Tuesday, 13 May 2025

Oh my love, the wait feels so heavy, like a small piece of rock tied with a knot and hanging in each alveolus of my lungs.

May 13, 2025 0 Comments

 

ஓ என் அன்பே, காத்திருப்பு மிகவும் கனமாக இருக்கிறது, நுரையீரலின் ஒவ்வொரு நுண் காற்றுப் பைகளிலும்  ஒரு முடிச்சுடன் கட்டப்பட்டு தொங்கும் ஒரு சிறிய பாறைத் துண்டு போல.


அன்புள்ள நிலவு நண்பனுக்கு,

காத்திருப்பு என்பது காதலில் அனைவரும் சில நேரங்களில் எதிர்கொள்ள வேண்டிய கண்ணுக்குத் தெரியா ஒரு துணைவன்  தான். வருடக்கணக்கில் காத்திருப்பது மிக ஆழமாக நேசித்தலின் ஒரு வகை வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் காத்திருத்தலின் போது இரவுகள் நீண்டு நுரையீரலின் அமைதியைக் கெடுக்கும்.

சிறு மூச்சுகள் முடிச்சிட்டு பெருமூச்சாய் ஏங்கி விரிந்து பின் அது துவண்டு விழும். நுரையீரலின் ஒவ்வொரு நுண்ணறையிலும் ஒரு சிறு பாறைத்துண்டினை முடிச்சிட்டு தொங்க விட்டதைப் போல அவ்வளவு கனக்கும், காத்திருக்கும் சமயங்களில்..

என்னுடைய முதல் காத்திருப்பு தின மலரின் இணைப்பாய் வரும் சிறுவர் மலருக்காக தான். வீட்டில் தங்கிப் படித்தவரை ஆறு, பட்டாம் பூச்சி, நுங்கு, ஐந்து கல் ஆட்டம், கோழிக்கு தீனி போடுவது, தாத்தாவுக்காக நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டு பூஜை செய்வது, பூக்கள் பறிப்பது, ஊசிப் பூவில் தேனை உறிஞ்சுவது, மாட்டு வண்டியில் ஆட்டம் என பள்ளிப் புத்தகத்தை தாண்டி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயங்கள்.

ஆனால் என் அம்மா என்னை முதன் முதலாய் விடுதியில் கொண்டு போய் விட்ட போது மழையில் நனைந்த பட்டாம் பூச்சியாய் ஒடுங்கிப் போனேன். ஒரு பெரிய கல் கட்டிடத்தை எவ்வளவு நேரம் தான் சுற்றி வர முடியும்? பூ நூலினால் கட்டி விளையாடிய வெல்வெட் பட்டாம் பூச்சியின் ஆவி அக்கட்டிடத்தின் விட்டத்திலிருந்து என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டு திருப்தியுடன் விண்ணுலகிற்கு சென்றிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

செம்மண்ணில் எந்நேரமும் விளையாடியதில் புழுதி ஏறி சிவந்த நிறத்தில் மாறிப் போன எனது பாதங்கள், கான்க்ரீட் தரை பட்டு கூசியதில் வெளிறி வெண்மையைப் போயின. எங்கள் பாட்டி வீட்டில் கடிகாரம் இருந்ததாய் கூட ஞாபகம் இல்லை. இங்கு கடிகார முள்ளில் தான் என் வாழ்க்கையே சுற்றி வந்து கழுத்தை இறுக்குவதாய் தோன்றும். உண்பது தொடங்கி உறங்குவது வரை அனைத்திற்கும் டிங் டாங் தான்.

எனது கிராமம் என்ற உலகத்தை விட்டு இந்த நகரம் என்ற சிறு குடிலில் வந்து தங்கிய எனக்கு, ஞாயிற்றுக் கிழமை கையில் கிடைக்கும் சிறுவர் மலர் தான் பொக்கிஷம். அடை காக்கும் கோழியின் அடி வயிற்றுச் சூட்டோடு மடிப்பு கலையாமல் பேப்பர் காரர் வந்து எறியும் செய்தி தாளினை வாங்க, பல் கூட சரியாக துலக்காமல் வந்து காத்திருப்போம்.

வாசற்படியிலிருந்து வரிசை ஆரம்பிக்கும். பெற்றோர் வைத்த பெயரெல்லாம் காற்றில் காணாமல் போகும். 1, 2, 3 தான். படிப்பில் நான் எப்போதுமே இரண்டாமிடம் தான். ஆனால் நடனத்துக்கு அடுத்த படியாக இந்த வரிசையில் பெரும்பாலும் நான் முதலிடம் தான். காத்திருந்து, காத்திருந்து கையில் கிடைக்கும் புத்தகத்தை ஆசையாய் தடவி, நுகர்ந்து, நெஞ்சோடணைத்து அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது கடிகார முள்ளும் நாதமாய் ஒலிக்கும்.

