Dear My Moon Man – Childhood Memory & My First Stage Performance Story
அன்புள்ள
என் நிலவு மன்னவனுக்கு
நீ என்ன
கார்கால நிலாவா? அவ்வப்போது கொஞ்சம் மட்டுமே உன் காதலை வெளிப்படுத்துகிறாய்.. கொஞ்சம்
முழு நிலாவாகி உன் காதல் வெளிச்சத்தில் என்னை மூழ்க வையேன். காதலில் நாகரீகம் பார்த்தல்
நன்றன்று.
ஒரு விஷயத்தை
அறியும் போதுதான் நம்முடைய அறியாமை நமக்கு தெரிகிறது. அது போலத் தான் காதலும். உன்னைக்
காதலிக்க ஆரம்பித்த பிறகு தான் காதல் பற்றி எனக்கு இவ்வளவு வருடங்கள் ஒன்றுமே தெரியவில்லை
எனத் தெரிந்து கொண்டேன். காதல் பற்றி மட்டுமல்ல. பக்தி, அன்பு, நட்பு, பெண்மை, பரவசம்
என அனைத்தும் உன்னால் உணர்ந்தேன்.
உனக்காக
கண்ணீர் மல்கி கசிந்து உருகும் காதலில் பக்தியைக் கண்டேன். உன்னை எனது குழந்தை போல்
பாவித்து கொஞ்சும் போது அன்பை உணர்ந்தேன். உன்னோடு சரிசமமாய் வாயாடிய போது நட்பை உணர்ந்தேன்.
என்னை வெட்கப்படுத்தும் உன் பேச்சுக்களால் என் பெண்மையை உணர்ந்தேன். தெய்வீகமான உறவு
நம்முடையது என நீ கூறிய அந்த தருணம் உடல் கடந்த உணர்வு நிலையால் நான் பரவசமானேன்.
ஒரு
பெண் ஒருவனை முழுமையாக நேசிக்கிறாள் என்றால்,
அவள் அவனிடமே இருக்கவேண்டும்
என்பதல்ல அவளுடைய ஆசை,
அவள் அவனால் பாதுகாக்கப்படவேண்டும்,
ரசிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவளுடைய
ஏக்கம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான்.
விரிந்த
இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்களை நான் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் என்னையும்
ரசிக்கும் ஒரு ஜோடி கண்களை உன்னிடம் தான் முதலில் பார்த்தேன். பால்ய வயதில் என்
அன்னை, தந்தை, பள்ளி வயதில் ஆசிரியர்கள் என்னை கொஞ்சி, ரசித்து இருக்கலாம். ஆனால்
இந்த வயதில் என்னைப் பார்த்து ரசித்த உன் கண்களில் உற்சாகம், நெடு நிமிடங்களாக உறைந்து
போயிருந்தது.
உண்மையில்
இதை நான் என் அன்னையிடம் என் சிறு வயதில் எதிர்பார்த்தேன். படிப்பு விஷயத்தில் என்
அன்னை மிகவும் கண்டிப்பானவர். ஆனால் எனக்கு படிப்போடு சேர்ந்து நடனம் பிடித்திருந்தது.
சிறு வயதில் எங்கள் காம்பவுண்ட்-டில் ஒரே
ஒரு வீட்டில் தான் டிவி இருந்தது. அவர்கள் எப்போது அதை ஆன் செய்தாலும் விளையாட்டையெல்லாம் பாதியிலே விட்டு விட்டு அங்கே குழுமி விடுவோம்.
அது என்ன
நிகழ்ச்சி, என்ன மொழி எதுவும் புரியாது. ஆனாலும் நாங்கள் ஒரு சின்ன சத்தம் கூட எழுப்பாமல்
வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்போம். எனக்கு இப்போது கூட ஞாபகம் இருக்கிறது. நடிகை
சிம்ரன் அவர்களின் ஹிந்தி படமா, தெலுங்கு படமா என எனக்கு ஞாபகம் இல்லை. ஒரே ஒரு பாடலில்
அவர்களின் நடனத்தைப் பார்த்து பிரமித்துப் போய் அமர்ந்திருந்தேன்.
