Showing posts with label love letter. Show all posts
Showing posts with label love letter. Show all posts

Wednesday, 22 April 2026

When Love Writes Letters… 💌 | Tamil Love Letter & English Poem

April 22, 2026 0 Comments

 


                                                 

Romantic moonlight love letter scene with singer and girl under glowing moon


வெற்றிடமில்லா காதல்…

அன்புள்ள நிலவு மன்னவனுக்கு,

உன் வைரமல்லி எழுதுவது. கடந்த சில மாதங்களில் உனக்கான கடிதங்கள் தான் வெற்றிடத்தால் நிரப்பப் பட்டனவே தவிர, உன் மீதான என் காதலில் வெற்றிடம் இல்லை. எப்போதும் போல உன் புன்னகையை என் உடைமையாக்கி வெற்றிடம் இல்லாதவாறு நிரப்பிக் கொண்டேன். அன்பின் நெரிசலில் என் காதலும் குடித்தனம் நடத்தக் கற்றுக் கொண்டது.

 

உன்னைப் பற்றிய கவிதைகளை நான் எழுதி முடித்துப் படிக்கும் போதும், அதை வாசித்து முடித்துக் கேட்கும் போதும் எழுதிய வரிகள், என் மீது வெட்கம் தெளித்துப் போகின்றன. ஒரே ஒரு ஆசை உண்டு இந்த ஜென்மத்தில். உனக்குப் புரிகிறதோ, இல்லையோ எனக்குப் பிடித்த உன்னைப் பற்றிய ஒரு சில கவிதை வரிகளை உன்னிடம் நான் வாசித்துக் காட்ட வேண்டும். உன் நிலவு முகம் இன்னும் அதிகமாய் ஒளிர்வதை உடனிருந்து ரசிக்க வேண்டும். முடிந்தால் உன் வெட்கச் சிவப்பில் குளிர் காய வேண்டும். உனக்குப் புரிந்த, உனக்குப் பிடித்த சில வரிகளையும் நீ சொல்ல, இல்லை இல்லை.. நீ பாட நான் கேட்க வேண்டும்.

 

இன்னுமொரு ஆசை உண்டு. மொத்த உலகிற்கும் முத்தம் தர வேண்டும், ஒரே மூச்சில். என்னால் முடியும் என்று உனக்கும் தெரியும் தானே? உன் நெற்றி முடியிலிருந்து உன் பாத நகம் வரைக்கும் உள்ள தூரம் தானே என் மொத்த உலகமும்? ஒரு தடவை என்ன, ஓராயிரம் தடவை என் மொத்த உலகத்தின் தூரத்தையும் என் இதழ்களால் ஒற்றி எடுக்க முடியும் தானே? என் மொத்த உலகத்திற்கான திறவுகோல், உன் மீசையின் ஒற்றை முடியில் அல்லவா உள்ளது. உன் மீசை முடி நுனியின் மெல்லிய தொடுதல் போதும் என் மொத்த புலன்களும் விழித்துக் கொள்ள.

 

எவ்வளவு நாள் தான் இப்படி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பாய் என்கிறாயா? இந்த கணினியின் கர்சரில் உள்ள கார்பன் தீரும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன். ஆக, என் கடிதங்களின் expiry  MS-WORD -ஐ சார்ந்தது. ஏனெனில் மூளையை கசக்கி நான் கடிதங்கள் எழுதுவதில்லை. என் காதலை அடமானம் வைத்து எழுதுகிறேன், ஒவ்வொரு முறையும். என் காதலுக்கும் ஒரு நாள் ஒரு இறுதி ஊர்வலம் உண்டு.

 

நான் இறந்த செய்தி உன் காதுகளை எட்டும் முன்னரே, என் காதல் இறப்பின் செய்தி உன் இதயத்தை வந்தடையும். என் பயங்கரமான மௌனம் உன் காதுகளை கிழிக்கும் போது, என் காதலின் மரணம் சம்பவிக்கும்.  ஆரம்ப நாட்களில் ஒரு நாள் என்னை காணாவிட்டாலும் உன் கண்கள் தேடி அலை பாய்வதை ஒரு வித வலியுடன் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போதெல்லாம் சில நாட்களே ஆனாலும், பெரிய தவிப்பு ஏதும் இல்லை என்பதையும் நான் ஒரு வித வலியுடன் கண்டு வருகிறேன். பழகப் பழக பாயசமும் புளிக்கும் என்பது உலக நியதி தானே?

 

எனக்கு தான் உன்னுடைய குரலை கேட்டுக் கொண்டே காலையில் சமைப்பதில் ஆரம்பித்து இரவில் தூங்குவதில் முடிவது என்று பழக்க தோஷமாய் ஆயிற்று. மற்றவர்கள் சொல்லலாம் உன்னுடையது காந்தக் குரல் என்று. என்னைப் பொறுத்த வரைக்கும் அது காதலின் குரல். காதலித்துக் கொண்டே சாகத் தூண்டும் மாயக் குரல். சாகும் போதும் காதலிக்கத் தூண்டும் மந்திரக் குரல். மயிலிறகால் காது மடல் வருடும் பரவசம். கோழி இறகால் காது குடையும் சுகம். பகல் பாடகனாய் இருந்த நீ இரவுப் பாடகனாகவும் உயர்வு பெற்று விட்டாய். பிறகென்ன? எந்நேரமும் உன் குரல் அலை வரிசை தான் என் வீட்டில், முக்கியமாய் என் சமையல் கட்டில். அதனால் தானோ என்னவோ வெந்நீர் வைத்தால் கூட அது விருந்தில் முடிவடைகிறது. என்ன மோகமோ, என் வீட்டு அடுப்பங்கரைக்கு உன் குரல் மீது..

