The Mole I Saved Just for You – Romantic Tamil & English Love Letter | Silent Queen Series
From My Ivory Legs to Your Moonlight Eyes – A Letter of Love and Healing
என் நிலவு
மன்னவனுக்கு,
உன் மௌன
ராணி எழுதுவது. சில நாட்களாக மிக அமைதியாய் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருப்பினும்
உன்னை தொந்தரவு செய்வது என்பது எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. உன்னை தொந்தரவு செய்யாத
தினங்களில் ஒரு ஆழ்ந்த தியானத்தில் அமிழ்ந்துள்ள ஒரு ஞானியின் மன நிலை எவ்வாறிருக்குமோ
அந்த நிலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு
இது பிடித்திருக்கிறது. வாரக்கணக்கில் யாரிடமும் பேசாமல் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்
என் உலகத்தை அடைத்துக் கொண்டு, அடுத்த நொடி
முள் நகர்வதற்குள் என் கால்களை நகர நிர்ப்பந்திக்கும் வேலைப்பளு இல்லாத இந்த தினங்கள்.
ஆக்கப்பூர்வமாக எதையும் செய்தே ஆக வேண்டும் என என் மனசாட்சி கொடூர வில்லியாகி சாட்டை
எடுத்து விளாசாமல் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளேன் என மாற்றாந்தாயாய் மாறி போலி பாசம்
காட்டிக் கொண்டிருக்கும் நாட்கள் இவை.
என் அன்னையிடம்
கூட சொல்லிக் கொள்ளாமல் நான் செய்த முதல் அறுவை சிகிச்சை. உண்மையில் எனக்குப் பிடிக்காத,
நான் சில மணித்துளிகள் கூட சென்று வர பிரியப்படாத ஒரு இடம் எனில் அது மருத்துவமனை தான்.
அங்கிருக்கும் அதீத சுத்தம் கூட ஒரு அலர்ஜியாய் இருக்கும் எனக்கு. அதற்கு ஒரு காரணமும்
உண்டு. அது எங்கள் ஊர்க் கோயில் தான். ஊரின் ஆரம்பத்திலும், எல்லையிலும் முறையே இரு
பெண் தெய்வக் கோயில்கள் புடை சூழப்பட்ட கிராமம் எங்களுடையது.
அன்றைய
தினங்களில் எங்கள் ஊரையும், அதற்கு அடுத்த ஊரையும் பிரிக்கும் ஒரு சிறு வாய்க்கால்
ஒன்று உண்டு. எங்கள் ஊர் பழையூர் என்றும், அந்த ஊரை புதூர் என்றும் செல்லப் பெயர் வைத்திருந்தார்கள்.
வாய்க்கால் இருந்த காரணத்தினால் பேருந்து எங்கள் ஊருக்கு வராது. நாங்கள் பள்ளிக்கு
செல்ல புதூருக்கு தான் பொடி நடையாக செல்ல வேண்டும்.
நானும்
என் தோழிகளும் கொஞ்சம் முன்னமே கிளம்பி அந்த கோயிலின் வழியாக தோட்டங்களில் உள்நுழைந்து
பின் சிறிய மதகு போல ஒரு இடத்தில் கரும்பாசி படர்ந்த கற்சுவர் பாலத்தில் முழங்கால்
வரை தண்ணீரில் நனைத்துக் கொண்டே நடந்து செல்வோம், இடையில் நெல்லிக்காய், கோவைப்பழம்
எனக் கண்ணுக்குத் தெரிந்ததையெல்லாம் பறித்துக் கொண்டு
பள்ளி இடைவேளையில் நொறுக்கு தீனிக்காக சேகரித்து வைத்துக் கொள்வோம்.
எனக்கு
மிகப் பிடித்த ஒரு விஷயத்திற்காக தான் முக்கியமாக நானும் அவர்களுடன் இணைந்து கொள்வேன்.
