Showing posts with label poetic romance stories. Show all posts
Showing posts with label poetic romance stories. Show all posts

Tuesday, 12 August 2025

Beautiful World for Me – Romantic Tamil & English Love Letter | Vairamalli Series

August 12, 2025 0 Comments

 


                                                        





என்னுயிர்க் காதலன் நிலவனுக்கு,

உறைந்து போகாத உற்சாகம் கொண்ட உன்னவள் எழுதுவது. ஒரு காதல் அழியும் போது ஓர் உலகமே அழிகின்றது. ஆனால் உன்னிலிருந்து ஒரு துளி காதல் தந்து எனக்காய் ஒரு அழகான உலகத்தை உருவாக்கிக் கொடுத்தவன் நீ. வெளி உலகில் நான் மனம் வெதும்பி புழுங்கி சாகும் போதெல்லாம் நமக்கான உள் உலகத்தில் தென்றலைக் கைக்குட்டையாக்கி என் கண்ணீரைத் தொட்டுத் துடைத்துக் கொண்டிருக்கிறது உன் காதல்.

 

அந்த உலகில் உன் பேச்சு சத்தமே எனக்கு ஜுகல் பந்தி. உன்னை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்கு பொழுது போக்கும் கண் காட்சி. உன் வாசனையே என் வயிறு நிரப்பும் ருசியான பதார்த்தம். யாருமற்ற இந்த தனிமை வாழ்க்கைப் பயணத்தில் பேசிக் கொண்டே நடக்கையில் என்னோடே கூட வரும் நீயே என் ஒத்தையடிப் பாதை. மொத்தத்தில் நான் அனாதையாய் சாக விடாது உன் காதல். அதில் பெருமளவு நம்பிக்கை உண்டு எனக்கு.

 

உனக்குத் தெரியுமா? மீனுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இறந்த பின் முதலில் அழுக ஆரம்பிப்பது தலை தானாம். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். உன்னை, இந்த உலகத்தை, நம் இருவரின் உலகத்தை விட்டு பிரிகிறேன் எனில் எனக்கு ஏற்கனவே மூளை செத்துத் தானே இருக்க வேண்டும்? அப்போது, நான் இறந்த பின் முதலிலேயே இறந்து போன என் தலை தானே அழுகத் தொடங்கும்? ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.

 

உலகியல் அறியாத குழந்தை நீ! என் உலகமாகவே மாறிப் போனாய். நீ கூடவே இல்லை தான். ஆனாலும் என் சுதந்திரத்தில் சரி பாதியை நான் விட்டுக் கொடுக்கிறேன். உன்னைக் கேட்டு விட்டே சில விஷயங்கள் செய்ய ஆசைப்படுவதால் அதை ஆரம்பிக்காமலேயே இருக்கிறேன். அகராதி பிடித்தவள் தான் நான், ஒரு காலத்தில். இன்று உன் அன்புக்கு அடிமையாய் இருக்கவே விரும்புகிறேன். சுய மரியாதை தந்தை பெரியார் என்னை மன்னிப்பாராக.

 

எங்கு பயணம் சென்றாலும் என் tongue cleaner -ரோடு சேர்ந்து உன் நினைவுகளும் கூடவே பயணிக்கிறது. சிறு வயதில் என் தந்தையிடமிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம் tongue cleaner உபயோகிப்பது. காலையில் நான் கண் விழிப்பது மட்டும், நான் உயிரோடு இருப்பதற்கான அறிகுறி அல்ல. என் கை விரல்கள் எப்போது tongue cleaner -ரை தீண்டுகிறதோ அப்போதுதான் என் வாழ்நாளில் ஒரு நாள் கூடிக் கொண்டே வரும். நீயில்லாததை எப்படி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதோ அப்படித்தான் tongue cleaner இல்லாத என் வாழ்க்கையும்.

