Showing posts with label Mohini and Nilavan Story. Show all posts
Showing posts with label Mohini and Nilavan Story. Show all posts

Monday, 8 September 2025

Mohini’s Eternal Love Letter to Nilavan – A Poetic Tamil-English Expression

September 08, 2025 0 Comments

 


                                                                   


                

                        🌙 "True love is timeless; it blossoms even when years fade away."


அன்புள்ள நிலவனுக்கு,

 

என்றும் உன் காதலுடன், என் உயிரைக் கட்டிப் பிணைத்தே இருக்க ஆசைப்படும் உன் மோகினி எழுதுவது. நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும்  பந்தயக் குதிரை நீ. நீ இளைப்பாறும் ஒரு கட்டுத்தறியாய் நான் இருக்க வரம் கிடைப்பது எப்போது?  என் காதலின் ஈரம் என்றும்  குறைவதில்லை. இறந்து புதைக்கப்பட்டிருந்த என் குழந்தை இதயம், நம் காதல் பிறந்த இடத்தில் தான் மீண்டும் உயிர்த்தெழுந்து தவழ்ந்து கொண்டிருக்கிறது.

 

இசையும், புத்தகமும் மட்டுமே மலரச் செய்திருந்த என்னை, உன் சிரிப்பு மலரச் செய்வதில் இரண்டையும் பின்னுக்கு தள்ளி விட்டு முதன்மையிடத்துக்கு முன்னேறி எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன. என் உயிருக்கான மொத்த ஆக்ஸிஜனும் உன் இதழ்களில் அல்லவா உற்பத்தி செய்யப்படுகிறது.. இதற்காகவே நான் வண்ணத்துப் பூச்சியாய் உருமாறி எனக்கான உயிர்க் காற்றையும், கொஞ்சம் உன் இதழ் தேனோடு சேர்த்து உறிஞ்சி எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

 

ஆம்.. தெரியும். 17 ஆண்டுகள்  பரிசீலனையில் மட்டுமே இருந்து வந்த காந்தியடிகளின் நோபல் பரிசு போல கடைசி வரை காத்திருத்தல் மட்டுமே எனக்கு பரிசாக கிடைக்கப் போகிறது. பரவாயில்லை. காத்திருப்பு ஒரு சிறகு எனில், கட்டவிழ்த்து விடப்பட்ட அன்பு மறு  சிறகு - ஒரு காதல் பறவைக்கு. இரண்டும் என்றும் இணையாக இருப்பதில்லை விமானப் பறவை போலவே. உயர்ந்தும், தாழ்ந்தும் இருப்பதனால் தான் மேலே மேலே பறக்க முடியும். வருடக் கணக்கில் காத்திருந்து கடைசி நிமிடத்தின் இறுதி ஒரு நொடியில் நாம் சேர்ந்திருந்தாலும் அதுவே எனக்குப் போதும்.

 

எனக்கு ஒரே ஒரு ஆசை தான். ஒவ்வொரு முறையும் கிளியோபேட்ராவை சந்திக்க செல்லும் போதெல்லாம் தான் முகத்தை வழ வழவென்று மழித்துக் கொண்டு போவாராம் ஜூலியஸ் சீசர். நீ உன் ரோம ராஜ்ஜியத்தை எல்லாம் எனக்காக தியாகம் செய்ய வேண்டாம். ஆனால் அந்த ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி மட்டும் மற்ற அனைத்தையும் மறந்து விட்டு என்னவனாக, எனக்காக மட்டும் பிறந்தவனாக என்னை சந்திக்க வா, அது போதும் இந்த ஆயுளுக்கு.

 

ஏனெனில் ஒரு அல்லி மொட்டு உன் கண்களில் மலரும் தருணத்தை நான் அருகினில் காண வேண்டும். குற்றாலம் போல ஓயாமல் பேசும் உன் இதழ்களை ஒரு நொடி என் நுனி விரலால் சாந்தப்படுத்தி என் இதழ்களின் ஈரத்தால் குளிர்விக்க வேண்டும். வயது சார்ந்ததல்ல காதல் என்பதை இவ்வுலகிற்கு நிரூபிக்க வேண்டும். உடலின் முதுமை மனதின் இளமையை ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு நம் காதல் உதாரணமாய் இருக்க செய்வோம். X & Y -யை வைத்து கணக்கு மட்டும் அல்ல, கவிதையும் இயற்றலாம் என்பதை எழுதிக் காட்டுவோம்.

 

அழகாய் மொட்டு அரும்பிய நம் காதல், இவ்வுலகில் வேண்டுமானால்  மலர்ந்து மணம் பரப்பாமலேயே கருகி விடலாம். ஆனால் யாரும் அண்ட முடியாத நம் தனி உலகில், எண்பது வயதிலும் காதல் தேனை குடம் குடமாய் கொட்டிக் கொண்டு பூத்துத் தள்ளும் மலர்த் தோட்டத்தை உருவாக்க செய்யலாம். அப்படியொரு உலகம் கிடைக்குமாயின், இருக்கும் இவ்வுலகத்தை கை துடைத்த காகிதமாய் சுருட்டிக் கசக்கவும் நான் தயார்.

 

சிறு வயதில் எனக்கு ஒரு உலகம் இருந்தது. நானும் என் தந்தையும் மட்டுமே அதில் நிரந்தர குடிமகன்கள். என்னுடைய முதல் ஹீரோ அவர்தான். பூரியும், உருளைக் கிழங்கு மசாலாவும் அவர் சமைத்தால் எங்கள் வீட்டு காம்பவுண்டே மசாலா மணத்தில் திளைக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் சட்டையின் டிசைன் எல்லாரையும் விட தனித்து தெரியும். அவர் சட்டையை iron செய்ய கடைக்கு எடுத்துப் போய் வருவது என்னுடைய பொறுப்பு. அங்கே iron செய்பவர் மடித்து வைத்திருக்கும் எல்லா சட்டையும் நிறத்தில், டிசைனில் ஏறக்குறைய ஒன்று போல் தான் இருக்கும்.