வீட்டுக்கு
வந்த பிறகும் அவருடைய உடையலங்காரம், துள்ளல் நடனம், அளவான நடிப்பு என அதே தான் மனதில் ஓடிக்
கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு அண்ணாவிடம் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். பாட்டின்
மொழி தெரியாததால் வாயில் வந்ததை பாடி ஆடிக் காட்டினேன். அன்றைய கால கட்டங்களில்
எல்லார் ஊரிலும் நற்பணி மன்றங்கள் இருந்தன. தந்தையுடன் நான் வசித்து வந்த அந்த ஊரிலும்
விவேகானந்தர் நற்பணி மன்றம் இருந்தது. அவர்கள் ஊர் ஆண்டு விழாவிற்காக நிறைய விளையாட்டுப்
போட்டிகள் பகலிலும், ஆடல் போட்டியை இரவிலும் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதற்காக ஒவ்வொரு வீடாக வந்து பெயர் எழுதும் போது என்னுடைய பெயரை என் பக்கத்து
வீட்டில் வசிக்கும் அந்த அண்ணன் கொடுத்து விட்டார். படிப்பைத் தவிர எந்த விளையாட்டிலும்
நான் கலந்து கொள்ளாததால் என் பெயரை எழுதும் போதே மேலும், கீழுமாய் சந்தேகமாக பார்த்து
விட்டே எழுதினர். எனக்கு தயக்கம், வெட்கம், சந்தோஷம் அதை விட அதிகமாய் பயம். என்ன பாடலுக்கு
எப்படி ஆடுவது?
அதற்கும் அவரே தான் உதவினார். அவர் வீட்டில் மட்டும் தான் நாடா கேசட்டுகள்
போட்டு கேட்க கூடிய டேப் ரிக்கார்டர் இருந்தது. அதில் நான் ஒரு தடவை மட்டுமே பார்த்திருந்த
“சிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே’ பாடல்
எனக்கு ஏனோ பிடித்திருந்தது. அவரும் அதற்கு ஓகே சொல்லி ஆடிப் பழக சொன்னார். நான் சும்மா
பாடலை கேட்டுக் கொண்டு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன். முக்கியமாய் என் அம்மாவிடம்
இதைப் பற்றி சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன்.
ஏனெனில் என் அம்மாவிற்கு படிப்பைத் தவிர இந்த மாதிரியான விஷயங்கள் பிடிக்குமா
என்பதில் சந்தேகம் இருந்தது. தவிர அவ்வாறு பிடித்திருந்தால் இது ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டுமே
என்றும் நினைத்திருந்தேன். ஆக, பிராக்டிஸ் செய்தால் அம்மாவுக்கு தெரிந்து விடும் என்று
கடைசி வரை பிராக்டிஸ் செய்யவே இல்லை. நிகழ்ச்சிக்கு அம்மா கிளம்பும் வரை காத்திருந்து
பின் உடை மாற்றி அந்த அண்ணாவிடம் ஒரு தொப்பியை இரவல் வாங்கி கொண்டு,
முகத்தை ஓரளவு மறைத்துக் கொண்டு, மேடையின் பின்புறம் நின்று கொண்டேன்.
நடன நிகழ்ச்சி ஆரம்பித்த பின் மேடையின் பின்புறம் ஒவ்வொருவர் பெயரையும்
உறுதி செய்ய அழைத்த போது அவர்களுக்கு என்னை முதலில் அடையாளம் தெரியவில்லை. பாவாடை,
ரெட்டை ஜடை என என் அடையாளம் இல்லாததால் என் பெயரை நான் சொல்லும் போது முதலில் அவர்கள்
நம்பவே இல்லை. தொப்பியை கழற்றி பின் தான் உறுதி செய்தார்கள். “அம்மாவுக்கு சர்ப்ரைஸ்,
அண்ணா.. பிளீஸ் சொல்லி விடாதீர்கள்” எனக் கோரிக்கை விடுக்க, அவர்களும் சிரித்தவாறே
எனது பெயரை “கார்த்தி” (எனது செல்லப் பெயர்) என்று எழுதிக் கொண்டு மேடைக்கு அழைத்தார்கள்.
