Sunday, 24 December 2023

If you are the 'lup' rhythm of my heartbeat, I will be the 'tup' rhythm of your heartbeat..!!

 

என் இதயத்துடிப்பின் ‘லப்’ தாளம் நீ என்றால் உன் இதயத்துடிப்பின் ‘டப்’ லயம் நான் !!!

 

என் நிலவு மனிதா,

கொஞ்சம் பெருமூச்சு, நிறைய சோகத்துடன் தான் ஆரம்பிக்கிறேன் இக்கடிதத்தை. காரணம் உன்னையன்றி வேறு யார் அறிவார்? நான் கொஞ்சம் முகம் வாடினாலும் என்னை சிரிக்க வைக்க நீ எடுக்கும் முயற்சிகள் என் இதயம் மட்டுமே உணரும். இதயத்தின் வழி  உள்நுழையும் உன் காதல், என் இதழ்களின் வழி வெளிப்படும்           என் காதல், புன்னகையாய்.

இருவரின் இதயத்துடிப்பும் ஒரே தாள லயமாய் துடிக்கிறதோ.. என் இதயத்துடிப்பின் ‘லப்’ தாளம் நீ என்றால் உன் இதயத்துடிப்பின் ‘டப்’ லயம் நானாக இருப்பேன். அதனால் தான் ரோஜாப் பூவாய் மலர ஆரம்பித்த உன் முகம், மிக மெதுவாய் சிரிப்பின்றி வாடிப் போனதைக் கண்டு என் இதயத்தில் மின்னல் ரேகைகளாய் வலி ஒன்று கீறிப் போனது.

சுருண்டு படுத்து விட்டேன் என் வீட்டு சோபாவில். நல்ல வேளை உன்னைப் போல மணி பார்த்து என்னை காதலிப்பது இல்லை, என் வீட்டு சோபா.  எப்போது நான் தேடிச் சென்றாலும் அதன் உள்ளங்கையில், இல்லை.. இல்லை.. அதன் நெஞ்சாங்கூட்டில் என்னை ஏந்திக் கொள்ளும். சூடாய் அணைத்துக் கொண்டு மணிக்கணக்கில் இதம் கொடுக்கும்.

புரிந்துவிட்டது சோபாவுக்கு இவள் அழப் போகிறாள் என்று. தன் தலையணைக் கையைக் கொடுத்து தட்டி தூங்க வைக்க முயன்றது. ஏக்கத்தில் கிடப்பவளுக்கு தூக்கம் ஒரு கேடா என்பது போல இருந்தது என் நிலைமை. நான் அடிக்கடி அழுவேன் என்பதே உன்னை காதலித்த பிறகுதான் எனக்கு தெரியும். ஒரு நாள் சந்தோஷத்தில், ஒரு நாள் உன் பிரிவின் வேதனையில்.

எனக்கு மன உறுதி அதிகம் என நான் நினைத்திருந்தேன். உனக்கு தெரியும், நான் சிறு வயதில் இருந்தே விடுதியில்தான் தங்கிப் படித்தேன். என் சகோதரியை விட தனிமைதான் எனக்கு இன்னும் நெருங்கிய சகோதரி. வீட்டை விட்டு தள்ளி இருந்ததில் இன்னும் கூட எனக்கு என் உறவினர்களின் உறவு முறை குழப்பும்.

 அந்த விடுதியில் நான் படிப்பதற்கென்றே முற்றத்தில் ஒரு இடம் இருக்கும். அங்கு என் கைவண்ணத்தை கரிக் கோடுகளால் காட்டியிருப்பேன். அக்கோடுகள்  சொல்லும், இன்னும் வீட்டுக்கு செல்வதற்கு எத்தனை நாட்கள் உள்ளன என்று. 3, 4 மாதங்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு செல்வோம். தீபாவளி, பொங்கல் என அனைத்து கொண்டாட்டமும் அன்று தான் எங்களை வந்தடையும்.

எங்கள் கிராமத்தின் ஒரே ஒரு பேருந்தில் ஏறி, ஒவ்வொரு பஸ் ஸ்டாப் -பையும் கணக்கெடுத்துக் கொண்டே வந்திறங்குவோம் எங்கள் ஊருக்கு. புழுதி பறக்க செல்லும் பேருந்தின் அடுத்த பக்கத்தில் என் அம்மா வந்து காத்திருப்பார். ஓடிப் போய் கட்டிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஆச்சரியமாய் இருக்கும், என் அம்மா எப்படி இவ்வளவு திடமாய் நின்று ஒரு புயலை எதிர்கொள்கிறார் என்று. அவ்வளவு வேகத்தில் ஓடுவேன்.

