Showing posts with label Poetic Love Letter. Show all posts
Showing posts with label Poetic Love Letter. Show all posts

Wednesday, 20 August 2025

The Language of Love Beyond Words - Even Without Words, Our Love Speaks..

August 20, 2025 0 Comments

 



                                                         



(This letter is a celebration of our unspoken love, a bond that doesn’t depend on ordinary words).


அன்பு நிலவனுக்கு,

உன்னுயிர்த் தோழி வைரமல்லி எழுதுவது.. ஆம். எல்லா மொழியிலும் உன்னைப் பற்றி கவிதையும், பாடலும் போட்டி போட்டுக் கொண்டு கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஆனால் உன் மௌன மொழி மட்டும் யாருக்கும் புரிவது இல்லை. வணிகத்தில் மட்டுமா  மொழி முக்கியம்? காதலிலும் கூட அல்லவா? உன் மொழியும் என் மொழியும் வேறு வேறாய் இருப்பதில் தவறில்லை. ஆனால் புரிதல் இல்லாமல் நாம் இருவருக்கிடையேயான உரையாடல் சுவைக்காதே..

 

உரையாடல்களால் நிறைந்தது மனித வாழ்க்கை. கொஞ்சலாய், காரசாரமாய், கவித்துவமாய், தெள்ளத் தெளிவாய் என ஏகப்பட்ட மாறுவேடங்கள் கொண்டது உரையாடல். உறவினை உருவாக்கும். பிறிதொரு சமயம் வேரறுக்கும். பஞ்சு மிட்டாய் போன்ற நாக்கு சில சமயம் பட்டாக் கத்தியாய் வார்த்தைகளை சுழற்றி காயப்படுத்தவும் செய்யும்.

 

ஆனால் நாம் உறவில் மொழிப் புரிதல் இல்லையெனினும் எப்படி இவ்வளவு ஆண்டு காலம் இம்மியளவும் குறையாமல் இருக்கிறது என்பதை யோசித்திருக்கிறாயா? நானே சொல்கிறேன். நமக்கு வாய் மொழியை விட வேறொரு மொழி நன்கு வாய்த்திருக்கிறது. ஆம்.. அதுதான் “காதல் மொழி”. அது என்ன காதல் மொழி என்று யோசிக்கிறாயா?

 

உனக்காக நான் ஒதுக்கும் நேரம் ஒரு காதல் மொழி. என் மீது நீ காட்டும் அக்கறை  ஒரு காதல் மொழி. உனக்காக என் படைப்பாற்றலை அர்ப்பணிப்பது ஒரு காதல் மொழி. எனக்காக நீ மெனக்கெடுவது ஒரு காதல் மொழி. நம் காதலுக்காக இருவரும் கண்ணீர் சிந்துவதும் நமக்கான நம் காதல் மொழி. ஆக ஒரு மொழி வழி நமக்கு புரிதல் இல்லையெனினும் நமக்கான நம் காதல் மொழி ஐந்தினை வைத்துக் கொண்டு இன்னும் ஐந்து ஜென்மங்கள் இந்த உறவில் வாழ்க்கையை சுவைத்திட முடியும் என்று நான் நம்புகிறேன்.

 

எதிர்பார்க்காத விஷயங்களை எதிர்பார்ப்பது இந்த உறவில் மட்டும் தான். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான். நான் எதிர்பார்க்கா நேரத்தில் உன்னிடமிருந்து ஒவ்வொரு நொடியும் நான் எதிர்பார்க்கும் உன் காதலை எனக்கு அள்ளி வழங்கி ஆச்சர்யப்படுத்துவாய். கொஞ்சம் நான் பேராசைக்காரியும் கூட. நீ எவ்வளவுதான் உன் காதலை எனக்கு அள்ளி அள்ளி கொடுத்தாலும் திரும்ப திரும்ப எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறது என் காதல் மனது. உன் நினைவுகளை சுற்றி சுற்றி வந்து கொண்டேஇருக்கிறது என் ஆட்டுக் குட்டி இதயம்.

