என் நிலவு மனிதா..
உன்னை எப்படி இருக்கிறாய் என்று யாரும் கேட்கவே முடியாது? ஏன் தெரியுமா? நீதான் எப்போது பார்த்தாலும் அழகாய் இருக்கிறாயே.. எனக்கு ஒரு சந்தேகம்.. இரவு முழுக்க கால் கடுக்க நின்று வான தோட்டத்தை காவல் காக்கிறாய்..நட்சத்திர பூக்களை கொள்ளை கொள்ள விண்ணுக்கு ஏறி யார் வருவார்? எல்லா நட்சத்திரங்களையும் உன் சொத்தாக பார்த்துக் கொள்கிறாய். உன் சொந்தம் நான். எனக்கு யார் காவல் காப்பது, உன்னிடமிருந்து? என்னை மொத்தமாக திருடும் வித்தை தான் உன் கரு விழியில் உள்ளதே.. உன் கண் வளையத்துக்குள் அடைபட்டுக் கிடக்கும் மெய் பிம்பம் நான்.
இரவில் காவல் காத்ததால் பகலில் கண் பூத்து போய் விடுமோ? அதை மறைக்கத்தான் வானத்தில் வெளிச்சத்தை ஏற்றி என் கண்களை கூச செய்து என் கண்ணில் படாமல் மறைந்து கொள்கிறாயோ? அப்படியாவது கொஞ்ச நேரம் என்னை வாழ விடு. பின்னே? இமை தட்டாமல் என்னை கடித்து விழுங்குவது போல் பார்க்கிறாய்.. என் உடல் முழுக்க வெட்கப் பூ பூப்பதில் என் உடலில் உள்ள வெள்ளை அணுக்களும் வெட்கம் தாளாது கருஞ்சிவப்பணுக்களாய் உருமாறி விடுகிறது. இதனால் தான் காதல் நோய் வந்தால் எதிர்ப்பு சக்தி இல்லாது துவண்டு விடுகிறார்களோ?
தெம்பில்லாது துவண்டு போய் பஞ்சு மெத்தையில் உறங்க முயலும் என்னை தென்றல் காற்றை தூது அனுப்பி சீண்டி விடுகிறாய். ஒவ்வொரு முறை நீ சீண்டி விளையாடும் போதெல்லாம் என் மனதுக்கு அவ்வளவு உவப்பாய் இருக்கும். ஆனால் வெளியில் காட்டுவதோ வேறு முகம், சிறிது கோபமான முகம். நீ கண்டுபிடித்து விடுவாய். எனக்கே தெரியாத உன் மீதான காதலை கண்டு பிடித்து காட்டியவன் நீ. என் கோபத்திற்கு பின் உள்ள தாபத்தை அடையாளம் கண்டுபிடிக்காமலா போய் விடுவாய்.
கை பிடித்து அழைக்கா விட்டாலும் கண் பிடித்து என்னை வீட்டை விட்டு வெளியே வர உன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்கிறாய். கடைசி வரை பிடிக்காதது போல் தான் நடிப்பேன். அதை நம்பி என்னை கை விட்டு விடாதே. மன்னிக்க. கண் விட்டு விடாதே. உன் கைப்பிடி வளையத்துக்குள் வரும் வரை உன் கன்னி முயற்சியை தொடர்ந்து கொண்டே இரு.
காதலுக்கு நீ குரு என்றால் கவிதைக்கு நான் குரு. உன்னை நினைக்கும் போதே அத்தனை சொற்களும் என் கவிதை மாலைக்குள் தானாய் வந்து முடிச்சிட்டுக் கொள்கிறது. அத்துணை மாலைகள் கோர்க்கிறேன், உன்னை அதிக நேரம் பார்த்து விட்டாலும், நீ தொலை தூரம் போய் விட்டாலும். உன்னை கிட்டே நிறுத்தி என் கண்கள் குளிர அந்த அழகு மாலைகளை உனக்கு அணிவித்து பார்க்க ஆசை தான். ஓ, குளிர்ந்த மாலைகளின் சில்லிப்பு தாங்காது உறைந்து போய் விடுவாய் என நினைத்து தயங்குகிறாயோ?