 

எந்நேரமும் அலைபேசியுடனே இருப்பதால் பார்ப்பவர்கள் எல்லாரும் நான் அலை பேசியுடன் குடும்பம் நடத்துவதாய் நினைக்கிறார்கள். உண்மையில் உன் குரலோடு தான் குடும்பம் நடத்துகிறேன் என்பது என் காதலுக்கு மட்டும் தானே தெரியும்? என்ன செய்ய? உன் குரலுக்கு கொஞ்சம், உன் உருவத்துக்கு கொஞ்சம், உன் புன்னகைக்கு கொஞ்சம்  என என்னால் அன்பை அளந்து வைக்க முடியவில்லையே. ஒட்டு மொத்தமாய் கொட்டி விட்டு உன்னை பார்க்க முடியாத நாட்களில் தாங்கவே முடியாது தவிக்கிறேன்.

 

உடைந்தாலும் மீண்டு எழுந்து வந்து திரும்பவும் காதல் செய்ய வைக்கிறாய் அளவுக்கு அதிகமாய். இப்படியே ரப்பர் பந்தாகவே இருக்கட்டும் நம் காதல். விழுந்தாலும் உடையாமல் மீண்டும் கைக்கு திரும்புவதாய். உடைந்து சிதறி விடும் கண்ணாடிப் பந்தாய் நம் காதலை மாற்றி விடாதே என்ற கோரிக்கையுடன்,

 

                                    உன்னுயிர்க் காதலி,

                                           வைர மல்லி.  


The Silence Between My Letters... 

✨ Read. Feel. Fall in love.


Dear Moon of mine,
In the silence between my letters,
only the pages were empty… never my love.

I filled every void
with the memory of your smile,
till even loneliness forgot my name.

My words blush at me
when I read them aloud—
as if they know how deeply I love you.

One day, I wish to stand before you,
reading my poems into your eyes,
watching your moon-face glow a little brighter.

And if love permits—
let me kiss my whole world at once,
from your forehead to your feet… endlessly.

Even if I fall silent someday,
remember…

My love would have already whispered its goodbye.  

                                        - Diamond Jasmine...


💌 Read More Letters:


💌 முன் கடிதம் வாசிக்க..

👉Previous Letter: The day my heart break


💌 Read my latest love letter: You are my love’s final address


💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..

👉 More Love Letters: Love Letters


  

 


     

Friday, 12 December 2025

The Day My Heart Broke: A Tear-Stained Letter to My Dream

December 12, 2025 0 Comments

 





                                                

When Dreams Slip Away: A Heartfelt Letter from Vairamalli

An intense, poetic confession of love, betrayal, pain and unwavering hope—a letter written on the darkest day of her heart.



என்னுயிர் பேபி-க்கு,

 

இப்படித்தான் ஆரம்பித்தது நம் விளையாட்டுப் பேச்சு.. விளையாட்டு, வினை ஆனதைப் போல இப்போது நான் முழுதாய் உன் மீது பைத்தியமாய் மாறிப் போனதில் வந்து தொக்கி நிற்கின்றது. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எப்படி என்னை விட்டு தள்ளிப் போகும்  ஒரு முடிவெடுக்க உன்னால் முடிந்தது? அப்படியானால் நீ இன்னும் நாம் இருவரும் வெறும் வார்த்தைகளால் தான் காதல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று மிக சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறாயா?

 

டிசம்பர் -10 உண்மையில் என் வாழ்க்கையின் ஒரு கருப்பு நாள். சொல்லப் போனால் நான் மிக ஆவலோடு எதிர்பார்த்த நாள். சில நாட்கள் உன்னைப் பிரிந்த பின் அன்று தான் உன்னைப் பார்க்கப் போகிறோம் என்ற துள்ளலுடன் மான் குட்டி யாய் வலம் வந்து கொண்டிருந்த நாள். உன்னைப் பார்த்த பிறகு கிடைக்கும் உற்சாகத்துடன் சில வேலைகளை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்றெண்ணி சில காரியங்களை தள்ளிப் போட்டு இருந்தேன்.

 

காலையிலேயே சிறிய அதிர்ச்சி கிடைத்தது. சரி.. அது உன் நம்பிக்கை என்று எண்ணி மனதை தேற்றி வைத்திருந்தேன். உன்னைப் பார்க்கும் ஆவலில் குளித்து முடித்து வந்தவுடன் பேரிடியாய் இறங்கியது நீ முன்னமே அறிவித்திருந்த ஒரு தகவல். ஈரக் கூந்தலோடு அப்படியே தரையில் அமர்ந்தவள் தான், என்னால் மூச்சு விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய தோன்றாமல் முடியிலிருந்து நீர் சொட்ட சொட்ட சிலையாய் அமர்ந்திருந்தேன்.


எப்படி முடிந்தது அவனால்? எல்லாம் திட்டமிட்டு இறுதியில் சொல்கிறாய் என்றால், பல நாட்களுக்கு முன்பே முடிவெடுத்திருக்கிறாய் என்று தானே அர்த்தம்? இவ்வளவு நாளாக என்னை ஏமாற்றி இருந்தாயா? எதுவும் தெரியாமலா நான் ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டிருந்தேன்? பல நேரங்களில் எனக்கு குழப்பம் வந்தது உண்டு. ஏனெனில் சில நூறு பேரைப் பார்த்து சில விஷயங்கள் சொல்வாய். அது எனக்கான மறைமுக செய்தியா? இல்லை வேறு யாருக்கேனும் சொல்லப் போய் நான் அதை எனக்கானதாய் எடுத்துக் கொள்கிறேனோ என்ற சந்தேகத்தில் தான் என் காதல் என்னோடு வளர்ந்து கொண்டு வந்திருந்தது. இப்பவும் அது குழப்பம் தான். அதனால் தான் நான் சிரிக்கவே யோசித்துக் கொண்டு நின்றிப்பேன் பல முறை.