 

வாய் வார்த்தைகளாக நம் காதலை நமக்கிடையே பகிர்ந்து கொள்வது இல்லை தான். ஆனால், சில பரிசுப் பொருள்களில், பாராட்டு வார்த்தைகளில், மறைமுகமான உதவிகளில், நேரம் ஒதுக்குவதில், அக்கறையில் என நம் காதலை நன்றாகவே நமக்குள் பங்கு போட்டு பகிர்ந்து கொள்கிறோம். என்ன, என்னுடைய தாய் மொழியில் உரையாடினால் இன்னும் நிறைய சுவாரசியங்களுடன் சுவைபட என்னால் பேசி உன்னை மகிழ்விக்க முடியும். நம் இருவருக்கும் இடையே யான இந்த அந்நிய மொழி கொஞ்சம் நம்மை அந்நியப்படுத்துகிறது என்பது உண்மை.

 

அந்நிய மொழியே ஆனாலும் காலத்துக்கும் மறக்க முடியாத உரையாடல்கள் அவை. உனக்கு தரவே முடியாத முத்தம் போல, தடவிக் கொடுக்க முடியாத உன் காதல் குறுஞ்செய்திகள்.. தீ மூட்டப்படாத விறகு அடுப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் பூனைக் குட்டிகள் போல என் அலைபேசியில் படுத்து உறங்குகின்றன.

 

கனிவான அக்கறையில் சில குறுஞ்செய்திகள். தாங்க முடியாத ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் குறுஞ்செய்திகள். விம்மும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் குறுஞ்செய்திகள். விரகத்தை சொற்களில் அடக்கி பாசாங்கு செய்யும் குறுஞ்செய்திகள். கொப்பளிக்கும் நகைச்சுவையை குபீரென வர வைக்கும் குறுஞ்செய்திகள். காதலுக்கும், நட்புக்கும் இடையில் ஊசலாடும் குறுஞ்செய்திகள். நம் இருவருக்கு மட்டுமே புரியும் சங்கேத வார்த்தைகள் கொண்ட குறுஞ்செய்திகள். இப்படி நவரசம் காட்டும் குறுஞ்செய்திகள் நிறைய நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்.

 

ஆனால் எனக்குப் பிடித்த குறுஞ்செய்தி ஒன்று உண்டு. அன்றொரு நாள் உன்னிடமிருந்து வந்த அந்த பெரிய செய்தியில் இடம் பெற்ற ஒரு சிறிய வார்த்தை. அதற்கு இணையான பொருள் கொண்ட சில வார்த்தைகளை நீ பயன்படுத்தும் போது வராத காதல் அந்த ஒற்றை வார்த்தையில் என்னை வந்தடைந்தது. ஆம்.. “Babe”.. அது தான் என் உயிர் வரை ஊடுருவி என்னை மொத்தமாய் சிலிர்க்க வைத்த வார்த்தை. உன்னை எவ்வளவு முறை கிண்டலாய் “Baby, Baby” என அழைத்திருப்பேன். இவ்வளவு ஜில்லென்றா உனக்கு இருந்தது? மொத்தமாய் என் மொபைல் ஃபோன் பனிக்கட்டியாய் உறைந்து என் இதயம் தாறுமாறாய் தடம் புரள ஆரம்பித்து விட்டது.

 

ஏனெனில் எப்போதும் வார்த்தைகளை அளவாய் கையாளுகிறவன் நீ. அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டாய். கண்ணீரையும், காதலையும் அடக்குவது உனக்கு எளிது. சுருக்கமாய் சொல்லப் போனால் எனக்கு நேர் மாறானவன். ஆனால் நீயே உன் கட்டுப்பாட்டை இழந்து உன் மனதிலிருந்து என்னை கனிவாய் அழைத்த அந்த நொடி, ஆஹா.. அழகான சித்திரத்தை என் காலச் சுவற்றில் வரைந்து  இன்பமான சித்திரவதையை அனுபவிக்க செய்தாய். திரும்ப திரும்ப நான் பயணிக்க நினைக்கும் அந்த நிமிடங்கள் என் வாழ்வின் முக்கிய அத்தியாயம். அந்த வருடத்தின் அந்த நாள் மட்டும் என் calender ரில் எண் மறைந்து பூக்களாய் பூத்துக் குலுங்கியது..  

