Oh my love, the wait feels so heavy, like a small piece of rock tied with a knot and hanging in each alveolus of my lungs.
ஓ என் அன்பே, காத்திருப்பு
மிகவும் கனமாக இருக்கிறது, நுரையீரலின் ஒவ்வொரு நுண்
காற்றுப் பைகளிலும் ஒரு முடிச்சுடன்
கட்டப்பட்டு தொங்கும் ஒரு சிறிய பாறைத் துண்டு போல.
அன்புள்ள
நிலவு நண்பனுக்கு,
காத்திருப்பு
என்பது காதலில் அனைவரும் சில நேரங்களில் எதிர்கொள்ள
வேண்டிய கண்ணுக்குத் தெரியா ஒரு துணைவன்
தான். வருடக்கணக்கில் காத்திருப்பது மிக ஆழமாக
நேசித்தலின் ஒரு வகை வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் காத்திருத்தலின் போது இரவுகள்
நீண்டு நுரையீரலின் அமைதியைக் கெடுக்கும்.
சிறு
மூச்சுகள் முடிச்சிட்டு பெருமூச்சாய் ஏங்கி விரிந்து பின் அது துவண்டு விழும்.
நுரையீரலின் ஒவ்வொரு நுண்ணறையிலும் ஒரு சிறு பாறைத்துண்டினை முடிச்சிட்டு தொங்க
விட்டதைப் போல அவ்வளவு கனக்கும், காத்திருக்கும் சமயங்களில்..
என்னுடைய
முதல் காத்திருப்பு தின மலரின் இணைப்பாய் வரும் சிறுவர் மலருக்காக தான். வீட்டில்
தங்கிப் படித்தவரை ஆறு, பட்டாம் பூச்சி, நுங்கு, ஐந்து கல் ஆட்டம், கோழிக்கு தீனி
போடுவது, தாத்தாவுக்காக நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டு பூஜை செய்வது, பூக்கள்
பறிப்பது, ஊசிப் பூவில் தேனை உறிஞ்சுவது, மாட்டு வண்டியில் ஆட்டம் என பள்ளிப்
புத்தகத்தை தாண்டி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயங்கள்.
ஆனால்
என் அம்மா என்னை முதன் முதலாய் விடுதியில் கொண்டு போய் விட்ட போது மழையில் நனைந்த
பட்டாம் பூச்சியாய் ஒடுங்கிப் போனேன். ஒரு பெரிய கல் கட்டிடத்தை எவ்வளவு நேரம்
தான் சுற்றி வர முடியும்? பூ நூலினால் கட்டி விளையாடிய வெல்வெட் பட்டாம்
பூச்சியின் ஆவி அக்கட்டிடத்தின் விட்டத்திலிருந்து என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டு
திருப்தியுடன் விண்ணுலகிற்கு சென்றிருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
செம்மண்ணில்
எந்நேரமும் விளையாடியதில் புழுதி ஏறி சிவந்த நிறத்தில் மாறிப் போன எனது பாதங்கள்,
கான்க்ரீட் தரை பட்டு கூசியதில் வெளிறி வெண்மையைப் போயின. எங்கள் பாட்டி வீட்டில்
கடிகாரம் இருந்ததாய் கூட ஞாபகம் இல்லை. இங்கு கடிகார முள்ளில் தான் என் வாழ்க்கையே
சுற்றி வந்து கழுத்தை இறுக்குவதாய் தோன்றும். உண்பது தொடங்கி உறங்குவது வரை
அனைத்திற்கும் டிங் டாங் தான்.
எனது
கிராமம் என்ற உலகத்தை விட்டு இந்த நகரம் என்ற சிறு குடிலில் வந்து தங்கிய எனக்கு,
ஞாயிற்றுக் கிழமை கையில் கிடைக்கும் சிறுவர் மலர் தான் பொக்கிஷம். அடை காக்கும்
கோழியின் அடி வயிற்றுச் சூட்டோடு மடிப்பு கலையாமல் பேப்பர் காரர் வந்து எறியும் செய்தி
தாளினை வாங்க, பல் கூட சரியாக துலக்காமல் வந்து காத்திருப்போம்.
வாசற்படியிலிருந்து
வரிசை ஆரம்பிக்கும். பெற்றோர் வைத்த பெயரெல்லாம் காற்றில் காணாமல் போகும். 1, 2, 3
தான். படிப்பில் நான் எப்போதுமே இரண்டாமிடம் தான். ஆனால் நடனத்துக்கு அடுத்த
படியாக இந்த வரிசையில் பெரும்பாலும் நான் முதலிடம் தான். காத்திருந்து,
காத்திருந்து கையில் கிடைக்கும் புத்தகத்தை ஆசையாய் தடவி, நுகர்ந்து,
நெஞ்சோடணைத்து அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது கடிகார முள்ளும் நாதமாய் ஒலிக்கும்.