முதலில் சில நிமிடங்கள் தொப்பியால் முகத்தை ஓரளவுக்கு மறைத்தே ஆடியதால்
நான் யார் என்பதில் எங்கள் ஊர்க்காரர்களுக்கே முதலில் குழப்பமாய் இருந்தது. பாட்டின்
ஒரு பீட் -டில் நான் தொப்பியைக் கழற்றவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணா என் பெயரை சொல்லி மைக்-கில்
கத்தவும் சரியாய் இருந்தது. அப்போது தான் அது
நான் எனப் புரிந்து அனைவரும் கை தட்டி, என் ஒவ்வொரு நடன அசைவுக்கும் விசில் அடித்து
ஆரவாரம் செய்தனர்.
ஆனால் நான் யாருக்காக இவ்வளவு மெனக்கெட்டேனோ அவர், நான்தான் என்று தெரிந்த
பிறகு தலை குனிந்தவர் தான், பாடல் முடியும் தருவாயில் தான் தலை நிமிர்ந்து பார்த்தார்.
ஏனெனில் என் அம்மாவிற்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லை. நான் ஆடி அவர்கள் பார்த்ததே இல்லை.
ஆக, அவர்கள் மானத்தை நான் வாங்கி விடுவேன் என நினைத்து அவர்கள் தலை குனிந்து கொண்டதாக
பின்னாளில் சொன்னார்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த என் அம்மாவின் நட்பு வட்டம் என்
அம்மாவை அவ்வளவு கெஞ்சியும் அவர்கள் கடைசி நேரத்தில் தான் என் நடனத்தை பார்த்தார்களாம்.
ஆக, நடனத்தில் முதல் பரிசு என்னவோ எனக்கு தான். ஆனால் சர்ப்ரைஸ் முயற்சியில்
படு தோல்வி எனக்கு. அதற்கு பிறகு நிறைய இடங்களில் நான் ஆடினாலும் மேடையின் வெளிச்சத்தில்
கீழே இருப்பவர்களை பார்க்க முடியாது. ஆனால் முதன் முதலில் என் நடனத்தைப் பார்த்து,
நீ ரசித்து சிரித்த அந்த தருணத்தை வழங்கிய தொழில்நுட்பத்திற்கு நன்றிகள் பல.
இன்றும் அதை நூறாயிரம் தடவை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
கண்களால் சிரிக்கும் உன் புன்னகையில் எனது இதயம்
பாலாடையாய் குளிர்ந்து இனிக்கும். மண்ணுக்குள் போனாலும் எண்ணிரண்டு கண்ணுக்குள், என்னை
ரசிக்கும் உன் புன்னகையை என்றென்றும் அடைகாப்பேன்.
என் கடிதத்தை
நீ படித்து கொண்டிருக்கும் நேரம் எத்தனையோ காதல் குழந்தைகள் புதிதாய் பிறந்திருக்கலாம்.
இன்னும் சில காதலர்களால் கை விடப்பட்டு அனாதையாய் தெருவில் விடப்பட்டிருக்கலாம். இன்னும்
பல கருவிலேயே கலைக்கப்பட்டு இந்த பூமிக்கே வராமலும் போயிருக்கலாம். இன்னும் பலர் கூழ்முட்டை,
குஞ்சு பொரிக்கும் என்ற போலித்தனமான நம்பிக்கையோடு வராத காதலுக்காய் வருடக் கணக்கில்
காத்துக் கொண்டிருக்கலாம்.. ஆனால், நம்முடையது விதிவிலக்கு. இன்னும் 60 வருடங்கள் ஆயினும்,
நம் காதல் இருபதின் இளமையோடு வாழ்ந்து நம்மையும் வாழ்வதற்கான ஆசையைத் தூண்டி விடும்
என்ற நம்பிக்கையுடன்,
உன்னுயிர்க்
காதலி,
வைர மல்லி.
Yathriga : “கண்ணால் ரசித்த உன் புன்னகை – என் வாழ்க்கையின் மேடை.”
My dearest
moon king,
Are you a
monsoon moon to me? You only express your love a little bit from time to time.
Why don't you become a full moon and drown me in the light of your love? It is
not good to be civilized in love.
It is only
when we know something that we realize our ignorance. It is the same with love.
Only after I started loving you did I realize that I knew nothing about love
for so many years. Not just about love, but also devotion, affection,
friendship, femininity, bliss – I experienced everything through you.
I saw
devotion in the tears that welled up and melted for you in love. I felt
affection when I treated you like my baby and pampered you. I felt friendship when I
argued with you as an equal. I felt my femininity through your words that made
me blush. I was ecstatic by the feeling beyond the body when you said that our
relationship was divine.
