அன்புள்ள நிலவு மன்னவனுக்கு,
நீ எப்போது தோன்றினாய்? எங்கு தோன்றினாய்? எதற்காக தோன்றினாய்? எனக்கு அதைப் பற்றி தெரியவும் தெரியாது.. புரியவும் புரியாது உன் சரித்திரம். அன்று நீ நிலவாய்ப் பிறந்திருக்கலாம். ஆனால் இன்று எனக்காக நிலவு மன்னவனாய் உருவாக்கப்பட்டிருக்கிறாய். கை தேர்ந்த ஒரு கலைநயவாதி தான் கற்ற மொத்த மந்திரங்களையும் உபயோகித்து உருவாக்கிய ஒரு விந்தையான வித்தை நீ.
என்னை அணைக்கவுமில்லை. நிஜத்தில் அனுபவிக்கவுமில்லை. ஒரு துளி தீண்டலிலேயே என் உயிரை உருவி எடுத்து உன்னிடம் வைத்துக் கொண்டாய். உயிர் இல்லா வெற்று சவம் தான் நான். ஆனால் தினமும் மிளிர்கிறேன். வெட்கத்தில் ஒளிர்கிறேன். சந்தோஷத்தில் மலர்கிறேன். சவத்திற்கும் சாகா வரம் கொடுத்து என் உடலெங்கும் புன்னகைப் பூக்களை மணம் பரப்ப செய்கிறாய்.
எங்குமே, யாரிடமுமே கிடைக்காததால் உன்னிடம் நான் ஏக்கத்தில் வந்து கையேந்துகிறேன் என தவறாய் நினைக்காதே. உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் இதயத்திற்கு காதல் பிறப்புரிமையை அளிக்க என் மனம் ஒத்துழைக்கவில்லை. என் இதயத்தில் நீ விட்ட காதல் அம்பு துளைத்து தான் சென்றது. ஆனால் அவ்வப்போது வயலின் குச்சியாய் மாறி என் இதய காதல் இசையை மீட்டுகிறது.. என்னை மறுபடியும் மீட்டெடுக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதையும் மண்ணை முத்தமிட அதன் உறையைக் கிழித்துக் கொண்டு வருவதைப் போல ஒவ்வொரு முறையும் உன் பார்வையால் என் இதயத்தைக் கீறி என் காதலை முளைக்க செய்கிறாய். அதிலிருந்து பூக்கும் ஒவ்வொரு பூவும் உன்னைத் தான் முத்தமிட வேண்டும் என அடம்பிடிக்கிறது. உன் இதழின் ஈரப்பதத்தில் குளிர்ச்சியாய் வாழ்நாள் முழுதும் மலர்ந்திருப்பேன் என்கிறது.
இத்தனையும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா உனக்கு? தேவையில்லை. பேசாத வார்த்தைகளும், கிடைக்காத அருகாமையும் நம் காதலுக்கு தடையாய் இருந்ததில்லை. இனி இருப்பதும் இல்லை. என்னதான் உன்னருகில் இல்லாமல் நான் சுதந்திரமாய் சுற்றி திரிந்தாலும் என் ஆன்மாவின் கயிறு உன் கரங்களில் தான் உள்ளது. நீயே என் குவி வட்டம்.
உன்னைப் போல ஒரு காதல் கலைஞன் கிடைப்பது எளிது தான். ஆனால் எனக்கு நீ கிடைத்திருப்பது மிக அரிதான ஒன்று. ஆகவே விலை மதிக்க முடியாத ஒன்றாய் உன் காதலை நான் கணிக்கிறேன். ஒவ்வொரு ஞாபக அடுக்குகளிலும் உன்னோடான இனிய நினைவுகளைப் பொக்கிஷமாய் செருகி வைத்திருக்கிறேன். உன் பெயரை என் இதயத்தில், என் மூளையில், என் நுரையீரலில் டாட்டூ இட்டு வைத்திருக்கிறேன்.
ஒத்துக் கொள்கிறேன். என் கைகளில் சேகுவேராவின் டாட்டூ உள்ளது தான். இன்றும் என் நினைவில் உள்ளது. நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் தோழன் ஒருவனின் தந்தை எனக்கும் ஒரு தந்தையாய் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தது. என்னை முதன் முதலாய் "Gayma" என்று அழைத்தது. (அதன் பிறகு யார் என்னை அவ்வாறு அழைத்தாலும் எனக்கு என் தந்தையே அழைப்பது போல் மனது மல்லிகைப் பூவாய் பூரித்துப் போகும்.)