முதல் காதல் போல, முதல் காத்திருப்பும் சுகமான நினைவுகள் தான். எனக்கு தெரியும் என் கையில் கிடைத்த அந்த புத்தகம் கடைசி வரை என் கூடவே வருவதில்லை என்று. ஆனாலும் ஏக்கம், ஆசை, தேடல், நேரமாக நேரமாக ஒரு பரிதவிப்பு. இவை அனைத்தும் உன் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த பிரபஞ்சத்தை உறுதியாகப் பிடித்து கொண்டிருக்கிறேன்.

நம்புகிறேன் நான், உன்னை விட, உன் மீதான என் காதலை. அதனால் தான் முடிவைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் உன்னை தூரத்திலிருந்து தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒரு சமயம் ஒரு சலிப்பு வரும். என் மீதே ஒரு கோபம் வரும். உன்னை யாரென்றே கண்டு கொள்ளாமல் வாழ்ந்து விட்டு இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் ஓடிப் போய் விடலாம் என்று தோன்றும்.

ஆனால் காற்று வீசும் தனிமை இரவுகளில், நமக்கான சில காதல் பாடல்களில், நம் இருவருக்கான ஒரு வார்த்தையில் (Baby), உன் கைரேகை பட்ட சில பொருள்களில், ஏன் சில சமயங்களில் நீல மற்றும் சிவப்பு வண்ணங்களில் கூட நம் காதல் பிழைத்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும்.

என் கண் முன்னே இரண்டு வெவ்வேறு பாதைகள்.. அந்த பாதை கனவுக்கும், எதார்த்தத்திற்கும் இடையில் நீண்டு நெளிந்து போகிறது.  ஒன்றில் அமைதியான ஆனால் சலிப்பான ஒரு வாழ்க்கை. மற்றொன்று அற்புதமான ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத மற்றொரு வாழ்க்கை. எதையும் கணிக்க முடியவில்லை. என் இதயம் இரு பக்க பாதைகளிலும் மாறி மாறி துடிக்கின்றது.

சாதாரண ஒரு செய்திக்கே ஒரு சிறு பதில் தராமல் நீ அமைதி காக்கும் போது எனது நம்பிக்கை விரக்தியாய் மாறுகிறது. இதில் நீ எங்கே என் கை பிடித்து ஒரு பாதையில், அதுவும் உன் பாதையில் என்னை அழைத்துப் போவாய் என எதிர்பார்ப்பது?  இரவில் விழித்திருந்து, கூரையைப் பார்த்து, இருளில் மெல்லிய கேள்விகளாய் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறேன். "நீ நலமாக இருக்கிறாயா?" , "என்னைப் பற்றி கொஞ்சமேனும் நினைக்கிறாயா?", "நிலவின் பாதை எப்போதாவது மறுசீரமைக்கப்படுமா?"

பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே அதுவரை இப்போதெல்லாம் என் மனதிற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். " உண்மையான அன்பு பொறுமையானது. அது கட்டாயப்படுத்தாது. அவசரப்படாது. அது நம்பும். அது நம்பிக்கை வைக்கும். அது காத்திருக்கும். அன்பு என்பது எப்போதும் நம்மை  சொந்தம் கொள்வது அல்ல . அது இணைவது பற்றியது. யாராவது விலகிச் சென்றால் உண்மையான அன்பு மறைந்து போகாது. சில நேரங்களில், நேரம் அறியாததை இதயம் அறியும்".

இவ்வளவு பாடங்கள் கற்ற பிறகு என் இதயங்கள் கொடுக்க மட்டுமல்ல, பெறவும் தயாராக இருக்கும் என நம்புகிறேன். எனவே, எப்போதும் போல் நான்  தொலைவில் இருந்தே  தொடர்ந்து  உன் மேல் அன்பு செலுத்த பழகிக் கொள்கிறேன,  ஒட்டிக்கொள்ளாமல்.. துரத்தாமல். ஆனால் அந்த அன்பை  எரிய வைத்துக்கொண்டே நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையோடு வாழ பழகிக் கொள்கிறேன். கடைசி வரை நான் உனக்காக காத்திருப்பேன், ஏனென்றால் வேறு யாரும் எனக்கு வேண்டாம். மேலும், நீ நேரம், தூரம் மற்றும் அமைதிக்கு தகுதியானவன் என்று என் உள்ளத்தின் ஆழத்தில் எனக்குத் தெரியும். ஆக மிகச் சிறந்த அன்பு காத்திருக்கும் சோகத்தில் அல்ல, நம்பிக்கையில்.