ஊரின் ஒதுக்குப் புறத்தில் பேருந்து நிறுத்தம். வலது பக்கம் குடியிருப்புகள், இடது பக்கம் பசிய வயல் காடுகளும், மல்லிகை தோட்டங்களும். அந்த இரவின் குளிரில் கருநீல மையில் வெண்ணிற புள்ளிகள் தெரித்தாற்போல ஆங்காங்கே பூப் பறித்தவர்களின் கையில் தப்பிய குறும்பு பிள்ளைகளாய் ஒன்றிரண்டு மல்லிப்பூக்கள் எட்டிப் பார்க்கும், உனக்குப் போட்டியாய்.

 அந்த மல்லிப்பூ வாசத்தை விட எனக்காய் என் அம்மா செய்திருக்கும் எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பின் வாசனை என் அம்மாவின் சேலையில் மிதந்து வரும். அதற்காக உடனேவெல்லாம் வீட்டுக்கு சென்றடைய முடியாது. மொத்த ஊரையும் கடந்து ஆற்றங்கரையின் ஓரத்திற்கு வர வேண்டும். மிஞ்சினால் 10 – 12 நிமிட நடைதான். ஆனால் வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியத்தில்’ வருவதைப் போல வெள்ளந்தியான கிராம மக்கள்.

ஒவ்வொருவரும் நலம் விசாரித்து பழம், பூ என என்னென்ன கையில் கிடைக்கிறதோ அதை கொடுத்து போரில் வெற்றி பெற்றுத் திரும்பும் போர் வீரனைப் பாராட்டுவது போல உச்சி முகர்ந்து அனுப்புவார்கள். ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு வாசனை. புகையிலை, கருப்பட்டி, வெண்ணெய் என்று விதவிதமான வாசனைகள். பொதுவாக எனக்கு வயதானவர்களிடம் அடிக்கும் முதுமையின் வாசனை பிடிக்கும்.

எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான வரவேற்பு கிடைக்குமா என்றால் அது சந்தேகம் தான். நீ எப்படி எவ்வளவோ பேர் இருக்க என்னை மட்டும் ஸ்பெஷல் ஆக கொஞ்சுகிறாய், அது போல நானும் ஒரு செல்லப் பிள்ளை என் ஊருக்கு. அதற்கு காரணமும் நடனம் தான். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் மிக அரிதாக ஒன்றோ, இரண்டோ தான் மொத்த ஊருக்குமே டிவி இருக்கும். மீதி அனைத்துக் குடும்பங்களுக்கும் பொதுவாய் இருப்பது பஞ்சாயத்து டிவி தான். அதிலும் வெள்ளிக்கிழமை 8 மணிக்கே ஒலியும், ஒளியும் முடிந்து விடும்.  

பார்த்து முடித்த பின் போரடிப்பதாய் மக்கள் உணர்ந்தால், நான் லீவில் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று தெரிந்தால், ஊர் பெரியவர்களின் ஏற்பாட்டின் படி 15 நிமிடங்களில் மேடை தயாராகும். Bedsheet, Speaker என அமளி துமளியாகும் அந்த இடம். ஊர் அக்காக்கள் எனக்கு மேக்கப் போட ஆரம்பித்து விடுவார்கள். அண்ணன்கள் tape cassette ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்க ஆரம்பித்து விடுவார்கள். டிவி பார்க்க வராத பாட்டிகள் கூட டான்ஸ் பார்க்க வந்துவிடுவார்கள்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாவது படிக்கும் வரை நான் தான் என் ஊருக்கு entertainer. 10 மணிக்கு ஆரம்பித்தால் 1 மணி வரை சிறு சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு அசராமல் ஆடுவேன். அதற்குப் பிறகுதான் மனதை நெகிழும் ஒரு விஷயம் நடக்கும். என் தாத்தாவுக்கு நான் சினிமாப் பாடலுக்கு நடனம் ஆடுவது பிடிக்காது. அவர் சொல்வார், என் கால்களில் கலைமகள் குடியிருக்கிறாள் என்று. அவர் நான் ஆடுவதைப் பார்க்க வராவிட்டாலும் எனக்காக  விறகடுப்பை மூட்டி வெந்நீர் வைத்துக் கொண்டு வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பார்.