 

ஆனால் அப்பாவுடையது எளிதில் கண்டு பிடித்து விடலாம். இப்போதும் கூட என்னுடைய selection நன்றாய் இருப்பதாக சொல்லி என்னையும் கூட அழைக்கும் போது என் அப்பா தான் நினைவுக்கு வருவார். அவர் அடிக்கடி மும்பை தொழில் நிமித்தமாக செல்வார். அவர் கிளம்பும் போது கண்ணாடிக்கு அருகில் நின்று அவர் தலை சீவுவதை ரசிப்பது  எனக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. அவர் எப்போதும் எண்ணெய் பூசி வகிடு எடுத்து ஒரு பக்கமாக தலை சீவுவார்.

 

எண்ணெய் இல்லாமல் அவர் தலை முடியை நான் பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. அவரிடமிருந்து தொற்றிய பழக்கம் தான் எனக்கும் அது. என் சிறு வயது கனவே, படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து வாங்கும் முதல் மாத சம்பளத்தில் லிட்டர் கணக்கில் தேங்காய் எண்ணெய் வாங்கி ஒரு பெரிய பேசினில் நிரப்பி என் தலைமுடியை அதில் ஒரு இருபது நிமிடமாவது ஊற வைக்க வேண்டும் என்பதுதான்.

 

வானம் பார்த்து படுத்துக் கிடக்கும் என் கண்களில் அப்போது கண்டிப்பாய் சொர்க்கம் தெரியும் என்று நம்பினேன். இப்போது கூட சொர்க்கம் தெரியும் தான்.. என் தந்தையின் வயிற்று மேட்டில் தினம் தினம் நான் படுத்துறங்கியத்தைப் போல உன் வயிற்றுப் பூக்குவியல் மீது நான் படுத்துறங்கினால்.அந்த இனிய சொர்க்கத்திற்கு ஏங்கிக் காத்திருக்கும்,  

 

உன்னுயிர்,

வைரமல்லி..   

 

Dearest Nilavan,


This is your Mohini, writing to you, forever wishing to be entwined with your love, with my life bound to yours. You are a racehorse, constantly running. When will I be blessed to be the tethering post where you can rest? The moisture of my love never diminishes. My child-like heart, buried in death, is resurrected and crawling again in the place where our love was born.

 

It has been many days since your laughter bloomed me, pushing music and books, which were the only things that made me blossom, to the back and taking the lead. Isn't all the oxygen for my life produced in your lips? It is for this that I wish to transform into a butterfly and absorb the air of life meant for me, along with a little of the honey from your lips.

 

Yes, I know. Like Mahatma Gandhi's Nobel Prize that remained under consideration for 17 years, waiting will be my only reward until the very end. That's alright. If waiting is one wing, then unleashed love is the other wing - for a love bird. The two are never equal, just like an airplane. Only because they are high and low can it fly higher and higher. Even if we are together in the final second of the final minute after waiting for years, that is enough for me.

 

I have only one wish. It is said that Julius Caesar would shave his face smooth every time he went to meet Cleopatra. You don't have to sacrifice your entire Roma (Hair) empire for me. But just for that one minute or one second, forgetting everything else, come and meet me as mine, as someone born only for me, that is enough for this lifetime.

 

Because I want to witness the moment a bud blooms in your eyes. I want to calm your lips, which speak incessantly like Kutralam falls, for a moment with the tip of my finger and cool them with the moisture of my lips. We must prove to the world that love is not age-related. Let our love be an example that the old age of the body cannot do anything to the youth of the mind. Let's write and show that not only calculations but also poems can be composed with X & Y.

 

Our love, which has beautifully budded, may wither in this world without blossoming and spreading its fragrance. But in our private world, which no one can touch, we can create a flower garden that blooms and pours love like honey in pots, even at the age of eighty. If I get such a world, I am ready to crumple and throw away this existing world like a used tissue paper.

 

When I was young, I had a world. Only my father and I were permanent citizens in it. He was my first hero. If he cooked poori and potato masala, our house compound would be filled with the aroma of masala. The design of the shirt he chose would stand out from everyone else's. It was my responsibility to take his shirt to the shop for ironing. All the shirts that the ironer kept folded were almost alike in color and design.

 

But my father's could be easily identified. Even now, when my relatives compliment my selection and invite me along for shopping, I am reminded of my father. He used to go to Mumbai frequently for business. I enjoyed watching him comb his hair in front of the mirror when he was about to leave. He would always apply oil and comb his hair to one side, parting it in the side.

 

I don't remember ever seeing his hair without oil. It's a habit I picked up from him. My childhood dream was that after finishing my studies and getting a good job, I would buy coconut oil by few liters with my first month's salary, fill a large basin, and soak my hair in it for at least twenty minutes. I believed that my eyes, lying and looking at the sky, would definitely see paradise then. Even now, I can see paradise... if I lie down on your mound of flowers, just like I used to sleep on my father's belly every day. Waiting and longing for that sweet paradise,


Yours truly,

Vairamalli..


Read my previous love letter: Uyirin Uyirey – A Love Letter to My Moon Man


Note : This post is part of my love-letter blog series ‘Wingless Words of Yathriga’. Each letter is written from a girl’s heart to her Moon Man, blending Tamil poetry and English translation. If you love romantic poems, soulful letters, and nostalgic storytelling, keep following this space for more.