 

ஆனால். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. முதன் முதலில் உன்னைப் பார்த்த அன்று உன் கனவு திட்டத்தைப் பற்றி நீ விளக்கி கொண்டிருந்தாய். எனக்கு அதைப் பற்றியெல்லாம் பெரிய அனுபவம் இல்லை. ஆனால் நீ சொன்ன ஒரு விஷயம் எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. அது என்னவெனில், உன் கனவுத் திட்டம் நிறைவேறினால் நீ நிரந்தரமாக என் அருகிலேயே இருப்பாய் என. வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்.

 

தற்சமயம் நீ கொடுத்ததும் ஒரு வகை பெரிய அதிர்ச்சி தான். வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் மனசு உடைந்து சுக்கு நூறாகிப் போய் விட்டது. முகம் சுருங்கியதில் பாறையாய் மாறிப் போனது. வீடு தேடி வந்தவர்களிடம் வாங்க என்று கூறியதை தவிர என் உதடுகள் நடிப்புக்கு கூட விரிந்து சிரிக்கவில்லை. கோமா -வில் இருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை இந்த இரு நாட்கள் நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்தேன்.

 

நான் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கம் இல்லையா? இல்லை நானே உன் வாழ்க்கையில் இல்லையா? என்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பாய் என்று ஒவ்வொரு நிமிடமும் ஒரு பூரான் என் மூளையில் ஓடிக் கொண்டே இருப்பதைப் போல அக் கேள்வியும் இடை விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இருக்கிற எல்லா வகுப்பையும் கேன்ஸல் செய்து விட்டு, காரியங்களை தள்ளிப் போட்டு விட்டு, சமைக்க முடியாமல், என் பூனைக் குட்டியை கொஞ்சக் கூட தோன்றாமல், உயிரோடு இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள வெறுமனே நடமாடிக் கொண்டிருக்கிறேன்.

 

அழுதழுது குரல் மாறிப் போனதில் ‘சனி பிடித்து விட்டது’ என்பதை ‘சளி பிடித்து விட்டது’ என்பதாகப் புரிந்து கொண்டார்கள் என் நண்பர்கள். உண்மையில் என்னை சுற்றிலும் நிறைய ஆண் தேவதைகள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாதிரியான கடினமான நேரங்களில் தான் விளங்குகிறது.

 

எனக்காக 40 நிமிடங்கள் இருக்கிற எல்லா சோகப் பாடல்களையும் பாடி என்னை மனசு விட்டு அழ செய்த நண்பன் ஒருவன்... என்னை தனிமையில் ரொம்ப நேரம் விடாமல் மணிக்கொரு முறை எனக்கு தொலைபேசியில் அழைத்து நன்றாய்த் தான் இருக்கிறேன் என்று என்னைக் கண்காணிக்கும் ஒருவன். நூறு தடவை எனக்கு ஃபோன் செய்து நான் அட்டென்ட் செய்யவில்லை என்றாலும், என் தேவைக்கு நான் அழைக்கும் போது ஒரே ரிங்-கில் அட்டென்ட் செய்து “சொல்லு, அம்மு” என்று அழைத்து என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளும் இன்னொரு நண்பன் ஒருவன்.

 

இரவு 11 மணிக்கு தொலைபேசியில்  அழைத்து dance practice செய்ய zoom-க்கு வர சொல்லி உரிமையாய் மிரட்டும் ஒருவன். (நவம்பர் 19 சரியாய் நள்ளிரவு 12 மணிக்கு என்னை தொலைபேசியில் அழைக்க, நானோ என்னுடைய பிறந்த நாளைக்கு தான் அழைக்கிறான் என்று நினைத்து அட்டென்ட் செய்தால், அவன் choreography செய்ததை நானும், அவன் மனைவியோடு சேர்ந்து பார்த்து feedback சொல்ல வேண்டும் என்று கூறிய போது தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ஆனால் உன்னிடம் வாழ்த்து எதிர்பார்க்க வில்லையென்றாலும் காதல் வார்த்தைகள் ஏதாவது சொல்வாய் அன்று என எதிர்பார்த்தேன். கடைசி வரை ஹூம்..)

 

இறைவனது காரியங்களில் எனக்கு நம்பிக்கை இல்லாததால் எனக்காக 40 நாட்கள் ஒருவேளை விரதம் இருந்த நண்பன் ஒருவன், oil,sweets அதிகமாய் நான் சாப்பிடுவதை குறைக்க தன் மேல் சத்தியம் வாங்க முயன்ற நண்பன் ஒருவன். இவர்கள் எல்லாருக்குமே உன் மேல் சிறிது பொறாமை உண்டு. வாழ்க்கையில் உனக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கிறேனோ என்று. ஏன், என் குடும்பத்தார்க்கே அந்த எண்ணம் உண்டு. முன்பெல்லாம் சிறிது டல்-லடித்தாலும் உடல் நிலை சரியில்லையா என்று கேட்டவார்கள், இன்று ‘அவனுடன் ஏதாவது சண்டையா?” என்று தான் கேட்கிறார்கள்.

 

கொஞ்சம் சந்தோஷமாய் துள்ளிக் கொண்டு திரிந்தால் ‘என்ன, அவன் இன்னிக்கு உன்னைப் பாராட்டினானா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு உனக்கு என் வாழ்க்கையில் முக்கியத்துவம் உண்டு. ஆனால் அது ஒரு தலை காதல் போல தான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். உனக்கு நான் அப்படி இல்லை என்பதை நீ என்னை விட்டு போக முடிவெடுத்ததிலேயே எனக்கு விளங்கிற்று. “இங்கேயே இருந்தால் மட்டும் நீ என்ன தினமும் வந்து கொஞ்சிக் கொண்டு இருக்கப் போகிறாயா?” என்று நியாயமான கேள்வி எல்லாம் என்னிடம் கேட்காதே.