அவர் கோபமாய் நடக்கும் போது பார்ப்பதற்கு காட்டுப் பூனை போலவே இருக்கிறது என நான் நினைத்தது உண்டு. நான் ஆடி முடித்து வந்ததும் நேரே என்னை அடுப்புக்கு அருகே கூட்டிக் கொண்டு போய் வரமிளகாய் கூட ஏதோ சிலதும் வைத்து என் தலையை சுற்றி திருஷ்டி கழித்து அடுப்பில் போடுவார். சட சட வென்று வெடிக்கும் போது பார்க்கவும், கேட்கவும் நன்றாய் இருக்கும்.

பின்பு வெதுவெதுப்பான சுடுநீரில் (ஏனெனில் அவருக்கு தெரியும், சிறிது  சூடான நீர் என்றாலும் என் மென்மையான தோல் சிவந்து விடும், எனக்கு ஒத்துக் கொள்ளாது என்று) என் பாதங்களை வைத்து என் கால்களை வலி போக நீவி விடுவார். அப்படி நீவி விடுவதால்தான் அடுத்த நாள் எனக்கு இரத்தக் கட்டு, தசைப் பிடிப்பு வருவதில்லை என்பது அவர் இறந்த பிறகு என் கால்களில் வலி வந்த போதுதான் நான் உணர்ந்தேன். அப்பா, தாத்தா என ஒவ்வொரு ஆண் தேவதைகளும் என்னிடமிருந்து விடைபெற்றனர்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா என்னை என் அப்பாவிடமே விட்டு விட்டு என் சகோதரியை மட்டும் கூட்டிக் கொண்டு என் பாட்டி ஊரான இந்த ஊருக்கு வந்து விட்டார். நான்காம் வகுப்பிலேயே அம்மா இல்லாமலேயே தலை சீவவும், துணி துவைக்கவும், கையை சுட்டுக் கொண்டு சமைக்கவும் ஆரம்பித்து விட்டேன். முன்னிரவுகளில் என் தந்தை வர தாமதமாகும் சமயங்களில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன், பசியுடன் தான்.

அவரவர் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சோறூட்டுவதைப் பார்க்கும் போது கலங்கும் கண்களை மறக்க மேலே வானத்தை நோக்கி பார்த்தவாறே அமர்ந்திருப்பேன். அன்றும் நீதான் எனக்கு ஆறுதல் அளித்தாய். அப்பொழுதே உன்னை காதலித்திருக்கக் கூடாதா? கண் சிமிட்டும் முன் ஓடி வந்திருப்பேன். இப்போது ஓடி வர இயலாத ‘காலறு’ நிலையில் நிற்கிறேன். ரொம்பவும் காதலிக்க வைக்காதே. ஓடி வந்தாலும் வந்து விடுவேன் என்ற பயத்திலேயே வாழும்,

 

              உன் உயிர்க் காதலி வைர மல்லி. 

 

If you are the 'lup' rhythm of my heartbeat, I will be the 'tup' rhythm of your heartbeat.

Hey, My Moon Man,

I begin this letter with a little sigh and a lot of sadness. Who else but you know the reason? Even if I'm a little wither, your efforts to make me smile can only be felt by my heart. Your love enters my heart, and my love emerges through my lips as a smile.

Both of our heartbeats are beating in the same rhythm, I think. or else, if you are the 'lup' rhythm of my heartbeat, I will be the 'tup' rhythm of your heartbeat. That is why I saw your face, which had begun to bloom like a rose, slowly wither away without a smile, and it made pain like lightning streaked through my heart.

I curled up and lay down on the sofa of my house. Thank God.. It doesn't check the time and fall in love with me like you. Whenever I go looking for it, it carries me not in its palm, in its bosom. A warm hug of it will give me relief for hours.

Sofa understood that I was going to cry. She patted her pillow and tried to make me sleep. My situation was as if sleep was a curse while  longing. I know only after falling in love with you that I cry often. One day in happiness, other day in the pain of your separation.

I thought I had more willpower. You know, I studied in hostels from my childhood. Solitude is a closer sister to me than my sister. Even now I get confusing to find the name of relationships with my relatives.

The hostel has a place in the courtyard for me to study. There I would have shown my hand skill with charcoal lines. The lines will tell how many days are left to go home. We go home once in 3-4 months. All the celebrations like Diwali and Pongal will reach us on that day only.

