உன் நினைவுகள், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜனின் மறு உரு..
என் நிலவு மனிதா,
புரிகிறது.. நிரம்ப நாட்கள் ஆகி விட்டன உன்னுடன் பேசி..
உன்னை சந்திக்க தான் முடியவில்லையே தவிர, சிந்திப்பது எல்லாம் உன்னை மட்டும் தான்.
என்னோடு கூடவே நடக்கும், ஆடும், பாடும் என் நிழல் போல உன்னுடைய நினைவுகள் என்னுடனே
படுத்துறங்கி, என் சொற்களையெல்லாம் வாரி அள்ளி அதன் மடியில் கட்டிக் கொண்டு, என்ன
செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன..
உன்னைப் போல அல்ல, உன் நினைவுகள்.. என்னைப்
பைத்தியமாக்குவாதில்லை.. அழ வைப்பதில்லை.. உள்ளம் தடுமாற வைப்பதில்லை..
நினைக்க நினைக்க இனிக்கும் உன் நினைவுகள், என்னை வாழ
வைத்துக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜனின் மறு உரு.
அதற்காக நீ என்னை கை விட்டு விடாதே, என் நினைவுகளுடனே நீ வாழ்ந்து
கொள் என்று.
என் கடைசி உயிர் மூச்சின் கடைசியில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் கடைசித் துகளும் உன்னைத் தேடி காற்றில் அலைந்து
மிதந்து கொண்டே இருக்கும்.
உனக்கு வேண்டுமானால் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும்
8.1 பில்லியன் மக்களும் உன் குடையின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினார்களாய் இருக்கலாம்.
ஆனால் எனக்கு உன் சூரிய குடும்பமோ, நட்சத்திர நண்பர்களோ தேவையில்லை. உன்னைப் பார்த்துக்
கொண்டே இருந்தால் தான் என் விழிகளும் உன் ஒளியை ஏந்தி உயிர் வாழும்.
நீ உன் சூரியக் கடன்காரரிடம் இருந்து வாங்கும் ஒளிக்கடனை
பூமிக்கே மொத்தமாய் தந்து விடுகிறாய். பின் எப்படி கடனை திருப்பி அடைப்பாய்? எனக்குத்
தெரியும்.. இன்னும் நீ சிறு பிள்ளைதான். உனக்காக நான் ஒருத்தி (மட்டும்) அல்லவா யோசிக்க வேண்டும்?
சூரியன் உன்னை கடன் கேட்டு சுட்டெரிக்கும் போதெல்லாம்
என் விழிகள் உனக்காய் பிரகாசித்து உன் கடனை அடைக்க செய்வேன். நீ கவலையற்று வானில் உருண்டு
புரண்டு விளையாடி மகிழ்வாய் இரு.
விளையாட ஆள் இல்லை என நினைத்து தன்னந்தனியே மேகப்
படிகளில் ஏறி இறங்கி ஏறி இறங்கி உன் காலை நோகடித்துக் கொள்ளாதே.
வருவேன் நான், கூடிய சீக்கிரம். உன் கரம் கோர்த்து,
என் உள்ளங்கை ரேகைகளில் உன் வெப்பத்தை உள்வாங்கி,
என் கைகளின் அழுத்தத்திலேயே என் காதலின் ஆழத்தை உணரச் செய்து, அடுத்த நொடியாவது உரசிடாதோ என நம் தோள்களை ஏங்க வைத்து, நீ முன்னோக்கி
வைக்கும் உனது காலடிக்கு என் காலடியை ஒத்தாசைக்கு அனுப்பி வைத்து, போகும் பாதையிலே
கல், முள் இருக்கிறதா என உன் கண்களின் வழியே பார்த்துக் கொண்டே காலாற நடக்க வேண்டும்
இந்த உலகத்தை ஏழு தரம்..
இது நடக்குமா? தெரியாது. ஆனால் நாம் நடக்க வேண்டும்.
நடந்து, நடந்து இதை நாம் நடத்திக் காட்ட வேண்டும். நடந்தால் கலோரி செலவாகுமாம். உன்னைப்
பார்த்துக் கொண்டே நடந்தால் என் வயிறும், மனதும் நிரம்பி வழியுமே, அள்ள அள்ள குறையாத
அதிசய பாத்திரம் போல.. பின் எப்படி என் கலோரியை செலவழிக்க? ஒரு வழி வேண்டுமானால் உள்ளது.
நம் இருவர் கை கோர்க்கும் வைபவத்தில் உன் கைகளின் முடிக்கற்றை காற்றின் உதவியால் என்
கைகளின் மீது படுமானால் என் நரம்புகளின் நுனி பற்றி எரிந்து பரவி, என் இரத்த அணுக்களின்
வெப்பத்தை அதிகரித்து அதன் மூலம் கலோரியை செலவழிக்கலாம். கூடிய சீக்கிரம் செயல்படுத்துவோம்.