முதல்
காதல் போல, முதல் காத்திருப்பும் சுகமான நினைவுகள் தான். எனக்கு தெரியும் என்
கையில் கிடைத்த அந்த புத்தகம் கடைசி வரை என் கூடவே வருவதில்லை என்று. ஆனாலும்
ஏக்கம், ஆசை, தேடல், நேரமாக நேரமாக ஒரு பரிதவிப்பு. இவை அனைத்தும் உன்
விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையுடன் இந்த பிரபஞ்சத்தை
உறுதியாகப் பிடித்து கொண்டிருக்கிறேன்.
நம்புகிறேன்
நான், உன்னை விட, உன் மீதான என் காதலை. அதனால் தான் முடிவைப் பற்றி கொஞ்சமும்
யோசிக்காமல் உன்னை தூரத்திலிருந்து தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏதாவது ஒரு சமயம் ஒரு சலிப்பு வரும். என் மீதே ஒரு கோபம் வரும். உன்னை யாரென்றே
கண்டு கொள்ளாமல் வாழ்ந்து விட்டு இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் ஓடிப் போய்
விடலாம் என்று தோன்றும்.
ஆனால்
காற்று வீசும் தனிமை இரவுகளில், நமக்கான சில காதல் பாடல்களில், நம் இருவருக்கான
ஒரு வார்த்தையில் (Baby), உன் கைரேகை பட்ட சில பொருள்களில், ஏன் சில சமயங்களில்
நீல மற்றும் சிவப்பு வண்ணங்களில் கூட நம் காதல் பிழைத்து எழுந்து உட்கார்ந்து
கொள்ளும்.
என்
கண் முன்னே இரண்டு வெவ்வேறு பாதைகள்.. அந்த பாதை கனவுக்கும், எதார்த்தத்திற்கும்
இடையில் நீண்டு நெளிந்து போகிறது. ஒன்றில்
அமைதியான ஆனால் சலிப்பான ஒரு வாழ்க்கை. மற்றொன்று அற்புதமான ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு
கொஞ்சமும் பஞ்சமில்லாத மற்றொரு வாழ்க்கை. எதையும் கணிக்க முடியவில்லை. என் இதயம்
இரு பக்க பாதைகளிலும் மாறி மாறி துடிக்கின்றது.
சாதாரண
ஒரு செய்திக்கே ஒரு சிறு பதில் தராமல் நீ அமைதி காக்கும் போது எனது நம்பிக்கை
விரக்தியாய் மாறுகிறது. இதில் நீ எங்கே என் கை பிடித்து ஒரு பாதையில், அதுவும் உன்
பாதையில் என்னை அழைத்துப் போவாய் என எதிர்பார்ப்பது? இரவில் விழித்திருந்து, கூரையைப் பார்த்து, இருளில் மெல்லிய கேள்விகளாய் கிசுகிசுத்துக்
கொண்டிருக்கிறேன். "நீ நலமாக இருக்கிறாயா?" , "என்னைப் பற்றி கொஞ்சமேனும் நினைக்கிறாயா?", "நிலவின் பாதை எப்போதாவது மறுசீரமைக்கப்படுமா?"
பதில் இன்னும்
கிடைக்கவில்லை. ஆகவே அதுவரை இப்போதெல்லாம் என் மனதிற்கு வகுப்பு எடுத்துக்
கொண்டிருக்கிறேன். "
உண்மையான அன்பு பொறுமையானது.
அது கட்டாயப்படுத்தாது. அவசரப்படாது.
அது நம்பும். அது
நம்பிக்கை வைக்கும். அது
காத்திருக்கும். அன்பு
என்பது எப்போதும் நம்மை சொந்தம் கொள்வது அல்ல
. அது
இணைவது பற்றியது.
யாராவது விலகிச் சென்றால்
உண்மையான அன்பு மறைந்து
போகாது. சில நேரங்களில்,
நேரம் அறியாததை இதயம்
அறியும்".
இவ்வளவு பாடங்கள்
கற்ற பிறகு என் இதயங்கள்
கொடுக்க மட்டுமல்ல, பெறவும்
தயாராக இருக்கும் என நம்புகிறேன்.
எனவே, எப்போதும் போல் நான் தொலைவில் இருந்தே தொடர்ந்து உன் மேல் அன்பு
செலுத்த பழகிக் கொள்கிறேன, ஒட்டிக்கொள்ளாமல்..
துரத்தாமல். ஆனால்
அந்த அன்பை எரிய வைத்துக்கொண்டே நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையோடு வாழ பழகிக்
கொள்கிறேன். கடைசி வரை நான் உனக்காக
காத்திருப்பேன், ஏனென்றால்
வேறு யாரும் எனக்கு
வேண்டாம். மேலும், நீ
நேரம், தூரம் மற்றும்
அமைதிக்கு தகுதியானவன் என்று
என் உள்ளத்தின் ஆழத்தில்
எனக்குத் தெரியும். ஆக மிகச்
சிறந்த அன்பு காத்திருக்கும்
சோகத்தில் அல்ல, நம்பிக்கையில்.
