என்னுயிர் நிலவு
மனிதனுக்கு,
தேனை உண்ட வண்டு
மயங்கி மறுபடியும் தேனிலேயே விழுந்து புரண்டு கிடக்குமே அது போலத்தான் என்
நிலைமையும். உன்னைப் பார்த்து விட்டு வந்தவுடனே ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் கடிதம்
எழுத வேண்டுமென தோன்றத்தான் செய்தது.. ஆனாலும் அந்த மயக்கத்திலிருந்து விடுபட என்
மதிக்கு தோன்றவில்லை.
நீ கவனித்தாயா?
வண்ணங்கள் நம் வாழ்க்கையில் சரி பாதி நினைவுகளாய் கூடவே பயணம் செய்வதை.. நம்
இருவருக்கும் பொதுவான நிறங்கள் சில உண்டு. அதை இருவருமே நம்மை அறியாமல் தவிர்த்து
விட்டு நீ உன் வெண்ணிற உடையில் வந்தாய்.. நிலவின் நிறம் அதுதானே..ஆனால் நானும் அதே
வெண்ணிற உடை.. இருவர் உடையிலும் கொஞ்சம் தங்கம். நம் காதலைப் போல..
உன்னை முதன்
முதலாய் பார்த்தது போலெல்லாம் எனக்கு தோன்றவில்லை. ஆனால் நீ முதன் முதலாய் என்னை
திரும்பி பார்த்தது இன்னும் என் கண்ணிமைகளை விட்டு நீங்கவில்லை. கரம் கோர்த்த
கைகளை பற்றிக் கொண்டு அப்படியே வந்து விடலாம் போல தோன்றிய மனதை அடித்து
உதைத்துதான் கட்டுப்படுத்த முடிந்தது.
நீ முழுதாய்
எனக்கு சொந்தமில்லை என்ற சோகம் கொஞ்சம், கடந்த காலத்தில் நான் செய்த பிழையின்
காரணமாய் குற்ற உணர்ச்சி கொஞ்சம், நேரெதிரே உன் கண்களைப் பார்க்க முடியாத வெட்கம்
கொஞ்சம் (அதிகமாய்) என உறைபனி போல உன் முன்னால் அமைதியாய் உட்கார்ந்திருந்தாலும்
உள்ளுக்குள் ஒரு மூன்றாம் உலகப் போரே வெடித்துக் கொண்டிருந்தது.
என் காதுகள்
செய்த பாக்கியம் என் கண்களுக்கு கிடைக்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தேன்..எவ்வளவோ
கெஞ்சினேன்.. என் கண்கள் காது கொடுத்து கேட்கவில்லை. அதுவும் நல்லது தான்.
இல்லையெனில் அவ்வளவு பேர் முன்னிலையில் தடுப்பை உடைத்த அணை வெள்ளமாய் என் கண்கள்
உன் மீதான காதலை பொங்கி பிரவாகமெடுத்து காட்டிக் கொடுத்திருக்கும். மொத்தத்தில்
கண்ணிருந்தும் குருடானேன்.
அந்த
நிமிடங்களில் என் இதய வானொலியில் ஒரே ஒரு ஒற்றை அலைவரிசை. அது உன் குரலோசை. சங்கீதமாய்
என் காதுகளில் ஒலிக்க கூட சேர்ந்து மெட்டமைப்பது போல இடம் மாறி மாறி துடித்த என்
இதயத் துடிப்பு. என் காதுகளின் திரைச்சீலையை கிழித்து என் மூளையில் காதல்
ஹார்மோன்களை சுரக்க வைத்த உன் வார்த்தை அம்புகள்.
இடம் என்னவோ
குளிர்சாதன அறைதான்.. ஆனால் உன் மூச்சின் வெப்ப அலைகள் நேரே வந்து தாக்கியதில் என்
உதடுகளில் ஆரம்பித்து உள்நாக்கு வரை பாலைவனமாய் வறண்டு போயின..அள்ள அள்ள குறையாத
சமுத்திரமாய் என் கண் முன்னே நீ. ஆனால் எனக்கு தான் உன்னை அள்ளிப் பருகிட வெட்கம்.
தாகம் தாங்காது என்னென்னவோ குடித்துப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை.
நீ என்னை
பார்த்துக் கொண்டிருந்தாயா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் நீ பார்த்துக்
கொண்டிருப்பாயோ என்ற நினைப்பே எனக்கு மூச்சடைத்துக் கொண்டிருந்தது. அப்படியிருந்தாலும்
நீ ஒருவன் தான் என்னை பார்த்திருப்பாய். ஆனால் உலகமே ஒட்டு மொத்த வேலையையும்
விட்டு விட்டு என்னெதிரே அமர்ந்து என்னை உற்று நோக்குவது போல் இருந்தது அந்த சில
மணி நேரங்கள். என் நினைப்பும் சரிதான். என் ஒட்டு மொத்த உலகமே நீயல்லவா?
சிலிர்க்க வைத்த
சின்ன சின்ன பரிசுகள். உன் கை ரேகை பட்டதால் அவைகளை பரிசுகள் என்கிறேன். தடவியல்
துறையில் சொல்லி உன் கை ரேகைகளை அச்செடுத்திருக்கலாம். பத்திரமாய் வைக்க
பாதுகாப்பு பெட்டகத்திற்காய் வங்கியை அணுகினேன். மதிப்பு தெரியாத மானுடப்
பிறவிகள்..
