Showing posts with label love storm poem. Show all posts
Showing posts with label love storm poem. Show all posts

Thursday, 18 September 2025

Storm of Love – A Poetic Letter to My Moon Fairy

September 18, 2025 0 Comments

 


                                                            



This post is part of my poetic love letter series “Wingless Words of Yathriga.” In this, Vairamalli writes to her moon fairy about love like the storm and flows endlessly like an ocean.

என்னுடைய நிலவு தேவதைக்கு,

 

ஆம். தேவதை என்றால் தூய உள்ளம் கொண்டவர் எனப் பொருள்படுமாம். அவ்வாறெனில் நீ ஒரு ஆண் தேவதை என்பது சரிதானே?  வரமளிக்கும் தேவதை எனில் இன்னும் மிக நன்று. நீ விரும்பும் வரை நான் உயிரோடிருக்கும் வரம் வேண்டும். ஏனெனில் உன் நிராகரிப்பின் வலியை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு பக்குவமானது அல்ல என் இதயம். நகங்கள் போல உடைந்து விழும் அளவிற்கு பலவீனமானது.

 

மனிதன் இறந்த மூன்று நாட்களில் கழன்று விழத் தொடங்கி விடுமாம், நகங்கள். இருக்கும் போதே பிரயோஜனமில்லை என்றுதான் நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்று என் நகங்களை வெட்டிய போது, எப்போது பிறை நிலா வடிவத்தில் வெட்டப்பட்ட துண்டுகள் இருந்தனவோ அப்போதே நகங்கள் மீதும் தனி பிரியம் வந்து விட்டது. உன்னை நினைவு படுத்தும் அனைத்துமே, அது இறந்த செல்களால் ஆனாலும் என் இதயம் கவர்ந்தவை தான். கொண்டாடப்பட வேண்டியவை தான்.

 

 

பணத்தால் ஏழை தான் நான். ஆனால் இந்த பிரபஞ்சத்திலேயே ஆகப் பெரிய பணக்காரியும் நான் தான். உன்னுடைய அதிகமான அன்பை சம்பாதித்து வைத்திருக்கிறேனே.. அதில் ஒரு பைசா செலவழித்தாலும் துவண்டு, நொடிந்து போய் விடுவேன். அன்பு என்பதும் ஒரு ஆதிக்கம் தான். என் ஆயுள் காலம் வரை உன்னுடைய ஆதிக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதில் எனக்கு ஒரு துளியும் விருப்பமில்லை. என்றென்றும் என்னுடைய சர்வாதிகாரியாக இருக்க உன்னை நான் ஆணவத்துடன் நியமிக்கிறேன்.

 

ஆம்.. என் செல்ல சர்வாதிகாரி.. சுருக்கமாய் சொன்னால் என் உடல் வழியே வராவிட்டாலும் என் வளர்ந்த குழந்தையடா நீ.. என்ன, கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்டாய். நெட்டை நிலவு நீ.. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சில விமர்சனங்களை உன் மீது நான் எறிகிறேன். சில சமயம் கல் மீது உளி விழுவது போல.. சில சமயங்களில் விதை மேல் மழை பொழிவது போல். ஒன்று தாக்குதல் போலவும், மற்றொன்று பாராட்டுதல் போலவும் வெளிப்பார்வைக்கு தெரியலாம். ஆனால் இரண்டின் நோக்கமும் உன் வளர்ச்சி தான், விமர்சனங்களால் வீழ்ச்சி இல்லை என்பது உனக்குப் புரியும் என நான் நம்புகிறேன்.

 

பாராட்டுதல் உன் மனதை விரிய செய்து அனுபவங்களை சேகரிக்கும்.. தாக்குதல் உன் மனதைக் குவித்து ஆராய செய்யும். ஆக இரண்டையும் ஒன்று போல் பாவித்துக் கொள்ள பழகிக் கொள். இரண்டின் அடுக்குகளையும் மேலே மேலே அடுக்கி வானளவிற்கு உயர்ந்து நில். பணத்தைக் கொடுத்தால் வானூர்தியில் கூட வானத்தை தொடலாம். ஆனால் அது சில மணித் துளிகளே. அந்த இடைக்கால வெற்றி என்றும் வேண்டாம் உனக்கு. நனைந்து போன உற்சாகத்தால் அணைந்து போகாமல் பார்த்துக் கொள் உன் லட்சியத்தை.

 

உன்னை உயரத் தூக்குவதற்கு என்னால் தோள் கொடுக்க முடியுமா  என்பது தெரியவில்லை. ஆனால் உன்னை தொலைவிலிருந்தே பார்த்துக் கொண்டு தொந்தரவு செய்யமாலிருக்க என்னால் முடியும். என் காதல் கூட உன் நேரத்தை விரயம் செய்திடுமோ என்ற அச்சமும் எனக்குண்டு. என்ன செய்ய. மூளையில் பஞ்சு பஞ்சாய் கொட்டிக் கிடக்கிறது உன் மீதான என் காதல். நரம்புக்குள் மின்னல் போல் வெட்டிக் கொண்டே இருக்கிறது. இதயத்தில் இரத்தத்தை விட காதலின் கசிவு தான் அதிகம்.

