Drenched in Moonlit Rain — A Memory That Became a Poetic Love Letter
A letter written under moonlit rain — where memories drench deeper than words.
அன்பு
(இருக்கிறதென நம்பிக்கொண்டு இருக்கும் உன் வைரமல்லி) நிலவனுக்கு,
என்
ஆயிரம் கோடி முத்தங்கள்.
உன்
பார்வை பலரின் மேல் படுவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் காதல் உன்னை தவிர
வேறு யார் மீதும் படாதவாறு என்னால் தடுக்க முடியும். இந்த வாழ்க்கையில் நீ ஒருவனே போதும் என்பது எனக்கு உறவுகளின்
இழப்பு தான். ஆரவாரங்களில் ஆர்ப்பரித்துக் களித்துக் கொண்டாடிக் கொண்டிருந்த என்
வாழ்க்கை இறுதியில் தனிமையின் ஜாடிக்குள் வெறுமையாய், யாரும் அறியாமல்
மூச்சடங்கிப் போகும். போகட்டுமே..
1000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், 0.1 சென்டி மீட்டர் தொலைவில்
இருந்தாலும் வடக்கு வடக்கு தான். தெற்கு தெற்கு தான். சில நியதிகள் அப்படித்தான்.
மாற்ற முடியாதது. மாற்றக் கூடாதது. காதலின் அடி வண்டல் வரை சுரண்டி அனுபவிக்க
ஆசைப்பட்டு விட்டு, பின்பு ஆழம் கண்டு பின் வாங்கினால் எப்படி? வார்த்தைகளில் தான்
உடைந்து ஒழுகுகிறேன். என் காதல் வாழ்க்கையில் உறுதியாய் இருக்கிறேன்.
என் ஐம்புலன்களும் மரக்கிளைகளில் அடம் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும்
பாலிதீன் பைகளைப் போல உன் வரவுக்காய் ஏங்கி காத்துக் கிடக்கின்றன. என் கண்ணிமைகள்
கவிழும் போதெல்லாம் உன் மடியை தேடி ஓடி வர ஆசைப்படுகிறது, என் காதல் மனது. என் வாலிப
மேகத்தில் ஆசை மின்னல் எப்போதும் பளீரிட்டுக் கொண்டே இருக்கிறது. மின்னிய மேகம்
தேன் மழை பொழியாவிட்டாலும் குறைந்த பட்சம் தேன் தூறலாவது விழுந்து நனைய செய்யாதா
என என் இதழ்கள் ஏங்குகின்றன.
மழையை நினைத்தாலே என் கிராமம் தான் நினைவுக்கு வருகிறது. அடை மழையில்
ஆற்றில் குளித்திருக்கிறாயா? நான் குளித்து இருக்கிறேன். வீட்டில் அனைவரும் கொஞ்சம்
அசந்த நேரம், இடியில்லா மழை பொழிந்த நாள் அன்று. சின்ன வயதில் நல்ல மழை, கெட்ட மழை
என்று வகைப்படுத்தியது இடியை வைத்து தான். இடியில்லாமல் நல்ல மழை பெய்யும் போது,
குதியாட்டம் போடும் இதயம் நம்முடன் கை கோர்க்கும். கெட்ட மழை பெய்யும் போது
‘அர்ஜுனா, அர்ஜுனா’ என நெக்குருகி அவரை துணைக்கு அழைக்கும்.
நானும் இடி இடிக்கும் போதெல்லாம் அவரை சத்தமிட்டு அழைத்திருக்கிறேன்,
என்றாவது ஒரு நாள் சக்தி மான் மாதிரி அவரும் என் முன் தோன்றி என்னை தூக்கிக்
கொண்டு இடி இடிக்கும் மேகத்தையும் கடந்து மேலே போய், என்னை மடியில் உட்கார வைத்து,
“பார் குழந்தாய். நீ இப்போது பத்திரமாய் இருக்கிறாய்” என சொல்லி தலையை தடவி
விடுவார் என்று. ஒரு நாளும் நடந்ததில்லையே. ஆனால் ஒரே ஒரு முறை மழை வரும்
நேரத்தில் , கரை புரண்டோடும் நீர்நிலைகளில் குளித்துப் பார். உடலோடு உள்ளமும்
நனையும் சுக அனுபவத்தை பெறுவாய்.
அது ஒரு சொர்க்கம். மாலை வேளை என்று சொல்ல முடியாத அளவிற்கு சிறிது
இருள் சூழ்ந்து கரு மேகம் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு நீர்ப் பூக்களால் நம் தலையில்
அர்ச்சிக்கும் வேளையில், ஆற்று நீரின் பூ மாலைகள் நம் உடலைத் தழுவி நழுவிக் கிடக்கும்.
