Tuesday 24 October 2023

Blooming Every Day

 

என் நிலவு மனிதா..

எனக்கு தினம் தினம் உன்னோடு பேச வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் என் பாஷை உனக்கு புரிவதில்லை. உன் பாஷை எனக்கு கேட்பதும் இல்லை.

எப்போது உன் வசம் நான் அகப்பட்டு கொண்டேன் என நாள், கிழமை நான் பார்க்கவில்லை. என்ன யோசித்தும் பிடிபடவும் இல்லை. பூவின் இதழ் சாறு என்ன சொல்லிக் கொண்டேவா தண்ணீரில் விரவுகிறது?

என்ன விதி இது? உன் இஷ்டப்படி நீ தோன்றும் போதுதான் உன்னை பார்த்து ரசிக்க முடியும்.. நான் சந்தோஷமாக இருக்கும் நாட்களில் உன்னைத் தேடி துள்ளிக் குதித்து அலைந்து திரிவேன்.. நீ தவிக்க வைத்து தள்ளாட்டம் காண வைப்பாய். சோகமாய் இருக்கும் நாட்களில் என் கன்னத்தை ஏந்திக் கொள்ள உன் உள்ளங்கை ஒளி வட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். நீ கும்மிருட்டு மெத்தையிலே உன் முகம் காட்டாது குப்புறப் படுத்துக் கொள்வாய்.

போகட்டும் விடு. உன்னோடு கோபித்துக் கொள்வது வீண் என்று எனக்கு தெரியும். ஓராயிரம் முறை உன்னோடு சண்டையிட்டாலும் நீ (வானில் இருந்து) இறங்கி வரப் போவதில்லை. எவ்வளவு முறை தான் உன்னிடம் தோற்பது? போரிலே ஆயிரம் யானைகளை கொன்ற வீரர்கள் மேல் பாடப்படும் பரணி போல என்னைப் போற்றியும் பாட வேண்டும், ஆயிரம் முறை என் அகங்காரத்தை கொன்று விட்டு துளி வெட்கம் இன்றி என் தோல்வியை ஒத்துக் கொண்டு உன்னோடு மீண்டும் பேசியதற்காக..

ஒவ்வொரு முறை நீ மெல்ல எட்டிப் பார்க்கும் போதெல்லாம் என்னை தான் நீ பார்க்கிறாய் என நான் இறுமாப்புக் கொள்கிறேன். என் அறிவுக்குத் தெரிகிறது. உன்னிடத்தில் இருந்து என்னை பார்க்கும் போது நான் ஒரு சிறு புள்ளியின் லட்சத்தில் ஒரு பங்கு தான் என்று. என்ன செய்ய? என் காதலை நான் நம்பவில்லையென்றால் பின் யார் தான் நம்புவது?

விடு.. கற்பனையிலே வாழ்ந்துவிட்டு போகிறேன். உன்னோடு குடித்தனம் பண்ணவா அனுமதி கேட்கிறேன்? வீட்டு வாடகை தொல்லை இல்லை. மின் கட்டணம் பற்றிய கவலை இல்லை. பிரசவ செலவு கூட இல்லாமல் உனக்கு பிள்ளை பெற்று தர நான் இருக்கிறேன்.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? என் வீடு ஆற்றங்கரையோரமாய் அமைந்த ஒரு அழகிய கிராமத்து வீடு. என் அறை முழுவதும் தண்ணீரின் சல சலப்பும், கூழாங்கற்களின் தாள லயமும், இரவுப் பூச்சிகளின் சிணுங்கலும் நிறைந்து கேட்கும்.

அவ்வப்போது நானும், என் சகோதரியும் பின்னிரவுகளில்  ஆள் நடமாட்டமின்றி காற்றும், இரவும் காதைக் கடித்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரம்தனில் மெல்ல மெல்ல படியிறங்கி வருவோம், இருட்டில் பாதரசம் என மின்னும் தண்ணீரில் எங்கள் பாதங்களை நனைக்க.