 

அதற்கு செல்லப் பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு என் வாழ்வின் அங்கம் அது. அதனுடைய காதல் tooth brush -ன் மீது. என் tooth brush -ன் crush sensodent tooth paste. இந்த மூன்று பேரின் காதல் நாடகத்துடன் தான் என் அதிகாலைப் பொழுது ஆரம்பமாகும். அவ்வப்போது ஜோடிகளை மாற்றி வைத்து அம்மூவரை கடுப்பேற்றுவது என் பொழுது போக்குகளில் ஒன்று. அதனால் தானோ என்னவோ விதி நாம் இருவரை பார்க்க வைத்தும், பழக வைக்காமல் கண்ணாமூச்சி காட்டுகிறதோ.  


கரு உருவாகி ஏழாம் வாரத்திலேயே இதயம் எளிதில் காதல் வயப்பட்டு துடிக்கத் தொடங்கி விடுமாம். அதற்கு பின்னர் தான் குண்டூசி தலை மீது முகம் மொட்டு விட தொடங்குமாம். பின்பு இருபத்து நான்காவது வாரத்தில் தான் கண் விழிப்போமாம். சரிதான்., காதலுக்கு முதலிலும் கண்ணில்லை, இப்போதும் இல்லை. கண் என்ற ஒன்று இருந்திருந்தால் கைக்கெட்டா உன்னை காதலித்திருப்பேனா, இல்லை கரம் பிடிக்கத்தான் ஆசைப்பட்டிருப்பேனா?

 

என் மரணம் வரையிலும் இந்த ஆசை என் பக்கத்திலேயே உரசிக் கொண்டு நடந்து வரப் போகிறது, ஒரு நிழலைப் போல. வெறும் உரசலோடு நின்று விடுமா? இல்லை ஒரே தள்ளலில் என்னை சாய்த்து விடுமா? தெரியவில்லை. அது தள்ளிச் சாய்க்கும் வரை தப்பித்துக் கொண்டே, இந்த வாழ்க்கையை  வாழ்ந்து முடிக்கக் காத்திருக்கும் ,

 

உன் உயிர்

வைரமல்லி.

 

 

To my dearest love, Nilavan,

This is written by your beloved, who holds an undying enthusiasm for you. When a love dies, a world dies with it. But you are the one who gave a drop of love from yourself and created a beautiful world for me. Whenever I am heartbroken and suffer in the outside world, your love turns the breeze into a handkerchief, touches and wipes away my tears in our inner world.

 

In that world, the sound of your voice is music to my ears. Watching you without blinking is my favorite pastime. Your scent is the delicious food that fills my stomach. In this lonely journey of life, you are the only path that accompanies me as we walk and talk. Overall, your love will not let me die an orphan. I have great faith in that.

 

Do you know? Fish and humans have something in common. It is said that the head is the first to decompose after death. It must be true. If I am separating from you, from this world, from our world, then my brain must already be dead, right? So, after I die, my head, which died first, will be the first to decompose, won't it? I have to agree.

 

You are a naive child in worldly matters! You have become my whole world. Even though you are not physically present, I am giving up half of my freedom. Because I want to do some things only after asking you, I remain without starting them. I was someone used to be arrogant, once upon a time. Today, I only wish to be a slave to your love. May self-respecting Thanthai Periyar forgive me.

 

Wherever I travel, your memories travel along with my tongue cleaner. Using a tongue cleaner is a habit I picked up from my father in childhood. My waking up in the morning is not the only sign that I am alive. Only when my fingers touch the tongue cleaner does one more day get added to my life. Just as I cannot imagine you not being there, so too is my life without a tongue cleaner.

 

It is such an integral part of my life that I call it by a pet name. Its love is for the toothbrush. My toothbrush's crush is Sensodyne toothpaste. My early morning begins with this love triangle. Occasionally swapping the pairs and irritating the three of them is one of my pastimes. Maybe that's why fate showed us both to each other, but plays hide-and-seek, preventing us from getting acquainted.

 

It is said that the heart begins to beat easily with love in the seventh week of gestation. Only after that does the face begin to bud on the pin head. Then, in the twenty-fourth week, the baby would open eyes. That's right, love is blind, both at the beginning and now. If there had been eyes, would I have loved you, who is out of reach, or would I have desired to hold your hand?

 

Until my death, this desire will walk alongside me, like a shadow. Will it stop with just a brush? Or will it knock me down with a single push? I don't know. Until it pushes me down, I will keep escaping and wait to finish living this life.