என்றும் நம்பிக்கையுடன்,

உனதுயிர் வைரமல்லி. 

 

"காற்று நெருப்புக்கு எப்படி இருக்கிறதோ, அதுபோலவே பிரிவு காதலுக்கு இருக்கிறது; அது சிறியதை அணைத்து, பெரியதை எரிய வைக்கிறது." — ரோஜர் டி புஸ்ஸி-ராபுடின். 


Oh my love, the wait feels so heavy, like a small piece of rock tied with a knot and hanging in each alveolus of my lungs.


To my dear friend, the Moon,

Waiting is an invisible companion that everyone in love has to face sometimes. Waiting for years can be a form of expressing very deep love. But during the wait, the nights lengthen and disturb the peace of the lungs.

Small breaths knot up, yearn into sighs, expand, and then collapse. It feels as heavy as if a small piece of rock is knotted and hung in every tiny alveolus of the lung, during those times of waiting.

My first experience of waiting was for "Siruvar malar" that came along with the Dinamalar newspaper. Staying at home, learning so many things beyond school books: River, butterflies, palm fruit, five-stone game, feeding the chickens, applying vibhuti on the forehead before the prayer because of grandfather, picking flowers, sucking honey from wild flowers, rides in bullock carts.

But when my mother first took me to the hostel, I shrank like a rain-soaked butterfly. How long can one circle a large stone building? The spirit of the velvet butterfly, with whom I played by tying it with a flower thread, would have looked at me from the roof of that building, happy and content, and gone to heaven, I think.

My feet, which had turned red from constantly playing in the red soil, became pale and white when they touched the concrete floor and felt shy. I don't even remember if there was a clock in my grandmother’s house. Here, it seems as if my life revolves around the clock's hands, tightening around my neck. From eating to sleeping, everything is dictated by "ding, dong."

Having left my world, my village, and settled in this small dwelling called the city, the Sunday children's magazine became my treasure. We would wait for the newspaper carrier to throw the paper, still warm like the brooding hen's belly and with its folds intact.

The queue would begin at the doorstep. The names given by our parents would disappear into the air. It was all about 1, 2, 3. I was always second in studies. But next to dance, I was mostly first in this queue. Waiting and waiting, I would lovingly caress the book I received, inhale its scent, embrace it, and as I began to read, the clock's ticking would sound like music.

Like first love, the first wait is filled with sweet memories. I know that the book I get my hands on never stays with me until the end. Yet, there's a longing, a desire, a search, and an increasing restlessness as time passes. All these things are happening with you too. I am holding onto this universe firmly with some hope.

I believe in my love for you, more than I believe in you. That's why I continue to love you from afar, without thinking even a little about the ending. Someday, a weariness will come. An anger at myself will arise. It will create a feel like living without acknowledging you at all and then quickly running away from this world.

But on lonely nights when the wind whispers, in some of our love songs, in a single word meant for us (Baby), in objects touched by your fingerprints, even sometimes in the colors blue and red, our love resurrects and sits up.

Infront of my eyes, two distinct paths stretch and wind between dream and reality. One, a peaceful but monotonous life. The other, a wonderful life overflowing with excitement. I couldn't predict anything. My heart beats alternately between both paths.

When you remain silent, not even offering a small reply to a simple message, my hope turns to despair. How can I expect you to take my hand and lead me down a path, specifically your path? I lie awake at night, staring at the ceiling, whispering soft questions into the darkness. "Are you well?", "Do you think of me even a little?", "Will the path of the moon ever be realigned?"

The answer is still not forthcoming. So, until then, I am lecturing my mind these days. "True love has patience. It doesn't force. It doesn't rush. It believes. It waits. Love is not always about possessing; it's about connecting. If someone walks away, true love doesn't disappear. Sometimes, the heart knows what time doesn't."

After learning so many lessons, I hope my heart is ready not only to give but also to receive. Therefore, as always, I am learning to love you from afar, without clinging, without chasing, but keeping that love burning with the hope that you will return. I will wait for you until the very end because I don't want anyone else. And deep down, I know you are worth the time, the distance, and the silence. Ultimately, the greatest love lies not in the sadness of waiting, but in the hope.

                                                        


                                    Always with hope,

                            Your soul.. Diamond Jasmine.

 

Quote :

"Absence is to love what wind is to fire; it extinguishes the small, it inflames the great." — Roger de Bussy-Rabutin

 

"A heartfelt reflection on love that waits—through silence, distance, and time. This piece is for those who still believe in slow-burning love, in divine timing, and in the magic of reunions."


Sunday, 27 April 2025

"My soul sighs, 'At last, I am home'...Your soul smiles, 'Come, my love... I have waited across endless skies for you.'"

