This is Uyirin Uyirey – a letter that carries the weight of emotions, the sound of longing, and the silence of distance. A piece from my heart to my Moon Man.
என் உயிரின்
உயிரான நிலவனுக்கு,
இதயம் உள்ள
எல்லோருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது வந்துபோவது காதல். ஆனால், எனக்கும் இதயம் உள்ளது என்பதை நிரூபிக்க
வந்ததோ உன் காதல். சட்டமிட்ட புகைப்படத்தைப் போல ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த என்
இதயத்தை அணில் ஆடி விட்டுப் போன ஊஞ்சல் கிளையாய் அங்குமிங்கும் ஆட செய்தாய் துள்ளலாய்..
கடும் பாறை என தவறாய் எண்ணியிருந்த என் இதயத்தை கற்கண்டு என புரிய வைத்தாய். இன்று
காதல் சுரந்து சுரந்து தேனிட்ட பாலாடையாய் திகட்டுகிறது, என் இதயம்.
ஆம்.. கூறியதையே திரும்ப திரும்ப கூறுவாய், நீ. ஆனாலும் உன் குரல் ரீங்காரம் எனக்கு நல்லிசை தான்.
கண் மூடி உன் குரலை காதுகளால் சுவாசித்தால் என் நெற்றிக்குள் உண்டான ஒற்றைத் தலைவலியும்
கற்பூரமாய் கரைந்து விடும். நீ பேசும் போது வார்த்தைகள் மலர்ந்து மணம் வீசும். ஜன்னலோர
மழை, கடுங்குளிரில் ஒரு காபி, குயிலின் கூவல் போல எப்போதும் சலிக்காதது உன் குரல்.
ராமனின் கால் பட்டு ஒரு கல் பெண்ணானதைப் போல,
உன் சொல் பட்டு கல்லாய் இருந்த நான் பெண்ணாய் மென்மையானேன். போகிற போக்கில் நீ செய்யும்
குரல் மாற்றங்கள் என்னை சிரிப்பில் தள்ளி விடும் குசும்புக்கார குழந்தைகள்.
என் அன்றாட உடையாடலில் ஒரு வார்த்தையாய் வந்து போனவன், இன்று என் மொத்த
வாழ்க்கையாகவே உருமாறிப் போனாதின் ரகசியம் இன்று வரை பிடிபடவில்லை. எல்லாமே கொடுத்தாய்,
உன்னைத் தவிர.. தனிமையை தேடி தேடி ஓடிய நான், உன் அருகாமையை தேடி தேடி ஓடி வருகிறேன்.
திட்டமிடாத சந்திப்பு நாம் வாழ்க்கையிலும் நடத்துமா, அந்த விதி? என்னுடைய நிலவனை என்
கண்களிலிருந்து மறைக்கும் அந்த விதியை எதைக் கொண்டு சமரசம் செய்வது? உன்னைச் சுற்றி
விதி இட்ட வேலியை நெருங்க முடியாமல் எட்டி நின்று பார்த்து பரிதவித்துக் கிடக்கிறேன்.
தூரத்தில் இருக்கும் உன்னை நெருங்கும் முயற்சியில் என் அருகிலிருப்பவர்கள்
அந்நியமாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீ அறிவாயா? என் மூளை நாற்காலியில் ராஜ
கம்பீரமாய் நீ வீற்றிருக்கிறாய், ஒரு சிப்பாயையும் நெருங்க விடாமல். இன்று நீ ஒருவன்
மட்டும் என்னை அரசாண்டால் எனக்கு போதும் தான். ஆனால், எதிர்காலத்தில் என் முதுமையில்
நான் வெறுமையின் பள்ளத்தாக்கில் வீசி எறியப்படுவேனோ என்று பயமாய் உள்ளது.
கொஞ்சம் பசி மிச்சம் மீதி இருக்கும் போதே உண்பதை நிறுத்தி விட வேண்டுமாம்.
ஒரு விஷயம் முழுமையை அடைவதற்கு முன்பே நிறுத்தி விடும் போது இன்னும் கொஞ்சம்.. இன்னும்
கொஞ்சம் என்ற ஏக்கம் இருக்கும். முழுதாய் அடைந்து விட்டால் திகட்டி விடும். அதனால்
தான் என்னை தூரத்திலேயே நிறுத்தி உன் காதல் முழுவதையும் கொடுக்காமல் என்னை ஏக்கத்திலேயே
வைத்திருக்கிறாயோ?