If a woman
loves a man completely, her desire is not that she should be with him, her
longing is that she should be protected by him, cherished by him. In that way,
I am lucky.
In this vast
world, I have come across so many people. But it was in you that I first saw a
pair of eyes that cherished me. In my childhood, my mother, father and teachers
in school may have caressed and cherished me. But at this age, in your eyes
that looked at me with fondness, there was excitement, frozen for long moments.
In reality,
I expected this from my mother in my childhood. My mother was very strict when
it came to studies. But I liked dancing along with studying. When I was young,
there was only one house in our compound that had a TV. Whenever they turned it
on, we would leave the games halfway and gather there.
I didn't
understand what show it was, or what language it was in. But we would watch
intently without making even a small sound. I still remember it now. I don't
recall if it was actress Simran's Hindi or Telugu movie. I was mesmerized by
her dance in just one song and sat there in awe.
Even after
coming home, I kept thinking about her costume, lively dance and subtle acting.
I kept talking about it with the elder brother next door. Since I didn't know
the language of the song, I sang whatever came to my mouth and danced it out.
In those days, every town had welfare associations. In the town where I lived
with my father, there was the Vivekananda Welfare Association. They had
organized many sports competitions during the day and a dance competition at
night for their annual town festival.
When they
came to each house to register names for the dance competition, that elder
brother living next door gave my name. Since I didn't participate in any sport
other than studying, they looked at my name with doubt, up and down, before
writing it down. I felt hesitant, shy, happy and more than anything, afraid.
Which song to dance to, and how?
He helped
with that too. Only his house had a tape recorder where we could play cassette
tapes. For some reason, I liked the song "Chiku Bukku, Chiku Bukku Rayile,"
which I had only seen once. He also said okay to it and told me to practice
dancing to it. I just listened to the song and nodded my head. Most
importantly, I asked him not to tell my mother about this.
Because I
doubted whether my mother would like things like this, apart from studying.
Also, I thought it would be a surprise if she did like it. So, I didn't
practice until the end because I thought my mother would find out if I
practiced. I waited until my mother left for the event, then changed clothes,
borrowed a hat from that brother, partially covered my face and stood behind
the stage.
After the
dance program started, when they called out each person's name behind the stage
to confirm, they didn't recognize me at first. Because of the pant and shirt which weren't my usual appearance, they didn't believe me at first when
I said my name. They confirmed it only after I took off the hat. I made a
request, "It's a surprise for my mother, brother.. please don't tell
her," and they, smiling, wrote my name as "Karthi" (my pet name)
and called me onto the stage.
For the
first few minutes, I danced while partially covering my face with the hat, so
even the people from my town were initially confused about who I was. It was
perfect timing when I removed the hat on a beat of the song, and the program
organizer brother shouted my name into the mic. Only then did everyone realize
it was me, and they clapped, whistled, and cheered for my every dance move.
But the
person for whom I put in so much effort, after realizing it was me, only bowed
their head in shame. Only towards the end of the song did she lift her head to
look. This was because my mother had little faith in me. She had never seen me
dance. So, she later said she bowed her head, thinking I would disgrace her. My
mother's circle of friends sitting beside her apparently pleaded with her so
much, but she only watched my dance at the very end.
So, I won
first prize in the dance. But my surprise attempt was a complete failure. After
that, even though I danced in many places, I couldn't see the people below in
the stage lights. But many thanks to the technology that provided that moment
when you saw my semi classical dance and
enjoyed it with a smile.
Even today,
I keep watching it over and over again, a hundred thousand times. My heart
sweetly cools like milk cream in your eye-smile. Even if I am buried in the
earth, I will forever cherish your smile that admires me within my two eyes.
At the time
you are reading my letter, so many love may have been newly born. Some may have
been abandoned by lovers and left orphaned on the streets. Many others may have
been aborted their love in the womb and never even come to this earth. Many
more may be waiting for a love that will never come, for years, with the false
hope that a sterile egg will hatch. But ours is an exception. Even if 60 years
pass, our love, living with the youthfulness of twenty, will ignite the desire
in us to live, with that belief,
Yours lovingly,
Vaira Malli.
Yathriga : "The smile your eyes bestowed — became the stage of my life. Dedicated to my moon man, this story travels through innocence, art and love."