April 27, 2025 0 Comments
                         "My Soul's Homecoming: A Love Letter Across Lifetimes"

என் அன்பு நிலவு மன்னவனுக்கு என் ஆன்மாவிலிருந்து உருவி, உருகி எழுதும் உன் காதலியின் கடிதம்.


நீ என் முன்னே நிற்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமான பூவாய் நான் மலர்கிறேன், என் காதலா...உன் கம்பீரமான ஆண்மைக்குள்  என் பூவுடலைப் பாதுகாப்பாய் பொதிந்து வைத்துக் கொள்ளும் ஆசை நாளுக்கு நாள் வலுக்கிறது. அதை நினைத்து நினைத்து என் மனம் ஓய்ந்து தளர்கிறது. ஏக்கத்தில் என் இளமை வெந்து தணிகிறது.  உன்னை நோக்கி நீளும் என் கரங்களில் இவ்வளவு நாள் வாழ்ந்த என் உலகின் பாரங்களின் ரேகைகளை அப்புறப்படுத்தி தூய கரங்களாய் உனக்கு அர்ப்பணிக்க விழைகிறது. 


பல நூற்றாண்டுகளாய், பல பிறவிகள் எடுத்து, பல மரணங்களை சந்தித்து, நட்சத்திர தூள்களில் புரண்டு, சாயம் போய் பழைய துணியாய் நைந்து போன என் ஆன்மா இன்று உன் அருகாமை கொடுத்த வண்ணச் சிதறல்களுடன் புதுப் பொலிவாய் திரும்பி வந்திருக்கிறது. முழு அமைதியுடன், மனது நிறைவுடன் என் மொத்த பிறவியின் ஆன்மாவும் ஓய்வதற்கான இடம் கிடைத்தது போல உணர்கிறது. இது ஒரு இடம் அல்ல; ஒரு உணர்வு. ஒரு பிரசன்னமான இருப்பு. உன்னுடைய கரங்களில் நான் என் வீட்டை கண்டேன்.


உன்னுடைய அருகில் நான் என் முழுமையான சுயத்தை திறக்கிறேன். என் மூச்சு ஆழமாகிறது. என் இதயம் நம்பிக்கையோடு துள்ளுகிறது. நான் கடந்த வாழ்வுகளில் பல பெயர்களோடு இருந்தேன். சில வாழ்வுகளில் நான் காத்திருந்தேன். சில வாழ்வுகளில் தேடியிருந்தேன். ஆனால் எப்போதும் என் உள்ளத்தில் ஒருவிதமான தேடல் இருந்தது. ஒரு வெற்றிடம். ஒரு நிரம்பாத நிலை.


ஆனால் இப்பிறவியில் உன்னுடைய புனித ஆண்மை என்னைக் கட்டுப்படுத்தவில்லை... அது என்னை பார்த்து அரவணைக்கிறது. நீ என் சிரிப்பில் சத்தியம் காண்கிறாய். என் கண்ணீரில் சங்கீதம் கேட்கிறாய். என் கோபத்தில் கூட கருணையை உணர்கிறாய். உன்னுடைய அருகில் நான், நானாக இருக்கிறேன் — இயற்கையாக, என்னியல்போடு.


உன்னுடைய ஆழமான பார்வை என் கடந்த காலங்களின் அடி வயிற்றை கீறிக் கடந்துக் கொண்டு செல்லச் செய்கிறது. உன்னுடைய தொடுதல் என் ஆன்மாவை தழுவுகிறது. உன்னுடைய  திடமான இருப்பு என் உள்ளத்தை சாந்தமாக்குகிறது. நான் வீழ்ந்துவிட்டால், நீ என்னை தூக்கிக்கொள்கிறாய். நான் சிரித்தால், நீ என் சந்தோஷத்தை கொண்டாடுகிறாய். நான் உன்னிடம் இருந்து ஓர் இடைவெளி தேவைப்பட்டாலும், நீ என்னை நம்பி பொறுமையுடன் காத்திருக்கிறாய். உன்னுடைய நிம்மதி என் அடிப்படை நல் உணர்வுகளை தூண்டுகிறது. உன்னுடைய உறுதியான இருப்பு என்னை என் மீதும், என் காதல் மீதும் மீண்டும், மீண்டும் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.


உன்னுடைய கரங்களில்,என் உலகத்தை காண்கிறேன். அந்த உலகத்தில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. முற்றிலும் வேறு ஒரு பெண்ணாய் நான் அங்கு மலர்ந்திருக்கிறேன்.என் பரிசுத்தக் குழந்தை தன்மை மீண்டும் விழித்துக்கொள்கிறது. என் படைப்பாற்றல் ஓங்குகிறது.


