Saturday 17 February 2024

You are my KING.. But the sad thing is that I am not your Glamour QUEEN..

அன்புள்ள என் நிலவு மன்னனுக்கு.

என்ன, எப்போதும் நிலவு மனிதன் என்றுதான் தொடங்குவாளே, இன்று என்ன புதியதாய் மன்னன் என்று அழைக்கிறாள் என யோசிக்கிறாயோ? உண்மைதான். என்னை முழுமையாய் ஆளும் உரிமை பெற்றவன்.. இல்லை இல்லை.. உரிமையை எடுத்துக் கொண்டவன் நீ ஒருவன் மட்டுமே. என்னை ஏவல் செய்யாமல் என் விருப்பப்படி (சில சமயங்களில் கிடையாது) நடந்து கொள்ளும் அற்புத வேலைக்கார மன்னன். மன்னிப்புக் கேட்க சொன்னால் சிரம் தாழ்த்தி கரம் வணங்கி மன்னிப்பு கேட்பாய், அதுவும் மிடுக்குடன். அதற்குப் பிறகும் உன் மேல் கோபப்பட நான் என்ன பைத்தியமா? உன் சிரிப்புக்கு மட்டும் தான் கொஞ்சம் நிறைய பைத்தியம். மற்றபடி உன் மேல் அவ்வளவாக பேராவல் கிடையாது. நம்புக..

 

பார்க்க குழந்தை போல் சாது தான் நீ. ஆனால் உண்மையில் நீ ஒரு சுட்டிக் குழந்தை. உன் சிலேடை சொற்கள் எனக்கு மட்டுமே புரியும். உன் ஒட்டுமொத்த குறும்புத்தனத்திற்கும் நான் ஒருத்தி மட்டும் சொந்தக்காரியாக, உரிமை உள்ளவளாக ஆசைப்படுகிறேன்

 

இன்றுவரை நீ நல்லவனா என்று எனக்கு தெரியாது. ஆனால் நீ கெட்டவன் இல்லை என்பதில் மட்டும் எனக்கு நூறு நூறு சதவிகிதம் நம்பிக்கை உண்டு. எதனால், எப்படி என்று கேட்காதே. சில சமயங்களில் சந்தேகமும் வருவதுண்டு. என்னைப் போலவே நீயும் நூறு சதவிகிதம் உண்மையாக இருக்கிறாயா என்பதில் கூட சந்தேகம் தான். என்ன செய்ய? நிலவை எட்டிப் பிடிக்க ஆசைப்பட்டால் கொஞ்சம் எம்பிக் குதிக்கத்தானே முயற்சி செய்ய வேண்டும்?

 

தூரத்திலிருந்து பார்க்க நீ என்னவோ குளுமையாகத்தான் தெரிகிறாய். ஆனால் விண்வெளியில் நீ எப்படி குளிர் தாங்குகிறாய்? உனக்குள்ளும் உள்ளுறை வெப்பம் உள்ளதோ? உனக்கும் குளிர் காய்ச்சல் வருமோ? காய்ச்சல் வரும் சமயங்களிலும் நீ இப்படி ஏகாந்தமாய் உலவிக் கொண்டிருக்காதே.. பின்பு காய்ச்சலுக்கும் உன்னைப் பிடித்துப் போகும். உன்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் விலகாது. என்னைப் போலவே காய்ச்சலையும் உன் பின்னே அலைய விடாதே..என்னிடம் காதல் மருந்து தான் உள்ளது. காய்ச்சல் மருந்து இல்லை.

 

காய்ச்சல், உடல்வலி வராமலிருக்க, உன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த யோசனை வேண்டுமானால் சொல்கிறேன். பிரிட்டிஷ்காரர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் 3 முறை கொடுக்கும் முத்த மருத்துவ வழிமுறை இது. ஆழமான உதட்டு முத்தம் உமிழ்நீரின் ஓட்டத்தை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் பொருட்களை உருவாக்குகிறதாம்... இது வாய், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறதாம்..

 

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த DEEP KISSING முறையை உனக்கு நான் பரிந்துரை செய்கிறேன். எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடு இல்லாத வழிமுறை இது. முத்தத்தில், மன்னிக்க மொத்தத்தில் உதவிக்கு நான் இருக்கிறேன். மற்றது உன் கையில், இல்லை.. இல்லை.. உன் உதட்டில்.

 

காய்ச்சல் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய பள்ளிப் பருவம் தான். என் வீட்டில் உள்ள அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவமனையில் அட்மிட் ஆவார்கள் என்னைத் தவிர.. டான்ஸ் ஆடுவதாலேயோ என்னவோ எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் அதிகம். இன்று வரை நான் எந்த ஒரு விஷயத்திற்கும் அட்மிட் ஆகி சிகிச்சை மேற்கொண்டதில்லை. பிரசவத்தின் போதாவது அட்மிட் ஆகி படுக்கையில் படுத்துக் கொண்டு அதிகாரம் பண்ண வேண்டும் என்ற என் ஆசையும் நிராசையாகி விட்டது.

 

பள்ளி நாட்களில் 100 சதவிகித வருகைப் பதிவு வைத்திருந்து வருடா வருடம் ஒரு புத்தகம் பரிசு வாங்கிய நாட்களும் உண்டு. எனக்குப் பிடித்த பள்ளியை விட்டு விட்டு வெளியூரில் தங்கி வேண்டா வெறுப்பாய் பள்ளிக்கு போய் வந்த நாட்களும் உண்டு. அந்த சமயங்களில் தான் பள்ளிக்கு போக பிடிக்காமல் ஏதாவது ஒரு காரணத்தை தேடிக் காத்திருப்போம்.