தண்ணீருக்கும், நிலப்பரப்பிற்கும் ஒரு மிக சிறந்த பண்பு உண்டு, அறிவாய் நீ. நிலம் பகலில் மிக வேகமாய் சூடேறி, இரவில் மிக வேகமாய் வெப்பத்தை இழந்து குளிர்ந்து விடும். ஆனால் நீரோ பகலில் மிக மிக மெதுவாய் வெப்பத்தை உறிஞ்சி இரவு நேரம் மிக மிக மெதுவாய் வெப்பத்தை வெளியிடும். எனவே பின்னிரவுகளில் தண்ணீருக்குள் மூழ்குவது அடைகாக்கும் கோழியின் அடி மடிக்குள் சுருண்டு கிடப்பதற்கு ஒப்பாகும்.

பகலில் ஒரு ஊருக்கே படியளக்கும்  எங்கள் ஊர் ஆறு, இரவு மட்டும் எங்கள் இருவரையும் செல்லப் பிள்ளைகளாக தத்தெடுத்துக் கொள்ளும். அவளின் நீர்ச்சேலையில் நாங்கள் உருண்டு புரள்வோம். எல்லா சுட்டித்தனமும் முடிந்த பிறகு ஒரு பரவச அமைதி அடைந்த தருணங்களில் நீர்த்தாயின் மடியில் தலை வைத்தவாறு மல்லாந்து படுத்து கொண்டே உன்னை பார்த்திருக்கிறேன்.

யாரும் பார்க்கவில்லையென்ற தைரியத்தில் ஆடி ஓடி விளையாடிய நான் இவ்வளவு நேரம் ஒரு கள்வனின் பார்வையில் கட்டுண்டு கிடந்திருந்ததை உணர்ந்த போதுதான் ஒரு பூவாய் மலர்ந்தேன். அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு முறை உன் பார்வை என் மீது ஆழப் படும்போதெல்லாம் பூத்து பூத்து உதிர்கிறேன்.

முற்றிலும் உதிர்ந்து சருகானாலும் சாம்பலாய் மாறி மற்றுமொரு செடிதனில் மலர்ந்து மீண்டும் உன்னை காதலிப்பேன் என்ற நம்பிக்கையுடன்

                - உன் வைர மல்லி ஆகிய நான்..

சந்திக்கிறேன் ரகசியமாய், மற்றுமொரு நாளில்..


Hey My moon man..

I just want to talk to you every day. But you don't understand my language. I don't even listen to your language.

I don't see the day and the week when I was captured by you. What to think and not get caught. What does flower petal juice say when it spills into water?

What rule is this? I can enjoy seeing you only when you appear at your will.. On the days when I am happy I will jump and wander looking for you.. You will make me suffer and totter. I look forward to the light circle of your palm to hold my cheek on sad days. You will lie down on the soft night mattress without showing your face.

Let it go. I know it is futile to be angry with you. Even if we fight you a thousand times, you will not come down (from the sky). How many times have I lost? You should sing my praises like the barani sung over soldiers who killed a thousand elephants in war, for killing my ego a thousand times and accepting my defeat without any shame and talking to you again..

Every time you peek, I smile like you're looking at me. To my knowledge, I know that I am one millionth of a tiny dot when you see me. what to do? If I don't believe in my love then who will?

Let go.. I'm going to live in fantasy. May I ask your permission to live a family life with you? No house rent problem. No worries about electricity bills. I am here to give birth to you without even the cost of delivery.

Do you remember.. My house is a beautiful village house situated by the river bank. My room is filled with the lapping of water, the rhythm of pebbles and the chirping of nocturnal insects.

Every now and then, my sister and I would come down slowly in the late nights, with the wind biting our ears and the night talking, to dip our feet in the water that glittered like mercury in the dark.

Water and land have a very good quality, you know. The land heats up very quickly during the day and cools down very quickly at night. But water absorbs heat very slowly during the day and releases it very slowly at night. So sinking into the water late at night is like curling up in the lap of a brooding hen.

The river of our town, which shines on a town during the day, adopts both of us as pets only at night. We roll around in her water saree. In moments of ecstatic calm after all the pointing is over, As I rested my head on the lap of the river, I saw you

It was only when I realized that I had been tied up in the eyes of a man for so long that I had been running and playing with the courage that no one was watching, I blossomed. From then till now, every time your gaze falls on me, I bloom and fall as dry flower.

Even if I falls off completely and turns into ashes, I became fertilizer for another one plant to bloom by see you.

 With the hope that I will fall in love with you again

- your diamond jasmine..(Vaira Malli)



 will meet you secretly, another day..


Template by:

Free Blog Templates