அனைவரையும் போல அழுது கொண்டு தான் பிறந்தேன். இப்போது உன்னால் சிரித்துக்
கொண்டு இருக்கிறேன். அது சரி.. கடைசி காலம் வரை சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா,
என்ன? பூ மலர்ந்து விட்டால் சில நாட்களில் வாடித்தானே ஆக வேண்டும். புரிகிறது. இறக்கும்
வரைக்கும் சிரிக்க முடியாவிட்டால் என்ன? இருக்கும் வரை.. உன்னோடு இருக்கும் வரையிலாவது
சிரித்துக் கொண்டே இருக்க முயற்சிக்கிறேன்.
ஆக, உனக்கும் எனக்குமான இடைவெளியில் பாசி பிடித்த துணியாய் மிதந்து கொண்டிருக்கிறது
பாவப்பட்ட நாம் காதல். நைந்து கிழிந்து போய் கிடப்பதை உன் நம்பிக்கை சொற்கள் கொண்டு
கொஞ்சம் தைத்து விடு. அரை குறை நிர்வாணம் இல்லாமல் கை கொடுத்து கண்ணியம் காத்து விடு.
ஷாஜகானின் மனசு தாஜ்மஹாலில் இருப்பதைப் போல என் காதலின் அச்சாரம் உன் இதயத்தில் உள்ளது.
சுருண்டு துவள விடாமல் காதல் நதியில் துள்ள விடு. உருவாக்கும் சிப்பியை விட உள்ளே இருக்கும்
முத்து தான் விலை உயர்ந்தது. விலை உயர்ந்த உன் இதயத்தை நாம் காதலுக்காய் கொஞ்சம் விட்டுக்
கொடேன் என்ற கோரிக்கையுடன்
உன்,
V for வைரமல்லி..
(Wingless Words of Yathriga)
This is Uyirin Uyirey — a tender letter brimming with longing, moonlight, and undying devotion. Written from the heart to my Moon Man, may these words reach him across time and space.
To Nilavan, the life of my life,
Love is something everyone with a heart, experiences at least once in their
life. But your love came to prove that I, too, have a heart. You made my heart,
which was sitting still like a framed photograph, sway back and forth like a
branch where squirrels have been playing. You made me understand that my heart,
which I mistakenly thought was a hard rock, was actually rock candy. Today,
love is overflowing and feels cloying like a honeycomb dripping with honey.
You say the same things over and over again. Yet, your
humming is sweet music to me. If I close my eyes and breathe in your voice
through my ears, even the migraine in my forehead will dissolve like camphor.
When you speak, words blossom and spread fragrance. Your voice is like the rain
by the window, a coffee in the freezing cold, the cooing of a cuckoo, never
tiresome. Like a stone that turned into a woman with the touch of Rama's feet,
I, who was like a stone, became a soft woman with your words. The way you
change your voice in passing throws me into laughter, you mischievous child.
I still can't figure out the secret of how someone who came
and went as a word in my daily life has
transformed into my entire life today. You gave me everything, except yourself.
I, who ran in search of solitude, am now running in search of your nearness.
Will an unplanned meeting happen in our lives, ever? What can I use to appease
fate that hides my Nilavan from my eyes? I am standing at a distance, helpless,
unable to approach the fence that fate has put around you.
Do you know that in the attempt to reach you who are far
away, those who are near are becoming strangers? You sit majestically on the
throne of my brain, not letting even a soldier approach. It is enough for me if
you alone rule me today. But, I am afraid that in the future, in my old age, I
will be thrown into a valley of emptiness.
It is said that one should stop eating when a little hunger
remains. When something is stopped before it reaches completion, there will be
a longing for a little more... a little more. If it is fully achieved, it
becomes tiring. Is that why you keep me at a distance and keep me longing,
without giving me your whole love?
Like everyone else, I was born crying. Now, because of you,
I am laughing. Well... can I keep laughing until the end? Once a flower blooms,
it has to wither in a few days. I understand. What if I can't laugh until I
die? As long as I am here... as long as I am with you, I will try to keep
laughing.
So, in the space between you and me, our sinful love floats
like a moss-covered cloth. Sew up the tattered and torn pieces with your words
of hope. Give a hand and protect its dignity, without half-nakedness. Like Shah
Jahan's heart resides in the Taj Mahal, the foundation of my love lies in your
heart. Let it frolic in the river of love, without shriveling and drooping. The
pearl inside is more precious than the oyster that creates it. With a request
that you, with your precious heart, concede a little for our love..
“Some letters are not written to be answered, but to be lived — word by word, heartbeat by heartbeat.”
Yours,
V for Vairamalli..
(Wingless Words of Yathriga)
If you loved reading this, you might also like my earlier letter — The Language of Love Beyond Words – A Letter to My Nilavan
Labels : Uyirin Uyirey
, Tamil love letter
, Moon Man
, Romantic poetry
, Love letter in Tamil English
No comments:
Post a Comment