 

Yours in life,

 Vairamalli.

Tuesday, 17 June 2025

Why Did You Choose Me, Moon Man? – Romantic Tamil & English Love Letter of Confession

June 17, 2025 0 Comments


                 “You chose me—even when I didn’t choose myself.” – Yathriga

 

என்னுடைய நிலவு மனிதனுக்கு,

உன்னுடையதாய் என்றும் இருக்க விரும்பும் வைர மல்லி எழுதுவது. நிறைய  இரவுகளில், நான் யோசித்திருக்கிறேன், நீ  என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய் என்று. நான் ஒன்றும் அவ்வளவு கம்பீரமானவள் அல்ல. வாளிப்பான பதிப்பும் அல்ல. மென்மையாய் சிரிக்கத் தெரிந்தவளும் அல்ல.

 

 உருவகங்களாலும், ரோஜா நிறக் கனவுகளாலும் நிறைந்த இதயத்துடன் உங்களுக்கு எழுதும் கவித்துவமான பெண் அல்ல.  நீ வரும் முன், சோர்வின் அடுக்குகளுக்கு அடியில் புன்னகையைத் தொலைத்தவள். என்னுடைய இதயமே எனக்கு மிகவும் கனமாய் இருப்பதாக உணர்ந்தவள். இருந்தும், நீ என்னை  ஒருபோதும் கை விட்டதில்லை.

 

நான் முழுமையடைய  நீ காத்திருந்ததில்லை. நான் உனக்கேற்றவளாக இருப்பேனா என்ற சந்தேகமும் உனக்கு வந்ததில்லை. என்னுடைய இதய வீட்டில் விளக்குகள் சூடாகவும், வரவேற்கத்தக்கதாகவும் இருக்கும்போது மட்டுமே நீ கதவைத் தட்டுவதில்லை. நான் ஒரு மங்கலான மெழுகுவர்த்தியையும், மண்டியிட்ட இதயத்தையும் மட்டுமே வழங்க முடிந்தாலும்  நீ உள்நுழைய ஆசைப்பட்டாய்.

 

நான் சிதறி இருந்த போது - குழப்பமாமனநிலையில்  இருந்த போது நீ என்னை உன் பார்வையாலேயே உன் அணைப்பில் என்னை வைத்திருந்தாய்.  ஒருவேளை  நான் பயங்கரமானவளாக இருந்தாலும் , நீ என்னுடைய கை விரல்களை நீவி விட்டுக் கொண்டிருந்திருப்பாய்.  என் அமைதிக்கான  விளக்கம் கேட்டு என்னை தொந்தரவு செய்ததில்லை. என்  துக்கத்தை சுத்தம் செய்ய  நீ முயன்றதில்லை. மாறாக மேலும் மேலும் சிரிக்க வைத்து அதன் மூலம் என் மனதின் பாரத்தை இறக்கி வைத்திருக்கிறாய்..

 

அதுதான் காதல், இல்லையா? நீ என்னுடன் நிஜத்தில் இல்லாத சமயங்களில் நிழல் உருவமாய் என் மனதிற்குள் உன்னை அடைத்து வைத்து உன்னுடன் பேசிக் கொண்டிருப்பேன். உன் வயது, உயரம் பற்றிய கவலை எனக்கில்லை. எனவே தான் உன்னை "குட்டிப் பையா" என்று தான் கூப்பிடுவேன். நான் படித்துக் கொண்டிருந்த மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலம் - புத்தகத்தில் ஓநாயை செல்லப் பிராணியை வளர்க்க ஆசைப்படும் கதாநாயகன் அதை "குட்டி ஓநாய், குட்டி ஓநாய் " என்று தான் கூப்பிடுவான். நாளடைவில் அது பெரியதாய் வளர்ந்த பின்னும் குட்டி ஓநாய் என்று அவன் கூப்பிடுவதைத்தான் அந்த ஓநாயும் விரும்பும்.