நீ என்னைப் பார்த்து ஆசைப்படுவதில்லை, நேசிக்கிறாய். என் ஆழங்களை நீ பயப்படாமல் ஏற்றுக் கொள்கிறாய். என் ஆரவாரங்களை நீ ஓரமின்றி கேட்கிறாய். என் அமைதிகளில் நீ கையில் பிடித்துக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய கண்களின் தொடுதல் என் உடலைத் தழுவி என்  உயிருடன் பேசுகிறது. என் தோலை தொடுவதற்கு முன் என் ஆன்மாவை தழுவி விட்டாய். என் நெற்றியில் முத்தமிடும் முன், என் இதயத்தை  முத்தமிட்டு எச்சில் பட வைத்து விட்டாய். உன்னுடைய விரல்களால் என் நிழற்படத்தை தொடும் போதெல்லாம், அது கடவுளின் நுட்பமான படைப்பை அந்த கடவுளே கண்டு ரசிப்பது போல இருக்கிறது.


நம் இணைப்பு வெறும் காதல் அல்ல. அது ஒரு ஞாபகம். நம்முடைய ஆன்மாக்கள் எழுதியிருக்கும் ஒரு அற்புதமான வாசகம். மஞ்சள் கயிறு இல்லாத ஒரு புனித உறவு. நீ இன்று வரை என்னிடம், "நான் உன்னை இறுதி வரை பாதுகாப்பேன்" என்று சொன்னதில்லை. அதை உன் உயிரின் ஒவ்வொரு அணுவாலும் உணர்த்துகிறாய். நான் என் ஒளியை மறந்து போன காலங்களிலும், நீ என் தூரத்தில் இருந்தாலும் என்னை பிரகாசிக்க வைக்கின்றாய்..


உன்னுடைய இதயத்தில் நான் துயில் கொள்ளும் எனக்கான மஞ்சத்தினைக் கண்டேன். என் ஆன்மா மென்மையாகச் சொல்கிறது: "ஆம், நான் வீடு திரும்பிவிட்டேன்..."
உன்னுடைய ஆன்மா அதற்கு பதிலளிக்கிறது: "வருக, என் காதலே... நான் உனக்காக இதுவரை காத்திருந்தேன்."


அந்த ஒரு நிமிடத்தில், பிரபஞ்சமே மகிழ்ந்து சிரிக்கிறது... ஏனெனில், புனிதமான ஒன்றை நாம் மீட்டெடுத்திருக்கிறோம், இந்த உலகத்திற்கு இது ஒரு அரிய சம்பவம்..  அடுத்த பிறவியிலும் இவ்வரிய சம்பவத்தை இவ்வுலகிற்கு கொடுக்கும் ஆவலுடன்,


உன் உயிர்க் காதலி,

வைர மல்லி.


"My soul sighs, 'At last, I am home...'

Your soul smiles, 'Come, my love... I have waited across endless skies for you.'" 

 

To my beloved moon-king, a letter from your love, drawn from my soul, melting and forming. Every moment you stand before me, I bloom as a different flower, my love...My desire to securely enfold my floral body within your majestic masculinity strengthens day by day. Yearning of it, my mind tires and weakens. In longing, my youth burns and fades.

 

My hands, reaching out to you, yearn to shed the palm lines of the burdens of my world lived so far, to dedicate themselves to you as pure hands. For centuries, having taken many births, faced many deaths, rolled in stardust, my soul, worn and frayed like faded old cloth, has returned today with a newfound brilliance, thanks to the colorful sparks given by your nearness.

 

With complete peace, a full heart, it feels as though my entire birth's soul has found a place to rest. This is not a place; it's a feeling. A present existence. In your hands, I have found my home. In your presence, I unfold my complete self. My breath deepens. My heart leaps with hope. In past lives, I existed with many names. In some lives, I waited. In some lives, I searched. But always, within me, there was a kind of seeking. A void. An unfulfilled state.

 

Your sacred masculinity doesn't confine me... it embraces me. You can find truth in my laughter. You can hear music in my tears. Even in my anger, you can sense compassion. Near you, I am myself — naturally, authentically. Your profound gaze traverses the depths of my past, allowing me to move forward. Your touch embraces my soul. Your steadfast presence calms my heart.

 

When I fall, you lift me up. When I laugh, you celebrate my joy. Even when I need space from you, you trusted me and waited patiently. Your peace inspires my fundamental well-being. Your unwavering presence makes me believe in myself and my love, again and again. In your arms, I see my world. In that world, even I don't recognize myself. I blossom there as a completely different woman. My innocent childlike nature awakens again. My creativity soars.