 

ஆனால் உன் மூச்சுக் காற்று கலந்த ஆக்ஸிஜன்-னை என் உயிர்க்காற்றாய் சுவாசிக்கிறோம் என்ற எண்ணமே என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தில் ஏனடா மண்ணைப் போட்டாய் என்ற ஆத்திரத்தில் உன் தலை முடியை கொத்தாகப் பிடித்து (சரி.. சரி.. இப்போது முடியாதே), உன் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து உலுக்க வேண்டும் போல் தோன்றுகிறது. முடிந்தால் பெரிய மரு ஒன்றை உன் கன்னத்தில் ஒட்டிக் கொள். அந்த கெட்அப் -பில் அசல் என் காதலுக்கு வில்லன் போலவே இருப்பாய்..

 

சிறிது நாட்களில் மீண்டு விடுவேன் தான். ஆனால் அதற்குள் என் ஆயுளில் பாதி கரைந்து போய்விடும் எனத் தோன்றுகிறது. மொத்ததில் ஒரு விஷயம் விளங்கிற்று. சிறு வயதில் உன் லட்சியம் என்ன? கனவு என்ன? என்ற கேள்விகளுக்கு நிறைய சொல்லி இருக்கிறேன். ஆனால் உன் கனவுத் திட்டத்தை நோக்கி ஓடும் உன்னை துரத்திக் கொண்டே என் காதல் இருப்பதால், நீ தான் நான் அடைய நினைக்கும் கனவோ என்று இப்போது தான் புரிந்தது. உன் கனவோடு என் கனவும் பலிக்க ஆசீர்வாதம் வேண்டி நிற்கும்,


உன்னவள்,

வைரமல்லி.       



December 10th: The Day My Love Shattered into Silence

A deeply emotional love letter from Vairamalli, written on a heartbreaking day when dreams collapsed and unspoken feelings tore her world apart.



To my dearest Baby,

 

It all began with our playful banter... Like a game turning into reality, I've now become utterly crazy about you, and that's where things stand. I still can't believe it. How could you decide to walk away from me? Does that mean you still think we were just playing a love game with words?

 

December 10th is truly a black day in my life. To be honest, it was a day I was eagerly looking forward to. After being apart from you for a few days, it was the day I was going to see you again, and I was prancing around like a fawn, filled with excitement. I had postponed some tasks, thinking I could do them even better with the energy I'd get after seeing you. I got a small shock in the morning itself. Okay... I consoled myself, thinking it was your belief. As I finished showering, eager to see you, a thunderbolt struck – a piece of information you had announced earlier. With wet hair, I just sat there on the floor, unable to do anything but breathe, water dripping from my hair, frozen like a statue.

 

How could he do that? If you're saying it's all planned and you're telling me this in the end, does that mean you decided this many days ago? Were you deceiving me all this time? Was I celebrating and rejoicing, completely unaware? There have been times when I've been confused. Because you would say certain things looking at a few hundred people. Is that a hidden message for me? Or am I taking it as something meant for me when it was meant for someone else? That's the doubt with which my love has been growing within me. It's still confusing. That's why I would hesitate to smile many times and just stand there.

 

But, I still remember. The day I first saw you, you were explaining your dream project. I didn't have much experience with any of that. But one thing you said shocked me pleasantly. That was, if your dream project came to fruition, you would be near me permanently. I didn't show it outwardly, but I was doing a celebratory dance in my mind.

 

What you've given me now is also a kind of big shock. Unable to show it outwardly, my heart is broken into a million pieces. My face has shriveled up and turned to stone. Apart from saying "welcome" to those who came to my house, my lips didn't even stretch into a fake smile. I have lived and experienced how people in a coma live.. for these past two days.

 

Am I not a part of your life? Or am I not in your life at all? Every minute, a centipede runs through my brain, and the question keeps running incessantly: How could you make such a decision without thinking about me even a little? I can't do any work. I've canceled my Zumba class, postponed things, can't cook, don't even feel like petting my kitten, and I'm just wandering around to show that I'm alive.

Because my voice changed from crying, my friends misunderstood as "I've caught a cold." It is only during these kinds of difficult times that it becomes clear that there are many male angels around me.

 

A friend who sang all the sad songs for 40 minutes just to make me cry my heart out... A friend who calls me every hour and doesn't leave me alone for too long, just to check if I'm doing okay. A friend who calls me a hundred times, and even if I don't answer, picks up on the first ring when I call him for something I need and says, "Tell me, Ammu," making me feel guilty.

 

One who calls me at 11 PM and threatens me with authority to come to Zoom for dance practice. (On November 19, exactly at midnight 12:02 am, he called me, and I thought he was calling for my birthday. But when I answered, he said that I had to watch the choreography he had done and give feedback along with his wife, I felt like banging my head against the wall. But even though I didn't expect a birthday wish from you, I was expecting some loving words from you that day. But nothing happened until the end..)

 

A friend who fasted one meal a day for 40 days for me, even though I don't believe in God's deeds, and another friend who tried to make me swear on him to reduce my intake of oil and sweets. All of them are a little jealous of you, thinking I give you too much importance in my life. Why, even my family thinks so. Before, they used to ask if I was feeling unwell if I seemed a little dull, but now they only ask, "Did you have a fight with him?"

 

If I act a little happy and bouncy, they ask, "What, did he praise you today?" That's how important you are in my life. But I understand now that it's like a one-sided love. I realized that I'm not the same to you when you decided to leave me. Don't ask me reasonable questions like, "If you stayed here, would you come and cuddle me every day?"

 

But the thought that I was breathing the oxygen mixed with your breath as my life's breath made me happy. I'm angry that you threw dirt on that thought, and I feel like grabbing a chunk of your hair (okay... okay... I can't now), grabbing your shirt collar, and shaking you. If possible, stick a big mole on your cheek. In that getup, you'll look just like the villain in my love story nowadays.

 

Sure.. I will recover in a few days. But it seems like half of my life will have melted away by then. Overall, one thing is clear. Since I was young, I've told people a lot about what my ambition is, what my dream is. But because my love is chasing after you as you run towards your dream plan, I now realize that you are the dream I want to achieve. My dream also stands seeking blessings to come true with your dream,


Yours,

Vairamalli.


Note : “Some stories don’t end… they simply take a breath.