 

ஆக, அப்புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த நாட்களில் உன்னை சம்பந்த்தப்படுத்தி என்னையறியாமல் அந்த ஓநாயின் மீது ஒரு பாசமும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தது. இன்னும் சில அத்தியாயங்களில் முடியப் போகும் அப்புத்தகத்தில் எதிர்பாராத விதமாக, தவிர்க்க முடியாமல் அந்த ஓநாயின் நன்மைக்காக அந்த கதாநாயகனே அவன் கைகளால் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவான். என் இதயத்தை கைகளால் அழுந்தப் பிடித்துக் கொண்டு, என் கண்களை சுருக்கி கண்ணீரை உள்ளடக்க முயன்று படித்த அந்த வரிகளில் ஓநாயோடு நானும் அந்த வலியை உணர்ந்தேன்.

 

அவ்வளவுதான். இனி அப்புத்தகத்தை வாசிக்க எனக்கு தைரியம் இல்லை. உன்னை "குட்டிப் பையா" என்று அழைக்கவும் தான். அந்த புத்தகத்தை முடிக்காமல் வாங்கி வைத்திருக்கும் மற்ற புத்தகங்களையும் படிக்க ஆர்வம் வரவில்லை. அது மட்டும் அல்ல. உன் பெயரிட்டு வீட்டில் வளர்த்து வந்த என் செல்லப் பிராணி ஒன்று காணாமல் போனதிலிருந்து அடுத்து எந்த ஒன்றையும் வளர்க்கும் ஆசையும் இல்லாமல் போய் விட்டது. ஒன்றுமில்லாத நம் உறவுக்கு நான் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று இன்று வரை தெரியவில்லை.

 

ஏனெனில், நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ்  நம் உறவு பற்றிய பெரிய அறிவிப்புகள் ல்லை. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட சந்திப்புகள் இல்லை.மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவுக்காய் நமக்கான இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. ஆனால் உண்மையான காதல் சிறிய, சொல்லப்படாத தருணங்களில் உள்ளது என்பதை உணர வைத்தவன் நீ. உன் அவதரிப்பு  என் குழப்பத்தை, என் பயத்தை  ஒரு போர்வையைப் போல மூடி விடும். உன் கண்களின் அழகு என்னை என் உடைந்த நிலையில் இருந்து கை தூக்கி விடும்.

 

நீ என்னை சரிசெய்ய ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதுதான் ன்னைப் பற்றிய மிக அழகான விஷயம். நீ என்னை காப்பாற்ற வரவில்லை. புயலை கூட  நான் எதிர்த்து நிற்க தகுதியானவள் என்பதை எனக்கு நினைவூட்ட வந்தாய். என் மோசமான நிலையிலும், நான் இன்னும் நேசிக்கப்பட வேண்டியவள் என்பதை சொல்வதற்காய் வந்தாய்.

 

உன்னைப் போன்ற ஒருவனுக்கு  நான் தகுதியானவளாக  இருக்கிறேனா என்று சந்தேகம் வரும் சமயங்களில் நான் குற்ற உணர்வுடன் இருந்திருக்கிறேன் . நான் நேசிக்க நீ எளிதாய்  இருந்திருக்கலாம் அல்லது உன்னை நேசிக்க தகுதியானவளாய் நான் பிறந்திருக்கலாம் அன்று பல சமயங்களில் தோன்றும்.

 

ஆனால் நிலா மனிதனே, எந்த நிலையிலும்  நீ என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். காதல் தகுதி பற்றியது அல்ல என்பதை நீ எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறாய்.அது தேர்ந்தெடுப்பது பற்றியது. நீ என்னை தேர்ந்தெடுத்தாய் - நான் என்னை நானே தேர்ந்தெடுக்காத நாட்களிலும் கூட.

 

அந்த உண்மை... அந்த உண்மை  என்னை  இந்த உலகத்தில் கம்பீரமானவளாக நிலைநிறுத்துகிறது.

 

நான் அணியும் முகமூடிகள் மற்றும் நான் சொல்லும் சாக்குப்போக்குகளை நீ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாய்.  என் கண்களுக்குப் பின்னால் உள்ள குழப்பத்தையும் நீ கவனிக்கிறாய். இருந்தும் "நீ சிறப்பானவள்" என்று  உணர வைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறாய்.. நான் வெற்றிபெறும்போது அல்ல. நான் சிறந்தவளாக மாறும்போது அல்ல. ஆனால் இப்போது,  நான் இருக்கும் விதமாக.