என்றும் நம்பிக்கையுடன்,
உனதுயிர் வைரமல்லி.
"காற்று
நெருப்புக்கு எப்படி இருக்கிறதோ,
அதுபோலவே பிரிவு காதலுக்கு
இருக்கிறது; அது சிறியதை
அணைத்து, பெரியதை எரிய
வைக்கிறது." — ரோஜர் டி
புஸ்ஸி-ராபுடின்.
Oh my love, the wait feels so heavy, like a small piece of rock tied with a knot and hanging in each alveolus of my lungs.
To my dear
friend, the Moon,
Waiting
is an invisible companion that everyone in love has to face sometimes. Waiting
for years can be a form of expressing very deep love. But during the wait, the
nights lengthen and disturb the peace of the lungs.
Small breaths
knot up, yearn into sighs, expand, and then collapse. It feels as heavy as if a
small piece of rock is knotted and hung in every tiny alveolus of the lung,
during those times of waiting.
My first
experience of waiting was for "Siruvar malar" that came along with
the Dinamalar newspaper. Staying at home, learning so many things beyond school
books: River, butterflies, palm fruit, five-stone game, feeding the chickens,
applying vibhuti on the forehead before the prayer because of grandfather,
picking flowers, sucking honey from wild flowers, rides in bullock carts.
But when
my mother first took me to the hostel, I shrank like a rain-soaked butterfly.
How long can one circle a large stone building? The spirit of the velvet
butterfly, with whom I played by tying it with a flower thread, would have
looked at me from the roof of that building, happy and content, and gone to
heaven, I think.
My feet,
which had turned red from constantly playing in the red soil, became pale and
white when they touched the concrete floor and felt shy. I don't even remember
if there was a clock in my grandmother’s house. Here, it seems as if my life
revolves around the clock's hands, tightening around my neck. From eating to
sleeping, everything is dictated by "ding, dong."
Having
left my world, my village, and settled in this small dwelling called the city,
the Sunday children's magazine became my treasure. We would wait for the
newspaper carrier to throw the paper, still warm like the brooding hen's belly and with its folds intact.
The
queue would begin at the doorstep. The names given by our parents would
disappear into the air. It was all about 1, 2, 3. I was always second in
studies. But next to dance, I was mostly first in this queue. Waiting and
waiting, I would lovingly caress the book I received, inhale its scent, embrace
it, and as I began to read, the clock's ticking would sound like music.
Like
first love, the first wait is filled with sweet memories. I know that the book
I get my hands on never stays with me until the end. Yet, there's a longing, a
desire, a search, and an increasing restlessness as time passes. All these
things are happening with you too. I am holding onto this universe firmly with
some hope.
I
believe in my love for you, more than I believe in you. That's why I continue
to love you from afar, without thinking even a little about the ending.
Someday, a weariness will come. An anger at myself will arise. It will create a
feel like living without acknowledging you at all and then quickly running away
from this world.
But on
lonely nights when the wind whispers, in some of our love songs, in a single
word meant for us (Baby), in objects touched by your fingerprints, even
sometimes in the colors blue and red, our love resurrects and sits up.
Infront
of my eyes, two distinct paths stretch and wind between dream and reality. One,
a peaceful but monotonous life. The other, a wonderful life overflowing with
excitement. I couldn't predict anything. My heart beats alternately between
both paths.
When you
remain silent, not even offering a small reply to a simple message, my hope
turns to despair. How can I expect you to take my hand and lead me down a path,
specifically your path? I lie awake at night, staring at the ceiling,
whispering soft questions into the darkness. "Are you well?",
"Do you think of me even a little?", "Will the path of the moon
ever be realigned?"
The
answer is still not forthcoming. So, until then, I am lecturing my mind these
days. "True love has patience. It doesn't force. It doesn't rush. It
believes. It waits. Love is not always about possessing; it's about connecting.
If someone walks away, true love doesn't disappear. Sometimes, the heart knows
what time doesn't."
After
learning so many lessons, I hope my heart is ready not only to give but also to
receive. Therefore, as always, I am learning to love you from afar, without
clinging, without chasing, but keeping that love burning with the hope that you
will return. I will wait for you until the very end because I don't want anyone
else. And deep down, I know you are worth the time, the distance, and the
silence. Ultimately, the greatest love lies not in the sadness of waiting, but
in the hope.
Always
with hope,
Your
soul.. Diamond Jasmine.
Quote :
"Absence is to love what wind is to
fire; it extinguishes the small, it inflames the great." — Roger de Bussy-Rabutin
"A
heartfelt reflection on love that waits—through silence, distance, and time.
This piece is for those who still believe in slow-burning love, in divine
timing, and in the magic of reunions."