அது சரி.. நான் அங்கு வரும்போது எனக்கு உன் நிலவு
மண்டலத்தின் ராணியாக முடி சூட்டுவாயா? முதலில் எனக்கு ஒரு பெயர் சூட்டு. உன் ஒற்றை
ராஜாங்கத்தில் உன்னை மட்டும் ஆளும் இனிய காதல் ராணி “செனோரீட்டா” என்று. பெயர் சூட்டும்
விழாவை நள்ளிரவில் நடத்திடு. ஏனெனில் மூன்று முறை என் காதுகளில் என் பெயரை உச்சரிக்க
உன் உதடுகள் என் காது மடலை உரசிடும் போதெல்லாம் இந்த கார்த்திகை மாதக் குளிருக்கு கதகதப்பாய்
இருக்கும். உனக்குத் தெரியுமா? கார்த்திகை 3 அன்று பிறந்ததால் எனக்கு காயத்ரி என்று
பெயர் வைத்தார்கள் என்று.
பிறந்த கொஞ்ச நாட்களில் பெயர் என்னவோ நன்றாய் தான்
வைத்தார்கள். ஆனால் பிறந்த உடன் பெண் பிள்ளை என வருந்தி என் தாயார் எனக்கு பாலே கொடுக்கவில்லையாம்.
உடன் இருந்த பாட்டி தான் நிலா மாதிரி வட்ட முகமும், பால் வெள்ளை நிறம் கொண்டும் பிறந்த
என்னை ஒதுக்கி விட வேண்டாம் எனக் கெஞ்சி என் அம்மாவை சமாதானப் படுத்தினார்களாம். அப்போதே
நீ என் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாய். இப்போது என் உயிரில் நுழைந்து உணர்வாய் மாறி
விட்டாய்.
இனி உன்னை மறக்கவும், பிரியவும் நான் நினைத்தாலும்,
உன்னை நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதற்காகவும் தான் படைக்கப்படவில்லை என
முட்டாள் தனமாய் நம்பிக் கொண்டிருக்கும் என் இதயம் மறந்தும் கூட நினைத்து விடாது. என்
முடிவு, இல்லை இல்லை என் இதயத்தின் முடிவை உன் கைகளில் ஒப்படைத்து விடை பெறும்,
உன்
வைர மல்லி ஆகிய நான்..
Your sweet memories are the oxygen that keeps me alive !!!
Hey My Moon Man,
I understand.. It's been a long time since I talked to
you.. I haven't been able to meet you, but all I think about is you. Like my
shadow that walks, dances and sings with me, your memories stay and lie down with me,
take all my words and tie them in its lap and it doesn't know even what to do.
Unlike you, your
memories are good in nature.. It doesn't make me crazy.. doesn't make me cry.. doesn't make my
heart stumble..
Your sweet memories are
the oxygen that keeps me alive. Because of saying this, please don't leave me
and don't tell me to live only with your memories. Hence, at the end of my last
breath, even the last particle of carbon dioxide will float in the air in search of you.
For you, the 8.1
billion people living on earth can be your family members who are living under your
umbrella. But I don't need your solar family or star friends. Only you are enough for me in this life. If I keep looking
at you, my eyes will live with your light.
You give the light debt
which you receive from your solar creditor, to the earth in full. Then how will you
repay the loan? I know.. you are still a Baby. Am I the one (only) for you to
think about?
Whenever the sun burns
you for that loan repayment, I will shine my eyes and
repay your debt. Now and forever you can roll around in the air without worry and have fun.
But, by thinking that there is
no one to play with you, Don't go up and down on the steps of the clouds again and again and don't injure your feet.
I will come to see you as soon as
possible. During our walking I will hold your hands, and absorb your heat in my palm lines, and make you feel the
depth of my love in the pressure of my hands, and make our shoulders yearn for
the next moment to rub, and send my feet in harmony with your step forward, and check through
your eyes if there is a stone or a thorn in our path. We have to
walk and watch this world in "n" number of times..
Will this happen? don't
know. But we must walk. We must demonstrate this by keep walking.
And also walking can burn calories. If I walk looking at you, my stomach and mind will
be filled to the brim, like a miraculous vessel that will never diminish.. Then
how can I burn my calories?
There is a way. If the hairs of your arm touches my arm
with the help of the wind during our walk, it can burn the
tip of my veins and spread it around and increasing the heat of my blood cells and there by expending
calories. We will implement it as soon as possible.
It's ok.. When I reach your realm, you must do one thing first. Crown me as queen of your moon realm when I get
there. First name to call for me. "Señorita", the sweet queen of
love who rules you alone in your single kingdom. Have the naming ceremony at
midnight only.
Because whenever your lips graze my earlobe to pronounce my
name thrice in my ears, It will be warm in this Cold Karthikai month. Do you
know that my parents named me Gayatri because I was born on Karthikai 3. "Karthi" is my pet name as my family members call me.
A few days after birth, they gave me a nice name. But my mother did not feed me while she gave birth, because she expected a male child. Then my grandmother begged my mother not to leave me who was born with a round face like the moon and a pinky white complexion.
That's when you entered as my life in the begining. Now you have entered my
life and become a good feeling.
Even if I try to forget you and part with you, my heart,
which foolishly believes that it was created for nothing but thinking of you,
will not even think of forgetting.So the end of my heart is in your hands only. Take care of you and me..
Your Diamond Jasmine (Vaira Malli)...
0 comments:
Post a Comment