உனக்கு பன்னீர் ரோஜா தெரியுமா? கோயிலுக்கு பக்கவாட்டில் ஒரு பெரிய மலர் கொத்தை எனக்காகவே
ஒருவன் நட்டு வைத்து தினமும் எனக்கு பரிசளிப்பதை போல அதைப் பார்க்கும் போது எனக்கு தோன்றும். பசும்
பச்சை இலைகளுக்கு நடுவில் குட்டி குட்டி பஞ்சு மிட்டாயை ஒட்ட வைத்தது போல அவ்வளவு குளிர்ச்சியாய்
காட்சி அளிக்கும்.
என்ன ஒரு
வியப்பு என்றால் அதன் பின்னணியில் ஒரு பூ பூக்கும் செடி கூட இருக்காது. ஒன்று மஞ்சள்
தோகை அல்லது கரும்பு தோகை, இதன் இடையிடையே ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் என அனைத்து
செடி, கொடி, மரங்களும் பச்சை நிறத்தை தவிர வேறு எதையும் காண்பிக்காது. ஆக, இந்த இடத்துக்கே
ஒரே ஒரு பட்டு ரோஜா ராணி நான் தான் என்பது போல் ஒரு பெண்மையின் நளினத்துடன் நின்றிருக்கும்
இந்த அழகிய ரோஜா செடி. பெயருக்கு ஏற்றாற் போல அதன் பன்னீர் மணம் கோயிலை சுற்றி சுற்றி
வலம் வந்து கொண்டிருக்கும். என்ன வேண்டுதலோ என்னவோ..
என் தோழிகளுக்கு
மாம்பிஞ்சு, நெல்லிக்காய், கரும்புத் துண்டு இதில் இருக்கும் ஆர்வம் பன்னீர் ரோஜாவில்
கிடையாது. எல்லார் வீட்டிலும் மல்லி, முல்லை, கனகாம்பரம் இருப்பதால் இரட்டை ஜடைக்கு
போட்டியாய் மூன்றாவது ஜடையாய் வீட்டிலிருந்தே முழக்கணக்கில் கட்டி எங்கள் தலையில் தொங்க விட்டிருப்பார்கள்.
எனக்கு
கனகாம்பரம் பிடிக்கும் என்பதால் அது மட்டும் வைத்துக் கொள்வேன். அந்த பூவின் சிறப்பம்சம்
என்ன தெரியுமா? மல்லி, முல்லை பூச்சரங்களோடு ஒப்பிடும் போது இது அடர்த்தியாய் பந்து போல இருக்கும். அவ்வளவு சீக்கிரம் வாடாது.
குப்பையில் போட்டாலும் இரு நாட்கள் ஆகும் வாட. அதை அப்படியே உருவி எடுத்து வாட்டர்
கேனுக்கு சுற்றி விட்டு விட்டு பன்னீர் ரோஜாக்களை பறித்துக் கொள்வேன். இரண்டு பக்க
ஜடையிலும் ஒவ்வோர் பூ.
அதில்லாமல்
கையில் இரண்டு பூ. அங்கிருந்து பள்ளி சென்றடையும் வரை ஒவ்வொரு இதழாக அப்பூவின் மடலை
பிய்த்து சாப்பிட்டுக் கொண்டே வருவேன். என் நுரையீரலே பன்னீர் ரோஜாவாய் உருமாறிக் கொண்டு
வருவது போல் இருக்கும். இந்த ரோஜாவை பறிப்பதற்காகவே ஊரின் ஆரம்ப எல்லையில் இருக்கும்
அக்கோயிலுக்கு தினமும் செல்வேன். பூக்கள் பறித்தால் திட்டக் கூடாது என்பதற்காக சாமி
கும்பிட்டு விட்டு, அந்த பூசாரி தாத்தா விபூதி தரும் சமயம் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்குவேன். அதிலேயே அந்த தாத்தா உச்சி குளிர்ந்து விபூதியை எடுத்து எனக்கு மூன்று
விரல் பட்டை போட்டு தலையிலும் சிறிது தூவி “நல்லா படி ஆத்தா” என்று வாழ்த்தி அனுப்புவார்.