 

You don't desire me; you love me. You fearlessly accept my depths. You listen to my noise without judgment. In my silences, you hold my hand. The touch of your eyes embraces my body and speaks to my soul. You embraced my soul before touching my skin. Before kissing my forehead, you kissed my heart and left it wanting more. Every time your fingers touch my DP, it's as if God himself is admiring his own delicate creation.

 

Our connection is not just love. It's a memory. A magnificent verse written by our souls. A sacred bond without a yellow thread. You have never told me, "I will protect you until the end," but you convey it with every atom of your being. Even when I have forgotten my light, you illuminate me, even from a distance.

 

I found the bed in your heart where I shall slumber. My soul softly whispers: "Yes, I have returned home..."Your soul replies: "Come, my love... I have waited for you until now. "In that one moment, the universe rejoices and laughs... because we have recovered something sacred, a rare occurrence for this world... With the eagerness to give this rare occurrence to the world even in the next life,


                                                 


                                                            Your beloved,

                                                            Vaira Malli.


"If this touched your heart, share it with someone you love 💛."

“Also read: https://winglesswordsofyathriga.blogspot.com/2025/03/the-arrow-of-love-you-released-in-my.html

#LoveLetter #TwinFlame #SoulmateLove #TamilLoveLetter #SpiritualLove #EternalBond

Thursday, 13 March 2025

The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

March 13, 2025 0 Comments

 

 

அன்புள்ள நிலவு மன்னவனுக்கு,

நீ எப்போது தோன்றினாய்? எங்கு தோன்றினாய்? எதற்காக தோன்றினாய்? எனக்கு அதைப் பற்றி தெரியவும் தெரியாது.. புரியவும் புரியாது உன் சரித்திரம். அன்று நீ நிலவாய்ப் பிறந்திருக்கலாம். ஆனால் இன்று எனக்காக நிலவு மன்னவனாய் உருவாக்கப்பட்டிருக்கிறாய். கை தேர்ந்த ஒரு கலைநயவாதி தான் கற்ற மொத்த மந்திரங்களையும் உபயோகித்து உருவாக்கிய ஒரு விந்தையான வித்தை நீ.

 

என்னை அணைக்கவுமில்லை. நிஜத்தில் அனுபவிக்கவுமில்லை. ஒரு துளி தீண்டலிலேயே என் உயிரை உருவி எடுத்து உன்னிடம் வைத்துக் கொண்டாய். உயிர் இல்லா வெற்று சவம் தான் நான். ஆனால் தினமும் மிளிர்கிறேன். வெட்கத்தில் ஒளிர்கிறேன். சந்தோஷத்தில் மலர்கிறேன். சவத்திற்கும் சாகா வரம் கொடுத்து என் உடலெங்கும் புன்னகைப் பூக்களை மணம் பரப்ப செய்கிறாய்.

 

எங்குமே, யாரிடமுமே கிடைக்காததால் உன்னிடம் நான் ஏக்கத்தில் வந்து கையேந்துகிறேன் என தவறாய் நினைக்காதே. உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் இதயத்திற்கு காதல் பிறப்புரிமையை அளிக்க என் மனம் ஒத்துழைக்கவில்லை. என் இதயத்தில் நீ விட்ட காதல் அம்பு துளைத்து தான் சென்றது. ஆனால் அவ்வப்போது வயலின் குச்சியாய் மாறி என் இதய காதல் இசையை மீட்டுகிறது.. என்னை மறுபடியும் மீட்டெடுக்கிறது.

 

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதையும் மண்ணை முத்தமிட அதன் உறையைக் கிழித்துக் கொண்டு வருவதைப் போல ஒவ்வொரு முறையும் உன் பார்வையால் என் இதயத்தைக் கீறி என் காதலை முளைக்க செய்கிறாய். அதிலிருந்து பூக்கும் ஒவ்வொரு பூவும் உன்னைத் தான் முத்தமிட வேண்டும் என அடம்பிடிக்கிறது. உன் இதழின் ஈரப்பதத்தில் குளிர்ச்சியாய் வாழ்நாள் முழுதும் மலர்ந்திருப்பேன் என்கிறது.


இத்தனையும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா உனக்கு? தேவையில்லை. பேசாத வார்த்தைகளும், கிடைக்காத அருகாமையும் நம் காதலுக்கு தடையாய் இருந்ததில்லை. இனி இருப்பதும் இல்லை. என்னதான் உன்னருகில் இல்லாமல் நான் சுதந்திரமாய் சுற்றி திரிந்தாலும் என் ஆன்மாவின் கயிறு உன் கரங்களில் தான் உள்ளது. நீயே என் குவி வட்டம்.