We board the one and only bus in our village and traveled to our town counting every bus stop. My mother would come and wait on the other side of the bus stop. Every time I run away and hug her, I wonder how my mother stood so strong through a storm. Because I run so fast like a storm.

Bus stop is on the outskirts of village. On the right sides are residential areas, on the left sides are greeny paddy fields and jasmine gardens. In the cold of that night, like white dots in dark blue ink, a couple of jasmine flowers peeked out like mischievous children who had escaped from the hand of flower pickers, competing with you.

More than the scent of jasmine, the smell of the oily brinjal gravy that my mother had made for me would smell in my mother's saree. For that, we can't reach home immediately. We have to cross the entire village and come nearby to the river bank. It is a 10-12 minute walk if you go straight. But as in Vairamuthu's 'Karuvachi Kaviyam', the villagers are innocent people.

Everyone inquires about the well-being and give me fruits and flowers, whatever they can get their hands on. As if praising a warrior who returns victorious from a battle, they will give a kiss on my forehead. Every human has a different smell, you know. Various smells like tobacco, blackcurrant, butter. I usually like the smell of aged people.

It is doubtful if all children will receive this kind of reception. How you made me special when there are so many people, just like that I am a darling of my village. The reason for that is dance. At that time in our village there was only one or two TVs for the whole village. Panchayat TV is common to all, remaining households. Moreover, 'Oliyum, Oliyum' will end at 8 o'clock on Friday.

If people feel bored after watching, if they know that I have come to home in leave, the stage will be ready in 15 minutes according to the arrangement of village elders. The young ladies would started to makeup on me. The brothers started collecting tape cassettes in every house. Even grandmothers who don't come to watch TV, but come to watch the dance.

I was the entertainer of my town from fifth to tenth class. If it starts at 10 o'clock, until 1 o'clock it would be held. Then Only mind-blowing thing will happen. My grandfather doesn't like me dancing to movie songs. He would say, 'Kalaimagal' (Goddess of learning) resides at my feet. Even if he doesn't come to watch my dance, he waits for me at the door with a firewood stove and hot water.

I used to think that he looked like a wild cat when he was angry. When I finished dancing, he would take thrishti and throw that thrishti items on the flame. It's good to see and hear when it explodes. He then put my feet in warm water (he knows hot water makes my delicate skin reddish and I don't like hot water) and soaked my feet for pain relief. It was only I found out that the next day I didn't get blood clots and cramps because of this treatment. I understand this when my legs hurt after he died. Every male angel like dad and grandpa said goodbye to me early.

When I was in fourth grade, my mother left me with my father and came to my grandmother's village, bringing only my elder sister. I started combing my hair, washing clothes and cooking without the help of my mother in the fourth grade itself. In the evenings, late for my father to arrive, I would sit at the door hungry and watch other families.

I sit looking up at the sky to hide my teary eyes when I see some of mothers feeding food to their children. You were the one who comforted me that day too. Shouldn't I have loved you right then and there? I'll be running with you. Now I am standing in a position where I cannot come. Don't show love on me too much. Because I have more fear whether i am coming with you now.

                


               With More Love Beats,

       Your Diamond Jasmine (Vaira Malli)...


Friday, 8 December 2023

Your sweet memories are the oxygen that keeps me alive !!!

 

உன் நினைவுகள், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜனின் மறு உரு..


என் நிலவு மனிதா,

புரிகிறது.. நிரம்ப நாட்கள் ஆகி விட்டன உன்னுடன் பேசி.. உன்னை சந்திக்க தான் முடியவில்லையே தவிர, சிந்திப்பது எல்லாம் உன்னை மட்டும் தான். என்னோடு கூடவே நடக்கும், ஆடும், பாடும் என் நிழல் போல உன்னுடைய நினைவுகள் என்னுடனே படுத்துறங்கி, என் சொற்களையெல்லாம் வாரி அள்ளி அதன் மடியில் கட்டிக் கொண்டு, என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன..

உன்னைப் போல அல்ல, உன் நினைவுகள்.. என்னைப் பைத்தியமாக்குவாதில்லை.. அழ வைப்பதில்லை.. உள்ளம் தடுமாற வைப்பதில்லை..

நினைக்க நினைக்க இனிக்கும் உன் நினைவுகள், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜனின் மறு உரு.

அதற்காக நீ என்னை கை விட்டு விடாதே, என் நினைவுகளுடனே நீ வாழ்ந்து  கொள் என்று.

