Tuesday, 9 January 2024

My Anger is like a lump of sugar on a Sweet Badusha.. (Waiting for My Archived plant to bloom a Flower..)

 

என் நிலவு மனிதா,

ஒவ்வொரு முறையும் என்னுடையவன் என்று நினைத்து தான் எழுத ஆரம்பிக்கிறேன். ஆனால் நீ அவ்வாறு நினைப்பதில்லையோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. உன்னிடம் அப்படி என்ன நான் பெரிதாய் எதிர்பார்க்கப் போகிறேன். வானம் அளவுக்கு வீடா? நட்சத்திரங்கள் அளவுக்கு வைர நகைகளா? இல்லையே. ஒரு மின்மினிப் பூச்சி அளவுக்கு தானே உன்னிடம் காதலை கேட்டேன்.

நான் உன்னுடைய உடைமை என்ற அக்கறை துளி கூட இல்லை, உன்னிடம். யார் என்னை அழைத்துப் போனாலும் 'உனக்கென்ன தோன்றுகிறதோ அதை செய்' என்ற மனோபாவத்துடன் அமைதியாய் உன் அரியணையில் அமர்ந்திருக்கிறாய். இது உச்ச கட்ட சுதந்திரத்தின் வெளிப்பாடா? இல்லை உனக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கம் இல்லை என்பதைக் காட்டுகிறதா?

உன்னிடம் நான் சலுகைகள் கேட்கவில்லையே.. என்னிடம் உரிமை எடுத்துக் கொள் என்று தானே யாசிக்கிறேன். ஒவ்வொரு முடிவை எடுக்கும் முன்பும் உன்னிடம் தான் ஓடோடி வர, அனுமதி பெற ஆசையாய் உள்ளது. ஆனால் நீயோ இருக்கும் எல்லா மேகப் பஞ்சையும் எடுத்து வாய்க்குள் திணித்தது போல வாய் மூடி மௌனமாய் இருக்கிறாய்.

என் கோபம் எப்படி இருக்கும், எவ்வளவு நாள் தாங்கும் என்பது உனக்கே தெரியும். பாதுஷா மேல் உள்ள சர்க்கரை படிமம் போல தான் என் கோபம். பார்க்க மட்டும் தான் கரடு முரடாய் தெரியும். ஆனால் உதிர்த்து விட்டு பிய்த்தால் உள்ளே இருக்குமே மிக பாந்தமாய் அது போல மிக மிக மிருதுவானது உன் மீது நான் கொண்ட காதல்.

இனி இந்த ஜென்மம் முழுக்க உன் காதலோடு தான் வாழப் போகிறேன் என்பது எப்போதோ முடிவாயிற்று. பின் எப்படி உன்னை வெறுக்க முடியும்? உனக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கலாம். உன் ரசனை வேறு மாதிரி கூட இருக்கலாம். கொஞ்சம் மோசமான ரசனை தான் போல உனக்கு. உன் விமர்சனங்களைப் பார்த்த பிறகு எனக்கும் அது புரிகிறது, உன் ரசனை என்னவென்று. உன் விருப்பம் உன்னோடு. என் காதல் உன்னோடு.

விலக்கி வைத்தலின் வலி என்னவென்று இப்போது எனக்குப் புரிகிறது. என் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்பவர்களுக்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. எத்தனையோ நட்புகள் வலிய வந்து கை குலுக்கினாலும் ஏனோ என் கையை நான் பின்னுக்கிழுத்து கொள்வேன். எனக்கு என்னிடம் உள்ள உன்னிடம் பேசவே நேரம் சரியாய் இருக்கும் பொழுது எவ்வாறு மற்ற உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது?

எனக்காக நேரம் ஒதுக்கி, உரிமையாய் சண்டையிட்டு, என் முன்னேற்றத்தில் அக்கறை காட்டி இன்னும் எவ்வளவோ செய்ய முயன்ற என் நண்பர்களுக்கு என் மௌனத்தை மட்டுமே நான் பதிலாய் தந்திருக்கிறேன். அது எவ்வாறு வலிக்கும், காயப்படுத்தும் என்பதை அறியாமல் நான் செய்த பிழைக்கு நீ தண்டனை கொடுத்து விட்டாய். தெய்வம் நின்று கொல்லுமாம், பொறுமையாய். நீயும் கொல்கிறாய் என்னோடு என் பொறுமையையும்.