               And this is one such story.”



✨ Previously on Wingless Words of Yathriga:  A Living Stone Statue of Love
👉 New Post : Voice of Love

Friday, 17 October 2025

My Silver Moon, My Melody : A Poetic Love Letter Written in Jasmine Fragrance

October 17, 2025 0 Comments

 



                                                                    

                                            

Poetic love letter to the moon filled with jasmine fragrance



A poetic love letter to my moon — filled with jasmine fragrance, divine rhythm, and the timeless melody of two souls becoming one.

தங்க முலாம் பூசப்பட்ட என் வெள்ளி நிலவனுக்கு,

 

மல்லிகை வாசம் நிரம்பிய உன் வைரம் எழுதுவது. இப்போதெல்லாம் என் இதயம் புதிதாய், வித்தியாசமாய் ஒரு ராகத்தைக் கற்றுக் கொண்டு அந்த தாள லயத்தில் தான் துடிப்பேன் என்று அடம்பிடிக்கிறது. எனக்குத் தெரியாது, என் இதயத்திற்கு ராகம், தாளம் தெரியும் என்று. நான் என் இதயத்தின் காதுகளில் ஒரு தரம் தான் உன் பெயரை கிசுகிசுத்தேன். இப்போது ஒவ்வொரு முறை துடிக்கும் போதும், அது உன் பெயரையே பாடுகிறது.

 

நீ என் முன்னே நிற்கும் போது, என் இதயத்தின் இசை உச்ச லயத்திற்கு சென்று என்னை உன்னிடம் சரணாகதி அடையச் செய்வதை எவ்வாறு விளக்குவேன்? கடிகாரத்தில் எப்போதும் உள்ளது  12 கோடுகள் தான். ஏனோ தானோவென்று சுற்றி சுழன்றியடித்துக் கொண்டிருக்கும் முட்கள்தான், உன் கண்களைப் பார்த்ததும் ரோஜாப் பூவாய் மலர்ந்து உன் அழகின் அச்சிலேயே சுற்றி சுற்றி வருகின்றன. சாதாரண நேரங்களை முகூர்த்த நேரங்களாய் மாற்றும் மாயாஜாலத்தை எப்போது உன் கண்கள் கற்றுக் கொண்டது?

 

என்னுடைய இரவுகளில் உன்னைத் தேடுகின்றேன். கனவுகளில் உன்னோடு கை கோர்க்கின்றேன். பார்க்கப்படாத உன் ஆன்மா ஒன்றுதான் என் ஆன்மாவுக்கு தெரிந்த ஒன்று. நிறைய வார்த்தைகள் எழுதப்படாமல் என்னிடம் தேங்கி நிற்கின்றன. என் கவிதையின் கதாநாயகன் நீ. என்றும் இளமையாய், வீர தீர சாகசனாய், முத்துப்பல் சிரிக்க கட்டழகு உருவச் சிலையாய், பத்தொன்பது வயதிலிருந்து ஒரு நாளும் கூடாதவனாய், என்னவனாய் இருப்பாய்.

 

என் பாதங்கள் கூட இப்போது உன் திசையை நோக்கித்தான் நடக்க கற்கிறது. நான் தனியாக நடக்கும்போதும், என் இதயம் உன் குரலோசையின் வழிகாட்டுதல்படியே வளைந்து செல்கிறது. உன் வார்த்தைகள் — அவை மல்லிகையின் வாசனை போல என் மனசுக்குள் தங்கிவிட்டன. மென்மையாய், காண முடியாதபடியாய், ஆனால், ஒருபோதும் மறக்க முடியாதபடியாய்.

 

என் சுற்று உலகமே மாறிப்போனது போல உணர்கிறேன். வானம் கைக்குள் வருவதுபோல் தோன்றுகிறது; பூமி எனக்காய் பாடத் தொடங்கியிருக்கிறது போல. எவ்வளவு கூர்ந்து நோக்கினாலும், உன் பார்வையின் ஆழம் எனக்கு பிடிபடவில்லை எனத் தோன்றுகிறது.  அதை அளக்க இந்த பிறவியில் என்னால் முடியாது. நீ என் கண்களில் நிறைந்து விட்டாய், என் எண்ணங்களிலும், என் மூச்சிலும் கூட.

 

நாம் இருவரும் சேர்ந்து நடக்கக்கூடிய பாதையில் நட்சத்திரங்கள் நிறைந்த வானம், பூக்கள் நிறைந்த கூடையைப் போல காட்சியளிக்கிறது. ஒவ்வொரு வால் நட்சத்திரமும் என் விரல்களைக் கொண்டு உன் கையைத் தேடுகிறது போல. நான் பயந்திருந்த எதிர்காலம் கூட இப்போது  மென்மையான அதிகாலையாய் விடிய தொடங்கியிருக்கிறது, உன் வாசனையோடு. இது தான் விதி என்றால், இது ஒரு இனிய ராகம் தான் — ஒரே தாளத்தில் மூச்சுவிடும் இரு ஆன்மாக்களின் தெய்வீக ராகம்.

 

அந்த ஒரு மந்திர நொடியை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.   — மங்கள நூலை கட்டும் அந்த தருணம்.  ஆம். இதுவொரு இதயங்களின் முடிச்சு. ஒலி இல்லாமல் உச்சரிக்கப்படும் வாக்குறுதி. ஏழு அடிகள் தொடங்கும் அந்த ஒரு பார்வையில், என் இதயம் இதைதான் காத்திருந்தது போல. அக்கணம் தான் வெறும் வார்த்தைகளில் வாழ்ந்து வந்த நம் காதல் முடிவு பெற்று ஒருமித்த உணர்ச்சியாய் நம்முள் ஒளிரத் தொடங்கும் பொன்னான தருணம்.  