பூவுக்காக
கோயிலுக்கு போனேன் என்றாலும் அந்த கல் கோயில் எனக்கு மிகவும் பிடிக்கும். முழுக்க முழுக்க
கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில் அது. கோயில் கருவறையில் பத்து நிமிடத்திற்கு மேல் நின்றிருந்தால்
வெளியே வரும் போது அணிந்திருக்கும் சட்டையை பிழிந்து விட்டுத் தான் வர வேண்டும். அவ்வளவு
வேர்க்கும். ஆனால் அந்த வேர்வையில் உப்பு கரிக்காது. சந்தனமும், கற்பூர வாசனையும் இணைந்து நறுமணம் வீசும்.
பிய்த்து
வீசப்பட்ட அரளிப் பூக்கள், தேங்காய் நார்,
உடைத்த தேங்காய்த் தண்ணீரின் ஈரம் என அங்கங்கே விளக்கு வெளிச்சத்தில் அரை இருட்டில்
கூட சின்ன சின்ன குப்பை துணுக்குகள் கண்ணுக்கு தென்பட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த
கோயில் அது. சமீபத்தில் 20 ஆண்டுகள் கழித்து திருவிழா என்றதும் இதை மனதில் நினைத்து
தான் சந்தோஷமாய் ஊருக்கு போனேன் .
ரோஜா செடியை
புதைத்து சமாதி கட்டிய இடத்தில் புல் முளைத்து இருந்தது. கோயிலுக்குள்ளே பளீர் மின்
வெளிச்சம். தரையில் டைல்ஸ் அதுவும் அவ்வளவு சுத்தமாய். எனக்கு ஏனோ சமீபத்தில்
சென்று வந்திருந்த மருத்துவமனையின் ஞாபகம் வந்ததை தடுக்க முடியவில்லை. கோயிலை விட்டு
வெளியே வந்த போது என் உடல் வேர்க்கவில்லை. ஆனால் என் கண்களைப்
பிழிந்திருந்தால் குறைந்த பட்சம் 200 மி. லி.
கண்ணீர் வந்திருக்கும். ஆக, அன்று எனக்குப் பிடித்த
கோயிலை விட்டும் வெளியேறியாகி விட்டது. இன்று எனக்குப் பிடிக்காத மருத்துவமனையையும் விட்டு வெளியேறியாகி விட்டது.
அறுவை சிகிச்சை செய்ததில் ஒரே ஒரு வருத்தம் எனக்கு.
அது என்னவெனில், உனக்கு மட்டும் காட்டுவதற்காக ஒரு ரகசிய மச்சம் பாதுகாத்து
வந்திருந்தேன். ரோஜா நிறம் கலந்த பளிங்கு கல்லில் பளீரென தெரிந்த அந்த மச்சம் 7,8 ஊசி
போட்டதில் முல்லை தோட்டத்தில் மறைந்த ஒற்றை மல்லிகைப்பூ போல ஒளிந்து கொண்டு விட்டது.
சரி உனக்கு தான் கழுகுப் பார்வை ஆயிற்றே.. கண்டுபிடித்துக் கொள், முடிந்தால்.
உன்னவள்,
வைர மல்லி.
Some memories are petals. Some are thorns. Both leave a fragrance behind.
Paneer
Roses, Temple Stones and a Secret I Never Got to Show You
To my moon
king,
This is your
silent queen – who is speaking not with words but through silence. Now my words
flowing in ink. Actually, I have been resting very peacefully for a few days.
However, bothering you is a good hobby for me. On the days I don't bother you,
I spend my days in a state of mind like that of a sage immersed in deep
meditation.
I like this -
Weeks without talking to anyone, confining my world within the four walls of
the house, these days without the burden of work that forces my legs to move
before the next move of wall clock’s hand. These are the days when my
conscience, which used to be a cruel villain whipping me to do something
creative, has turned into a stepmother, showing fake affection and telling me
to take a break.
The first
surgery I had without even telling my mother. In reality, if there is a place I
don't like, a place I don't like to visit even for a few hours, it is the
hospital. Even the excessive cleanliness there is like an allergy to me. There
is a reason for that. It is our village temple. Our village is surrounded by
two female deity temples at the beginning and end of the village, respectively.