என் கடைசி உயிர் மூச்சின் கடைசியில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் கடைசித் துகளும் உன்னைத் தேடி காற்றில் அலைந்து மிதந்து கொண்டே இருக்கும்.

உனக்கு வேண்டுமானால் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் 8.1 பில்லியன் மக்களும் உன் குடையின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினார்களாய் இருக்கலாம். ஆனால் எனக்கு உன் சூரிய குடும்பமோ, நட்சத்திர நண்பர்களோ தேவையில்லை. உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தான் என் விழிகளும் உன் ஒளியை ஏந்தி உயிர் வாழும்.

நீ உன் சூரியக் கடன்காரரிடம் இருந்து வாங்கும் ஒளிக்கடனை பூமிக்கே மொத்தமாய் தந்து விடுகிறாய். பின் எப்படி கடனை திருப்பி அடைப்பாய்? எனக்குத் தெரியும்.. இன்னும் நீ சிறு பிள்ளைதான். உனக்காக நான் ஒருத்தி (மட்டும்) அல்லவா  யோசிக்க வேண்டும்?

சூரியன் உன்னை கடன் கேட்டு சுட்டெரிக்கும் போதெல்லாம் என் விழிகள் உனக்காய் பிரகாசித்து உன் கடனை அடைக்க செய்வேன். நீ கவலையற்று வானில் உருண்டு புரண்டு விளையாடி மகிழ்வாய் இரு.

விளையாட ஆள் இல்லை என நினைத்து தன்னந்தனியே மேகப் படிகளில் ஏறி இறங்கி ஏறி இறங்கி உன் காலை நோகடித்துக் கொள்ளாதே.

வருவேன் நான், கூடிய சீக்கிரம். உன் கரம் கோர்த்து, என் உள்ளங்கை ரேகைகளில்  உன் வெப்பத்தை உள்வாங்கி, என் கைகளின் அழுத்தத்திலேயே என் காதலின் ஆழத்தை உணரச் செய்து, அடுத்த நொடியாவது  உரசிடாதோ என நம் தோள்களை ஏங்க வைத்து, நீ முன்னோக்கி வைக்கும் உனது காலடிக்கு என் காலடியை ஒத்தாசைக்கு அனுப்பி வைத்து, போகும் பாதையிலே கல், முள் இருக்கிறதா என உன் கண்களின் வழியே பார்த்துக் கொண்டே காலாற நடக்க வேண்டும் இந்த உலகத்தை ஏழு தரம்..

இது நடக்குமா? தெரியாது. ஆனால் நாம் நடக்க வேண்டும். நடந்து, நடந்து இதை நாம் நடத்திக் காட்ட வேண்டும். நடந்தால் கலோரி செலவாகுமாம். உன்னைப் பார்த்துக் கொண்டே நடந்தால் என் வயிறும், மனதும் நிரம்பி வழியுமே, அள்ள அள்ள குறையாத அதிசய பாத்திரம் போல.. பின் எப்படி என் கலோரியை செலவழிக்க? ஒரு வழி வேண்டுமானால் உள்ளது. நம் இருவர் கை கோர்க்கும் வைபவத்தில் உன் கைகளின் முடிக்கற்றை காற்றின் உதவியால் என் கைகளின் மீது படுமானால் என் நரம்புகளின் நுனி பற்றி எரிந்து பரவி, என் இரத்த அணுக்களின் வெப்பத்தை அதிகரித்து அதன் மூலம் கலோரியை செலவழிக்கலாம். கூடிய சீக்கிரம் செயல்படுத்துவோம்.

அது சரி.. நான் அங்கு வரும்போது எனக்கு உன் நிலவு மண்டலத்தின் ராணியாக முடி சூட்டுவாயா? முதலில் எனக்கு ஒரு பெயர் சூட்டு. உன் ஒற்றை ராஜாங்கத்தில் உன்னை மட்டும் ஆளும் இனிய காதல் ராணி “செனோரீட்டா” என்று. பெயர் சூட்டும் விழாவை நள்ளிரவில் நடத்திடு. ஏனெனில் மூன்று முறை என் காதுகளில் என் பெயரை உச்சரிக்க உன் உதடுகள் என் காது மடலை உரசிடும் போதெல்லாம் இந்த கார்த்திகை மாதக் குளிருக்கு கதகதப்பாய் இருக்கும். உனக்குத் தெரியுமா? கார்த்திகை 3 அன்று பிறந்ததால் எனக்கு காயத்ரி என்று பெயர் வைத்தார்கள் என்று.