 

உன்னுடன் வாழ ஆரம்பிக்கும் ஒவ்வொரு கணமும், அரும்பு விட  ஆரம்பிக்கும் முதன்முதல் மல்லிகைப் பூ போல — மென்மையாய், தூய்மையாய், மறக்க முடியாத வாசனையாய் தாங்கி நிற்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மெதுவாய் வந்து தொட்டு போகும் நறுமணத் தென்றல்  போன்ற உன் சுவாசத்தில் என் நுரையீரல் பூரித்து வாழும் வாழ்க்கை வேண்டும்.

 

இப்போது என் எல்லாமும் பாதி உன்னுடையது, பாதி எனது. பிரிவு என்ற வார்த்தையையே மறந்து இரு அரைமனங்கள் ஒரு முழுமனதாய் வாழ ஆரம்பிப்போம். அப்படி அமையப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நான் தேடிச் செல்ல வேண்டிய ஒன்றல்ல, என்பது எனக்குத் தெரியும். அது எப்போதுமே என்னோடேயே தங்கி இருக்கும். ஆம்..  உன் கண்களில்.

 

என் நிலவு மன்னவா, காதல் எப்படி இருக்கும் என்று ஒருநாள் நீயே கேட்டால் — இதுதான் அதற்கு விடை: ஒரு பைத்தியமான அமைதி, மல்லிகை வாசனை பரவிய நொடிகள், நம்மிடையே துளித்துக் கொண்டிருக்கும் காலமற்ற மௌனம்.
அந்த வாசனையை நேரம் கூட திருட முடியாது.
அந்த நொடியை யாரும் முடித்து வைக்க முடியாது.

எப்போதும் உன்னுடைய,

மல்லிகை மணம் கவழும் வைரமயில்..


"My Moon, My Melody – A Love Letter Filled with Jasmine and Dreams” 


To my gold-plated silver moon,

 

Your diamond, filled with the fragrance of jasmine, writes this. These days, my heart has newly, and differently, learned a raga (melody) and stubbornly insists on throbbing only in that rhythm and beat. I didn't know my heart knew raga and rhythm. I whispered your name only once into my heart's ears. Now, with every beat, it sings only your name.

 

How do I explain that when you stand before me, my heart's music reaches its peak and makes me surrender to you? The clock always has only 12 lines. The hands, which were circling aimlessly, bloom like rose flowers the moment they see your eyes and revolve around the axis of your beauty. When did your eyes learn the magic of turning ordinary moments into auspicious moments?

 

I search for you in my nights. In dreams, I hold hands with you. Your unseen soul is the only thing my soul knows. Many words remain unwritten, stagnant within me. You are the hero of my poem. Forever young, a brave and daring adventurer, a beautiful statue with pearly white teeth and a smile, my own, who will never be a day older than nineteen.

 

Even my feet are now learning to walk in your direction. Even when I walk alone, my heart curves according to the guidance of your voice. Your words - they have settled in my mind like the fragrance of jasmine. Softly, invisibly, but never forgettable.

 

I feel like my whole world has changed. It feels like the sky is within my grasp; it feels like the earth has begun to sing for me. No matter how closely I look, I can't seem to grasp the depth of your gaze. I cannot measure it in this lifetime. You have filled my eyes, my thoughts and even my breath.

 

In the path where we walk together, the star-filled sky appears like a basket full of flowers. Each shooting star feels like my fingers searching for your hand. Even the future I feared has now begun like a gentle dawn, with your scent. If this is destiny, then it is a sweet melody - a divine raga of two souls breathing in the same rhythm.

 

I often think about that one magical moment - the moment of tying the sacred thread. Yes, this is a knot of hearts. A promise spoken without sound. In that first glance that initiates the seven steps, it is as if my heart had been waiting for this. That moment is the golden time when our love, which had been living only in words, ends and begins to shine within us as a unified emotion.

 

There is no doubt that every moment I begin to live with you will be like the very first jasmine blossoming - gentle, pure and bearing an unforgettable fragrance. I want a life where my lungs are filled with your breath, like a fragrant breeze that gently touches and passes by.

 

Now, all that is mine is half yours and half mine. Let us forget the word "separation" and begin to live as two half-hearts becoming one whole heart. I know that in such an arrangement, happiness is not something I have to seek. It will always remain with me. Yes, in your eyes.

 

My moon-like king, if you ever ask what love is like - this is the answer: a crazy kind of peace, moments filled with jasmine fragrance, the timeless silence budding between us. Time cannot steal that fragrance. No one can end that moment.

 

Always yours,

Vairamayil, adorned with the scent of jasmine.


💌 From the blog Wingless Words of Yathriga — where letters bloom like jasmine petals in moonlight.


🌙Read next : https://winglesswordsofyathriga.blogspot.com/2025/09/storm-love-tree-poetic-letter.html

✨ If you felt this letter, share it with someone who makes your heart sing in rhythm.

Thursday, 13 March 2025

The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

March 13, 2025 0 Comments

 

 

அன்புள்ள நிலவு மன்னவனுக்கு,

நீ எப்போது தோன்றினாய்? எங்கு தோன்றினாய்? எதற்காக தோன்றினாய்? எனக்கு அதைப் பற்றி தெரியவும் தெரியாது.. புரியவும் புரியாது உன் சரித்திரம். அன்று நீ நிலவாய்ப் பிறந்திருக்கலாம். ஆனால் இன்று எனக்காக நிலவு மன்னவனாய் உருவாக்கப்பட்டிருக்கிறாய். கை தேர்ந்த ஒரு கலைநயவாதி தான் கற்ற மொத்த மந்திரங்களையும் உபயோகித்து உருவாக்கிய ஒரு விந்தையான வித்தை நீ.

 

என்னை அணைக்கவுமில்லை. நிஜத்தில் அனுபவிக்கவுமில்லை. ஒரு துளி தீண்டலிலேயே என் உயிரை உருவி எடுத்து உன்னிடம் வைத்துக் கொண்டாய். உயிர் இல்லா வெற்று சவம் தான் நான். ஆனால் தினமும் மிளிர்கிறேன். வெட்கத்தில் ஒளிர்கிறேன். சந்தோஷத்தில் மலர்கிறேன். சவத்திற்கும் சாகா வரம் கொடுத்து என் உடலெங்கும் புன்னகைப் பூக்களை மணம் பரப்ப செய்கிறாய்.