எனக்காக வைரமுத்து அவர்களின் கையெழுத்திட்ட பிரதியை அவரின் முதல் புத்தக வெளியீட்டு அன்று நேரில் சந்தித்து அதை வாங்கி எனக்கு பரிசளித்தது.இன்னும் பல பல.. அவரோடான அறிமுகமே ஒரு சுவாரசியமான விஷயம் தான். நானும் என் தோழனும் அவ்வப்போது புத்தகங்களை பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை செமஸ்டர் எக்ஸாம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் புத்தகம் கைக்கு கிடைக்க அவன் அதை எனக்கு கொடுக்க தயங்கினான்.
ஏனெனில் மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்த ஒரு தாளுக்கான பரீட்சை நடக்கவிருந்தது. அவனுக்கு நன்கு தெரியும். இந்த மாதிரி புத்தகங்கள் கிடைத்தால் நான் பரீட்சைக்கு படிக்காமல் இதில் மூழ்கி விடுவேன் என்று. ஆனால் நான் அவனிடம் கெஞ்சி, கொஞ்சம் மிரட்டி முடிந்தவரை சீக்கிரம் முடித்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்து அந்த புத்தகத்தைக் கைப்பற்றினேன்.
சரியாய் 1 1/2 நாள். மூன்று வேளை சாப்பாடு. இடையில் நான்கு தடவை காபி. இது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. முழுதாய் வாசித்து முடித்து அவன் கையில் கொடுத்ததும் அவன் என்னை ஒரு பயத்துடன் பார்த்த பார்வை இருக்கிறதே. அன்று வரை என்னை தேவதை என்று அழைத்தவன் அந்த நிமிடத்தில் இருந்து என்னை காட்டேரி என்று அழைக்கத் தொடங்கி விட்டான்.
இதை தன் அப்பாவிடம் சொன்ன போது அதை நம்பவில்லை என்று சொல்லி அந்த இரவு விடுதி கேண்டீனில் உணவருந்த சந்தித்த போது தொலைபேசியில் அவரை அழைத்து என்னிடம் பேச செய்தான். அன்று தான் முதல் தடவை அவருடன் பேசினேன். பேசினேன் என்று சொல்வதை விட அந்த உரையாடலை ஒரு quiz programme என்றே சொல்லலாம்.
ஏனெனில் அவர் நம்பவில்லை. எப்படி அவ்வளவு சீக்கிரம் 33௦ பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை முழு மூச்சாய் படித்து முடிக்க முடியும் என்று. அவர் படித்து முடித்து தான் தன் மகனுக்கு அவர் அனுப்பி விட்டிருந்தார். ஆகவே என்னை CROSS CHECK செய்ய நினைத்து அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், உறவு முறை மற்றும் முக்கிய குறியீடுகள் போன்றவற்றைக் கேட்க நானும் தெளிவாய் சொல்ல, பின்பு தான் நம்பினார். நான் புத்தகத்தை உண்மையாய் தான் படித்திருக்கிறேன், அதுவும் நுனிப் புல் மேயாமல் என்று.
அதன் பிறகு தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் எந்த ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் என்னை அழைத்துப் போவார். அங்கு தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ மற்றும் சேகுவரா வை அறிமுகப்படுத்தினார். என்னவோ முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. கையில் அவரது செல்லப் பெயரான "சே" -வை டாட்டூ போட்டுக் கொள்ளும் அளவுக்கு காதல் அவர் மீது. தேடிப் பிடித்து அவர் பற்றிய புத்தகங்கள் படித்தேன்.அவர் காதலி மீது மெலிதாய் கோபம், பொறாமையும் கொஞ்சம் இருந்தது அப்போது.