 

காய்ச்சல் என்ற ஒன்றுதான் அந்த வயதில் நாங்கள் யோசித்தது. உனக்கு தெரியுமா, சின்ன வெங்காயம் ஒன்றை உரித்து, அக்குளின் அடியில் நீண்ட நேரம் வைத்துக் கொண்டு இருந்தால் உடல் வெப்பநிலை சூடேறி காய்ச்சல் போல உடல் சுட ஆரம்பித்து விடுமாம். யாரோ ஒரு அறிவாளி சொன்னதை நம்பி விடிய விடிய வெங்காயத்தை வைத்துக் கொண்டு எப்போது காய்ச்சல் வரும் எனக் காத்துக் கிடப்போம்.

 

கடைசி வரை ஒரு முறை கூட வந்தததில்லை. இருந்தாலும் எங்கள் முயற்சியைக் கை விட்டதே இல்லை.

 

காய்ச்சல் வராவிட்டாலும் பரவாயில்லை, மயக்கம் வருவது போல நடிக்கலாம் என நினைத்து காலை PRAYER ஹாலில் ஆரம்பித்து மாலை பி.டி பீரியட் வரை முயற்சி செய்வோம். ஆனால் உனக்குத்தான் தெரியுமே, கேமரா முன்பு எனக்கு ஏதோ கொஞ்சம் நடிக்க வரும். ஆனால் behind the camera என் கண்கள் போதும் என்னைக் காட்டிக் கொடுக்க. அது என்னவோ, கோபம், சந்தோஷம், குழந்தைத்தனம் என அனைத்தும் உள்ளது உள்ளபடி காட்டிக் கொடுத்து விடும் முகம் என்னுடையது. நிஜத்தில் நடிக்க என்னால் கண்டிப்பாக முடியாது.

 

கடைசி வரை வராத காய்ச்சலுக்காக நான் காத்துக் கிடந்ததைப் போல, உன் (உண்மையான) காதலுக்காக இப்போதும், எப்போதும் காத்துக் கிடக்கிறேன். நீயாவது வருவாயா? ஆவலுடன்,            

      

                              உன் உயிர்த் தோழி,  

                    வைரமல்லி

 

You are my KING.. But the sad thing is that I am not your Glamour QUEEN..

 

To My Dear Moon King,
You may be wondering. Usually, I start as the moon man, but why do I call you 'KING' today? It's true. You are the only one who has the right to rule me completely. No, you are the one who has been given the right by me. A wonderful servant king who behaves according to my wishes (sometimes no
t,) without asking me. If I ask you to apologize, you bow your head and ask for forgiveness, that too with a smile. Am I crazy to be angry with you even after that? But, just a little  crazy  for your laugh. Otherwise, I'm not crazy about your cuteness and charm. Believe me.

 

You look like a calm baby. But really you are a naughty baby. Only I understand your puns. I want to be the sole owner of all your mischief.I don't know if you are a good one, But I am 100% sure that you are not a bad person. Don't ask why or how. Sometimes there is doubt whether you are 100% sincere like me. But what to do? If I want to reach for the moon, I should try to jump a little bit, right? So I tried my best with very sincere.

 

From a distance, you look cool. But how do you bear the chill in space? Do you  have latent heat? Do you also suffer from cold and fever? When you have a fever, don't wander around the sky with your allure. Then to the fever also will likes you. It won't leave you so soon. Don't let the fever follow you like mine. I have medicine for love, not having medicine for ill.

 

Let me tell you an idea to increase your immunity to prevent fever and body aches. This is the 3-times giving method followed by the British. A deep lip kiss increases the flow of saliva and creates substances that fight bacteria, viruses and fungi...which helps keep the mouth, teeth and gums healthy and it increases the immunity.

 

I suggest you the 'DEEP KISSING'  method to strengthen immunity. It is a method that has no time constraints on how long to do and when to do it. I'm here to help you for this kiss therapy. The rest is in your hands, no.. no.. on your lips.

 

When I think of fever, I remember my school days. Everyone in my house gets hospitalized at least once a year except me..I guess I have some immunity from dancing. Till date I have never been admitted and treated for anything. My desire to be admitted and empowered everyone during labor has also been frustrated.

 

There were days when I had  100 percent attendance record on school days and won a book prize every year. And also there were days when I left my favorite school and went to another school without interest. It was at those times that we would tried to find some reason not to like going to school.

 

Fever was the only thing we thought of at that age. Did you know that if you peel a small onion and keep it under the armpit for a long time, the body temperature will heat up and the body will start warming like a fever? We just wait for the fever with the onion from night till morning, believing what some wise man said.

 

I never had a fever till the end. However, we did not give up our efforts.

 

It doesn't matter if we don't have fever, we will try to pretend to faint anytime, starting from Prayer Hall in the morning till PT period in the evening. But you know, I can act a little bit in front of the camera. But my eyes are enough to betray me behind the camera. No matter what, my face reveals anger, happiness and childishness and all. I definitely can't act in reality.

 

Like I was waiting for the fever that never came, I am waiting for your (true) love now and always, . Will you come? Eagerly waiting,

 


 

                                                 With Love,

                          Your Diamond Jasmine..

0 comments:

Post a Comment

Template by:

Free Blog Templates