 

எங்குமே, யாரிடமுமே கிடைக்காததால் உன்னிடம் நான் ஏக்கத்தில் வந்து கையேந்துகிறேன் என தவறாய் நினைக்காதே. உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் இதயத்திற்கு காதல் பிறப்புரிமையை அளிக்க என் மனம் ஒத்துழைக்கவில்லை. என் இதயத்தில் நீ விட்ட காதல் அம்பு துளைத்து தான் சென்றது. ஆனால் அவ்வப்போது வயலின் குச்சியாய் மாறி என் இதய காதல் இசையை மீட்டுகிறது.. என்னை மறுபடியும் மீட்டெடுக்கிறது.

 

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதையும் மண்ணை முத்தமிட அதன் உறையைக் கிழித்துக் கொண்டு வருவதைப் போல ஒவ்வொரு முறையும் உன் பார்வையால் என் இதயத்தைக் கீறி என் காதலை முளைக்க செய்கிறாய். அதிலிருந்து பூக்கும் ஒவ்வொரு பூவும் உன்னைத் தான் முத்தமிட வேண்டும் என அடம்பிடிக்கிறது. உன் இதழின் ஈரப்பதத்தில் குளிர்ச்சியாய் வாழ்நாள் முழுதும் மலர்ந்திருப்பேன் என்கிறது.


இத்தனையும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா உனக்கு? தேவையில்லை. பேசாத வார்த்தைகளும், கிடைக்காத அருகாமையும் நம் காதலுக்கு தடையாய் இருந்ததில்லை. இனி இருப்பதும் இல்லை. என்னதான் உன்னருகில் இல்லாமல் நான் சுதந்திரமாய் சுற்றி திரிந்தாலும் என் ஆன்மாவின் கயிறு உன் கரங்களில் தான் உள்ளது. நீயே என் குவி வட்டம்.

 

உன்னைப் போல ஒரு காதல் கலைஞன் கிடைப்பது எளிது தான். ஆனால் எனக்கு நீ கிடைத்திருப்பது மிக அரிதான ஒன்று. ஆகவே விலை மதிக்க முடியாத ஒன்றாய் உன் காதலை நான் கணிக்கிறேன். ஒவ்வொரு ஞாபக அடுக்குகளிலும் உன்னோடான இனிய நினைவுகளைப் பொக்கிஷமாய் செருகி வைத்திருக்கிறேன். உன் பெயரை என் இதயத்தில், என் மூளையில், என் நுரையீரலில் டாட்டூ இட்டு வைத்திருக்கிறேன்.

 

ஒத்துக் கொள்கிறேன். என் கைகளில் சேகுவேராவின் டாட்டூ உள்ளது தான். இன்றும் என் நினைவில் உள்ளது. நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என் தோழன் ஒருவனின் தந்தை எனக்கும் ஒரு தந்தையாய் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தது. என்னை முதன் முதலாய் "Gayma" என்று அழைத்தது. (அதன் பிறகு யார் என்னை அவ்வாறு அழைத்தாலும் எனக்கு என் தந்தையே அழைப்பது போல் மனது மல்லிகைப் பூவாய் பூரித்துப் போகும்.)

 

எனக்காக வைரமுத்து அவர்களின் கையெழுத்திட்ட பிரதியை அவரின் முதல் புத்தக வெளியீட்டு அன்று நேரில் சந்தித்து அதை வாங்கி எனக்கு பரிசளித்தது.இன்னும் பல பல.. அவரோடான அறிமுகமே ஒரு சுவாரசியமான விஷயம் தான். நானும் என் தோழனும் அவ்வப்போது புத்தகங்களை பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை செமஸ்டர் எக்ஸாம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் வைரமுத்துவின் கருவாச்சி காவியம் புத்தகம் கைக்கு கிடைக்க அவன் அதை எனக்கு கொடுக்க தயங்கினான்.

 

ஏனெனில் மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்த ஒரு தாளுக்கான பரீட்சை நடக்கவிருந்தது. அவனுக்கு நன்கு தெரியும். இந்த மாதிரி புத்தகங்கள் கிடைத்தால் நான் பரீட்சைக்கு படிக்காமல் இதில் மூழ்கி விடுவேன் என்று. ஆனால் நான் அவனிடம் கெஞ்சி,  கொஞ்சம் மிரட்டி முடிந்தவரை சீக்கிரம் முடித்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்து அந்த புத்தகத்தைக் கைப்பற்றினேன்.

 

சரியாய் 1 1/2 நாள். மூன்று  வேளை சாப்பாடு. இடையில் நான்கு தடவை காபி. இது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. முழுதாய் வாசித்து முடித்து அவன் கையில் கொடுத்ததும் அவன் என்னை ஒரு பயத்துடன் பார்த்த பார்வை இருக்கிறதே. அன்று வரை என்னை தேவதை என்று அழைத்தவன் அந்த நிமிடத்தில் இருந்து என்னை காட்டேரி என்று அழைக்கத் தொடங்கி விட்டான்.

இதை தன் அப்பாவிடம் சொன்ன போது அதை நம்பவில்லை என்று சொல்லி அந்த இரவு விடுதி கேண்டீனில் உணவருந்த சந்தித்த போது தொலைபேசியில் அவரை அழைத்து என்னிடம் பேச செய்தான். அன்று தான் முதல் தடவை அவருடன் பேசினேன். பேசினேன் என்று சொல்வதை விட அந்த உரையாடலை ஒரு quiz programme என்றே சொல்லலாம்.