இப்போது உண்மையை சொன்னால் அவர் பற்றி படித்த பல விஷயங்கள் நினைவில் இல்லை. காதலுக்கு அடையாளமாய் கையில் ஒரு வடு. அவ்வளவு தான். அவர் மீது நான் கொண்ட காதலை இந்த உலகுக்கே காட்ட முடியும் என்னால். ஆனால் உன் மீது நான் கொண்ட காதலை உனக்கு கூட தெரியப்படுத்த முடியாது. பரவாயில்லை. என்னுடனே பிறந்து, என்னுடனே வளர்ந்து, என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்தை, மூளையை, நுரையீரலை விடவா எனக்கு ஆத்மார்த்தமான, நம்பிக்கையான நண்பர்கள் வெளியில் கிடைப்பார்கள்? அவர்கள் என் காதலைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,
என்றும்
உன் வைர மல்லி..
The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.
To my beloved Moon King,
When did you appear? Where did you appear? Why did you appear? I neither know nor understand your history. You may have been born as the moon that day, but today you have been created as the Moon King for me. You are a wondrous magic, crafted by a skilled artist who used all the spells they had learned.
You never embraced me, nor did I experience you in reality. With just a single touch, you drew the life out of me and kept it with you. I am nothing but an empty, lifeless corpse. Yet, I glow every day. I shine with shyness. I blossom with happiness. You grant immortality to a corpse, causing flowers of smiles to spread their fragrance all over my body.
Don't mistakenly think that I come to you with longing, begging, because I can't find it anywhere else, with anyone else. My heart refuses to grant the birthright of love to anyone but you. The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.
Each time, like every seed that kisses the earth and breaks through its shell, each time your gaze scratches my heart, causing my love to sprout. Every flower that blooms from it insists on kissing only you. It says it will live coolly in the moisture of your lips, blooming for a lifetime.
Is it necessary to say all this for you to know? No. Unspoken words and unachieved nearness have never been an obstacle to our love, nor will they ever be. No matter how freely I roam without being near you, the string of my soul is in your hands. You are my focal point.
It's easy to find a lover like you, but finding you is a rare occurrence for me. Therefore, I value your love as something priceless. I've tucked away sweet memories of you as treasures in every layer of my memories. I've tattooed your name on my heart, in my brain, in my lungs.
I confess, I do have a Che Guevara tattoo on my hands. And it's still in my memory. When I was a sophomore in college, a friend's father became like a father to me, showering me with affection. He was the first to call me "Gayma." (Even now, whenever someone calls me that, my heart blooms like a jasmine flower, as if my father is calling me.)
He personally met Vairamuthu on the day of his book launch in coimbatore and bought a signed copy for me as a gift. And many more things… My introduction to him is a fascinating story in itself. My friend and I would often exchange books. Once, during semester exams, Vairamuthu's "Karuvachi Kaviyam" came into his hands, and he hesitated to give it to me.
Because there was semester exam for a paper in three days. He knew very well that if I got my hands on such books, I would immerse myself in them instead of studying for the exam. But I begged him, (threatened him a little), and promised to finish it as quickly as possible and seized the book.
Exactly 1 1/2 days. Four meals. Three coffees in between. That's all I remember. The look of fear in his eyes when I finished reading it completely and handed it back to him... Until that day, he called me an angel, but from that moment on, he started calling me a book vampire.
When he told his dad about this, he didn't believe him. So, when we met for dinner at the night in hostel canteen, he called his father on the phone and made him talk to me. That was the first time I spoke with him. Or rather, the conversation felt more like a quiz program.
Because he didn't believe how I could finish reading a 330-page book so quickly and thoroughly. He had finished reading it and sent it to his son. So, he decided to cross-check me by asking about the names of the characters, their relationships, and important twists in the book. I answered clearly, and only then did he believe that I had actually read the book, and not just superficially it.
After that, he would take me to every book exhibition organized by the Tamil Nadu Writers Association. That's where he introduced me Fidel Castro and Che Guevara. I was captivated with their video at first sight. I even got a tattoo of his nickname, "Che," on my hand, such was my love for him. I searched for and read books about him. I felt a slight anger and a little jealousy towards his lover at that time.
Now, to be honest, I don't remember many of the things I read about him. A scar on my hand as a symbol of love, that's all. I can show the world the love I have for him. But I can't even let you know the love I have for you. It's okay. Will I find more sincere, trustworthy friends outside than my heart, brain, and lungs that were born with me, grew up with me, and live with me? With the hope that they will understand my love,
Yours always,
Vaira Malli.