In those
days, there was a small canal separating our village and the next village. Our
village was affectionately called Pazhaiyur (Old Village), and that village was
called Pudhur (New Village). Because of the canal, the bus would not come to
our village. We had to walk to Pudhur to go to school.
My friends
and I would leave a little early and enter the gardens through that temple,
then walk through a small irrigation sluice on a stone wall bridge covered with
green moss, wetting our knees in the water. In between, we would pluck whatever
we could see, like gooseberries and kovai pazham (Ivy Gourd), and collect them
for snacks during school recess.
I mainly
join them for one thing I love the most. Do you know the 'Paneer' rose? It
feels like someone planted a large bouquet of flowers just for me next to the
temple and gifts it to me every day when I see it. Amidst the lush green
leaves, it looks so cool, like small pink colored cotton candies are stuck on
it.
What a
surprise it is that there wouldn't even be a flowering plant in its background.
Only turmeric or sugarcane stalks, and tall coconut trees in between, all the
plants, vines and trees show nothing but green. So, this beautiful rose plant
stands with the grace of a woman, as if it is the only silk rose queen in this
place. As the name suggests, its 'Paneer water' fragrance wanders around the
temple. I don't know what the prayer is for.
My friends
are not as interested in 'Paneer' roses as they are in raw mangoes,
gooseberries, and sugarcane pieces. Since everyone has jasmine, 'mullai'
(jasmine variety), and 'kanakambaram' (firecracker flower) in their homes, they
would tie them in lengths and hang them on our heads as a third braid competing
with the double braids.
I like
'kanakambaram', so I only keep that. Do you know what's special about that
flower? Compared to jasmine garlands, it is dense and ball-like. It doesn't
wither so quickly. Even if you throw it in the trash, it will take two days to
wilt. I would take it off and wrap it around the water can and pluck 'Paneer'
roses. One flower on each side of the braid.
Apart from
that, I would have two flowers in my hand. From there, until I reached school,
I would pluck and eat each petal of those flowers. It would feel like my lungs
were transforming into a paneer rose. I would go to that temple every day just
to pluck these roses. To avoid getting scolded for plucking flowers, I would
worship the deity and fall at the feet of the priest grandpa when he offered
vibhuti (sacred ash) to receive his blessings. In that itself, the grandpa,
with a delighted heart, would take the vibhuti and apply three finger stripes
on my forehead and sprinkle a little on my head, blessing me with "Study
well, child."
Even though
I went to the temple for the flowers, I really liked that stone temple. It was
a temple built entirely of black stone. If you stood in the temple's sanctum
for more than ten minutes, you would have to wring out your shirt when you came
out. You would sweat so much. But that sweat wouldn't stink. The fragrance of
sandalwood and camphor would combine to emit a pleasant aroma.
Even though
small pieces of trash were visible and there in the dim light, like plucked
oleander flowers, coconut fiber, and the moisture from broken coconuts, it was
my favorite temple. Recently, after 20 years, when the festival was announced,
I happily went to the village remembering this in my mind.
Grass had
grown on the burial ground where the rose plant was buried. Inside the temple,
there was a bright electric light. The floor was tiled and so clean. For some
reason, I couldn't help but be reminded of the hospital I had recently visited.
When I came out of the temple, my body was not sweating. But if my eyes had
been squeezed, at least 200 ml of tears would have come out. So, I had left the
temple that I liked, that day. Today, I have left the hospital that I don't
like. I have only one regret about the surgery.
That is, I
had been protecting a secret mole just to show you. That mole, which once
gleamed on legs like polished ivory brushed with rose, hadn’t disappeared. But
now, with the mark of 7,8 injection nearby, it was hard to tell which was the
scar and which was the mole. It had hidden like a single mullai (jasmine)
flower hidden in a pile of jasmine flowers. Well, you have an eagle eye, right? Find it, if you
can.
Yours,
Vaira Malli.
💌 From Yathriga’s Diary
Some memories are petals. Some are thorns. Both leave a fragrance behind.