 

உன்னைப் போல ஒரு காதல் கலைஞன் கிடைப்பது எளிது தான். ஆனால் எனக்கு நீ கிடைத்திருப்பது மிக அரிதான ஒன்று. ஆகவே விலை மதிக்க முடியாத ஒன்றாய் உன் காதலை நான் கணிக்கிறேன். ஒவ்வொரு ஞாபக அடுக்குகளிலும் உன்னோடான இனிய நினைவுகளைப் பொக்கிஷமாய் செருகி வைத்திருக்கிறேன். உன் பெயரை என் இதயத்தில், என் மூளையில், என் நுரையீரலில் டாட்டூ இட்டு வைத்திருக்கிறேன்.

 

ஒத்துக் கொள்கிறேன். என் கைகளில் சேகுவேராவின் டாட்டூ உள்ளது தான். இன்றும் என் நினைவில் உள்ளது. நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் தோழன் ஒருவனின் தந்தை எனக்கும் ஒரு தந்தையாய் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தது. என்னை முதன் முதலாய் "Gayma" என்று அழைத்தது. (அதன் பிறகு யார் என்னை அவ்வாறு அழைத்தாலும் எனக்கு என் தந்தையே அழைப்பது போல் மனது மல்லிகைப் பூவாய் பூரித்துப் போகும்.)

 

எனக்காக வைரமுத்து அவர்களின் கையெழுத்திட்ட பிரதியை அவரின் முதல் புத்தக வெளியீட்டு அன்று நேரில் சந்தித்து அதை வாங்கி எனக்கு பரிசளித்தது.இன்னும் பல பல.. அவரோடான அறிமுகமே ஒரு சுவாரசியமான விஷயம் தான். நானும் என் தோழனும் அவ்வப்போது புத்தகங்களை பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை செமஸ்டர் எக்ஸாம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் புத்தகம் கைக்கு கிடைக்க அவன் அதை எனக்கு கொடுக்க தயங்கினான்.

 

ஏனெனில் மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்த ஒரு தாளுக்கான பரீட்சை நடக்கவிருந்தது. அவனுக்கு நன்கு தெரியும். இந்த மாதிரி புத்தகங்கள் கிடைத்தால் நான் பரீட்சைக்கு படிக்காமல் இதில் மூழ்கி விடுவேன் என்று. ஆனால் நான் அவனிடம் கெஞ்சி,  கொஞ்சம் மிரட்டி முடிந்தவரை சீக்கிரம் முடித்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்து அந்த புத்தகத்தைக் கைப்பற்றினேன்.

 

சரியாய் 1 1/2 நாள். மூன்று  வேளை சாப்பாடு. இடையில் நான்கு தடவை காபி. இது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. முழுதாய் வாசித்து முடித்து அவன் கையில் கொடுத்ததும் அவன் என்னை ஒரு பயத்துடன் பார்த்த பார்வை இருக்கிறதே. அன்று வரை என்னை தேவதை என்று அழைத்தவன் அந்த நிமிடத்தில் இருந்து என்னை காட்டேரி என்று அழைக்கத் தொடங்கி விட்டான்.

இதை தன் அப்பாவிடம் சொன்ன போது அதை நம்பவில்லை என்று சொல்லி அந்த இரவு விடுதி கேண்டீனில் உணவருந்த சந்தித்த போது தொலைபேசியில் அவரை அழைத்து என்னிடம் பேச செய்தான். அன்று தான் முதல் தடவை அவருடன் பேசினேன். பேசினேன் என்று சொல்வதை விட அந்த உரையாடலை ஒரு quiz programme என்றே சொல்லலாம்.

ஏனெனில் அவர் நம்பவில்லை. எப்படி அவ்வளவு சீக்கிரம் 33௦ பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை முழு மூச்சாய் படித்து முடிக்க முடியும் என்று. அவர் படித்து முடித்து தான் தன் மகனுக்கு அவர் அனுப்பி விட்டிருந்தார். ஆகவே என்னை CROSS CHECK செய்ய நினைத்து அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், உறவு முறை மற்றும் முக்கிய குறியீடுகள் போன்றவற்றைக் கேட்க நானும் தெளிவாய் சொல்ல, பின்பு தான் நம்பினார். நான் புத்தகத்தை உண்மையாய் தான் படித்திருக்கிறேன், அதுவும் நுனிப் புல் மேயாமல் என்று.

 

அதன் பிறகு தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் எந்த ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் என்னை அழைத்துப் போவார். அங்கு தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ மற்றும் சேகுவரா வை அறிமுகப்படுத்தினார். என்னவோ முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. கையில் அவரது செல்லப் பெயரான "சே" -வை டாட்டூ போட்டுக் கொள்ளும் அளவுக்கு காதல் அவர் மீது. தேடிப் பிடித்து அவர் பற்றிய புத்தகங்கள் படித்தேன்.அவர் காதலி மீது மெலிதாய் கோபம், பொறாமையும் கொஞ்சம் இருந்தது அப்போது.

