக்கொண்டிருப்பதற்கான காரணம் நீதான் என்று!

 

சில நேரங்களில் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றும் விஷயங்களை எல்லாம் இந்தக் கடிதங்களில் சொல்லிவிடுகிறேன். நேரில் சொல்லத் தயங்கும் வார்த்தைகளைக்கூட, காகிதத்திடம் சொல்லும்போது அவை உன்னைப் போல் என்னை குறும்பாய் பார்த்து கொல்வதில்லை. ஆனால், நீ இதையெல்லாம் வாசித்துவிட்டால் என்ன செய்வாய் என்றுதான் தெரியவில்லை.

 

ஒருவேளை, என்னைப் பார்த்து குறுநகை புரிவாயோ? இல்லை, இந்தப் பெண் இவ்வளவு காதலை எங்கேதான் சேமித்து வைத்திருக்கிறாள் என்று ஆச்சரியப்படுவாயோ?

 

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, மன்னவா. என் காதலை வார்த்தைகளில் எழுதுவதற்கான சுதந்திரத்தை நானே எனக்கு அளித்துக் கொண்டேன்.

 

அதனால்தான் எழுதுகிறேன். உன்னைப் பற்றி, உன்னால் மாறிப்போன என்னைப் பற்றி, என் மனதிற்குள் நீ உருவாக்கியிருக்கும் அந்த அழகான உலகத்தைப் பற்றி…

 

ஒருநாள், நான் எழுதிய எல்லாக் கடிதங்களையும் நீ வாசிக்க நேரும் போது “என்ன, இவள் சிவப்பு நிற மையை உபயோகித்திருக்கிறாள்” என்று என்னை தவறாய் எண்ணி விடாதே. ஒரு வேளை  ஒவ்வொரு பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் உன்னை நினைத்து  வெட்கத்தில் சிவந்திருக்கலாம்.

 

ஆனால் அந்த வெட்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு பெண்ணின் உண்மையான காதலை மட்டும் தவறவிட்டுவிடாதே. ஏனெனில் அந்த பெண்ணின் வார்த்தைகளுக்குள் மட்டுமல்ல.. வாழ்க்கைக்குள்ளும் ஒளிந்து நின்று உயிர் கொடுப்பது நீ தான்.. நீ மட்டும் தான்.❤️

 

இப்படிக்கு,

உன்னைப் பற்றி எழுதத் தொடங்கினால், 

தன்னையே மறந்துவிடும் உன் வைரமல்லி. 🌙❤️




 When I Write About You… ❤️🌙

✨ Read. Feel. Fall in love.


If I ever write a book about you, darling,
I wonder how many pages would blush before I reach the end.

How do I describe the eyes
in which my thoughts have lost their way?

How do I write about a smile
that visits my lips when you are nowhere around?

I search for words to explain you,
but every word feels too small for what I feel.

Sometimes, I wonder if these letters are love letters
or little secrets my heart is too shy to tell you.

And if you ever read them,
please don't mistake the red on these pages for ink.

Those are my words blushing at the thought of you,
and a heart that has quietly made a home in yours.

Because, my moon man,
you don't just live between my words.

You live in every little part of me
that still knows how to love. 

 

            - By your Vairamalli… ❤️


💌 Read More Letters:


💌 முன் கடிதம் வாசிக்க..

👉Previous Letter: When You Are My Whole World !!



💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..


👉 More Love Letters:  Love Letters