 

உன்  நிலவொளியின் கீழ் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கும் நம் காதல் இந்த வாழ்க்கையை,  நம்மை எங்கு அழைத்துச் செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது எனக்குத் தெரியும் - காதலுக்கு ஒரு முகம் இருந்தால், அது என் இருண்ட நேரத்தில் ன்னைப்  போலவே இருக்கும்.. பிரகாசமாக, அமைதியாக, மென்மையாக, நிலையாக..

 

என்றும் குழப்பத்தில், ஆனால் இன்றும் உன் காதலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்,

 

**யாத்ரிகா**

 

      “You chose me—even when I didn’t choose myself.” – Yathriga

 

My Moon Man,

 

This is Vaira Malli, who always wishes to be yours. Many nights, I have wondered why you chose me. I am not that majestic. Nor am I a vibrant edition. I don't even know how to smile gently.

 

I am not a poetic woman who writes to you with a heart full of metaphors and rose-tinted dreams. Before you came, I was someone who had lost smile under layers of weariness. I felt my own heart was too heavy for me. Yet, you never abandoned me.

 

You didn't wait for me to be complete. You never doubted if I would be suitable for you. You don't just knock on the door when the lights in my heart-home are warm and welcoming. Even when I could only offer a dim candle and a kneeling heart, you longed to enter.

 

When I was scattered - in a confused state of mind - you held me in your embrace with just your gaze. Even if I were terrible, you would have caressed my fingers. You never bothered me by asking for an explanation for my silence. You never tried to clean up my sorrow. Instead, you made me laugh more and more, thereby lightening the burden on my mind.

 

That's love, isn't it? When you are not physically with me, I keep your shadow form in my mind and talk to you. I don't care about your age or height. That's why I call you "Kutti Paiya" (Little Boy). In the book "Mongolian's Pasture Land" that I was reading, the protagonist who wishes to raise a wolf as a pet calls it "Kutti Onaai, Kutti Onaai" (Little Wolf, Little Wolf). Even after it grows big, the wolf prefers to be called "Kutti Onaai."

 

So, in the days I was reading that book, a fondness for that wolf, unconsciously relating it to you, began to sprout and grow. In a few more chapters, the book will end, and unexpectedly, inevitably, for the wolf's own good, the protagonist will be forced to kill it with his own hands. Holding my heart tightly with my hands, narrowing my eyes to hold back tears, I read those lines and felt that pain along with the wolf.

 

That's it. I no longer have the courage to read that book. Nor to call you "Kutti Paiya." I haven't felt like reading the other books I bought without finishing that one. Not only that. Ever since a pet I raised at home, named after you, went missing, I've lost the desire to raise anything else. To this day, I don't know why I give so much importance to our relationship, which is nothing.

 

Because, under a sky full of stars, there were no grand announcements about our relationship. No perfectly planned meetings. No reserved seats for us at candlelit dinners. But you made me realize that true love lies in small, unspoken moments. Your arrival covers my confusion, my fear, like a blanket. The beauty of your eyes lifts me from my broken state.

 

You never tried to fix me. That's the most beautiful thing about you. You didn't come to save me. You came to remind me that I am worthy of standing against even a storm. You came to tell me that even in my worst state, I am still worthy of being loved.

 

There have been times when I felt guilty, wondering if I was worthy of someone like you. Many times, it seems like it might have been easier for me to love you, or that I was born worthy of loving you.

 

But you, Moon Man, in every situation, you hold my hand. You keep reminding me that love is not about worthiness. It's about choosing. You chose me - even on days when I didn't choose myself.

 

That truth... that truth establishes me majestically in this world.

 

You see the masks I wear and the excuses I make. You also notice the confusion behind my eyes. Yet, you keep trying to make me feel "you are special"... not when I succeed. Not when I become better. But now, just as I am.

 

I don't know where our love, which inspires me to write under the moonlight, will take this life, or us. But I know this - if love had a face, it would be just like you in my darkest hour... bright, calm, gentle, steady.

 

Forever in confusion, but still living in your love, your,

 

**Yathriga**