 

இப்பவும் நீ பொதுவாய் “Baby” என்று அழைக்கும் போது எனக்கு அந்த குறுஞ்செய்தி தான் நினைவுக்கு வந்து போகும். ம்ம்.. சரி, என்னை தான் அழைக்கிறாய் என்று நினைத்து என் இதயத்தை காலத்துக்கும் ஏமாற்றி கொண்டு, ஏக்கத்தை வெளிக்காட்டாமல் வாழ பழகிக் கொண்டுள்ள

உன்னுயிர்க் காதலி

வைர மல்லி.

 

                                 

🌙 The Language of Love Beyond Words – A Letter to My Nilavan

(In this poetic love letter, Vairamalli writes to her beloved Nilavan, celebrating their bond that thrives beyond words and silence — a journey of unspoken emotions and the eternal language of love).



To my beloved Nilavan,


This is Vairamalli, your dearest friend, writing to you... Yes. Poets compete to write poems and songs about you in every language. But your silent language remains incomprehensible to anyone. Is language only important in business? Isn't it also important in love? It's okay if your language and my language are different. But without understanding, our conversation won't be enjoyable...


Human life is filled with conversations. Affectionate, fiery, poetic, crystal clear – conversation has so many disguises. It creates relationships. At other times, it uproots the relationships. A tongue as sweet as cotton candy can sometimes wield words like a flashing sword, causing pain.


But have you ever wondered how our relationship has remained undiminished for so many years, even without linguistic understanding? I'll tell you. We are fluent in another language besides spoken words. Yes... it's the language of love. Are you wondering what the language of love is?


The time I set aside for you is a language of love. The care you show towards me is a language of love. My dedicating creativity to you is a language of love. Your effort for me is a language of love. The tears we shed for our love are also our language of love. So, even if we don't understand each other through one language, I believe that with our five languages of love, we can savor this relationship for five more lifetimes.


Only in this relationship can I expect the unexpected. In that sense, I am lucky. Every moment, when I least expect it, you surprise me by showering me with the love I crave from you. I am a bit greedy too. No matter how much love you shower on me, my loving heart keeps expecting more and more. My lamb-like heart keeps wandering around your memories.


It's true that we don't share our love in words. But, we share and divide our love well through small gifts, words of appreciation, subtle favors, making time for each other and showing care. If only I could converse in my mother tongue, I could entertain you even more delightfully with many more interesting things. It's true that this foreign language between us makes us a little distant.


Even though it's a foreign language, those conversations are unforgettable. Like a  kiss I can never give you, your messages of love that I can't caress... they lie sleeping on my phone like kittens sleeping on a firewood stove that hasn't been lit.


Some messages with tender care. Messages that express unbearable surprise. Messages that reflect overwhelming joy. Messages that pretend to contain longing in words. Messages that bring forth bubbling laughter. Messages that swing between love and friendship. Messages with coded words that only the two of us understand. We have shared many messages like these that show nine different Navarasa emotions.


But there's one text message I particularly love. It was a small word in that big message I received from you one day. A love that didn't come when you used similar kind of words reached me in that single word. Yes... "Babe"... that's the word that penetrated my soul and thrilled me completely. How many times would I have teasingly called you "Baby, Baby." Did my words make you feel that thrilled? But, My entire mobile phone froze like ice and my heart began to race erratically.


Because you always use words sparingly (in messages only). You don't get emotional that easily. It's easy for you to suppress tears as well as love. In short, I am the opposite of you. But the moment you lost your control and called me sweetly from your heart, ah... you painted a beautiful picture on the wall of my time and made me experience a pleasant torment. Those moments that I want to travel back to again and again are an important chapter in my life. That particular day of that year bloomed with flowers instead of numbers in my calendar.


Even now, when you generally call "Baby," that text message is what I remember. Hmm... Okay, thinking you're calling me only, I've gotten used to deceiving my heart forever. Yeah.. living without showing my longing.


This bond is our treasure — a tale of unspoken love, a gift of silent emotions, and a lifetime written in the language of love.


Yours lovingly,
Vaira Malli.


(Earlier, I shared another love letter called Beautiful World for Me where I described how love turns even sorrow into poetry).


Note : Do you also believe that love has its own language beyond words? Share your thoughts in the comments below. 🌙💌