உனக்குத் தெரியுமா? உன்னுடைய பதிலைப் பொறுத்தே என் வாழ்க்கை வண்ணமயம் ஆவதும், ஒளி குன்றிப் போவதும். என்னுடைய உற்சாகம் வடிவதும் வளர்வதும் உன் ஒற்றை பதிலில் தான் உள்ளது. எங்கேயோ இருந்து கொண்டு என்னை மொத்தமாய் முழுவதுமாய் ஆட்டிப் படைக்கிறாய். உன்னை மறக்கவே நிறைய விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். இப்படியே போனால் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் ஒரு நாள்  கற்றுக் கொண்டுவிடுவேன் என நினைக்கிறேன். பின்னே? நீதான் எப்போதும், என்றென்றும் பதில் பேசவே போவதில்லையே.

நீ நிலா. அனைவருக்குமானவன். எனக்கு மட்டும் என்று சொல்லிக் கொண்டு என் வீட்டு லாந்தர் விளக்கில் உன்னை அடைத்து வைக்க எனக்கு விருப்பமில்லை. நான் வேண்டுமானால் உன்னை மட்டுமே சுற்றி சுற்றி வரும் கூண்டுக் கிளியாகவே இருந்து விட்டுப் போகிறேன். முடிந்தால் என் வீட்டு ஜன்னலின் வழி தெரியும் தென்னங்கீற்றுகளின் இடைவெளியில் எப்போதாவது வந்து உன் முகத்தை காட்டி விட்டுப் போ. காதல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உன் கருணையையாவது கொஞ்சம் சாரலாய் வீசி விட்டுப் போ. அந்த ஒரு துளியிலாவது என்னுடைய archived செடியில் ஒரு பூ பூக்கும் என்ற நம்பிக்கையுடன்,

                     கொஞ்சம் கோபத்துடன், நிறைய காதலுடன்,

                            உன்னுடைய வைர மல்லி.

 

Waiting for My Archived plant to bloom a Flower..

Hey My Moon Man,

Every time I start writing by thinking that you are mine. But the suspicion that you don't think so is getting stronger day by day. what am I going to expect from you? A house as big as the sky? Diamond jewelry as much as stars? Nope. I asked you for love as much as a size of firefly.

You don't even care that I am your possession. No matter who takes me, you sit quietly on your throne with the attitude of 'Do what you like'. Is this an expression of extreme freedom? or does it show that you and I are not that much close?

I am not asking you for favors. I am requesting you to take ownership of me. I want to run to you and seek your permission before making every decision. But you keep your mouth shut as if you have taken all the cloud and stuffed it in your mouth.

 

You know how my anger is and how long it lasts. My anger is like a lump of sugar on a badusha. Just by looking you may tell the rough and tumble. But if you let it shed, inside of that, so soft, like that my love for you is so soft.

 

I have decided that I am going to live with your love for the rest of my life. Then how can I hate you? You may have so many opportunities. Your taste may be different.  You seem to have bad taste. After reading your comments I also understand what your taste is. Your will is with you. My love is with you.

 

Now I understand the pain of exclusion. I never even replied to my birthday wishes. So many friendships come and shake hands, I always pull my hand back. How can I make time for other relationships when the only time I have is to talk to you? (in my mind only, I talk with you)

 

I have only returned my silence to those persons who took time for me, cared about my progress and did so much more. You punished me for that mistake I made without knowing how it would hurt those persons. God will stand and kill, patiently. You are also killing me and also my patience.

 

Do you know one thing? Depending on your reply, my life becomes either colorful or darkened. My enthusiasm is fully depending upon only in your single answer. From somewhere you are there, but here you are making me completely and utterly crazy.

I have involved myself in many things to forget you. If I keep going like this, I think one day I will learn everything in the world. Then? You are the one who will never, ever answer for my question.

 

You are the moon. And you are for everyone. I don't want to lock you  in the lantern of my house saying that you are only to me. Only thing I can do is that I roam around you as a caged parrot circling around.

 

If possible, come and show your face in the space of the coconut tree's leaves that can be seen from the window of my house. It doesn't matter  if there is no love. Throw away your kindness at least a little. Hoping that at least one drop of your kindness will make my archived plant will bloom a flower,

                                                     

                      
With a Little anger, A Lot of love,
                                                         Your Diamond Jasmine.

 

0 comments:

Post a Comment

Template by:

Free Blog Templates