 

என்னுள் நிறைந்து பொங்கி வழியும் காதலின் ஒரு துளியை தான் உன் மீது தெளிக்கிறேன். மீதி அத்தனையும் அணையில் அடக்கி வைத்திருக்கும் கடலைப் போல எப்போது வேண்டுமானாலும் உடைப்பெடுக்க ஆயத்தமாய் இருக்கிறது. காதல் புயலில் ஆடும் மரம் நான். என் நிழலின் அடியில் கட்டப்பட்டிருக்கும் கடிவாள குதிரை நீ. காதல் புயல் உனக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிய வந்தால் மரமாகிய நான் தரையில் வீழ்ந்து அழிவேனே ஒழிய, உன் தலையில் விழுந்து உன்னை காயப்படுத்த மாட்டேன்.

 

ஏனெனில் இன்று நான் வாழும் வாழ்க்கை உன்னால், உனக்காக கட்டமைக்கப்பட்டது. உன் பேச்சுக்கள் என் செவியை தொடும் போது தான் என் ஒலி உலகத்துக்கு உயிர் வருகிறது. உன் அழகை கண்டு ரசிக்கும் போதுதான் என் ஒளி உலகம் வர்ணமயமாகிறது. அவ்வப்போது நமக்குள்ளும் ஊடல் உண்டு தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அந்த ஊடல் மூன்று நாட்கள் கூட நிலைக்காது என்பது இத்தனை நாளில் என் கணிப்பு. ஊடலில் தோற்றவர் வென்றார் என்பார் வள்ளுவர். இந்த காதல் ஊடலிலும் நானே தோற்று தோற்று உன்னை வென்றிட விரும்புகிறேன். அப்படியே உன்னை வென்றாலும், உனக்குள்ளேயே கரைந்து, மொத்தமாக காணாமல் போக ஆசைப்படும்,

 

உன்னவள்,

வைரமல்லி. 


This post is part of my poetic love letter series “Wingless Words of Yathriga.” In this, Vairamalli writes to her moon fairy about love like the storm and flows endlessly like an ocean.


                            Storm of Love – A Poetic Letter to My Moon Fairy


To my moon fairy,

Yes. Fairy means someone with a pure heart, right? Then, you being a male fairy is correct, isn't it? If you are a wish-granting fairy, that’s even better. I want the blessing of living as long as you desire because my heart is not mature enough to bear the pain of your rejection. It's so weak that it will shatter like nails.

 

They say human nails start to fall off three days after death. Even when they are still attached, I thought they were useless. But from the moment I cut my nails and the crescent-shaped pieces were there, I developed a special affection for nails. Everything that reminds me of you, even if it's made of dead cells, is captivating to my heart and worthy of being celebrated.

 

I may be poor in terms of money, but I am the richest person in this universe. I have earned so much of your love. Even if I spend a single penny of it, I will falter and collapse. Love is also a kind of dominance. I have no desire to free myself from your dominance for the rest of my life. I proudly appoint you to be my dictator forever.

 

Yes... my dear dictator... In short, you are my grown child, even if you didn't come through my body... What, you've grown a bit too much. Yes, You are a tall moon... At every stage, I throw some criticisms at you. Sometimes like a chisel falling on stone... sometimes like rain falling on a seed. One may seem like an attack and the other like praise. But the purpose of both is your growth, and I hope you understand that criticism doesn't lead to downfall.

 

Praise expands your mind and collects experiences... Attack makes your mind focus and analyze. So, get used to treating both alike. Stack both layers higher and higher and stand tall to the sky. If you pay, you can touch the sky even in an airplane. But that's only for a few moments. You don't need that temporary victory. Take care that your ambition doesn't fade away with dampened enthusiasm.

 

I don't know if I can lend you a shoulder to lift you high. But I can watch you from afar and not disturb you. I even fear that my love might waste your time. What to do? My love for you is piled up like cotton in my brain. It keeps flashing like lightning in my nerves. In my heart, there is more seepage of love than blood.

 

I sprinkle upon you but a drop of the love that fills and overflows within me. The rest is like an ocean held back by a dam, ready to burst at any moment. I am a tree swaying in the storm of love. You are the bridled horse tied beneath my shade. If I knew the storm of love would harm you, I, the tree, would fall and perish on the ground, but I would not fall upon your head and hurt you.

 

Because the life I live today is built by you, for you. It is when your words touch my ears that life comes to my world of sound. It is when I admire your beauty that my world of light becomes colorful. We do have disagreements from time to time. I confess. But my assessment is that those disagreements won't even last three days. Valluvar said that the defeated one has won in disagreements. Even in these loving disagreements, I wish to lose and lose, and win you over. And even if I win you over that way, I desire to dissolve within you completely, and disappear altogether.

 

Yours,

Vairamalli.


If you loved this, you may also enjoy reading Mohini’s Eternal Love Letter


Note : If you enjoyed this poetic love letter, explore more from “Wingless Words of Yathriga” where emotions bloom like moonlit flowers.