வண்டுகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் சத்தம் காட்டாமல் நாம் முத்த மழையில் நனைவதை மூச்சடக்கி
வேடிக்கை பார்க்கும். தரையில் மழைத்துளி விழுந்து தெறிக்கும் போது கேட்கும் சங்கீதத்தை
விட ஆற்று நீரில் விழுந்து கரையும் போது எழுந்த ராகத்தை நீ கேட்டிருக்கிறாயா? ஜாதி,
மதம், இனம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மழை நீர், மண் நீரோடு முனகி, முயங்கி எழும்
காட்சிக்கு ஒரு நாள் சாட்சியாய் இருந்து பார். மயங்கிப் போவாய்.
இத்தனை நாடகமும் நல்ல மழைக்கு தான். கெட்ட மழை அதாவது என்னுடைய அகராதியில்
இடி மழையின் போது அதுவும் நான் விடுதியில் தங்கியிருக்கும் சமயங்களில் பெய்த மழையின்
போது நிறைய தரம் அழுதிருக்கிறேன். என் மீது இடி விழுந்து விடுமோ என்ற பயத்தினால் அல்ல.
என்னை விட்டு பிரிந்திருக்கும் என் அன்னையின் நிலை அங்கு எவ்வாறிருக்குமோ, இடி ஏதேனும்
அவர்களை பாதித்து விடுமோ என்று நினைத்து கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.
கடவுள் நம்பிக்கை என் கழுத்தில் தாயத்துக்களாய் தொங்கிக் கொண்டிருந்த காலம்
அது. கடவுள்களில் யாருக்கு யார் கணவன், மனைவி என்று தெரிந்திராத வயது அது. கிருஷ்ணரோடு
பார்வதியையும், முருகனோடு சரஸ்வதியையும் இணைத்து வைத்து வேண்டியிருக்கிறேன், “என் அம்மாவுக்கு
எதுவும் நேராமல் காப்பாற்று’ என்று. மொபைல் ஃபோன் இல்லாத காலத்தில் நினைத்துப் பார்..
உடனடியாக அவர்களின் நலம் பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் என்னுடைய பொம்மை
தான் எனக்கு துணையிருந்து ஆறுதல் படுத்தியது.. ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறது.
விடுமுறை முடிந்து அதிகாலை பேருந்தில் ஏறிய அடுத்த நிமிடம், வீட்டுக்கும்
எனக்குமான தொடர்பு முடிந்து விடும். அதன் பின்பு விடுதிக்குள் நுழையும் வரை வெளி உலகத்
தொடர்பு என்பது பேருந்தின் ஜன்னலோர இருக்கை
வரை தான். இப்பவும் என்றாவது ஒரு நாள் தான் பயணிப்போம் என்றாலும், என் விருப்பத் தேர்வு
ஜன்னலோரம் தான். அதில் சாய்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டே ஒவ்வொரு வீடுகளாய்
ரசித்துப் பார்த்துக் கொண்டே வருவேன்.
காலை நேரம் என்பதால் எல்லார் வீட்டிலும் அவ் வீட்டுப் பெண்மணி தத்தமது
வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். என்னுடைய கற்பனையில் என் அன்னையை அந்த
இடத்தில் இருத்தி, ‘இந்நேரம் பஸ் ஸ்டாப் பிலிருந்து வீட்டுக்கு போய் இருப்பார்கள்.. இந்நேரம் இந்த பெண்மணி மாதிரி கோலம் போட ஆரம்பித்திருப்பார்கள். இந்நேரம் ஆற்றுக்கு துவைக்க
சென்று இருப்பார்கள் “ என்றெல்லாம் கற்பனையிலும் பயணம் செய்த படியே பேருந்திலும் பயணம்
செய்வேன்.
என்னுடைய இந்த கற்பனையைப் பற்றியோ, இல்லை அவர்களுடைய பாதுகாப்பை பற்றிய
என்னுடைய பயத்தைப் பற்றியோ அவர்களிடம் இன்றளவும் நான் கூறியது இல்லை. இனி மேல் கூறுவது
நன்றாகவும் இருக்காது. உன்னுடைய விஷயத்திலும் அப்படித் தான். சில விஷயங்களை உன்னிடம்
இனி மேல் கூறுவது நாடகம் போல் தோன்றும். தவிர, பழையன கழிதலும், புதியன புகுதலும் வாழ்வின்
இயல்பு தானே. புதிய, பளபளப்பான நட்சத்திரங்கள் உன்னைச் சுற்றி பிரகாசிக்கையில் வெளுத்துப்
போன மேகம் இருந்தாலும், இறந்தாலும் ஒன்று தான். கவர்ச்சியான, கலர்ஃபுல் ஆன ரோஜா வுக்கு அருகில் நிறமற்ற மல்லிகையின் மணம் மக்கிப்
போகத்தானே செய்யும். சந்தோஷமாய் இரு. அது போதும் எனக்கு.