தயங்காதே. நான் இருக்கிறேன். எல்லா மாலைகளுக்கும் மேலாய் என் கை கொண்டு விரல் பூக்களை பின்னி உன்னை கதகதப்பாய் வைத்துக் கொள்கிறேன்.உன் முகத்தருகில் என் முகம் உரசும் தருணங்களில் என் முகத்தோலும் உயிரிலிருந்து பிரகாசிக்குமோ? நல்ல வேலை. எனக்கு வெட்கம் இன்னும் மிச்சம் இருக்கிறது. வெட்கமின்றி வெறும் கண்களால் உன்னைக் கண்டால் என்னவாகும் என்று எனக்கு தெரியாதா என்ன? ஒரு வேளை என் வெட்கச் சிவப்பு உன் முகத்தில் தீற்றலாய் விழும் எனில் நீ சிவப்பு நிலவாக ஆகி விடுவாயோ? வேண்டாமடா. வருடத்திற்கு மூன்று முறைதான் சிவப்பு நிலவு தோன்றுகிறதாம். நிமிடக் கணக்கில் உன்னை பார்க்காமல் இருந்தாலே பெருமூச்சால் என் ஆவி கரைந்து விடும். வருடக் கணக்கில் உன்னைப் பாராமல் இருந்தால் என் எலும்புகளும் பொடிபொடியாய் உதிர்ந்து விடும்.
உன்னோடு ஊர் சுற்ற, இல்லை இல்லை உலகம் சுற்ற எனக்கும் ஆசை தான். குளிர் இரவு..மௌனத்தின் பாரம்..பூமித் தாயின் 'ம்ம்ம்' என்ற இருதய ஓசை..எனக்கும் உனக்கும் மட்டுமான வழிப்பயணத்துக்கான வெளிச்சம்..சிரிக்க வைக்க நீ..சிவந்து சிரிக்க நான்..நம்மைக் கடந்து போகும் குளிர்க் காற்று அணுக்களும் வெப்ப சூடேறி அனல் காற்றாய் ஆவியாகும்.. அவ்வளவு நெருக்கத்தில் நாம்..ஹ்ம்ம்..நெருங்கி வரத்தான் நினைக்கிறேன். நீயும் வாய்ப்பு கொடுத்தாய். உன்னைப் பார்க்க ஓடோடி வர என் கால்களுக்கு தயக்கம் இல்லை. மனது தான் தயங்குகிறது.
உன்னைப்
பார்த்த பின் என் மனது மட்டும் உன்னோடேயே தங்கி
விடுமோ என்று. போதும் இந்த பூமிக்கு ஒரு நிலவு. அதுவும் நீ மட்டும்.
இரு திங்கள் தேவைப்படும் போது ஒரு மதியாய் நானும் வருகிறேன். அதுவரை நீ விண்ணிலும்.. நான் மண்ணிலும்.
அதுவரை,
உன் உயிர்க் காதலி வைர மல்லி.You are always handsome.. I have a doubt.. You standall night and guard the sky garden.. Who will come to
the sky to steal the starry flowers? You treat all the stars as your property. But, I am yours. Who will guard me, from you? you know the trick how yousteals me completely, is in your eyes. Do you keep your eyes opened during the day because ofguarding at night? To hide your dull eyes, do you light up the sky in day time for glaring my eyes and disappear from my sight? Let me live for a while. Then? You look at me like you are biting and swallowing. So, the white cells in my body are shamelessly turning into red cells as the flower of shy blooms all over my body.Because of this, when the love disease comes, the peoplehave no immunity and fell in sick? Whenever I try to sleep on the cotton mattress, you are sending a breeze to wake up me and come out from my room. Every time you play this, I feel so happy. But I show you a different face, a slightly angry face. You will find out. You are the one who showed me the love for you that I didn't even know. won't you recognize the passion behind my anger? Even if you don't hold my hand and call me, you make every effort to get me out of the house to overcome my fear by your eye contact. I'll just act like I don't like it until the end.Don't trust my act and leave me alone. Continue your attempt until your handleas the loop around me. If you are the guru of love, I am the guru of poetry. When I think of you, all the words come automatically into my poetic garland. I do more and more poetric garlands. Even if I see you for a long time, even if you are far away. I want to stop you and wear those beautiful garlands on you. Oh, do you hesitate, thinking that you will freeze because of cold flowers? Don't hesitate. I'm there. Over all the garlands, I will wrap my flower fingers and keep you covered. When my face comes near to your face, will my skin glow more? Oh my goodness. I still have shy. I don't know what will happen if I see you with bare eyes without shy? And if my blushing red should fall on your face, would you become a red moon? No, No.. A red moon appears only three times a year. Without seeing you in a matter of minutes, my spirit melts with sighs. If I don't see you for years, my bones also will crumble. I too want to go with you around town, no..no..around the world.The cold night..the weight of silence..the heartbeat of mother earth's 'hmmm'..the light of the journey for me and you alone..you make me smile.. I blushed and laughed.. The cold air molecules that pass by us heat up and evaporate into hot air.. We are so close.. hmm.. I think I want to come closer. You also gave a chance. My legs do not hesitateto run to see you. It is the mind that hesitates. After seeing you, my heart will stay with you only. One moon is enough for this earth. And that's just you. I also come as a pair to you when two moons are needed. Until then you are in the sky.. I am in the ground.
- Your Diamond Jasmine..(Vaira Malli)

No comments:
Post a Comment