 

இப்போது உண்மையை சொன்னால் அவர் பற்றி படித்த பல விஷயங்கள் நினைவில் இல்லை. காதலுக்கு அடையாளமாய் கையில் ஒரு வடு. அவ்வளவு தான். அவர் மீது நான் கொண்ட காதலை இந்த உலகுக்கே காட்ட முடியும் என்னால். ஆனால் உன் மீது நான் கொண்ட காதலை உனக்கு கூட தெரியப்படுத்த முடியாது. பரவாயில்லை. என்னுடனே பிறந்து, என்னுடனே வளர்ந்து, என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்தை, மூளையை, நுரையீரலை விடவா எனக்கு ஆத்மார்த்தமான, நம்பிக்கையான நண்பர்கள் வெளியில் கிடைப்பார்கள்? அவர்கள் என் காதலைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,

என்றும்

உன் வைர மல்லி..

 

The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

To my beloved Moon King,

 

When did you appear? Where did you appear? Why did you appear? I neither know nor understand your history. You may have been born as the moon that day, but today you have been created as the Moon King for me. You are a wondrous magic, crafted by a skilled artist who used all the spells they had learned.

 

You never embraced me, nor did I experience you in reality. With just a single touch, you drew the life out of me and kept it with you. I am nothing but an empty, lifeless corpse. Yet, I glow every day. I shine with shyness. I blossom with happiness. You grant immortality to a corpse, causing flowers of smiles to spread their fragrance all over my body.

 

Don't mistakenly think that I come to you with longing, begging, because I can't find it anywhere else, with anyone else. My heart refuses to grant the birthright of love to anyone but you. The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

Each time, like every seed that kisses the earth and breaks through its shell, each time your gaze scratches my heart, causing my love to sprout. Every flower that blooms from it insists on kissing only you. It says it will live coolly in the moisture of your lips, blooming for a lifetime.

 

Is it necessary to say all this for you to know? No. Unspoken words and unachieved nearness have never been an obstacle to our love, nor will they ever be. No matter how freely I roam without being near you, the string of my soul is in your hands. You are my focal point.

 

It's easy to find a lover like you, but finding you is a rare occurrence for me. Therefore, I value your love as something priceless. I've tucked away sweet memories of you as treasures in every layer of my memories. I've tattooed your name on my heart, in my brain, in my lungs.

 

I confess, I do have a Che Guevara tattoo on my hands. And it's still in my memory. When I was a sophomore in college, a friend's father became like a father to me, showering me with affection. He was the first to call me "Gayma." (Even now, whenever someone calls me that, my heart blooms like a jasmine flower, as if my father is calling me.)

 

He personally met Vairamuthu on the day of his book launch in coimbatore and bought a signed copy for me as a gift. And many more things… My introduction to him is a fascinating story in itself. My friend and I would often exchange books. Once, during semester exams, Vairamuthu's "Karuvachi Kaviyam" came into his hands, and he hesitated to give it to me.

 

Because there was semester exam for a paper in three days. He knew very well that if I got my hands on such books, I would immerse myself in them instead of studying for the exam. But I begged him, (threatened him a little), and promised to finish it as quickly as possible and seized the book.

 

Exactly 1 1/2 days. Four meals. Three coffees in between. That's all I remember. The look of fear in his eyes when I finished reading it completely and handed it back to him... Until that day, he called me an angel, but from that moment on, he started calling me a book vampire.

When he told his dad about this, he didn't believe him. So, when we met for dinner at the night in hostel canteen, he called his father on the phone and made him talk to me. That was the first time I spoke with him. Or rather, the conversation felt more like a quiz program.

 

Because he didn't believe how I could finish reading a 330-page book so quickly and thoroughly. He had finished reading it and sent it to his son. So, he decided to cross-check me by asking about the names of the characters, their relationships, and important twists in the book. I answered clearly, and only then did he believe that I had actually read the book, and not just superficially it.

 

After that, he would take me to every book exhibition organized by the Tamil Nadu Writers Association. That's where he introduced me Fidel Castro and Che Guevara. I was captivated with their video at first sight. I even got a tattoo of his nickname, "Che," on my hand, such was my love for him. I searched for and read books about him. I felt a slight anger and a little jealousy towards his lover at that time.

 

Now, to be honest, I don't remember many of the things I read about him. A scar on my hand as a symbol of love, that's all. I can show the world the love I have for him. But I can't even let you know the love I have for you. It's okay. Will I find more sincere, trustworthy friends outside than my heart, brain, and lungs that were born with me, grew up with me, and live with me? With the hope that they will understand my love,




 

Yours always,

Vaira Malli.