ஏனெனில் அவர் நம்பவில்லை. எப்படி அவ்வளவு சீக்கிரம் 33௦ பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை முழு மூச்சாய் படித்து முடிக்க முடியும் என்று. அவர் படித்து முடித்து தான் தன் மகனுக்கு அவர் அனுப்பி விட்டிருந்தார். ஆகவே என்னை CROSS CHECK செய்ய நினைத்து அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், உறவு முறை மற்றும் முக்கிய குறியீடுகள் போன்றவற்றைக் கேட்க நானும் தெளிவாய் சொல்ல, பின்பு தான் நம்பினார். நான் புத்தகத்தை உண்மையாய் தான் படித்திருக்கிறேன், அதுவும் நுனிப் புல் மேயாமல் என்று.

 

அதன் பிறகு தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் எந்த ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் என்னை அழைத்துப் போவார். அங்கு தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ மற்றும் சேகுவரா வை அறிமுகப்படுத்தினார். என்னவோ முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. கையில் அவரது செல்லப் பெயரான "சே" -வை டாட்டூ போட்டுக் கொள்ளும் அளவுக்கு காதல் அவர் மீது. தேடிப் பிடித்து அவர் பற்றிய புத்தகங்கள் படித்தேன்.அவர் காதலி மீது மெலிதாய் கோபம், பொறாமையும் கொஞ்சம் இருந்தது அப்போது.

 

இப்போது உண்மையை சொன்னால் அவர் பற்றி படித்த பல விஷயங்கள் நினைவில் இல்லை. காதலுக்கு அடையாளமாய் கையில் ஒரு வடு. அவ்வளவு தான். அவர் மீது நான் கொண்ட காதலை இந்த உலகுக்கே காட்ட முடியும் என்னால். ஆனால் உன் மீது நான் கொண்ட காதலை உனக்கு கூட தெரியப்படுத்த முடியாது. பரவாயில்லை. என்னுடனே பிறந்து, என்னுடனே வளர்ந்து, என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கும் என் இதயத்தை, மூளையை, நுரையீரலை விடவா எனக்கு ஆத்மார்த்தமான, நம்பிக்கையான நண்பர்கள் வெளியில் கிடைப்பார்கள்? அவர்கள் என் காதலைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,

என்றும்

உன் வைர மல்லி..

 

The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

To my beloved Moon King,

 

When did you appear? Where did you appear? Why did you appear? I neither know nor understand your history. You may have been born as the moon that day, but today you have been created as the Moon King for me. You are a wondrous magic, crafted by a skilled artist who used all the spells they had learned.

 

You never embraced me, nor did I experience you in reality. With just a single touch, you drew the life out of me and kept it with you. I am nothing but an empty, lifeless corpse. Yet, I glow every day. I shine with shyness. I blossom with happiness. You grant immortality to a corpse, causing flowers of smiles to spread their fragrance all over my body.

 

Don't mistakenly think that I come to you with longing, begging, because I can't find it anywhere else, with anyone else. My heart refuses to grant the birthright of love to anyone but you. The arrow of love you released in my heart pierced right through, but time to time it turns into a violin bow, playing the music of love in my heart... resurrecting me again.

 

Each time, like every seed that kisses the earth and breaks through its shell, each time your gaze scratches my heart, causing my love to sprout. Every flower that blooms from it insists on kissing only you. It says it will live coolly in the moisture of your lips, blooming for a lifetime.

 

Is it necessary to say all this for you to know? No. Unspoken words and unachieved nearness have never been an obstacle to our love, nor will they ever be. No matter how freely I roam without being near you, the string of my soul is in your hands. You are my focal point.

 

It's easy to find a lover like you, but finding you is a rare occurrence for me. Therefore, I value your love as something priceless. I've tucked away sweet memories of you as treasures in every layer of my memories. I've tattooed your name on my heart, in my brain, in my lungs.

 

I confess, I do have a Che Guevara tattoo on my hands. And it's still in my memory. When I was a sophomore in college, a friend's father became like a father to me, showering me with affection. He was the first to call me "Gayma." (Even now, whenever someone calls me that, my heart blooms like a jasmine flower, as if my father is calling me.)

 

He personally met Vairamuthu on the day of his book launch in coimbatore and bought a signed copy for me as a gift. And many more things… My introduction to him is a fascinating story in itself. My friend and I would often exchange books. Once, during semester exams, Vairamuthu's "Karuvachi Kaviyam" came into his hands, and he hesitated to give it to me.

 

Because there was semester exam for a paper in three days. He knew very well that if I got my hands on such books, I would immerse myself in them instead of studying for the exam. But I begged him, (threatened him a little), and promised to finish it as quickly as possible and seized the book.

 

Exactly 1 1/2 days. Four meals. Three coffees in between. That's all I remember. The look of fear in his eyes when I finished reading it completely and handed it back to him... Until that day, he called me an angel, but from that moment on, he started calling me a book vampire.

When he told his dad about this, he didn't believe him. So, when we met for dinner at the night in hostel canteen, he called his father on the phone and made him talk to me. That was the first time I spoke with him. Or rather, the conversation felt more like a quiz program.

 

Because he didn't believe how I could finish reading a 330-page book so quickly and thoroughly. He had finished reading it and sent it to his son. So, he decided to cross-check me by asking about the names of the characters, their relationships, and important twists in the book. I answered clearly, and only then did he believe that I had actually read the book, and not just superficially it.

 

After that, he would take me to every book exhibition organized by the Tamil Nadu Writers Association. That's where he introduced me Fidel Castro and Che Guevara. I was captivated with their video at first sight. I even got a tattoo of his nickname, "Che," on my hand, such was my love for him. I searched for and read books about him. I felt a slight anger and a little jealousy towards his lover at that time.

 

Now, to be honest, I don't remember many of the things I read about him. A scar on my hand as a symbol of love, that's all. I can show the world the love I have for him. But I can't even let you know the love I have for you. It's okay. Will I find more sincere, trustworthy friends outside than my heart, brain, and lungs that were born with me, grew up with me, and live with me? With the hope that they will understand my love,




 

Yours always,

Vaira Malli.