கரன்சி
நோட்டுக்கு கொடுக்கிற மரியாதையை விலை மதிக்க முடியாத உன் காதல் பரிசுக்கு
கொடுக்கத் தெரியவில்லை. மடியில் உன் பரிசினை ஏந்திக் கொண்டு மனதில் உன் பிம்பத்தை
வாரிச் சுருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். என் வீடு இன்னும் பிரகாசமாகி
விட்டது உன் அன்பளிப்பு பொருள்களால். வீட்டின் மதிப்பு கூட உயர்ந்திருக்கும் என
நினைக்கிறேன்.
பல் துலக்க
ஆரம்பித்து உன்னை பார்க்க பயணம் செய்த நொடிகள் எல்லாம் நிமிடங்கள் வருஷங்களாய்
கடந்து போயின. உன்னைப் பார்த்த நொடியிலிருந்து உன்னை விட்டு விலகி வந்த காலம்
வரை சில மணித் துளிகளாய் கண்ணிமைக்கும்
நேரத்தில் உருண்டு போய் விட்டன. இறுதியில் கை கொடுத்து பின் கை நழுவிப் போய்
விட்டாயே..
இதில் வேடிக்கை
என்னவெனில் எனக்கும், உனக்குமாய் சில வார்த்தைகள், நமக்கேயான சில வார்த்தைகள்,
என்னை வெட்கப்பட வைத்த சில வார்த்தைகள், குறும்பு கொப்பளிக்க எனக்காய் உன்னால்
சொல்லப்பட்டிருந்த சில வார்த்தைகள், யாருக்கும் புரியாத நமக்கு சொந்தமான சில
சங்கேத வார்த்தைகள் அத்தனையும் அன்று நம் முன்னே மற்றவர்களால் அரங்கேற்றப்பட்டது.
வார்த்தைகளுக்கு
உரிமையாளர்களான நாம் இருவரும் வாயடைத்துப் போயிருந்தோம். என் நிழல் தான் அங்கு
இருந்தது. நிஜத்தில் நம் காதலின் கற்காலத்திற்கு நான் சென்று விட்டேன். எத்துணை
அழகான நாட்கள் அவை. எண்ணற்ற வார்த்தை விளையாட்டுகள். வாழ்க்கையை அழகாக்கிய
நமக்குள்ளே மாயாஜாலம் நிகழ்த்திய உரையாடல்கள். கொஞ்சம் கோபம், நிறைய அக்கறை, டன்
கணக்கில் காதல் எல்லாவற்றையுமே வார்த்தைகளில் தானே வெளிக்காட்ட முடிந்தது.
வார்த்தையில்
காட்டிவிட்ட நம் காதலை வாழ்க்கையில் எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்துடனேயே
வார்த்தைகளை இத்துடன் முடிக்கும்..
உன் உயிர்க் காதலி
வைர மல்லி..
Although I had good eyesight, I was completely blind in front of you..
To My Moon Man,
My situation is the same as a beetle that ate the honey
fainted and fell back into the honey pool. As soon as after seeing you and
coming back, I wanted to write a letter of a thousand pages. But I didn't want
to get rid of that intoxic feeling.
Did you notice? Colors travel half of our lives as
fond memories. We have some common colors. Leaving those colors, we both came
in same color clothes. That's the color of the moon, a bit of gold in both.
Like our love.
I don't feel like I saw you for the first time. But the first time you looked back at me, your silhouette still hadn't left
my eyes. I had to control my mind when you held my hands.
I was in the state like.. A little bit of sadness that
you don't belong to me at all, a little bit of guilt because of my past
mistakes, a little bit of shy that I couldn't look your eyes straight away. Even
though I was sitting quietly in front of you like a frost, a third world war
was raging inside.
My eyes didn't have the luck my ears had. How much I've
tried. . My eyes weren't listening. That's also good. Otherwise, in front of so
many people, like the dam that broke the barrier would have flooded, my eyes
would have betrayed my love for you. I was completely blind even I have good
sight.
In those minutes my heart radio had the only single
frequency. It's your voice. That music note was pounding in my ears and that
note matched my heart's beat. Your words are the arrows that tore the curtains
off my ears and released the love hormones in my brain.
That place was fully Air-conditioned. But the heat waves
of your breath came straight at me and dried up from my lips to the interior. You
are there in front of me like a milk ocean. But I couldn't sip of you even a
drop. There was no use in drinking
anything to control my thirst. But I tried..
I didn't even know you were looking at me. But I was
wondering if you were watching. That feeling gave me quit breathing. Maybe you
were the only one who saw me. But those few hours were like the whole world
sitting in front of me and staring at me. I think that's right. Aren't you, my
world?
Cute goosebumps gifts, you gave. I call them gifts
because they were having your finger print.
I might have told the forensics department, to take the copy of your
hand prints. Because those are valuable. That's why I went to the bank for a
safe deposit. But they are just human beings, right? They didn't know the
value.
They don't know how to give the respect to your precious
gift of love like giving to a currency note. I came home with your gift in my
lap and wrapped your image in my mind. My house is becoming bright because of
your gifts. I think the value of the house will go up after keeping your gifts.
The seconds that passed from brushing my teeth up to
seeing you, the minutes passed into years. From the moment I saw you to the
moment I left you, a few hours rolled by in the blink of an eye. Finally, you offered
your hand but it slipped away.
The funny thing is that there are some words for you and
me, some of the words for ourselves, some of the words that made me feel shy,
some of the words that you said to me to make me cry, some of our own words
that no one understands, were all staged by others in front of us that day.
I was at a loss for words. Only my body was there. I was
really going back to the stone age of our love. What beautiful days they were.
Lots of word games. A little bit of anger, a lot of care, tons of love were all
be expressed in words. Conversations that made our lives better.
Hmm..ok..I end with a longing for when we will experience the love in our life shown in the word.