பிறந்த கொஞ்ச நாட்களில் பெயர் என்னவோ நன்றாய் தான் வைத்தார்கள். ஆனால் பிறந்த உடன் பெண் பிள்ளை என வருந்தி என் தாயார் எனக்கு பாலே கொடுக்கவில்லையாம். உடன் இருந்த பாட்டி தான் நிலா மாதிரி வட்ட முகமும், பால் வெள்ளை நிறம் கொண்டும் பிறந்த என்னை ஒதுக்கி விட வேண்டாம் எனக் கெஞ்சி என் அம்மாவை சமாதானப் படுத்தினார்களாம். அப்போதே நீ என் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாய். இப்போது என் உயிரில் நுழைந்து உணர்வாய் மாறி விட்டாய்.

இனி உன்னை மறக்கவும், பிரியவும் நான் நினைத்தாலும், உன்னை நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதற்காகவும் தான் படைக்கப்படவில்லை என முட்டாள் தனமாய் நம்பிக் கொண்டிருக்கும் என் இதயம் மறந்தும் கூட நினைத்து விடாது. என் முடிவு, இல்லை இல்லை என் இதயத்தின் முடிவை உன் கைகளில் ஒப்படைத்து விடை பெறும்,

 

                                     உன் வைர மல்லி ஆகிய நான்..



Your sweet memories are the oxygen that keeps me alive !!!

Hey My Moon Man,

I understand.. It's been a long time since I talked to you.. I haven't been able to meet you, but all I think about is you. Like my shadow that walks, dances and sings with me, your memories stay and lie down with me, take all my words and tie them in its lap and it doesn't know even what to do.

Unlike you, your memories are good in nature.. It doesn't make me crazy.. doesn't make me cry.. doesn't make my heart stumble..

Your sweet memories are the oxygen that keeps me alive. Because of saying this, please don't leave me and don't tell me to live only with your memories. Hence, at the end of my last breath, even the last particle of carbon dioxide will float in the air in search of you.

For you, the 8.1 billion people living on earth can be your family members who are living under your umbrella. But I don't need your solar family or star friends.  Only you are enough for me in this life. If I keep looking at you, my eyes will live with your light.

You give the light debt which you receive from your solar creditor, to the earth in full. Then how will you repay the loan? I know.. you are still a Baby. Am I the one (only) for you to think about?

Whenever the sun burns you for that loan repayment, I will shine my eyes  and repay your debt. Now and forever you can roll around in the air without worry and have fun.

But, by thinking that there is no one to play with you, Don't go up and down on the steps of the clouds again and again and don't injure your feet.

I will come to see you as soon as possible. During our walking I will hold your hands, and absorb your heat in my palm lines, and make you feel the depth of my love in the pressure of my hands, and make our shoulders yearn for the next moment to rub, and send my feet in harmony with your step forward, and check through your eyes  if there is a stone or a thorn in our path. We have to walk and watch this world in "n" number of times..

Will this happen? don't know. But we must walk. We must demonstrate this by keep walking. And also walking can burn calories. If I walk looking at you, my stomach and mind will be filled to the brim, like a miraculous vessel that will never diminish.. Then how can I burn my calories?

There is a way. If the hairs of your arm touches  my arm with the help of the wind during our walk, it can burn the tip of my veins and spread it around and increasing the heat of my blood cells and there by expending calories. We will implement it as soon as possible.

It's ok.. When I reach your realm, you must do one thing first. Crown me as queen of your moon realm when I get there. First name to call for me. "Señorita", the sweet queen of love who rules you alone in your single kingdom. Have the naming ceremony at midnight only.

Because whenever your lips graze my earlobe to pronounce my name thrice in my ears, It will be warm in this Cold Karthikai month. Do you know that my parents named me Gayatri because I was born on Karthikai 3. "Karthi" is my pet name as my family members call me.

A few days after birth, they gave me a nice name. But my mother did not feed me while she gave birth, because she expected a male child. Then my grandmother begged my mother not to leave me who was born with a round face like the moon and a pinky white complexion.

That's when you entered as my life in the begining. Now you have entered my life and become a good feeling.

Even if I try to forget you and part with you, my heart, which foolishly believes that it was created for nothing but thinking of you, will not even think of forgetting.So the end of my heart is in your hands only. Take care of you and me..


                     


                                                                 


                                           Your Diamond Jasmine (Vaira Malli)...



   


Template by:

Free Blog Templates