இப்படிக்கு,
மக்கிப் போக ஆரம்பித்திருக்கும் உன்(?) மல்லிகை.
A letter written under moonlit rain — where memories drench deeper than words.
(Every drop of that night still writes itself inside my heart… and now, on this page)
To Nilavan, from your Vairamalli (who believes
love exists),
A thousand crore kisses to you.
I cannot prevent your gaze from falling on
many, but I can prevent my love from falling on anyone but you. In this life,
you alone are enough for me; loss of relationships is my truth. My life, which
was once filled with exuberance, celebration and joy, will ultimately end up
silently suffocating, unknown, in a jar of loneliness. Let it be...
Whether 1000 kilometers away or 0.1 centimeters
away, north is north, and south is south. Some rules are like that –
unchangeable and not to be changed. How can one retreat after desiring to
scrape and experience love to its deepest sediments and then discovering its
depth? I am breaking and leaking only in words; in my love life, I remain
steadfast.
My five senses are yearning and waiting for
your arrival like polythene bags stubbornly hanging from tree branches. Every
time my eyelids droop, my loving heart longs to run to your lap. In the cloud
of my youth, the lightning of desire always flashes brightly. Even if the
electrified cloud doesn't pour honey rain, won't my lips yearn to be at least
drenched by a drizzle of honey?
Whenever I think of rain, I remember my
village. Have you bathed in the river during heavy rain? I have. On a day when
there was no thunder and everyone at home was a little drowsy. As a child, I
categorized rain as good or bad based on thunder. When good rain falls without
thunder, the dancing heart joins hands with us. When bad rain falls, we melt
and call upon him for support, "Arjuna, Arjuna."
I too have called out to him loudly whenever it
thunders, hoping that one day, like Shaktimaan, he would appear before me, lift
me up, fly me over the thundering clouds, sit me on his lap, and say,
"Look, child. You are safe now," and pat my head. It never happened.
But just once, bathe in the overflowing water bodies during the rain. You will
experience the pleasure of your body and soul being drenched.
It is a paradise. At a time when it is barely
evening, with a little darkness enveloping us and dark clouds surrounding us,
and when the rain showers us with water-flowers on our heads, the garlands of
river water caress and slip over our bodies. The beetles and butterflies
silently watch us getting drenched in the kisses of rain, holding their breath.
Have you ever heard the raga that rises when a raindrop falls and dissolves in
the river water, compared to the music that is heard when it falls and splatters
on the ground? Forget about caste, religion, creed and just be a witness one
day to the sight of rainwater murmuring and mingling with the soil water. You
will be mesmerized.
All this drama is only for good rain. Bad rain,
that is, in my dictionary, during thunderstorms, especially when it rained
while I was staying in the hostel, I have cried many times. Not because I was
afraid that lightning would strike me. I have shed tears thinking about my
mother's condition, how she would be there, and whether the thunder would
affect her in any way.
That was the time when faith in God hung around
my neck like amulets. That was the age when I did not know who was whose
husband and wife among the gods. I have prayed to Krishna with Parvati, and
Murugan with Saraswati, "Protect my mother from any harm." Imagine in
the days without mobile phones... In a situation where I could not immediately
know anything about their well-being, my soft toy was my companion and
comforted me... and continues to comfort me.
The moment I boarded the early morning bus
after the vacation, my connection to home would be severed. After that, until I
entered the hostel, my connection to the outside world would only extend to the
bus's window seat. Even now, though I travel only once in a while, my preferred
choice is always the window seat. Leaning against it, with my hand on my cheek,
I would enjoy watching each house as we passed.
Since it was morning, the women in every house
would have started their household chores. In my imagination, I would place my
mother in their place, thinking, "By this time, she would have returned
home from the bus stop... By this time, she would have started drawing the
kolam like this woman... By this time, she would have gone to the river to wash
clothes," and I would travel in my imagination while traveling on the bus.
I have never told her about this imagination of
mine, nor about my fear for their safety. It wouldn't be good to tell them now.
It's the same with you. Some things, telling you now would seem like a drama.
Besides, isn't it natural for the old to pass away and the new to enter? When
new, shiny stars are shining around you, it's all the same whether a faded
cloud exists or dies. Near a glamorous, colorful ROJA, the fragrance of a
colorless jasmine will surely decay. It's ok. Be happy. That's enough for me.
Sincerely,
Your(?) jasmine that has started to
decay.
Note : This letter isn’t an ending… it’s another whisper to my moon man. 🌙 Because Some memories don’t fade — they just return as words💌
Read the last whisper — My Gold plated Silver moon

